தாய்மை

joe

Active Member
#1
இரு தினங்கள் உடல் முழுவதும்
வலி உயிர் பிரியும் வலி வலித்தது!
அரவணைக்க அருகில் அவரில்லாமல்
பயம் மனம் பயந்து நடுங்கியது!
அறையில் உள்ள பொருட்களை கண்டு
கண்கள் இரண்டும் மிரண்டது!
அரைப்பட்டினியோடும் அழுததாலும்
தொண்டை முழுதும் வறண்டது!
அன்றாட நிகழ்வென்று செவிலியரின்
அலட்சியத்தில் அரண்டது!
எப்போது இந்த வேதனை முடியும் என்று
உள்ளம் அழுது புலம்பியது!!

திடீரென்று உடலில் ஏதோ குறைந்தது
அறை முழுதும் உன் அழுகை நிறைத்தது
சந்தோஷத்தில் கண்கள் நிறைந்தது
அரை மயக்கத்தில் நிலை மயங்கியது
பெண் என்று கேட்டதும் மனம் பூரித்தது

சில மணிநேரத்தில் ரோஜா குவியலாய்
என் அருகில் நீ இருந்தாய்,
அப்போதும் எனக்கு தெரியவில்லை!

உன்னை என் கண்களாலும் கைகளாலும்
தடவி தடவி பார்த்தேன்,
அப்போதும் எனக்கு தெரியவில்லை!

சாலையில் வாகனங்களின் அதிர்வால்
நீ திடுக்கிட்டு அதிர்ந்து கைகள் இரண்டையும் உயர்த்தினாய்!
அனிச்சையாக என்
ஒரு கை
உன் கை பிடித்தது,
மறு கை
உன் நெஞ்சை தட்டிக் கொடுத்தது!

அப்போது அந்த கணம் நான்
என்னை கண்டு கொண்டேன்!
இதுதான் தாய்மை என்று உணர்ந்தேன்!

உன் பசி தீர்க்கும் போது என் வலி வேதனை மறந்தேன்!
இதுதான் சொர்க்கம் என்று உணர்ந்தேன்!

உன் சிரிப்பை கண்டதும் இதற்காக எத்தனை துன்பம் வந்தாலும் தாங்குவேன் என்று சபதமெடுக்கத் தோன்றியது!

உன் பிறந்த நாளில் மட்டுமல்ல என்றும் எனக்கு மறவாது நீ பிறந்த நொடியில்
நான் கொண்ட உவகையும்,
சபதமும்!!!
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement