தட்பவெட்பம்: அத்தியாயம்-4

Advertisement

தட்பவெட்பம்

அத்தியாயம்-4

வெளியில் வந்தவளின் மனம் சற்று ஆறுதல் பெற்றது போல் இருந்தது . அதே சந்தோஷத்தில் சுசீலா அம்மாவிற்கு தொலைப்பேசியில் அழைத்து தான் அங்கிருக்கும் கிளைக்குச் சென்று வேலை செய்வதாகக் கூறினாள். காலையில் அவள் இருந்த மனநிலையின் காரணமாக சுசீலா அம்மா நேரத்துக்கு எடுத்துக்கொள்ளும் மருந்தை உண்டார் இல்லையா என்பதைக் கேட்கத் தவறினால் ஆகையால் இப்போது அதைக் கேட்டுக் கொண்டு அவரையும் மத்திய உணவையும் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டு பின் தான் அங்கிருந்து கிளம்பினாள்.

காலையிலிருந்த மனநிலையின் தாக்கத்திலிருந்தவள் தான் எடுத்து வந்த உணவைக் கூட இப்பொழுது வேலை செய்யும் அலுவலகத்திற்குச் சென்று உண்ணலாம் என்று எண்ணி அங்கிருந்து பேருந்து நிலையம் புறப்பட்டாள்.

மதியும் 12 மணி மேல் தொட்டு இருந்தது அவள் அந்த அலுவலகம் அமைத்திருந்த சாலையை கடந்து பேருந்து நிலையம் வந்திருந்தாள்.

அவள் ஒரு சில்க் காட்டனில் கலம்காரி டிசைன் போடப்பட்டுள்ள புடவையை கட்டிக்கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் ஒரு மெல்லிய அளவிலான சங்கிலியும் அதற்குரிய காது அணியும் வளையலும் அணிந்திருந்தாள் . அவள் முகத்தில் எந்த ஒரு ஒப்பனையும் இல்லை . புருவத்திற்கு மத்தியில் ஒரு சிறிய அளவிலான பொட்டு மட்டுமே அணிந்திருந்தாள். கண்ணனுக்கு இனிமையாய் இருந்தாள்.

இருப்பினும் அவளிடத்தில் மற்றவர்களைத் தள்ளி நிற்கவைக்கும் பார்வையுடன் பேருந்து நிலையத்திற்கு வந்தாள்.

வந்தவளின் பார்வை தற்செயலாக அவளின் இடது புறம் திரும்பி தன் முன் நெற்றியில் சரிந்த முடியை ஒதுக்கிக்கொண்டு சாலையை வெறித்தாள் .

பார்த்தவள் பார்வை பார்த்தபடி இருக்க பேயைக் கண்டு மிரண்டவளாக, தான் நிற்கும் பூமி தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தது போல் உணர்ந்தாள். அழுகையா , கோபமா, வெறியை, ஏமாற்றமா என்னவென்று உணரும் நிலைமை தெரியாமல் தடுமாறினாள்.

இன்று காலை முதல் அவளின் மனம் பட்ட போராட்டத்தின் முடிவு இதுதானா என்று அவள் பயத்தில் துக்கம் தொண்டை அடைத்தது .

காலையிலிருந்து உண்ணாமல் இருந்தது பின் உச்சி வெயில் மண்டையைப் பிளந்ததுபோல் வலி, தலைச்சுற்றல் என்று எல்லாம் ஒன்றுசேர்ந்து அவள் தடுமாறினாள். தன் இருக்கைகளால் தலையைத் தாங்கி தள்ளாடி நின்றாள். அவ்வப்போது எங்கோ தூரத்தில் பிம்பமாக அவன் உருவம் தெரியும் பொழுதெல்லாம் இதற்கு சாத்தியம் இல்லை என்று புறம் தள்ளிவிட்டு நகர்ந்து விடுவாள்.

ஆனால் இன்று அவனைப் மிக அருகில் பார்த்த நொடி அதுவும் உண்மைதான் என்று உணர்த்த நொடி அவள் கண்முன் அவன் தனக்கு செய்த காரியமும் அவனால் தனக்கு ஏற்பட்ட வலியும் அவன் பேசிய வார்த்தைகள் யாவும் பசுமரத்தின் ஆணிபோல் ஆழப்பதிந்து விட்டிருந்தது. அதுவே அவள் மனக்கண்ணில் வந்து சென்றது. யாரை நம்பி தம் வாழ்க்கை ஆரம்பிக்கும் பொழுதின் ஆரம்பத்திலேயே முடிந்ததோ. ஊர் அறிய உறவுகள் வாழ்த்தி இவனுடன் ஆரம்பித்த தன் உறவு, இவனின் உதிரம் கொண்டு உருவான அந்த உறவை எண்ணி எண்ணி மனம் வெதும்பினாள். தன் மகவை எண்ணி வருந்தினாள்.

