தட்பவெட்பம் : அத்தியாயம் 12

Advertisement

அத்தியாயம் 12

தேஜஸ்வினி சென்னையில் தான் படிக்க போகின்றாள் அதுவும் ஹாஸ்டலில் தங்கி படிப்பாள் என்ற தகவலை நீலமேகம்சொன்னதும்.

தேவிக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை . அவளை தன்னுடன் வைத்துக்கொள்ளவே விரும்பினார்.

"எனக்கு சுத்தமா இதில் விருப்பம் இல்லை அண்ணா , தேஜுவ நான் நல்லா பார்த்துப்பேன் , அவ இங்கேயே இருக்கட்டும் "

என்று அவருக்கு தன் விருப்பத்தை சொல்லிக்கொண்டிருந்தார் . இந்த இடை பட்ட நேரத்தில் வினோத் அவள் ஹாஸ்டல் படுக்கும் விஷயம் கேள்வியுற்றவனுக்கு சற்று மனவருத்தம் இருக்கத்தான் செய்தது. இருந்தும் அவள் சென்னையிலிருந்து படிக்கப் போகிறாள் என்றதில் சந்தோஷமே.

"நான் என்ன சொல்றது தேவிமா, இதோ இருக்கிறாளே இவளே ஹாஸ்டலில் சேர்த்துவிட சொல்லித்தான் கேட்கிறாள், அதை நீயே கேட்டுக்கோ "

என்று தன் பெண்ணிடமே இதைப்பற்றி கேட்க சொல்லிவிட்டார், தேவி தேஜுவிடம் திரும்பினார்

"ஏம்மா இங்க வந்து அத்தை வீட்டில் இருந்து படிக்க போகலாமே, ஹாஸ்டல் சாப்பாடு நல்லா இருக்குமோ இருக்காதோ, அத்தை இருக்கேன் டா உன்ன நான் பாதுக்கமாட்டேனா "

உண்மையில் தேஜுவிற்கு மனம் உருகியது அவரின் அன்பில் , தனக்கு அத்தை இல்லாத குறை தேவி என்றும் கொடுத்தது இல்லை இவள் பூப்பெய்ந்த பொழுதிலும் அத்தை சீராக அவள் காதுக்கு வைரத்தோடும் தங்கத்தில் குடை ஜிமிக்கி அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று , கழுத்துக்கு காசு மாலை, கெம்ப் கல் பதித்த வளையல்களும் வாங்கி கொடுத்திருந்தார் . அவருக்கு நேரில் சென்று அவளுக்கு அணிய வேண்டும் என்று தான் ஆசை. கணவரை இழந்து இருக்கும் தன் நிலை எங்கே அவர்களுக்கு சங்கடம் கொடுக்குமோ என்று அவரே விலகி விட்டார். அது ஒன்று மட்டும் தான் தேஜு அவர்களிடத்தில் சண்டை இட்டாள். பாசம் காட்டுவதில் தேவி தான் சிறந்தவர் என்று தன் தாயிடமே சொல்லிவிடுவாள். இத்தனைக்கும் தேவி நேரில் சென்று இவளிடம் பாசம் காட்டியது குறைவே எல்லாம் தொலைதூரம் இருந்து தொலைப்பேசி வாயிலாகத்தான்.

அவர் அருகில் சென்று அமர்ந்தவள் தேவியின் கையை பிடித்து

"இல்ல அத்தை நான் காலேஜ் லைப் ஹாஸ்டலில் இருந்து சந்தோஷத்தை அனுபவிக்க ஆசைப்படுறேன் , ஹாஸ்டலில் இருக்கும் மற்ற பெண்களுடன் ஆடி பாடி சந்தோஷமா இருக்கலாம் . அதனால்தான் சொல்லுகிறேன் அத்தை , நான் வாரம் இறுதியில் இங்க வந்துடுறேன் நம்ப சந்தோஷமா எங்கயாச்சும் போயிட்டு வரலாம், இல்ல தோ இருக்கார்ல அவரையும் அந்த வினய்யையும் வெளியில் போகட்டும் நம்ப சொந்தோஷமா இருக்கலாம் எப்பிடி என்னுடைய ஐடியா ."

என்று தன் இரு புருவத்தை ஏற்றி இறக்கிய அவள் அவரிடம் குறும்பாகக் கண்சிமிட்டினாள் .

அதை கேட்ட தேவி சிறிது விட்டாள். வினோத்துக்கு அவள் சொன்ன விஷயத்தை விட அவளின் குறும்பு தனத்தில் சிரித்துவிட்டான் .

