தீத்திரள் ஆரமே -12

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்று சொல்லப்படுகிறது. 18 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்தக் கோயில் ஆரம்பக் கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழனால் கட்டப்பட்டதாகும். இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரியின் தனி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது.

ஹேய் ஆரா எங்கப் போன, உன்னைய தேடி தேடி உங்க அண்ணன் சோர்ந்து போய்ட்டான், என்ன பொண்ணு எங்கப் போறேனு சொல்லிட்டு போகமாட்டியா?" என்றனர் சாயின் நண்பர்கள்.

"அது ரெஸ்ட் ரூம் போனேன், அப்படி வேடிக்கை... " என்று இழுத்தாள்.

"உன் போனுக்கு அவனும் எவ்வளவு தடவை ட்ரை பண்ணிப் பார்த்துட்டான், போனுக்கு ரிங் போகுது எடுக்காம என்ன பண்ணுன?" என்றனர்.

"போன்", என்றவள் கையில் இருந்த போனை அப்போதுதான் உயிர்ப்பித்துப் பார்த்தாள், அது தன் சத்தத்தை இழந்து அமைதியாக கதறிக் கொண்டிருந்தது.

சாய் தான் விடாமல் அழைத்துக் கொண்டியிருந்தான்.

அவன் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவள், "சாய்" என்றாள், அவளுக்குள் குற்றவுணர்வு பாலைப் போல நுரை நுரையாகப் பொங்கியது

"எங்க இருக்க அம்மு?"

"நான் கிளப்புல தான் இருக்கேன் சாய். நீ எங்க இருக்க?"

"வரேன் எங்கையும் போயிடாத" என்று போனை வைத்தவன், வேக வேகமாக ஆரா இருந்த இடத்திற்கு வந்தான்,

அவனைப் பார்த்ததும் "சாய்" என்ற ஆராவை, யாரும் எதிர்பாரா நேரம் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.

"எங்கடி போய் தொலைஞ்ச கொஞ்ச நேரத்துல உடம்புல உயிரே இல்லடி.. இது எதுமாதிரி இடம்னு தெரிஞ்சும் உன்னைய கூட்டிட்டு வந்துட்டேனு எவ்வளவு வேதனைப் பட்டுப் போய்ட்டேன் தெரியுமா? சொல்லித் தானே கூட்டிட்டு வந்தேன், அப்புறம் எங்கப் போய் தொலைஞ்ச" என்றவன், அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டான்.

"சாரி சாய் நான் வேணும்னு பண்ணல, சும்மா சுத்திப் பார்க்கலாம்னு போன இடத்துல பேரர் மேல சட்டினி கொட்டிட்டாரு, அதை கிளீன் பண்ணிட்டு தான் லேட்டாகிடுச்சி சாரி சாய்" என்றாள்.

"ப்ளீஸ் அம்மு இனி இப்படி பண்ணாத,எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?" என்றவன் கண்களில் கண்ணீர் வந்தது.

சாயின் பாசத்தைக் கண்டு ஆரா மெய்சிலிர்த்துப் போனாள்.

ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே

விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே
கிரீடமா பாரமா
புரியுமா சில நேரமே

இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே

"சாரி சாய் இனி உங்கிட்ட சொல்லாம எங்கையும் போகமாட்டேன்..ப்ராமிஸ்" என்றாள்.

"சரி வா வீட்டுக்கு போலாம்" என்றவன் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டே வந்தாள் ஆரா.

"சரிவிடு இதை வீட்டுல சொல்ல வேண்டாம்" என்றவன் ஆராவிற்கு பிடித்த ரோட்டுகடை காளானை வாங்கிக் கொடுத்துச் சாப்பிட வைத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

பரணி சொன்னது போல் சசி வந்ததும் அவனிடம் சஷ்டிகாவைப் பற்றி பேசினான்.

"இப்போவே எனக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம் பரணி? , இன்னும் கொஞ்சநாள் ஆகட்டுமே ப்ளீஸ், அப்புறம் பண்ணிக்கலாம்" என்றான் கெஞ்சலுடன்..

"எங்களைப் பார்த்தா உனக்கு பாவமா தெரியலையா சசி, உனக்கு கல்யாணம் ஆனா தானே எங்களுக்கு ரூட் கிளியர் ஆகும்" என்றான் பரணி.

