தீத்திரள் ஆரமே -13

#1
தேவா:தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீட்டாராக உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய கல்வெட்டு இந்தக் கோயிலில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில், நவக்கிரகங்கள் லிங்க வடிவில் இருப்பதும் இங்குதான். கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும்.

அப்பொழுது அந்தப் பக்கம் ரவுண்ட்ஸ் வந்த சக்தி, ஆரா விளையாடுவதைப் பார்த்துவிட்டான்.

உடனே அவள் அருகில் போய் நின்று "என்ன வேலை இல்லையா?" என்றான்.

அவன் குரல் கேட்டதும் வேலைப் பார்க்காமல் இருந்த கொஞ்ச நஞ்சப் பேரும் பதறியடித்துக் கொண்டு வேலைப் பார்த்தனர்.

ஆனால் ஆராவோ அவனைப் பார்க்கப் பிடிக்காமல் பாலாவின் புறம் திரும்பி "பாலா அந்த ட்ராப்ட் குடுங்க" என்றாள்.

பாலாவோ, சக்தி கேள்விக் கேட்டும் பதில் சொல்லாமல் தன்னிடம் பேசும் ஆராவை பயத்துடன் பார்த்தான்.

"பாலா உங்களைய தான் கேக்கறேன் குடுங்க" என்றாள்

"நான் உங்கிட்ட ஏதோ கேள்விக் கேட்டதா நியாபகம்", என்றான் சக்தி கடுமையான குரலில் .

ஆரா அவனிடம் வாதட விரும்பாமல், "ட்ராப்ட் பண்ணனும் சார்" என்றாள் எங்கையோப் பார்த்து.

ஆரா தன்னைப் பார்ப்பதை தவிர்க்கிறாள் என்பதை உணர்ந்துக் கொண்ட சக்தி எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

சக்தி சென்றதும் ஆராவின் அருகில் வேகமாக வந்த பாலா," என்ன ஆரா பண்ற.. அவர் யாருனு உனக்கு தெரியும் தானே" என்றான் பதட்டத்துடன்.

"ம்ம் தெரியும்"

"அப்புறம் எதுக்கு அவர்கிட்ட இப்படி பிகேவ் பண்ணுன?, அன்பரசு சாரா இருந்தாக் கூட பரவால எதும் சொல்ல மாட்டார், ஆனா சக்தி சார் அப்படி இல்ல வாயில சொல்லாம சைலண்டா ஏதாவது செஞ்சிட்டு போய்டுவாரு, ஏன் இப்படி பண்ணுன?" என்றான்.

"இப்போ எதுக்கு இவ்வளவு பயப்படறீங்க..? அப்படி பண்ணுனாலும் என்னைய தானே பண்ணுவார் நான் பார்த்துக்கறேன் நீங்க கவலைப்படாதீங்க" என்றாள்..

இப்படி ஒரு பெண்ணைப் பார்ப்பது அரிது என்று அதற்கு மேல் பாலாவும் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் சக்தி சென்ற பத்தாவது நிமிடம் ஷீலா கை நிறைய பைலைக் கொண்டு வந்து ஆராவின் மேஜையின் மீது போட்டவள்..

"இதை எல்லாம் ஒரு டைம் ரீட் பண்ணிட்டு அவங்க எப்படி ட்ராப்ட் கேக்கறாங்களோ அது மாதிரி ட்ரா பண்ண சொன்னார் சார்" என்றாள் ஷீலா.

பாலா சொன்னதுப் போல் சக்தி அமைதியாக ஆராவை பழி வாங்கிவிட்டான், ஷீலா சொன்னதும் ஆரா பாலாவைப் பார்க்க, "நான் அப்போவே சொன்னேன் கேட்டியா?"என்றது பாலாவின் பார்வை

"அதுக்குன்னு இவ்வளவு பைலா?நான் என்ன வேலைக் கத்துக்க வந்தனா? இல்ல உங்களுக்கு மாடு மாதிரி உழைச்சிக் கொட்ட வந்தனா?" என்று மனதுக்குள் வெதும்பியவள்.

"இவ்வளவு பைலை எல்லாம் பார்க்க நேரம் ஆகும், இந்த வாரத்துக்குள்ள முடிச்சி தரேன் மேடம்" என்றாள் ஆரா.

"சார் இன்னிக்கு ஈவினிங்க்குள்ள முடிக்க சொன்னார். இதை முடிக்காம வீட்டுக்கு போனா நாளைக்கு கம்பெனிக்கு வர வேண்டாம்னு சொல்ல சொன்னார்" என்றவளின் முகத்தில் அவ்வளவு சந்தோசம் இருந்தது.