"வாயாடி இப்போதுதான் தெரிகிறது நீ ஹாஸ்டல்ல தங்கி படிக்க மாமாவும் அத்தையும் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று . உன்ன உங்க வீட்டிலும் ஊரிலும் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க "

"சி போ "

"வயதில் பெரியவன் னு மரியாதையை கொடு இல்ல "

"இல்லனா என்ன பண்ணுவ "

" பெருச்சாளி, எலிபொறி தூக்கி வாசலில் வைத்துவிடுவேன். அப்பறம் எப்படி நீ வீட்டுக்குள்ள வருவேன்னு பார்க்குறேன். "

"அத்த பாருங்க என்ன எலி சொல்ராங்க "

"வினோத் விடுடா குழந்தை டா அவ்வோ "

"சரி பொழச்சி போகட்டும் , நான் என்னுடைய ரூம் போறேன் "

என்று எழுந்து செல்ல இருந்தவனை நீலமேகம்

"தம்பி அப்போ நானும் வரேன் பா இவளை இன்றைக்கே ஹாஸ்டலில் தாங்கிக்கொள்ள சொன்னார்கள். நான் போய்விட்டுட்டு அப்படியே ஊருக்கு போய்ட்டுவரேன் "

என்று வினோத்திடம் கூறினார்

"அப்போது சரிங்க மாமா பத்திரமா போயிட்டு வாங்க ,தேஜுகு ஏதாச்சும் ஹெல்ப் வேண்டும்னா தயங்காமல் கேட்க சொல்லுங்கள் நான் இல்ல வினய் கண்டிப்பா வருவோம், அப்பறம் தேஜு நீயும் அம்மா மொபைல் நம்பர் வெச்சிக்கோ தேவைப்படும் சரியா"

என்று நீலமகத்திடன் ஆரம்பித்தவன் தேஜுவிடம் கட்டளையாக சில விஷயங்களை கூறிவிட்டு தன் அறையை நோக்கி சென்றான்.

பின் நீலமேகம் தேவியிடம் வினய் பற்றி விசாரித்தார்

" அந்த பையன் இன்னிக்கு முதல்நாள் காலேஜ் அதனால் ப்ரண்ட்ஸ் கூட பேசிட்டுதான் வருவேன்னு சொல்லிட்டான் அவன் வர தாமதம் ஆகும் அண்ணா "

"அப்போ சரிமா அவனமட்டும் தான் பாக்க முடியவில்லை "

"நீங்க இன்னிக்கு இருந்துட்டு போங்க அண்ணே , அவன் உங்கள பார்க்கலேனா என்கிட்ட கோவப்படுவான்."

"அதுவும் சரிதான் நான் தேஜுவ ஹாஸ்டல்ல விட்டுவிட்டு , மறுபடியும் இங்க வரேன் , நானும் வினய் பார்த்து நாள் ஆகிவிட்டது "

என்று தேவியிடம் சொல்லிக்கொண்டு தன் மகளை அழைத்துச் சென்றார் .

தேஜூவும் தேவியிடம், தான் கண்டிப்பாக வார இறுதியில் வந்து பார்ப்பதாக சொல்லி சென்றாள் .

வினய் தன் நண்பர்களுடன் பேசிவிட்டு யுவராணியையும் பார்த்துவிட்டு தான் வீடு திரும்பினான். அவன் வீடு வந்து சேர்ந்த நேரம் இரவு எட்டு நெருங்கி இருந்தது .

தேவி இவன் மீது ரொம்பவே கோவத்திலிருந்தார். அவன் வீடு திரும்பியதும்

"ஏன்டா இப்போதுதான் உனக்கு காலேஜ் விட்டார்களா, வீட்டுக்கு வர நேரம்மாடா இது? பொறுப்பே இருக்காதா உனக்கு."

என்று அவர் அவனை வீடு வாசலிலேயே நிற்கவைத்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார் . அவருடைய கோபத்தை சிரித்த முகத்துடன் ஏற்றவன் வீடு வாசலில் நின்றிருக்கும் வாகனத்தை இப்பொழுது நன்றாக கவனித்தவன் வந்திருப்பது நீலமேகம் என்பதை உணர்ந்த அந்த நொடி தாயைத் தாண்டி சென்று அவரை இருக்க கட்டி அனைத்து கொண்டான் .

"மாம்மாமா மா மா ..... எப்படி இருக்கீங்க . அத்தை வரலையா ? அப்புறம் என்ன மாம்மா இலச்சிட்டீங்க அத்தை சரியா சாப்பாடு போடுறது இல்லையா "

"அவ என்னிக்கு எனக்கு சாப்பாட்டை கண்ணுல காட்டியிருக்கா மருமகனே , எப்போதும் நாய்க்கு பொறை வைக்குற போல ஒரு ரொட்டி, ஏண்டி இப்படி கொடுக்குறனு கேட்டதுக்கு எனக்கு சுகர் இருக்காம் டயட் பாலோவ் பண்ணனும் அது இதுனு ரொம்ப பாடாப்படுத்துற பா , நீதான் வந்து மாமனை கொஞ்சம் நல்லா கவனிக்க சொல்லு "

"நான் ஏன் மாம்மா அத்தை கிட்டபோய் சொல்லணும் , நீங்களே சொல்லிட்டீங்களே "

என்று தன் மொபைல் போனை எடுத்து அவரிடம் காட்டினான். நீலமேகம் உண்மையில் ஆடிவிட்டார். நீலமேகம் புலம்ப ஆரம்பித்ததும் அவன் அருள்மொழிக்கு அழைப்பு விடுத்து விட்டான்.