"அதுக்காக இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா பரணி"

"உன்னையப் பத்தி மட்டும் யோசிக்காத சசி, நம்ப அம்முவைப் பத்தியும் யோசி உனக்கு பண்ணிட்டு தான் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கனும்"

"அப்போ அவளுக்கு முதல கல்யாணம் பண்ணிடலாம் அப்புறம் நான் பண்ணிக்கறேன்" என்றான்

"அவ இப்போதான் படிச்சிட்டு இருக்கா, அவளுக்கு மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சி கல்யாணம் பண்றதுக்குள்ள ரெண்டு வருசமாவது ஆகிடும், அப்புறம் உனக்கு பொண்ணுப் பார்த்துப் பண்றதுக்குள்ள உனக்கு வயசாகிடும், இப்போ தான் உனக்கு சரியான வயசு 27வயசுல கல்யாணம் பண்ணுனா தான் லைப் நல்லா இருக்கும் சசி புரிஞ்சிக்கோ"

"இதை யாருடா சொன்னது?".

"எதை?"

"27 வயசுல கல்யாணம் பண்ணுனா லைப் நல்லா இருக்கும்னு?"

"பரணி ஜோதிட நிலைய ஜோதிடர்தான் சொன்னாரு".

"நீ எப்போ ப்ரொபோஸர் வேலையில இருந்து இந்த வேலைக்கு மாறுன..?" என்றான் சசி சிரிப்புடன்.

"அந்த வேலையும் இருக்கு, இது கொஞ்சம் சைடு பிஸ்னஸ் மாதிரி. இவ்வளவு சொல்றதப் பார்த்தா யாரையாவது லவ் பண்றியா சசி?சொல்லு அம்மா அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கிடலாம்"

"அதுலாம் எனக்கு செட் ஆகாதுடா.. நான் எப்போவும் முரட்டு சிங்கிள் தான்"

"அப்புறம் என்ன? பொண்ணும் நல்லா இருக்கு குடும்பத்தைப் பத்தி விசாரிப்போம் உனக்கு சரினு பட்டா சொல்லுப் போய் பார்க்கலாம் சரியா?".

"ம்ம்ம்.. அம்முக்கு தெரியுமா?"

"அம்மா இன்னும் சொல்லலைன்னு நினைக்கிறேன்"என்றான் பரணி

"அவளுக்கு பொண்ணைப் பிடிக்கட்டும், அப்புறம் கல்யாணத்தைப் யோசிப்போம்"

"உனக்கு பிடிச்சிருக்குன்னா அவளுக்கும் பிடிக்கும், அம்மு உன்னோட இஷ்டத்தை தான் பார்ப்பா, அதனால அவளைப் பத்தி யோசிக்காம உனக்கு பிடிச்சிருக்கானு பொண்ணைப் பத்தி மட்டும் யோசி" என்றான்.

"சரி" என்று சசி சொன்னதும் தன் கையில் இருந்த சஷ்டிகாவின் புகைப்படத்தை சசியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான் பரணி.
பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்த சசிக்கு பெண்ணை மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும் அன்று நடந்த நிகழ்வு இன்றும் கண் முன் தோன்றி அவனைப் பயமுறுத்தவும், பிரச்சனையை சரி செய்யாமல் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விடக்கூடாது என்று மனதில் உறுப்போட்டுக் கொண்டான் சசிதரண்.

சாயும் ஆராவும் வீட்டிற்கு வந்தவர்கள் யாரிடமும் எதுவும் பேசாமல் அவரவர் அறைக்கு சென்றுப் படுத்துவிட்டனர்.

அடுத்தநாள் கம்பெனிக்கு கிளம்பிய ஆரா பாலாவிடம் சென்று "பாலா எனக்கு சீக்கிரம் இந்த இன்டென்ஷிப்பை முடிச்சிக் குடுக்க முடியுமா?"என்றாள்.

