திராவிடம் என்னும் சங்கேதம்

Advertisement

Rajesh Lingadurai

Active Member
திராவிடர்கள் யார்? அவர்களுக்கும் தமிழர்களுக்கும் வேறுபாடு என்ன? திராவிடக் கட்சிகளின் வரலாறு என்ன? திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது எப்போது? தமிழ்நாட்டுக்கு திராவிடம் தேவைதானா? திராவிடக் கட்சிகள் விளக்க மறுக்கும் இது போன்ற கேள்விகளின் ஆய்வுதான் இந்தக் கட்டுரை. கட்டுரையைப் படித்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவிடுமாறுக் கேட்டுக்கொள்கிறேன். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

https://wp.me/p9pLvW-13
 
Last edited:

Joher

Well-Known Member
Good work.........

நேற்று நடந்ததையே மறக்கும் மக்களிடம் 4000 5000 ஆண்டுக்கு முன் நடந்தற்கு மட்டும் பதில் கிடைதுவிடுமா என்ன..............

My opinion is........
எத்தனை ஆண்டென்றே தெரியாமல் மறித்து போன ஒன்றை குழி தோண்டி எடுப்பதில் என்ன லாபம்.........
ஆரியனோ திராவிடனோ.......... நம்மோட உரிமையை விட்டுக்கொடுப்பதே நாம் தான்..........
விட்டு கொடுத்து விட்டு பேசுவதில் என்ன பயன்.............
பொது இடத்தில எத்தனை பெரிய பிரச்சனை நடந்தாலும் அதை வீடியோ எடுப்பதில் இருக்கும் ஆர்வம் உதவுவதில் இல்லை.........
பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு நிம்மதியில்லை........
மனிதாபிமானமே இல்லாமல் போய்விட்டது.........
மனித உரிமை பற்றி பேசும் நமக்கு பேசும் உரிமையே இல்லை........

என்னை பொறுத்தவரை ஆரியனோ திராவிடனோ......... முதலில் மனிதனாக இருக்கவேண்டும்...........
மனிதனே இல்லை........ அப்புறம் ஆரியமும் திராவிடமும் எதற்கு..........

யார் யாரோ பேசட்டும்....... முதலில் மனிதனாக வாழ கற்றுக்கொடுப்போம்..........

யாராக இருந்தாலும் தனி நபரின் தியாகத்தை கொச்சை படுத்த வேண்டாம்........
பிள்ளைகள் சரில்லை என்பதற்காகா அப்பாவும் சரியில்லை என்று அர்த்தமா????????
 
கருத்துக்களுக்கு நன்றி ஜோஹர். இது வெறும் வரலாற்றைத் தோண்டும் முயற்சியன்று. நம் உரிமைகளை எப்படி நாம் மெல்ல மெல்ல இழந்து வருகிறோம் என்கிற உண்மை. இந்தியா முழுமையும் பரவிக்கிடந்த நாம், தற்போது தமிழ்நாட்டைக் கூட ஆளும் உரிமையை இழந்து நிற்பது நிதர்சனம். இதெற்கெல்லாம் மூல காரணம் நாம் நமது வரலாற்றைத் தொலைத்து நிற்பது தான்.

1000 ஆண்டுகளாக நமக்கு எட்டாத நம் வரலாறு, நமது அடுத்தத் தலைமுறைக்காவது போய் சேர வேண்டும். வரலாறு என்றாலே பழங்கதை என்று ஒதுக்கித்தள்ளியதன் விளைவைத்தான் நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். வரும் தலைமுறையேனும் நம் இனத்தை எண்ணி பெருமிதம் கொள்ளட்டும். இந்த மண் (இந்தியா) நமக்கு சொந்தமானது, நாம் ஆளலாம் என்ற நம்பிக்கையோடு வளரட்டும். அந்த நம்பிக்கை மரம் வளர, இது போன்ற கட்டுரைகள் உரமாகட்டும்.
 
வரும் தலைமுறை......... சிரிப்பு தான் வருது........ யார் படிக்கிறா.........
100-ல் 25 பேருக்கு தான் தமிழ் நன்றாக எழுத படிக்க தெரியுது...........
இன்னும் 10 வருடம் போனால் அது கூட குறைந்து விடும்..........
இந்த site-ல வந்து தான் பல வருடங்களுக்கு பிறகு தமிழில் எழுத ஆரம்பித்தேன்......

நம் உரிமை நம் கையில் தான்........ வரலாற்றை தொலைத்தால் நம் உரிமையை இழக்கவில்லை............. காசுக்கு விலை போகும் அவலம் தான்............ இதை என்ன சொல்ல.........

உங்க Profile பார்த்தேன்........
திருநெல்வேலி மாவட்ட காற்றாலை (காவல் கிணறு area) 2000-ம் வருடத்தில் எப்படி தொடங்கியது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.......
அதே மக்கள் இப்போ நிலம் போச்சேன்னு பதறுகிறார்கள்..........

