தட்பவெட்பம் : அத்தியாயம் 13

Advertisement

தட்பவெட்பம் 13

தேவி தன் மனதில் இருக்கும் ஆசையை நீலமேகத்திடமும் அருள்மொழியிடமும் கூறியதும் அவர்கள் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றார்கள்.

பெண்ணின் வாழ்க்கை திருமணத்திற்கு முன் பெற்றவர்களின் பொறுப்பு. அதேபோல் அப்பெண்ணிற்கு திருமணம் ஆனபிறகு அவளின் புகுந்தவீட்டின் பொறுப்பு. அவளின் சந்தோசம் எவ்விதத்திலும் குறையக்கூடாது, அவளின் ஆசை நிறைவேற அவர்கள் இவளுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

அவளும் அவளின் புகுந்தவீட்டிற்கு சந்தோஷத்தை அள்ளி தரவேண்டும் என்று தான் பெற்றவர்கள் ஆசை படுவார்கள் .

அதே ஆசை தான் இவர்களிடத்தில் இருந்தது . தங்களின் விருப்பமும் ஆசையும் அதுவே என்று சந்தோஷமாக தேவியிடம் தெரிவித்து இருந்தனர் .

இன்னிலையில் தேஜூவும் மூன்றாவது வருடத்திலிருந்தாள். அவளின் நண்பர்களின் பட்டாளம் என்றும் அவளை சுற்றித்தான் இருக்கும். நான்கு பேர் கொண்ட குழு ஹரி , விகாஷ் , தேஜஸ்வினி, மற்றும் சுனிதா. இதில் தேஜு மட்டும் தான் வெளியூர் மாணவி .

இவர்கள் எங்கு சென்றாலும் நால்வராகத்தான் செல்வார்கள். தேஜு வெளியில் செல்கையில் விடுதி வாடன்னிடம் சுனிதா வீட்டுக்கு செல்வதாகவும், ப்ராஜெக்ட் வேலை இருப்பதாகவும் சொல்லி விட்டு சென்றுவிடுவாள். உண்மையில் அவளுக்கு படிப்பு விஷயம் சொல்லித்தான் வெளியில் வருவாள். அவர்களின் படிப்பு வேலை போக மீதம் இருக்கும் வேளையில் கடற்கரை செல்வது, திரை அரங்கிற்கு செல்வது, பெண்களுக்கே பிடித்த ஷாப்பிங் செல்வது அதுவும் தேஜூவும் சுனிதாவும் சென்றால் அவர்களுக்கு அரணாக நாங்கள் வருவோம் என்று ஹரி, விகாஷ் உடன் இருப்பார்கள். அடித்து உதைத்து கொள்வதிலும் தயங்க மாட்டார்கள். சுனிதா என்றும் தேஜுவை சிற்றி தான் வருவாள் . தேஜுவிற்கு கல்லூரியில் நிறைய நண்பர்கள் கூட்டம் இருந்தும் சுனிதா அவளை தன்னுடனே வைத்து கொள்ள விரும்புவாள்.

பலரின் பார்வை பலவிதமாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பு எவ்வாறாக இருந்தாலும். கூட பழகும் மனிதர்களின் மனநிலை என்ன வென்று ஒரு பெண் இக்கால கட்டத்தில் அறிந்தே இருக்க வேண்டும் இல்லை என்றால் அவளின் நிலை யாராலும் மீட்க முடியாத ஒன்றாகிவிடும்.

இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் அவர்கள் தங்களின் ப்ராஜெக்ட் வேலைகளை முடித்து விட்டு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு கடையை நோக்கி சென்று இருந்தார்கள் அப்பொழுது,

" தேஜு பதில் சொல்லு நம்ப ப்ரண்டு ஷீப் அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோகலாமா "

"நீ எவ்வளவு கேட்டாலும் என்னுடைய பதில் ஒன்று தான் முடியாது முடியாது முடியாது , நான் உன்ன நாட்டவட்டத்தில் மட்டும் தான் பார்த்து பழகினேன், காதல் என்று என்னுள் வந்தது இல்லை விகாஷ்"

"ஏன் தேஜு இப்படி சொல்ற நான் உன்ன நல்லாத்தானே பாத்துக்குறேன் , வாழ்க்கை முழுக்க உன்ன நல்லா பார்த்துப்பேன் நம்பு பா என்ன "