இது எப்படி சாத்தியம் ஆகும் இறந்தவன் எப்படி உயிருடன் முழு உருவம் கொண்டு வருவான்? அப்போது நாம் இந்நாள் வரை தூரத்தில் கண்ட உருவம் பொய் இல்லையா. அப்படி இது மெய் என்றால் அன்று இறந்தவன் போல் இருந்த உடல் யாருடையது? அன்று நடந்த காரியம் பொய்யா . பின்பு அது யார் . ஏன் எனக்கு இவ்வளவு சோதனை கடவுளே. " என்று தலையை அழுந்தி பிடித்துக் கொண்டாள்.

எவ்வளவு பெரிய அந்நியாயம் அவளிற்கு நடந்திருக்கிறது. நின்றவள் நின்ற இடத்திலே அவனை பார்த்திருந்தாள். தான் நிற்பது பொதுமக்கள் அதிகம் நடமாடும் சாலை, இங்குத் தன்னை பலநூறு பேர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்று எண்ணத்தை மறந்து அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் . இன்றைய நாளில் இவளுக்கு கிடைத்த முதல் அதிர்ச்சியில்.

பார்த்துக் கொண்டிருந்தவளையே அவனும் பார்த்தான். ஆனால், பார்த்தவனின் மனநிலை முற்றிலும் மாறுபட்டிருந்தது .

இவள் எதற்குப் பூதத்தைப் பார்த்தா மாதிரி நிக்குறா. என்னுடைய முகத்தை கூட பார்க்க விருப்பம் இல்லை, சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கை எழுத்து போட்டுவிட்டு இப்போது என்னமோ அதிசயத்தை பார்ப்பது மாதிரி நின்னுண்டு இருக்கா? பொது இடம் என்று சிறிது கூட சுரணை இழைத்த ஜென்மம் அப்படித்தானே நிற்கும். இவளிடம் நான் இப்படி எதிர்பார்ப்பது தவறுதான் .

ஒரு கையெழுத்தால் இருவரின் விதி மாற்றி எழுதப்பட்டது . அந்நிகழ்வு நடந்தது ஒரே காலகட்டத்தில் தான் ஆனால் நடந்தது வேறு வேறு நிகழ்வாகும்.

இவ்வாறாக இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்த சமயம் அவன் முன் பூச்செண்டாக சிறு ரோஜா பூ கை நீட்டி அழைத்து. அந்த ரோஜா பூ ஸ்பரிசத்தை உணர்ந்தவன் அந்த பூங்கொத்தாக கையில் ஏந்தினான் .

இதைக்கண்டவளின் இதயம் வெடித்துச் சிதறியது . அந்த ரோஜா பூவை உற்று நோக்கினாள். நிதர்சனம் உணர்ந்தாள். கண்ணில் கண்ணீர் புடைக்க ஆரம்பித்தது. அதை கண்சிமிட்டித் தடுக்க செய்தாள். கண்ணின் நீரை தடுத்தவளது இதயத்தில் வழிந்த உதிரத்தைத் தடுக்க தெரியாமல் மிகுந்த வேதனையில் துவண்டாள்.

இதனை பார்க்கப் பார்க்க இப்பொழுது இவள் இருக்கும் மனநிலையானது தீயின் கங்கு கொழுந்து விட்டெறிய ஆரம்பித்து விட்டதுபோல் இருந்தது.

பனிப்பாறை போல் தன்னை செதுக்கி இருந்தவள் . இந்த கட்சியால் தீ ஜுவாலை போல் ஆனாள்.

அவன் கையில் ஏந்தி இருப்பது தன்னை எவள் ஒருத்தி உத்தமியா என்று கேட்டவளின் மகள் ஆயிற்றே. அவளின் சாயலில் அவளின் பிரதி பிம்பமாகவே இருந்தது அந்த சிசு. பாவம் இந்த சிசுவிடம் நம் பகை இருக்கக் கூடாது என்று தன் முகத்தை இனிமையாக மாற்றிக்கொண்டாள். இதுதான் இவளின் குணம். வன்மை பாராட்டும் இடத்தில் மட்டுமே அவள் அதை காட்டுவாள்.

அவளின் உடல் மொழியைப் பார்த்தவன் அதனையும் தவறாகவே நினைத்துக் கொண்டான். பொது வழியில் இப்படி குழந்தையை வைத்து இருக்கும் என்னைப் பார்த்து சிரிக்கின்றாளே இவள் எப்படி பட்டவள் என்றே நினைக்கத்தூண்டியது அவனுக்கு .

தொடரும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top