"இன்னும்மும் உன்னுடைய குறும்பு குறையாதா ஏன்டா இப்படி என்ன மாட்டி விட்டுட்ட" என்று அவனை கடிந்து கொண்டார். அவனிடம் இருந்து கைப்பேசியை வாங்கியவர் அருள்மொழியிடம் இருந்து நல் மொழிகளில் பாராட்டும் வாங்கினார்.

பின் வினய் இடம் தேஜுவை பற்றி கூறிவிட்டு அவனிடம் சற்று நேரம் பேசியவர் பின் இரவு உணவையும் உண்ட பின் தான் அவர் கிளம்பினார்.

தேஜூவும் விடுதியில் தன்னுடன் தங்கியிருக்கும் தோழிகளுடன் அரட்டை அடித்துவிட்டு உணவு உண்டு பின் தன் தந்தை இடமும் தாய் இடமும் சற்று பேசிவிட்டு அவள் உறங்கச் சென்றுவிட்டாள் .

இன்று ஒரு ஒருவரின் மனநிலை மிகவும் சந்தோஷ களிப்பிலிருந்தது.

தேஜஸ்வினிக்கு தனக்கு பிடித்த படிப்பும் அதுவும் கல்லூரி விடுதியில் என்று அவள் சந்தோஷத்தின் எல்லையில் இருந்தாள்.

யுவராணி தனக்குப் பிடித்த படிப்பு என்று கூறமுடியாது இருந்தாலும், அவள் தனக்கு பிடித்தவனின் அருகில் என்றும் அவனின் முகம் பார்க்கும் சந்தோஷத்தில் திளைத்திருந்தால். இதே நிலையில் தான் வினய்யின் மனநிலையும் இருந்தது .

இவ்வாறாக நாட்களும் வாரங்களும் கடந்து மாதமும் கடந்த நிலைமையில் அவர்களுக்கான முதல் செமெஸ்டரும் வந்தது. தேஜுவிற்கு நிறைய நண்பர்கள் பட்டாளமே அமைந்துவிட்டது அவளின் குறும்பிலும் அவளின் வெளிப்படையான வெகுளிபேச்சிலும் , ஆண் பெண் என்ற பாகுபாடு பாராமல் இவள் பழகினாள். தேர்வை முடித்த தேஜஸ்வினி அவளுடைய கிராமத்திற்குக் கிளம்பினாள்.

இங்கு யுவராணியோ வினய்யை பார்க்காமல் எப்படி இருக்க முடியும் என்ற எண்ணத்திலிருந்துவந்தாள். அவளின் கவலை தோய்ந்த முகத்தை பார்க்க பிடிக்காதவன் அவளின் கவலை போகும் வண்ணம் அவன், அவளை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு


"ராணி மா என்னோட மாமனாருக்கு போன் பண்ணி இன்னிக்கு ப்ரன்ஸ் எல்லாரும் பீச் போறோம், வாரத்துக்கு லேட்டாகும் சொல்லிடு " என்றான்

"டேய் அப்படி சொன்னா அப்பா என்ன வேவுபார்க்க ஆல் அனுப்பு வாருடா " என்றாள்

"நீ சொன்னதை மட்டும் செய் ராணி மா " கடுப்படிதான்

அவனை முறைத்து கொண்டே அவன் சொன்னது போல் செய்தாள். பின் அவளை மாயாஜால் கூடிக்கொண்டு ஓடாத ஒரு படத்துக்கு ஓடி போய் இரண்டு டிக்கெட் வாங்கி வந்தான்.

"பீச் போகலாம்னு சொன்ன இப்போ இங்க கூட்டிட்டு வந்திருக்க ?"

"அடி மக்கு நீதான சொன்ன அப்பா ஆளுங்கள் வருவாங்கனு அதன் பீச் னு பொய்ச்சொல்லிட்டு நம்ப இங்க வந்தோம், ரொம்ப சிம்பிள் டி . என்ன இப்படி திருட்டு தனம் பன்னவிட்டுட்டியே "

என்று புலம்பியவனை முறைத்த முறையில் திரை அரங்கை தேடி இவளை அழைத்து சென்றான் .