"முடியாது, என் விருப்பப்படிதான் இன்றுவரை என் பெற்றவர்கள் செய்துதருகிறார்கள். நான் படிக்கும் படிப்பு, கல்லூரி விடுதியில் சேர்ந்து தங்கும்வரை எல்லாமே என்னோடு விருப்பமா இருந்தது . ஆனால் என் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்னுடைய அப்பா தான். என்று நான் எப்போதோ முடிவு எடுத்துவிட்டேன். இந்த விஷயத்தில் என்ன வற்புறுத்தாத "

என்று அவள் முடிவு இதுதான் என்று சொல்லிவிட்டு நகரத்து சென்று விட்டாள் .

அவர்கள் பேசிகொண்டே ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்தார்கள்.

"தேஜு நீ இவர்கள் கூட உள்ள போ நான் என்னோட ஸ்கூட்டியை இங்க நிறுத்த முடியாது நான் அடுத்த தெருவில் போய் விட்டுவிட்டு வரேன்" என்று சுனிதா சென்று விட்டாள்

இவள் விகாஸுக்கு மறுப்பு தெரிவித்தது அவனுக்கு இவள் நழுவி செல்வது ஒருவித வெறுப்பையே உண்டாக்கியது. ஹரி இடம் இவன் கண்ணை காட்டி எதோ செய்கை செய்து கொண்டிருந்தான் இவை யாவும் தேஜுவின் கவனத்திற்கு எட்டவில்லை.

இம்மூவரும் அந்த கடையினில் நுழைந்து வருவதை யுவராணி தற்செயலாக கவனிக்க தொடங்கி இருந்தாள்.

வந்தவர்கள் யுவராணியின் எதிர் முனையில் ஒரு வட்ட மேஜையில் அமர்ந்தார்கள். விகாஷ் மற்றும் தேஜுவின் பின் புறமும் மட்டும் தெரியும் வண்ணம் அவர்கள் இருக்கையில் அமர்ந்தார்கள். யுவராணியின் பார்வை வட்டத்தில் ஹரி மாட்டும் தான் தெரிந்தான்.

"தேஜு உனக்கு என்ன ஐஸ்கிரீம் வேண்டும் "

"ஸ்ட்ராப்பெரி வேண்டும் " ஹரி அவளின் விருப்பத்தை தெரிந்துகொண்டவன் அவர்களுக்கு வேண்டிய ஐஸ்கிரீம் வாங்க சென்று விட்டான் .

"ஏன்டா இப்படி மூஞ்சை தூக்கிவைத்து கொண்டு இருக்க , உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு நாம் இனி இப்படி வந்து பேசுறத குறைத்துக்கலாம்"

என்று சொன்னாள். அதை கேட்டு அதிர்ந்தவன்

"இல்ல இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன் அதை விடு" என்று தங்களின் படிப்பை பற்றி பேச துடங்கிவிட்டனர்.

தங்களுக்கு பிடித்த இஸ்கிரீமுடன் வந்த ஹரி

"சுனிதா வந்ததும் அவளுக்கு தனியாக ஆர்டர் சொல்லலாம் இப்போ நாம் இதை சாப்பிடலாம்" என்று உன்ன ஆரம்பித்து விட்டனர்

"டேய் உன்னோடது என்ன" என்று தேஜு ஹரி மற்றும் விகாஷிடம் இருந்து ஐஸ்கிரீம் சிறிது எடுத்து சுவைக்க துவங்கினாள். அவள் மனதில் எந்தவித தப்பான என்னமோ இல்லை. மிக சகஜமாக தான் அவள் அவர்களிடம் பழகினாள். இது அவளுக்கு தவறாக தெரியவில்லை .

பள்ளிப்பருவத்தில் தங்களின் உணவை நண்பர்களிடம் கொடுத்துப் பகிர்ந்துகொள்ளும் ஒரு கலாச்சாரத்தில் இதுபோன்ற ஒரு செயல் அவளுக்கு தவறாக தெரியவில்லை.

