தானா வந்த சந்தனமே -15-2

#1
கேள்வி கேட்கும் போதே, மண்டையில் பல்பு எரிந்தது.

"ஓ..இன்னிக்கு உன் பிறந்த நாளுல??சாரி டி மறந்துருச்சு.ஹாப்பி பர்த்டே டி.."

"ஹ்ம்ம்…"

"என்னடி கோவமா..??அதான் சாரி சொல்லிட்டேன்ல.."

"சரி,சரி விடு.."

"ஆமா..இந்த புடவை ஏது??, புதுசா இருக்கு.இது உன் புடவை இல்லியே..??"

'இதெல்லாம் மட்டும் மறக்காது..'

"உனக்கு, என் பிறந்த நாளே, ஞாபகம் இல்ல.புடவை மட்டும் ஞாபகம் இருக்குமா..??"

"இல்ல..இல்ல.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.உன் கிட்ட இந்த கலர் இல்ல.."

'உன் ஞாபகத்துல தீயை வைக்க..'

"இது,நீ இங்க வந்தபுறம்,நாங்க போய் எடுத்தது.. அதான் உனக்கு தெரியல.."

"ஓ…ஆனா அம்மா சொல்லலியே.."

"எல்லாத்தையும் சொல்லுவாங்களா..??நீ இங்க வந்து ரெம்ப மாறிட்ட..என் பிறந்த நாள் கூட ஞாபகம் இல்ல.நீ என் அக்கா ஆர்த்தி இல்ல..பூசணி மருமக ஆயிட்ட. அதான் எல்லாம் மறந்துருச்சு.பெரிய ஆள் ஆயிட்டிங்க நீங்க.."

"ஏய்,ஏண்டி..??தெரியாம மறந்துட்டேன்..இனி மறக்க மாட்டேன் டி.. போ..போய் சாப்பிடு.இதோ வரேன்.."

தப்பித்தோம், பிழைத்தோம் என்று மாடிக்கு சென்றாள் ஆர்த்தி.

'ஹப்பா.. இவளை சமாளிக்குறதுக்குள்ள.. நாக்கு தள்ளுது..'

அவளை சமாளித்து விட்டு கீழே வந்தாள்.
கீழே வந்தவளை, ஹாலில் அமர்ந்திருந்த ஆரவ் பார்த்தான்.

அவளை இது வரை, புடவையில் பார்த்ததில்லை.கல்யாணத்தில் கூட ,தாவணி தான் போட்டிருந்தாள்.
எனவே அவளை பார்த்ததும் விசில் அடித்து,

"மச்சினிச்சி வர்ர நேரம், மண் மணக்குது!!
மனசுக்குள்ள ,பஞ்சவர்ண கிளி பறக்குது..!!"
என்று பாடினான்.

'வெள்ளை பூசணி இல்லைன்னதும்,
வெள்ளை காக்காய்க்கு, தைரியம் வந்துடுச்சு..'
அவனை பார்த்து, அத்தனை பற்களையும் காட்டி புன்னகைத்து விட்டு,

"பார்த்து அத்தான், கிளிக்கு ரெக்கை வேணும் பறக்க,ரெக்கையை வெட்டிப்புட்டா..எப்படி பறக்கும்.??."

'வெட்டிப்புடுவேணு'
சொல்லாம சொன்னா.

அதில் திகில் ஆனா ஆரவ்.

"தண்ணி ஊத்துறா, மஞ்ச தண்ணி ஊத்துறா!!
மாமன்காரன், மயங்கி நின்னா, வெண்ணி ஊத்துறா..!!"

'அடங்க மாட்டேங்குறானே..'

"ஏம்மா,டெர்ரர்ராவே சுத்துற..??"

"இல்லைனா..நீங்க தான் கிளி எல்லாம் பறக்க விடுறீங்களே.."

அவனிடம் பேசிக்கொண்டே, நிமிர்ந்து பார்த்தாள்.

பார்த்தி, அவன் அறை வாசலில் நின்றிருந்தான்.
அவன் முகம் மாறி இருந்தது.
கோவத்தில் சிவந்திருந்தது.

'அச்சோ,இவனுக்கு என்ன ஆச்சு..?? நான் ஏதும் பண்ணலியே..'

அவளை முறைத்து விட்டு ,அவன் அறைக்குள் சென்றிருந்தான்.

'போச்சு..இன்னிக்கு எத்தனை வேப்பிலை அடிக்கனுமுன்னு தெரியல..'

"இந்த மொபைல் போன்னும்,பொண்ணுங்களுக்கு ஒன்னு,
நாம போன் ஒன்னை, வாங்குனதுக்கு அப்புறம் தான், புது புது மாடல் எல்லாம், கண்ணுல படும்.
அதே மாதிரி, கல்யாணத்துக்கு அப்புறம் தான் நல்ல நல்ல, பொண்ணெலாம் கண்ணுல படும்."

"ரெம்ப பீல் பண்ணுறீங்களே..அரூவை வேணா கூப்புடவா??..உங்களுக்கு ஒரு தீர்வு சொல்லுவா..??"

"ஏம்மா..??நல்லா இருக்க குடும்பத்துல, கும்மி அடிச்சுடாத.."

"அந்த பயம் இருக்கனும்.."

