தட்பவெட்பம் : அத்தியாயம் 8(2)

Advertisement

அத்தியாயம் 8(2)

ஆம் இவள் கூறியதுபோல் இவனுக்காகவே இவளுடைய தந்தை தாயிடம் சண்டை இட்டாள். லண்டன் யூனிவர்சிட்டியில் பிசினஸ் படிப்பிற்கு அவள் படிக்கவேண்டும் என்பது அவளின் சிறு வயது ஆசை கனவு எல்லாம். என்று இவள் வினய்யிடத்தில் தன் காதலைக் கூறினாளோ அன்று முதல் இவளுடைய ஆசை கனவு எல்லாம் வினய் மட்டும் தான் என்று உறுதி எடுத்தாள். பள்ளிப் பருவத்தில் முளைத்த முதல் காதல். பள்ளியில் ஆரம்பித்த இவர்களுடைய நட்பு பள்ளி முடிந்து மாலையில் தனி வகுப்பு நேரங்களிலும் தொடர்ந்தது. இவன் இவளிடத்தில் காட்டும் உரிமை , இவன் நடந்து வருகையில் இவள் மனம் படுத்தும் பாடு இது காதல்தான் என்று அடித்துக் கூறிக்கொண்டாள் .

இவன் உடுத்தும் உடையின் நிறமும் இவள் உடுத்திய உடையின் நிறமும் சொல்லி வைத்தாற்போல் ஒரே நிறத்தில் இருக்கும் தற்செயலாக . இது ஒரு நாள் இரு நாள் நிகழும் நிகழ்வல்ல தினமும் நிகழும் நிகழ்வானது . எதேச்சையாக நடக்கும் செயல் அது . மனம் ஒத்தி இருப்பவர்களுக்கு மட்டுமே இவ்வாறு நடக்கும் என்று நம்பினார். பருவ வயதில் உண்டான காதல். எதைப்பற்றியும் சிந்திக்காது மேல் தோற்றமோ அல்லது அவர்கள் மேல் உடுத்திக்கொள்ளும் உடையின் தோற்றமோ எதோ ஒன்று பிடித்து காதல் செய்யத் தூண்டுகிறது அவர்களின் வயது அப்படியானது. நட்பு வட்டத்திலிருந்தவர்கள் யாரும் தெரியா வண்ணம் நட்பாகிய இவர்கள் காதல் தளத்தில் அடியெடுத்து வைத்தார்கள். அவர்களின் காதல் வட்டத்தை வலிமைப்படுத்தி இப்பொழுது ஒருவர் மீது ஒருவர் உயிரும் உடலுமாக இருக்கவேண்டும் என்று தங்கள் காதல் பயிரை வளர்த்து வருகின்றனர் இன்று வரை.
மாணிக்கம் மைதிலி அவர்களின் செல்ல மகள் , அதுவும் ஒற்றை மகள். இவர்கள் தலைமுறை தலைமுறையாக ஜவுளி ஆலை மற்றும் நிறுவனம் சொந்தமாக நடத்தி வருகின்றனர். இவளுடைய தாய் தந்தைக்கு, இவள் தங்களின் தொழில் சம்பந்தப்பட்ட படிப்பைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர் அதுவும் லண்டன் சென்று படித்தால் தொழில் முன்னேற்றம் அடையும் என்று இருந்தனர் .

பிடிவாத குணத்திற்கு முழு அகராதியுமே இவள் தான் . இவளுக்குத் தெரியும் தந்தை தன் காதலுக்குச் சம்மதம் தெரிவிக்க மாட்டார் என்று. இருந்தும் இவன் தான் வேண்டும் என்று இருந்தால் அதில் தவறேதும் இல்லையே . இது எங்களுடைய சந்தோசம் இதில் அவர் சந்தோஷ படும்படி எதற்கு முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.ஆனால் அது தவறென்று அவளுக்குப் புரியவில்லை.

இவள் தன் மீது எவ்வளவு காதலை வைத்திருக்கிறாள் என்று சந்தோஷத்தில் திக்குமுக்கு அடைத்தான் காதலன் ஆகிய வினய். இவள் என்னவள் எனக்கானவள் இவளை எந்த சந்தர்ப்பத்திலும் விடக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டான் .

அவளை தலை முதல் கால் நுனிவரை கண்களால் அளவெடுத்தான்

கருப்பு நிற குடைபோன்ற வடிவிலான சுடிதாரும், சாம்பல் நிற நெட் துணியால் செய்யப்பட்ட துப்பட்டாவும் அணிந்திருந்தாள். அவளுடைய காதில் குடை போன்ற வடிவில் கருப்பு சில்க் துணியில் செய்யப்பட்ட ஜிமிக்கி கம்மலும், அதே துணியில் செய்யப்பட்ட வளையலும் அணிந்து இருந்தால் . நெற்றியில் கருப்பு நிற பொட்டு இட்டிருந்தால் கடுகைவிடச் சிறிதாக.