போறாத குறைக்கு விகாஸும் அவளுக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டு கொண்டிருந்தான் . இவை அனைத்தையும் யுவராணி பார்த்து கொண்டிருந்தாள்

"அங்க என்ன ராணி மா பார்க்கிற "

(வேற யார் நம்ப வினய் தான் )

"நல்ல படம் அங்க போயிட்டு இருக்கு அதான் பார்க்குறேன் " அவள் கூறியதில் வினய் சுத்தி முத்தி பார்த்தவன்

"ராணி மா இங்க டிவி எதுவும் இல்லையே "

தலையில் அடித்துக்கொண்டாள் யுவராணி

"அங்க பார் அந்த டேபிள் ல மூணு பேர் இருகாங்க தெரியுதா, அந்த பொண்ணு அவங்க ப்ரண்டு பக்கத்தில் வெச்சிட்டே இப்படி ரொமான்ஸ் பண்றா. அதான் நானும் வேடிக்கை பார்க்குறேன் "

என்று அவள் தேஜுவின் இருக்கையை காட்டினாள். வினு யுவராணி சொன்ன மேசை பாக்கம் பார்த்தவனுக்கு தேஜுவின் முகம் தெரியவில்லை

"அவங்க ப்ரண்டா கூட இருக்கலாம் "

"ஏன் பேபி எவளாவது ப்ரண்டு பக்கத்தில் வெச்சிட்டு இப்படித்தான் ரொமான்டிக்கா ஊட்டிவிட்டு இருப்பார்களா அதுவும் இந்த இடத்தில் , அவர்கள் மேசையை பார் டிம் லைட், எவ்ளோ ரொமான்டிக் மியூசிக் , அவர்கள் கையில் ஐஸ்கிரீம், இந்த இடமே எவளோ ஜில்லுனு இருக்கு, நல்ல ரோமான்டிக் லாவெண்டர் பாசக் கரண்ட் ஸ்மெல் வேற, இரண்டு பேருடைய கண்ணு இரண்டு நிமிஷம் பார்த்தா போதும் கண்டிப்பா கிஸ் பண்ணாமல் இருக்க முடியாது." ?"

"அப்படி சொல்லவரியா "

"அப்படித்தான், அவனும் பார்க்குறான், நானும் பார்க்குறேன் பிரீ ஷோ , வேணும்னா நீயும் இங்க வந்து பார் "

என்று அவனை உசுப்பினாள்

"உன்னுடைய வாய் சும்மா இருந்தால் இப்படி தான் ஏதாச்சும் பண்ணுவ "

"அதுக்கு " என்று தன் ஒரு புருவத்தை ஏற்றி இறக்கினாள்,

"உன் வாய்க்கு பூட்டு போடணும் "

என்று அவள் கை பிடித்து தன் பக்கம் வம்படியாக இழுத்து அமரவைத்தான்

"ஏன் பேபி நான் சொன்னா நீ நம்ப மாட்டியா , இந்த இடம் காதலர்களுக்கு பிரத்தியேக இடம், இங்க வந்து நண்பர்கள் அது இதுனு நீயும் சொல்லுற"

"சரி விடு ராணி மா யார் எப்படி போனால் நமக்கு என்ன, ஐஸ்கிரீம் டேஸ்ட் கசக்குது டி , உன்னுடைய ஹனி கொஞ்சம் குடிக்கணும் "

என்று அவளை தன் கை வளைவில் சாய்த்துக்கொண்டு தேன் பருக ஆரம்பித்தான்.

பின் அவர்கள் அவ்விடம் விட்டு சென்ற சில நிமிடத்திலே சுனிதா தேஜுவின் அருகில் வந்து அமர்ந்தாள் .

"ஏண்டி உன்னுடைய வண்டியை யாராச்சும் தூக்கிக்கொண்டு போய்டுவாங்களா என்ன இவளோ நேரம் என்ன செய்துகொண்டு இருந்த "

"இல்ல தேஜு ரொம்ப கூட்ட நெரிசல் டி , அதன் நடந்து வாரத்துக்கு லேட்டா ஆச்ச"

அவளுக்கும் ஒரு ஐஸ்கிரீம் வாங்கி பின் அவர்கள் பேசிவிலிட்டு கிளம்பிவிட்டனர் சுனிதா தேஜுவை ஹாஸ்டலில் விட்டு விட்டு கிளம்பினாள் .