அந்த சந்தோசத்தைப் பார்த்த ஆராவுக்கு ஷீலாவின் கன்னத்தில் நாலு அறை அறைய வேண்டும் போல் இருந்தது.

அதை அடக்கிக் கொண்ட ஆரா,"நான் என்ன சிட்டி ரோபோவா? இப்படி இப்படினு பண்ணுனா மெமரியாகறதுக்கு" என்றவள்,தன் முன் இருந்த பைலை எடுத்து முகத்திற்கு முன் ஆட்டிக்காட்டி பற்களுக்கு இடையே வார்த்தைகளை கடித்துத் துப்பினாள்,

அதைப் பார்த்த பாலாவிற்கு சிரிப்பு வரவும், ஷீலா திரும்பி பாலாவை முறைத்தாள்.

"இங்கப் பாருங்க ஷீலா, எனக்கு டைம் வேணும், ஒரு நாளைக்கு ரெண்டு ட்ராப்ட் தான் ட்ரா(வரைய) பண்ண முடியும்னு உங்க சார்க்கிட்ட போய் சொல்லுங்க" என்றாள்.

"அப்படியே போய் சொல்லட்டுமா?" என்றாள் ஷீலா நக்கலாக.

"ஆமா ஒரு வார்த்தைக் கூட மாறாம அப்படியே போய் சொல்லுங்க" என்றவள், தன் கையில் இருந்த பைலைப் படிக்க ஆரம்பித்தாள்.

ஆரா சொன்னதை வார்த்தை மாறாமல் இன்னும் சில வார்த்தைகளை சேர்த்து போட்டு சக்தியிடம் சொன்னாள் ஷீலா.

"சார் அந்தப் பொண்ணு, 'என்னால ரெண்டு தான் செய்ய முடியும் உங்க சாரால என்ன பண்ண முடியுமோ பண்ண சொல்லுன்னு' மரியாதை இல்லாமல் பேசுது சார்" என்று சொன்னாள் ஷீலா

அதைக் கேட்டவன், "எவ்வளவு நேரம் ஆனாலும் முடிச்சிட்டு தான்
போகணும்னு சொல்லிடுங்க" என்று அவனது வேலையைப் பார்த்தான்.

ஆராவிடம் வந்தவள் "சார் இன்னிக்கு இதை முடிக்கற வரைக்கும் வீட்டுக்கு போகக் கூடாதுனு சொல்லிட்டாரு" என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்..

"என்ன பாலா இப்படி பண்றாங்க?" என்றவள் சிணுங்கியப்படியே பைலைப் படிக்க ஆரம்பித்தாள்..

கொஞ்ச நேரத்தில் அதில் மூழ்கி போயிருந்த ஆராவை அருகில் வந்துப் பார்த்த பாலா அதிர்ச்சியாகிவிட்டான்.

ஏனென்றால் ஆரா பைலை படிக்கிறேன் என்று அப்படியே தூங்கிப் போயிருந்தாள். இரவு முழுவதும் சக்தியைப் பற்றி பலவாறு நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு தூக்கம் வரவில்லை, அதனால் இரவு முழுவதும் தூங்காமல் தூக்கக்கலக்கத்தில் இருந்தவள் பைலைப் படிக்க ஆரம்பித்ததும் தூங்கிவிட்டாள்.

"ஆரா, எந்திரி ஆரா, என்ன பண்ற நீ?, சார் அவரோட ஒர்க் ரூமில இருந்து நம்பலை தான் பார்க்கறார் எந்திரி ஆரா" என்றான் பதட்டத்துடன்.

பாலா சொல்வது போல் அனைவரையும் கண்காணிக்கும் வகையில் தனது வேலை செய்யும் அறையை நாலாப்புறமும் கண்ணாடி தடுப்பால் அமைத்திருந்தான் சக்தி,

அவனுக்கு என்று இது இல்லாமல் இன்னொரு தனி அறையும் இருந்தது..

அதில் தான் தன் வாடிக்கையாளர்களிடம் பேசுவான். அன்று ஆராவிடம் பேசியதும் அந்த அறையில் இருந்து தான்.

ஆனால் அங்கிருந்தால் வேலையாட்களை கவனிக்க முடியாது என்று தன் கற்பனை திறனைக் கொண்டு இந்த அறையை வடிவமைத்திருந்தான் சக்தி.

"ஆரா எந்திரி ஆரா"

முழு தூக்கதில் இருந்த ஆராவுக்கு பாலாவின் அழைப்பு வெகுதொலைவில் யாரோ தன்னை அழைப்பது போல் இருக்கவும் "டிஸ்டர்ப் பண்ணாம போங்க.. எனக்கு தூக்கம் வருது" என்றாள்.