இதே மாதிரி தான் எல்லா விஷயத்திலும்........

ஒருத்தனை ஏமாற்றணும்னா ஆசையை தூண்டனும்.......... அது perfect-ஆ நடக்குது.......
 
malar02

Well-Known Member
வரலாறு எல்லாம் முற்றும் உண்மையை கூறிவிடவில்லை எழுதியவர்களின் மனநிலை அந்த நேரத்து சான்று இதை வைத்துதான் சான்று எங்கிருந்து வருகிறது திரும்பவும் அதே புள்ளியில் போய் நிற்க வேண்டியது தான் என்று தோன்றுகிறது
தமிழனுக்கு தனி அடையாளம் தேவையில்லை அது உலகமுழுவதும் சாட்சிகளை விட்டு தான் போயிருக்கிறது
எதை காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல வருகிறீர்கள் அறிவியலும் இயற்கையும் எதை விட்டு போகிறதோ அதுவே மனிதனுக்கு அடையாளம் என்று நினைக்கிறேன் .
 
தமிழர்களுக்கு தனி அடையாளம் தேவையில்லையென்றால் இந்தியர்களுக்கு தனி அடையாளம் தேவையா என்பதில் தங்கள் கருத்தை அறிய விருப்பப்படுகிறேன். தனக்கென்று, தனது மொழிக்கென்று ஒரு அடையாளம் என்பதுதான் மனித இனத்தின் மாண்பு. ஓர் இனத்தின் மாண்பை, அதன் அடையாளத்தை மற்றொரு இனம் ஏற்றுக்கொள்ளும் வரையில் பிரச்னையில்லை. நமது வரலாறு மறுக்கப்படும்போது அதை உறுதி செய்வது நமது கடமை.

சிந்து சமவெளி நாகரித்தில் சிவன்தான் தெய்வம். சிவன் தமிழர்கள் வணங்கிய கடவுள். சிந்து சமவெளி நாகரிகம் என்பது தமிழர் நாகரிகம் என்பது அந்த ஆராய்ச்சியில் தற்போது வரை ஈடுபட்டிருக்கும் ஐராவதம் மஹாதேவன், அஸ்கா பார்போலோ போன்றவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அதை இந்திய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள சொல்லுங்கள். இந்தியாவில் கண்டெடுத்த கல்வெட்டுகள், செப்பேடுகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை தமிழ் மொழி கல்வெட்டுக்கள். இது இன்றும் நம்மிடையே இருக்கும் ஆதாரம். தமிழ்தான் இந்தியாவின் மூத்த மொழி என்பதை இந்திய அரசை ஏற்றுக்கொள்ள சொல்லுங்கள். தமிழ் மொழியின் ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் எல்லாவற்றையும் மைசூரில் கொண்டு போய் வைத்துக் கொண்டு அதை நாம் பார்ப்பதற்குக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. நமது வரலாற்று சான்றுகள் நம் கண்முன்னே அழிந்து கொண்டிருக்கிறதே, இந்திய அரசு நமது வரலாற்று ஆவணங்களைக் காக்க முன் வருமா? தமிழ் மொழி மற்றும் தமிழர் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்பது என் குற்றச்சாட்டு.

திராவிடம் என்ற சொல் நம் மீது எவ்வாறு விதைக்கப்பட்டது என்பது குறித்த அலசல்தான் இந்த கட்டுரை. அது போலியாக உருவாக்கப்பட்ட ஓர் அடையாளம் என்பது இந்த கட்டுரை மூலம் நான் முன்வைக்கும் கருத்து. கட்டுரையில் ஏதேனும் விமர்சனங்கள் இருத்தால் முன்வைக்கவும்.
 
Sainandhu

Well-Known Member
தமிழன் என்ற சொல்,திராவிடமாக எப்படி
மாறியது எனபதை பற்றிய
பதிவு நன்றாக,தெளிவாக இருந்தது.....
முக்கியமான வரலாற்று குறிப்புகளை மட்டும்
கொடுத்து,தேவை இல்லாதவைகளை தவிர்த்து
பதிவை கொடுத்து இருக்கிறார்கள்...
நன்றி...வாழ்த்துக்கள் ....

இந்த பதிவு தொடர்ந்து வருமா....?
 
Rajesh Lingadurai

Active Member
தமிழன் என்ற சொல்,திராவிடமாக எப்படி
மாறியது எனபதை பற்றிய
பதிவு நன்றாக,தெளிவாக இருந்தது.....
முக்கியமான வரலாற்று குறிப்புகளை மட்டும்
கொடுத்து,தேவை இல்லாதவைகளை தவிர்த்து
பதிவை கொடுத்து இருக்கிறார்கள்...
நன்றி...வாழ்த்துக்கள் ....