இந்த சம்பவம் போல் மற்ற சம்பவத்திலும் தேஜு ஹரி விகாஷ் மூவர் மட்டும் தனியாக யுவராணியின் கண்ணுக்கு தெரிந்தனர், அன்று சுனிதாவை ராணி பார்க்கவில்லை. இன்று அவர்களுடன் தான் இருந்தாள் அனால் யுவராணி கண்ணிற்கு இவர்கள் மூவர் மட்டுமே தெரிந்தனர். இம்முறையும் வினய் தேஜுவின் முகம் பார்க்க முடியாமல் போனது.

"அங்க பார் பேபி அதே பொண்ணு அதே இரண்டு பசங்கள் கூட தியேட்டர் கு வந்துட்டாங்க"

"யார் ராணி மா "

"அதான் பேபி நம்போ ஈடன் கார்டன் ல பார்த்தோமே அவதான் "

"அதே பசங்களா "

"ஆமா பேபி "

"எனக்கு என்னமோ அந்த பொண்ணு கேரக்டர் சரி இலானு தோணுது டா "

"ராணி மா ஏன் இப்படி பேசுற "

"பாரேன் இந்த பொண்ணு அன்னிக்கு அந்த பச்சை சட்டை போட்ட பயன் இவளுக்கு ஐஸ்கிரீம் ஊட்டி விட்டான் இன்னிக்கு அவன் பக்கத்தில் இருக்குற பையன் கைய இப்படிக் கட்டிக்கிட்டு இழைந்து நிக்குறா பாரேன் "

இன்று வினய் கண்ணிற்கு ஹரி தெரியவில்லை மாற்றாக விகாஷின் முகம் தெரிந்தது . தேஜு ஹரியின் கையை பற்று கொண்டு அவனுடன் இழைந்து நிற்பதுபோல் தெரிந்தது .

"சரி விடு யார் எப்படி போனால் நமக்கு என்ன , நம்ப படம் பார்த்தோமா வந்தோமா னு இருப்போம் சரியா. "

இவ்வாறு யுவாரிணி கண்ணிற்கு தேஜுமீது ஒரு வெறுப்பும் அவளை பார்த்தால் அருவருப்பும் தோன்ற ஆரம்பித்தது.

அங்கு தேஜு ஹரி விகாஸ் மற்றும் சுனிதா நால்வரும் திரை அரங்கிற்கு வந்திருந்தனர். அங்கு டிக்கெட் கொடுக்கும் வரிசையில் பெண்கள் வரிசை சற்று குறைவாக இருந்தபடியால் தேஜு சுனிதா இருவரும் சென்று வாங்கும் பொழுது பெண்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டதில் தேஜுவின் கால் மெதிக்கப்பட்டு அவளின் சுண்டி விறல் வீக்கம் வராத குறைதான் அவ்வளவு வலி எடுத்து விட்டது அவளுக்கு. அக்கூட்டத்தில் இருந்து வலை மட்டும் கைத்தாங்கலாக ஹரி அழைத்துவந்திருந்தான். சுனிதா மட்டும் சென்று டிக்கெட் கவுண்டரில் நின்றுகொண்டிருந்தாள். தேஜூவும் தன் தோழன்தான் இவன் என்ற நோக்கில் ஹரியின் கையை பற்றிக் கொண்டு நின்றாள் . ஆனால் அவனோ ? அவளை பற்றி கொண்டிருந்தவன் கை அவளின் தோலை அவ்வ பொது அழுத்தம் தந்தது இதை உணர்ந்தாலும் தன்னை இவன் விழாமல் இருக்கவே தாங்கி பிடித்திருக்கிறான் என்று அவனை நம்பினாள்.

ஹரி இவளை பிடித்துக்கொண்டே விகாஷிற்கு கண் ஜாடை காட்டினான் இதனை இப்பொழுதும் தேஜூ கவனிக்கவில்லை .

"சரி சரி வாங்க எனக்கு இப்போது வலி இல்லை , எனக்கு படம் விளம்பரம் ஆரம்பிக்கும் சமயத்தில் இருந்தே பார்க்கணும், அப்போதான் நம்போ தியேட்டர் வந்த பீல் வரும் " என்று ஹரி கைய உதறி விட்டு சுனிதாவின் கையை பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள் .