'ஓ..அண்ணன் சைட் அடிச்சதும். தம்பிக்கு கோவம் வந்துடுச்சோ. பீம் பாய்க்கு பொறாமை..ஹ்ம்ம்..ஆண்டவா..வேதாளத்தை மலை இறக்கு..'

டைன்னிங் ஹால்க்கு, சாப்பிட சென்றாள். அங்கே மாமி,
"உனக்கு பிறந்த நாளா டி குழந்தே??..ஷேமமா இரு.."
அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்.

"இப்போ தான், தெரியும் டி குழந்தே,அதான் அவசரத்துக்கு, கேசரி மட்டும் செஞ்சேன்..மதியம் விருந்து செஞ்சு ஜமாய்ச்சுடலாம்.."

"பரவால்ல மாமி..மதியம் ஏதும் வேண்டாம்.நான் வெளியே, என் தோழி கூட சாப்பிட்டுக்குறேன்.."

"சரி டி, குழந்தே.."
அவள் சாப்பிட்டு முடித்ததும்,
வெளியே கிளம்ப எழுந்தாள்.

அப்பொழுது, மாடியில் இருந்து வந்த ஆர்த்தி,
"இந்தா அம்மா பேசனுமாம்,பேசு.."
தன் கையில் இருந்த மொபைலை அவளிடம் கொடுத்தாள்.

'ஆத்தி.. சேலை பத்தி அம்மா கிட்ட கேட்டாளா??, ஏதும் சொன்னாங்களா??, ஒன்னும் தெரியலையே..'
மொபைலை வாங்கி பேசினாள்.

"ஹலோ,அம்மா,"

"இன்னிக்கு தேதி பார்த்ததும் தான், உன் பிறந்த நாள்ன்னு ஞாபகம் வந்துச்சு டி. நல்லவேளை, அரூ, கடைக்கு கிளம்பி இருப்பாளோன்னு நெனச்சு போட்டேன்..
உனக்கு துணி ஏதும் எடுக்கலையே,எதை போற்றுக்க..??"

அவள் பதில் சொல்லும் முன்,
"புதுசு ரெண்டு,மூணு சுடிதார் இருந்ததே,அங்கே போறப்போ, எடுத்தது. அதுல ஏதாவது ஒன்னு போட்டுக்கோ..கோயிலுக்கு போய்ட்டு வா..
சம்மந்தியம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ..
ஒழுங்கா படி..
நல்லா இரு.உன்னையும் ஒரு நல்லவன் கிட்ட ஒப்படைச்சுட்டா, எங்க கடமை முடியும்.சரி ,இங்க கொஞ்சம் வேலையா இருக்கேன்.நாளைக்கு பேசுறேன்..வச்சுடவா.."

"ஹ்ம்ம்..சரி மா.."
மொபைலை ஆர்தியிடம் நீட்டினாள்.

"என்னடி வச்சுட்டே.. நான் பேசலாம்னு இருந்தேன் அம்மாட்ட, எடுத்ததும், உன் கிட்ட கொடுன்னு சொன்னாங்க..சரி நீ பேசுனதும், பேசலாம்னு நெனச்சேன்.."

"அவங்களுக்கு ஏதோ வேலை இருக்காம்.."

"சரி அப்புறம் பேசிக்குறேன்.."

'நல்லவேளை, வேற எதுவும் பேசல ரெண்டு பேரும்.இனியும் பேசக்கூடாது ஆண்டவா..'

"சாப்பிட்டியா..??கொஞ்சம் இரு..நானும் சாப்பிட்டு வரேன்..ரெண்டு பேரும் கோயிலுக்கு போலாம்.."

'அடுத்த சோதனையா??'

"அதெல்லாம் வேண்டாம்.நான் போய்கிறேன்.நீ கடைக்கு கிளம்பு.."

"ஏண்டி,ஆரவ் கிட்ட சொல்லிட்டேன்.அவர் கடைக்கு போய்ட்டு, கார் அனுப்புறேன்னார்.கோயிலுக்கு போய்ட்டு, இங்க வந்து சாப்பிட்டு,திரும்ப நீ கிளாஸ்க்கு போ..நான் கடைக்கு போறேன்.."

"அதெல்லாம் வேண்டாம்.என் பிறந்த நாளே, ஞாபகம் இல்ல, உனக்கு.எனக்காக, நீ உன் கடை எல்லாம், விட்டு வர வேண்டாம்.நானே போய்கிறேன்.."

"கொஞ்சம் இருடி.."

இதுக்கு மேல் நின்றாள்.ஆர்த்தி கூட கிளம்பிவிடுவாள் என்று, அவசரமாய் கிளம்பி வெளியே சென்றாள்.அவள் பதிலை கூட, காதில் வாங்காமல்.

தெரு முனையில், பார்த்தி பைக்குடன் காத்திருந்தான்.
"எவ்வளவு நேரம்..??"
சிடுசிடுத்தான்.

ஆரவுடன் பேசியதால் வந்த சிடுசிடுப்பு இது, என்று அறிவாள்.
ஏதும் பேசாமல், அவன் பின் ஏறி அமர்ந்தாள்.
பைக் சீறிப் பாய்ந்தது. மலைக்கோட்டை நோக்கி.

D.Deepa

Well-Known Member
#7

Nice epi
 
Advertisement

New Episodes