இங்கு வந்த இந்த சில நாட்களில் பாலாவுடன் ஆராவிற்கு ஒரு தோழமை உருவாகியிருந்தது, வந்த புதிதில் சார் என்று அழைத்த ஆராவை,"எனக்கு ஒன்னும் அவ்வளவு வயசாகலம்மா ஜஸ்ட் 25 தான் ஆகுது, அதனால என்னைய பேர் சொல்லியே கூப்பிடு" என்றான் பாலா,

அன்றிலிருந்து பாலா என்று தான் அழைப்பாள் ஆரா. ஷீலா கடுப்படிக்கும் போதும் வேலையில் சந்தேகம் எழும்போதும் பாலாவிடம் தான் கேட்பாள்.

"ஏன் அவ்வளவு அவசரம் இன்டென்ஷிப்பை முடிக்கணும்னு சொல்ற?"

"சும்மாதான் எனக்கு கொஞ்ச வெளி வேலை இருக்கு அதையும் பார்க்கணும் அதுக்கு தான் கேட்டேன்" என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இனி கம்பெனிக்கு வருவதை தவிர்க்க நினைத்தாள் ஆரா.

கம்பெனியை மட்டும் இல்லை சக்தியையும் தான், அவனை காண விரும்பவில்லை துஷ்டனைக் கண்டால் தூர விலகு பழமொழியை சக்தி விசயத்தில் கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தாள்.

பாலா முடியாது என்றதும் அவளது இடத்திற்கு சென்று இருக்கையில் அமர்ந்தவள். வேலை எதுவும் இல்லாததால்
நேற்று நடந்தை நினைக்கத் துவங்கினாள்,

மனம் கண்டதையும் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. "சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்கலம்". இப்போது ஆரவின் மனமும் அப்படிதான் இருந்தது.

கம்பெனிக்கு வந்த முதல் நாளே தன்னை நெருங்கிக் கன்னத்தில் இருந்த முடியை விலக்கி விட்ட சக்தி தான் நினைவில் வந்தான்.

"அன்னிக்கு என்ன நினைச்சி நெருங்கி வந்துருப்பான்?, நாலுவார்த்தை கொஞ்சமாதிரி பேசி, ரெண்டு தடவைத் தொட்டுப் பேசுனா, இவளும் நம்பக் கூட பழகற பொண்ணுங்க மாதிரி வழிக்கு வந்துடுவானு நினைச்சிருப்பானோ, அப்படி தான் இருக்கும், அவன் நினைச்ச மாதிரி தானே அவன் தொட்டப்ப நானும் உருகிப் போனேன், அதை நினைச்சாலே என்மேலையே எனக்கு வெறுப்பு வருது, நான் அவன் நினைக்கற மாதிரி பொண்ணு இல்லைனு கத்திச் சொல்லணும் போல இருக்கு" என்று நினைத்தவளின் கண்களின் ஓரம் கண்ணீர்துளி துளிர்த்தது.

ஆரா யோசனையில் இருப்பதைப் பார்த்தப் பாலா,

"ஆரா இங்க வா.."

"என்னனு சொல்லுங்க பாலா?"

"என்னாச்சு..எதுக்கு 6 மாச இன்டென்ஷிப்பை சீக்கிரம் முடிக்கனும்னு நினைக்கற".

"அது, அதான் சொன்னேன்ல எனக்கு அண்ணாவோட கல்யாண வேலை இருக்கு" என்றாள்..

காலையில் கிளம்பும் போது திலகா சசியின் திருமணத்தைப் பற்றி பேசியது சட்டென்று நினைவில் வரவும் அதையே சொல்லிவிட்டாள் ஆரா.

"ஓ எனக்கு என்னமோ அது மாதிரி தெரியலையே", என்றவன் "அவ்வளவு சீக்கிரம் முடிக்க அலோ பண்ண மாட்டாங்க ஆரா, இது என்னோட கையில இல்லை" என்றான்.

"ம்ம் ஒன்னும் பிரச்சனை இல்லை பாலா, நான் பார்த்துக்கறேன்" என்றவள், அவளது இருக்கையில் சென்று அமர்ந்து கையில் இருந்த பேனாவை மேஜை மீது தட்டிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அந்தப் பக்கம் ரவுண்ட்ஸ் வந்த சக்தி, ஆரா விளையாடுவதைப் பார்த்துவிட்டான்.
 
Akila

Hi
Nice update
Especially information in the first para.
So Aara came to a mind set. Also if she comes to know Sasi's incident. that all.
Waiting for your further interesting update
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top