திராவிடம் என்னும் சங்கேதம்

Advertisement

Rajesh Lingadurai

Active Member
நான் குறிப்பிட்ட விரும்பியது இது அழிக்கமுடியாதது இதன் சாட்சிகள் எங்கும் விரவிக்கிடக்கின்றன
யாரவது இதை தூக்கி நிறுத்தணும் போராடனும் அவசியமில்லை ஒவ்வொரு தமிழனுக்கும் இயல்பாய் இந்த உணர்வு வரவேண்டும்
தாய் மீது பாசத்தை வை என்று சொல்லிக்கொடுத்து வராது
அழிந்துவிடும் என்ற பயமே வேண்டாமென்று நினைப்பதால் அப்படி சொன்னேன் விரிவாக எழுதாமல் மனதில் பேசியதை அப்படி எழுதிட்டேன்

வலித்தால் அம்மா என்றும் அப்பா என்றும் அழைத்தால் அவன் இன்னமும் பூர்விகத்தை அழிக்க நினைக்கவில்லை என்றுதான் அர்த்தம் அவன் சிந்தனைகள் தாய் மொழி கொண்டே அமையும் மூத்த மொழி என்று தெரிந்தால்தான் ஏற்று கொள்ள சுணக்கம் காட்ப்படுகிறது
காலம் காலமாய் உலகத்தில் போர் என்று நடந்து பல விஷயங்கள் மருவி வருபவை தான் இதில் இயர்கையும் அடக்கம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ததற்கு நன்றி. உங்கள் கருத்தாழத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழன் என்ற உணர்வு உண்மையில் அனைத்துத் தமிழர்களுக்கும் இருக்கிறதா என்பது கேள்விக்குறி.

பள்ளிக்கூடத்தில், ஆங்கில மோகத்துக்கும், ஹிந்திக்கும் ஆசைப்பட்டு தாய்மொழி தமிழே இல்லையென்றாலும், அதையும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் பெற்றோர் எத்தனை பேர். இன்றைய தலைமுறைக் குழந்தைகளால் தமிழை சரளமாக வாசிக்க முடியவில்லை. தமிழில் பிழையின்றி எழுத முடியவில்லை. தமிழுக்காக இந்திய அரசாங்கத்திடம் மட்டுமல்ல, நம் மக்களிடமே போராட வேண்டியிருக்கிறது. அதனால் போராடத் தேவையில்லை என்ற கருத்தை ஏனோ என்னால் மனதார ஏற்க முடியவில்லை.

தமிழ் வரலாறாய் இருப்பதை விட, நமது வாழ்வியலாய் இருக்க வேண்டியது முதன்மையானது என்பது எனது எண்ணம்.
 
Joher

Well-Known Member

இதைத்தான் சொன்னேன்.......
நம்மோட உரிமை, சுதந்திரம் எல்லாம் நாமே விட்டு கொடுத்துவிட்டு அடுத்தவனை நோவது ஏன்?????

சரி ஆங்கில வழி கல்வி ஒரு line ஆங்கிலத்தில் பிழை இல்லாமல் எழுத கற்று கொடுக்குதா........ இல்லை பேச கற்று கொடுக்குதா......... சென்னையின் leading schools நிலைமையே இதுதான்........
தமிழும் தெரியாது..........
ஆங்கிலமும் தெரியாது........
ஒரு வரி சொந்தமாக இரண்டு மொழியிலும் எழுத தெரியாது.........
அப்புறம் இந்த கல்வி எதற்க்காக?????

அன்றே படி..... அன்றே மற.......
பாடமே இப்படி........... வாழ்க்கை பாடம்???????

காசிருந்தால் எல்லாமே வாங்கலாம் என்கிற நிலைமை.........
இதில் தேச பற்று மொழி பற்று மனிதாபிமானம் எல்லாமே காணாமல் போய்விடுகிறது......

நம்மோட வீழ்ச்சிக்கு நாமே தான் காரணம்...........

பிற நாட்டில் வசிக்கும் தமிழருக்கு இருக்கும் மொழி பற்று கூட தமிழ் நாட்டில் வாழ்பவர்களுக்கு இல்லை..........
வேதனையான விஷயம்............
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top