இதனை சற்றும் எதிர் பாரத ஹரிக்கு விருட்டென்று கோவம் வந்தது பொது இடம் என்று மனதில் வைத்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டான்

"விடு மச்சான் எங்க போய்டுவா பார்த்துக்கலாம் "

" மூன்று வர்ஷமா நம்பலும் அவ மாட்டுவா மாட்டுவா னு இருக்கோம் ம்ம்ம் அவளோட ஒரு **** கூட அவளிடம் இருந்து எடுக்கமுடியலை "

"இந்த சுனிதா பெண்ணுக்கு இருக்கு ஒரு நாள், அவளை கவுக்கர்துக்கு திட்டம் போட்டு கொடுத்து அதை பண்ணுடி னு சொன்னா இப்போ அப்போ னு நமக்கே படம் காட்டுறா , "

"அப்படி என்ன சொன்னாங்க உத்தமி "

"ம்ம்ம் அவ பாவம் டா இதற்கெல்லாம் சரி பட்டு வரமாட்டா , அதுக்கு தான் நான் இருக்கேன் இல்லனா வேற யாராச்சு பாத்துக்கலாம் னு என்கிட்டையே சொல்லுறா "

"என்கிட்டையும் அப்படித்தான் சொன்னா"

"விடு மச்சி இவள எல்லாம் இப்படி பண்ண கூடாது அதுக்கு வேற ஐடியா வைத்திருக்கிறேன் , அதுக்கு சீக்கிரம் ஒரு நாள் வரும் கண்டிப்பா அந்த பட்சி நம்ப கையில் சிக்கிடும்"

"சரி வா இதுங்க பக்கத்தில் சீட்டு இருக்கிரா மாதிரி உட்காந்துக்கலாம் "

அரங்கத்தின் அறைக்குள் சென்றவர்கள் தங்களுக்கு கொடுக்க பட்ட இருக்கையை பார்த்து அமர போனவர்களுக்கு பெரிய ஆப்பு காத்திருந்தது. ஏன் என்றால் அங்கு தேஜு மற்றும் சுனிதாவின் அருகில் ஒரு ஐவர் கொண்ட குடும்பம் உட்கார்ந்து இருப்பதை கண்டு கோவத்தின் உச்சத்திற்குச் சென்றது ஹரி மற்றும் விகாஷின் மனம் அதை எரிக்கும் பார்வையில் சுனிதாவிடம் காட்டிக்கொண்டிருந்தனர்.

தேஜு தன் தந்தை நீலமேகத்தின் மீது அளவுகடந்த பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தாள். தந்தை தமக்கு நல்ல வாழ்க்கை துணையை தான் தமக்கு அமைத்துக்கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் இருந்துவருகிறாள். அவளுக்கு கல்லூரியில் காதல் கடிதம் வந்துகொண்டுதான் இருக்கும் அதனை அவள் சட்டையும் செய்ய மடல் . அதனை எடுத்துக்கொண்டு தேவியிடமும் வினோத்திடமும் கூறிவிடுவாள் . அவர்களிடத்தில் இவள் கூறாத விஷயம் எதுவும் இல்லை . அனைத்தையும் கூறிவிடுவாள் , வினோத் சென்னையில் இருக்கும் வரைமட்டும் . அவன் பெங்களூருக்கு சென்ற பிறகு இவள் நண்பர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் அவர்களிடத்தில் பழக்கம் சற்று அதிகம் ஆனது .

இதனை முன்னமே வினோத் அறிந்திருந்தால் அவளை சற்று மிரட்டியாவது அந்த கொடிய மிருகங்களிடம் இருந்து காப்பாற்றியிருப்பான்.


தொடரும்
 
Nice ud
Always girls should behave properly in public
And should able to guess abt the person whom she is talking
Here vikash and hari both r trying to use her and sunitha know well but since she like theju and dont want to leave her friendship I think
Any how theju should be carefull
நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. அதுவும் இந்த காலகட்டத்தில் ஒரு பெண் ஆண்களிடம் பழகும் நிலையில் விழிப்புடன் இருக்கவேண்டும் .
நண்பர்களே ஆனாலும் இவர்கள் யார் எப்படி பட்டவர்கள் என்று தெரியாது பழகுவது நன்றல்ல அதுவும் ஒரு பெண் ஆராய்ந்து தான் பழக வேண்டும்!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top