தோள்பட்டை அளவே உள்ள கூந்தல். காற்றில் அசைந்தாடும் கூந்தலைச் சிறு கேட்ச் கிளிப் கொண்டு அடக்கி வைத்தாள்.

அவள் கைகளைப் பிடித்திருந்தவன் பிடித்த வாக்கிலேயே தன் ஒற்றைக் காலை மடக்கி அவள் முன் மண்டி இட்டு அமர்ந்தான்

" என்னுடைய இதய ராணியே நீ என்கிட்ட பலமுறை சொன்னது நான் உன்கிட்ட சொல்லாதது ஆனாலும் உனக்கு என்னுடைய பதில் தெரியும் .

நீ என்கிட்ட காட்டும் பாசம் எனக்கே எனக்கானது. நீ செலுத்தும் அக்கறை . என்ன மட்டுமே நீ நினைத்து உன்னுடைய வாழ்க்கையை செதுக்குகின்ற உன் செயல். இப்படி என்மீது உயிராய் இருப்பவளை நான் எதை செய்து, உன்காதலுக்கு ஈடுகொடுப்பேனென்று தெரியலை. ஆனால் கண்டிப்பா எந்த சந்தர்ப்பத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் என் இதயத்தில் ராணியாக வீற்றிருக்கும் நீ என்னுடைய வாழ்க்கையிலும் நீயே ராணியா வருவதற்கு எப்பாடு பட்டாலும் உன்னை இழக்க மாட்டேன் .

நீ இப்போது இருக்கிற மாதிரி பெரிய அரண்மனை போல வீடு என்னிடம் இல்ல . ஆனால் கண்டிப்பா ஒரு நாள் அந்த அளவுக்கு என்னால் வரமுடியும் என்று நம்புகிறேன் . என்னுடைய கோட்டைக்கு ராணியா என்னுடைய ராணியா என்னுடனே நீ இருக்க வேண்டும் இருப்பாயா யுவராணி "

அவன் இவ்வாறெல்லாம் பேசுவான் என்று நினைத்தது கூட இல்லை . இவனிடத்தில் இவள் முதல் முறை காதல் சொல்லும்போது கூட . அவன் யோசிக்க ஒரு நாள் எடுத்துக்கொண்டான். பின் அவனே அவளுடைய காதலை ஏற்ற நாளிலிருந்து காதலர்களாகப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் வேளையில் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது . பின் மத்திய உணவு வேலையின் பொழுது தங்கள் உணவுகளை மாற்றி உண்பது . இவளுக்கு இவன் சாக்லேட் வாங்கி கொடுத்து தன்னுடைய காதல் அளவை இதைவிட வேறு எப்படியும் எனக்குக் காட்டவும் தெரியாது சொல்லவும் தெரியாது என்று இருப்பான். இவள் ஒரு நாளைக்கு பத்துமுறை ஐ லவ் யு சொன்னால் இவன் ம்ம்ம்ம்ம் என்று நிறுத்திக்கொள்வான் .

"உன்ன கொஞ்சநேரம் அலைய விடட்டுமா "

"வேண்டாம் பேபி மா , அப்பறம் நான் அழுதுடுவேன் "

"போடா பக்கி "

"ப்ளீஸ் டி "

"பத்தவே பத்தாது "

"சாக்லேட் வாங்கி தருவேன் டீ "

"நான் ஒன்னும் இப்போ குழந்தை இல்லை சாக்லேட் காட்டி மயக்குவதற்கு "

" உஷார் தான் டி நீ, சரி அப்போ உனக்குப் பிடித்த ஹீரோ மூவி போகலாம் "

"வேண்டாம் " அவர் நோக்கி சடால் என்று

" அப்போ ஹனி சாப்பிடலாமா " என்றுகூறி கண்ணாடிதான்

அதில் முகம் சிவந்து தலைகுனிந்தவள்

"போடா எருமை மாடு காலேஜ் ல பேசுகிற பேச்சா இது "

"அடியே உனக்குக் கூட வெட்கம் வருதுடீ , இப்போதே ஹனி சாப்பிடவேண்டும் போல இருக்கு பேபி வாயேன் ."

"போட எருமை "

"சரி சொல்லு "

"என்னுடைய உயிரே நீதான் டா , நீ இல்லாத ஒரு நிமிஷம்கூட என்னால் உயிர் வாழ முடியாது . உன்ன யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் . எந்த சூழ்நிலையிலும், நீ எப்படி இருந்தாலும் உன்ன என்னவனாக மாற்றி காட்டுவேன். உன்கோட்டைக்கு நா மட்டுமே ராணி இ லவ் யூ சோ மச் "

என்று கூறி முடித்தவளின் கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான் .

தன்மானம் அதிகம் உள்ள வயதில் வந்த காதல், அதை இவர்கள் எளிதில் விட்டுக்கொடுப்பார்களா.

தொடரும் .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top