ஜன்னலோர இருக்கை

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
"உறவுகளோடு சண்டையிட்டு
உரிமை பெற்றேன்
உன்னிடத்தில் அமர்வதற்கு"


"உன் கைகளான
கம்பிகளை பற்றிகொண்டு
கடந்து செல்லும் காட்சிகளையெல்லாம்
கண்களிலே நிரப்பினேன்"


"எதிர்க்காற்று முகத்தில் மோத
முழுவதும் தொலைந்தேன்"


"இதமான தென்றல்
இமை மூட வைக்க
சொர்கத்திலே இருப்பது போல்
சுகமாய் உறங்கினேன்"


"சிறு சாரல் மழை அடிக்கையிலே
ஜன்னலே உன் வழியே
சாரல் என்னை நனைக்கையிலே
ரம்மியமான பொழுததை
இரகசியமாய் பூட்டிவைத்தேன்
என் நெஞ்சமதில்"


"முடிவற்ற மின் கம்பங்களை
எண்ணி தோற்ற பொழுகளும்
கடந்து செல்பவர்களை கண்டு
கையசைத்த பொழுதுகளும்
பசுமரத்தாணியாய் பதிந்து விட்டது
நினைவினில்"


"அடுத்த நிறுத்ததில்
பிரிய வேண்டும் உன்னை
பிரியாத வரம் வேண்டும் என நினைத்தாலும்
நிறைவேறாது அது என புரிந்ததால்
நீங்கி செல்கிறேன் உன்னைவிட்டு"


"மீண்டும் விரைவில் காண்பேன்
உன்னை
காத்திரு என் கண்ணே"
 
Advertisement

New Episodes