"நான் உன்ன இந்த செமஸ்டர் பிரேக்ல பார்க்காம எப்படி இருக்க போறேன்னு பீல் பண்ணா நீ ஜாலியா செலப்ரேட் மூட்ல வந்தவன்போல் இங்க வந்து படம் பார்க்க டிக்கெட் வாங்குற, உன்ன அடிக்கணும்னு தோணுதுடா பப்ளிக் பிலேஸ்னு பாக்குறேன் "

அவனிடம் எரிந்து விழுந்தாள். அவள் அவனை திட்டினால் அவனிடம் வரும் ஒரே ரியாக்க்ஷன் சிரிப்பு . உண்மையில் அவன் சிரிப்பில் இவள் மயங்கித்தான் போவாள்.

"சிரித்தே என்ன மயக்கிடு"

அவளை ஒருவழியாக சமாளித்து தினமும் எப்படி பார்த்துக்கொள்வது என்று திட்டத்தையும் பேசிக்கொண்டனர். அவளை நேரில் காணும்போதெல்லாம் அவளிடம் தேனைக் குடிக்காமல் விட மாட்டான் . அவளும் அவனிடம் இசைந்து கொடுப்பதும், விரும்பி எடுத்துக்கொள்வதுமாக இருப்பாள்.

அவர்களின் காதல் உடலின் உரசலுக்கு எல்லை இருந்தாலும், உயிரின் உரசலுக்கு எல்லை இல்லாமல் இருக்கும். ஒருவரிடத்தில் ஒருவருக்கு கண்ணியமும் கட்டுப்பாடும் கலந்த காதல் ஆனால் அசுரர் காதல் யாரைப்பற்றியும் கவலைகொள்ளாத காதல்.

இவர்களது முதல் கல்லூரி வருடமும் உருண்டோடியது. இரண்டாம் வருடம் இறுதி தேர்விலிருந்தனர்.

தேஜு அவ்வப்போது நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தேவியுடன் வந்து இருப்பாள். அச்சமயம் வினோத் மட்டும் தான் இருப்பான் அவனிடம் மிகுந்த நேசத்துன் பழகினாள். அவனுக்கு அவள் வரும் நேரமெல்லாம் அவனுடைய வேலை எதுவாக இருந்தாலும் அதனை தள்ளி வைத்து தேஜுவுடன் நேரம் செலவிடவே விரும்பினான். அவன் தேவி தேஜு மூவர் மட்டும் வெளியில் எங்கேனும் போவதாக இருந்தால் அவர்கள் மட்டும் சென்று வருவார்கள்.

கதை கதையாக வினய்யிடம் தேவி தேஜுவின் லீலைகள் பற்றி கூறும் பொழுது. அவன் தாய் எதோ கைதை கூறுகிறார் என்று இருந்து விடுவான் . பின் அவன் மனதில் வினோத்துக்கும் தேஜுக்கும் உள்ள உறவை இவனே ஒன்று யூகித்து கொள்வான் .

வினோத் தன்னுடைய இறுதி செமஸ்டர் முடித்து அவனுடைய ப்ராஜெக்ட் வேலையையும் முடித்து இப்பொழுது பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் சேர்வதற்கு விண்ணப்பித்து உள்ளான். வினோத்திடம் தேஜு சண்டையிடுவாள். தூவும் அவன் மேல் ஏறி அடித்துப் பிடித்து. பின் அவளே அவனிடம் சமாதானம் கொடி பிடித்து நிற்பாள். தேவிக்கு இவர்களின் சண்டையும் அதற்குரிய சமாதானமும் காணும் பொழுது தேஜுவின் குழந்தை தனமும் வெகுளித் தனமும் மிகவும் பிடித்து விட்டது . அவளை இந்த வீடு மருமகளாக அழைத்து வந்து என்றும் தனக்கு மகளாகப் பார்க்க வேண்டும் என்று ஆசையும் வந்து விட்டது .

இவருக்கு இருந்தால் அது போதுமா ? இவள் மருமகள் என்றால் , மணமகன் யாரோ?

இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் வினய் இன்றுவரை தேஜுவை பருவம் வந்தபின் ஒரு முறைகூட பார்த்தது இல்லை. அவள் வரும் நேரமெல்லாம் அவன் அவனுடைய நண்பர்களிடத்திலோ அல்லது யுவராணி உடனோ இருப்பான்.

அவனுக்கு தேஜுவிடம் பேசுவதற்கு பெரியதாக விருப்பம் காட்டிக்கொள்ள மாட்டான். அவனுக்கு நீலமேகமும் அருளும் தான் பிடிக்கும்.

விதி இவர்கள் இடம் இப்படி ஒரு கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடியிருக்க கூடாது . இதில் தோற்பவர் யார் .

தொடரும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top