"இவ என்ன? வீடு மாதிரி இப்படி தூங்கறா". என்று முழித்தவன் சக்தி தன் அறையில் இருந்து எழுந்து வருவதைப் பார்த்ததும், பாலா வேகமாக அவனது இடத்திற்கு சென்றுவிட்டான்.

"என்ன நடக்குது இங்க" என்று வேகமாக வந்த சக்தி ஆராவைப் பார்த்துக் கேட்கவும்,

"அது சார்.. ஆரா ரொம்ப கழைப்பா இருப்பாப் போல அதான் தூங்கிட்டா... எழுப்புனா எந்திருக்க மாட்டிங்கரா" என்றான் தயக்கத்துடன்.

பாலா ஆராவிடம் உரிமையாக பேசுவது சக்திக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

"அவ தூங்கட்டும் யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என்றவன், "நீ மட்டும் தான் அவ இவனு கூப்பிடுவியா? எனக்கும் உரிமை இருக்கு "என்பது போல் இருந்தது சக்தியின் குழந்தை தனமா நடவடிக்கை.

அரைமணி நேரம் சென்றதும் தூங்கி எழுந்த ஆரா, அவள் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டுகொள்ளாமல் வேலை செய்பவர்களை வினோதமாக பார்த்துவிட்டு, விட்ட பைலின் அடுத்த பகுதியை தொடர்ந்தாள்.

என்னதான் முட்டி மோதினாலும் ஆராவால் இரண்டு பைலுக்கு மேல் முடிக்க முடியவில்லை.

நேரமானதால் வேலையில் இருந்து ஒவ்வொருவராக கிளம்பி விட ஆராவின் அருகில் வந்த பாலா, "சார்கிட்ட போய் கேட்டுட்டு கிளம்பு ஆரா" என்றான்.

"அவன்கிட்ட கேக்கறதுக்கு நான் வேலையை முடிச்சிட்டே வீட்டுக்கு போலாம்" என்று நினைத்தவள், "பாலா நீங்க கிளம்புங்க, நான் என்னோட அண்ணாவை வர சொல்லி கிளம்பிடறேன்" என்று சொல்லும் போது சரியாக பரணியிடம் போன் வந்தது..

"அண்ணா தான் கூப்பிடறாங்க நீங்க கிளம்புங்க பாலா".

"சரி ஆரா பார்த்துக்கோ பத்திரமா இரு, நான் போகட்டும் தானே "

"ம்ம் போங்க நான் பத்திரமா இருக்கேன்" என்றவள், பரணியின் அழைப்பை ஏற்று போனைக் காதில் வைத்தாள்.

"அண்ணா"

"இன்னும் கிளம்பலையா அம்மு? நேரம் ஆயிடுச்சே" என்றான்.

"கொஞ்சம் ஒர்க் இருக்கு, நீங்க செகண்ட் புளோர் வரிங்களா அண்ணா?" என்றாள்

"ம்ம் வரேன்", என்றவன் போனை வைத்து விட்டு ஆராவைப் பார்க்க மேலே வந்தான்...

அண்ணனை அழைத்துச் சென்று பேச வைத்தால் சக்தி விட்டுவிடுவான் என்று நினைத்து தான் பரணியை மேலே வரச் சொன்னாள் ஆரா, அதுவும் இல்லாமல் சக்தியிடம் தனியாகச் சென்று பேச அவளுக்கு விருப்பம் இல்லை என்பதும் ஒருக் காரணம்.

பரணி வந்தவன், "என்ன அம்மு யாருமே இல்ல எல்லோரும் கிளம்பிட்டாங்க போல, ஒர்க் பண்றவீங்களே கிளம்பிட்டாங்க இன்டென்ஷிப் செய்யற உனக்கு எதுக்கு இவ்வளவு நேரம் ஒர்க் இருக்கு"என்றான்.

"அதுதான் அண்ணா நீங்க கொஞ்சம் எம்டிகிட்ட சொல்றிங்களா?" என்றாள்.

"ஏன் ரொம்ப வேலைக் குடுக்கறாங்களா?"என்றவன், "சரி வா நான் பேசறேன்" என்று ஆராவையும் அழைத்துக் கொண்டு சக்தியைப் பார்க்க சென்றார்கள்.

சக்தியின் அறைக் கதவை தட்டி, "மே ஐ கமின் சார்" என்றான்

"கமின்.." என்றதோடு நிறுத்திக் கொள்ள

பரணியும் ஆராவும் உள்ளே சென்றனர்.