இந்த பதிவு தொடர்ந்து வருமா....?

பாராட்டுக்களுக்கு நன்றி. மன்னிக்கவும் இது தொடர் கட்டுரை அல்ல. ஆனால் இது போன்ற கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றை பதிவு செய்கிறேன்.
 
Sainandhu

Well-Known Member
பாராட்டுக்களுக்கு நன்றி. மன்னிக்கவும் இது தொடர் கட்டுரை அல்ல. ஆனால் இது போன்ற கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றை பதிவு செய்கிறேன்.

...அதனால் பரவாயில்லை....
தெரியாத மற்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளலாமே....நன்றி...ராஜேஷ்...
 
malar02

Well-Known Member
தமிழர்களுக்கு தனி அடையாளம் தேவையில்லையென்றால் இந்தியர்களுக்கு தனி அடையாளம் தேவையா என்பதில் தங்கள் கருத்தை அறிய விருப்பப்படுகிறேன். தனக்கென்று, தனது மொழிக்கென்று ஒரு அடையாளம் என்பதுதான் மனித இனத்தின் மாண்பு. ஓர் இனத்தின் மாண்பை, அதன் அடையாளத்தை மற்றொரு இனம் ஏற்றுக்கொள்ளும் வரையில் பிரச்னையில்லை. நமது வரலாறு மறுக்கப்படும்போது அதை உறுதி செய்வது நமது கடமை.

சிந்து சமவெளி நாகரித்தில் சிவன்தான் தெய்வம். சிவன் தமிழர்கள் வணங்கிய கடவுள். சிந்து சமவெளி நாகரிகம் என்பது தமிழர் நாகரிகம் என்பது அந்த ஆராய்ச்சியில் தற்போது வரை ஈடுபட்டிருக்கும் ஐராவதம் மஹாதேவன், அஸ்கா பார்போலோ போன்றவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அதை இந்திய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள சொல்லுங்கள். இந்தியாவில் கண்டெடுத்த கல்வெட்டுகள், செப்பேடுகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை தமிழ் மொழி கல்வெட்டுக்கள். இது இன்றும் நம்மிடையே இருக்கும் ஆதாரம். தமிழ்தான் இந்தியாவின் மூத்த மொழி என்பதை இந்திய அரசை ஏற்றுக்கொள்ள சொல்லுங்கள். தமிழ் மொழியின் ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் எல்லாவற்றையும் மைசூரில் கொண்டு போய் வைத்துக் கொண்டு அதை நாம் பார்ப்பதற்குக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. நமது வரலாற்று சான்றுகள் நம் கண்முன்னே அழிந்து கொண்டிருக்கிறதே, இந்திய அரசு நமது வரலாற்று ஆவணங்களைக் காக்க முன் வருமா? தமிழ் மொழி மற்றும் தமிழர் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்பது என் குற்றச்சாட்டு.

திராவிடம் என்ற சொல் நம் மீது எவ்வாறு விதைக்கப்பட்டது என்பது குறித்த அலசல்தான் இந்த கட்டுரை. அது போலியாக உருவாக்கப்பட்ட ஓர் அடையாளம் என்பது இந்த கட்டுரை மூலம் நான் முன்வைக்கும் கருத்து. கட்டுரையில் ஏதேனும் விமர்சனங்கள் இருத்தால் முன்வைக்கவும்.
நான் குறிப்பிட்ட விரும்பியது இது அழிக்கமுடியாதது இதன் சாட்சிகள் எங்கும் விரவிக்கிடக்கின்றன
யாரவது இதை தூக்கி நிறுத்தணும் போராடனும் அவசியமில்லை ஒவ்வொரு தமிழனுக்கும் இயல்பாய் இந்த உணர்வு வரவேண்டும்
தாய் மீது பாசத்தை வை என்று சொல்லிக்கொடுத்து வராது
அழிந்துவிடும் என்ற பயமே வேண்டாமென்று நினைப்பதால் அப்படி சொன்னேன் விரிவாக எழுதாமல் மனதில் பேசியதை அப்படி எழுதிட்டேன்

வலித்தால் அம்மா என்றும் அப்பா என்றும் அழைத்தால் அவன் இன்னமும் பூர்விகத்தை அழிக்க நினைக்கவில்லை என்றுதான் அர்த்தம் அவன் சிந்தனைகள் தாய் மொழி கொண்டே அமையும் மூத்த மொழி என்று தெரிந்தால்தான் ஏற்று கொள்ள சுணக்கம் காட்ப்படுகிறது
காலம் காலமாய் உலகத்தில் போர் என்று நடந்து பல விஷயங்கள் மருவி வருபவை தான் இதில் இயர்கையும் அடக்கம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top