சக்தி ஏற்கனவே ஆராவுடன் பரணியைப் பார்த்திருக்கிறான் என்பதால் "வாட்" என்றான்.

"சார் எல்லோரும் கிளம்பிட்டாங்க, ஏன் அம்முவை மட்டும்" என்றவன் ஆரா அவனது கையை சுரண்டவும் அதைப் புரிந்துகொண்டு, "ஆராவுக்கு மட்டும் இன்னும் வேலை குடுத்துருக்கீங்க.மீதி வேலையை நாளைக்கு வந்து பார்க்கட்டும் சார் இப்போ நான் கூட்டிட்டு போறேன்" என்றான்.

பரணிக்கு காலேஜ் சேர்மேனாக சக்தியை முன்னாடியே தெரியும் என்பதால் தான் நேரடியாகவே கேட்டான்.

"அவங்களுக்கு குடுத்த ஒர்க்கை செய்யாமல் படுத்து தூங்குனா வேலையை முடிச்சிட்டு தான் போக சொல்லுவாங்க" என்றான் சக்தி

"அம்மு வேலைப் பார்க்காம தூங்குனியா?" என்று பரணி கேக்க ஆரா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

"உங்களுக்கு சந்தேகம் இருந்தா சிசிடிவி புட்டேஜ் இருக்கு பார்க்கறிங்களா?" என்றான்

"இல்ல வேண்டாம் சார், ஏதோ கழைப்புல தூங்கிருப்பா, நாளைக்கு வந்து மீதி வேலையைப் பார்க்கட்டுமே சார்" என்றான்

"நோ மிஸ்டர், என்னோட கம்பெனியில டிஸ்பிளின் ரொம்ப முக்கியம்,நீங்க கிளம்புறதுனா கிளம்புனா அவங்க வேலையை முடிச்சிட்டு வரட்டும், இல்லையா நாளையில இருந்து இங்க வர வேண்டாம் நானும் இன்டென்ஷிப் செர்டிபிகேட் தரமாட்டேன்" என்றான் கடுமையாக...

"அப்போ நானும் கூட இருக்கேன் சார், முடிஞ்சதும் கிளம்பறோம் அதுக்கு மட்டுமாவது பர்மிஷன் குடுங்க சார்" என்றான்.

"தாராளமா இருங்க", என்றவன், அவன் வேலையைப் பார்க்க ஆரம்பிக்க.

"இன்னிக்கு என்னால வேலையை முடிக்க முடியாது" என்றாள் ஆரா.

"வாடி வா, வழிக்கு வந்தியா.. காலையில இருந்து என்னோட மூஞ்சை பார்க்காம எவ்வளவு சீன் போட்ட" என்று நினைத்த சக்தி.
எதும் பேசாமல் அவன் செய்த வேலையை தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தான்,

"அம்மு வா நான் உனக்கு எப்படி செய்யறதுனு சொல்லிக் கொடுக்கறேன் ரெண்டு பேரும் சீக்கிரம் செஞ்சிட்டு கிளம்புவோம்" என்றான் பரணி.

ஏனோ பரணி அம்மு என்று அழைப்பது சக்திக்கு பிடிக்கவில்லை. 'உனக்கு எதுதான் பிடித்திருக்கிறது' என்றது அவன் மனது.

"அது பத்து பைல் பக்கம் இருக்குண்ணா எவ்வளவு நேரம் ஒர்க் பண்ணாலும் முடிக்க முடியாது" என்றாள்.

எது சக்தியின் காதிற்கு கேட்டதோ இல்லையோ பரணியை ஆரா "அண்ணா" என்று அழைத்தது மட்டும் நன்றாகவே கேட்டது.

"ஓ அவ்வளவு இருக்கா?" என்ற பரணி சக்தியை பாவமாக பார்த்தான்.

"என்னால இன்னிக்கு முடிக்க முடியாது சார். நாளைக்கு வந்தா பண்றேன். இல்லை நீங்க வர வேண்டாம்னு சொன்னாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை, எனக்கு செர்டிபிகேட்டும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்" என்றவள், "வாங்க அண்ணா போலாம்" என்றாள்.

"சரி காலையில நேரமா வந்து முடிக்கற வழியைப் பாருங்க" என்றவன் ஏதோ போனா போகிறது போ என்று அனுப்புவது போல் அனுப்பினான்.

அவனை முறைத்தவள்,"சரி" என்று சக்தியிடம் சொல்லிவிட்டு பரணியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.
 
#4

Nirmala vandhachu
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement