சிரிக்க முடிந்தால் சிரிக்கலாம்...

Advertisement

I R Caroline

Well-Known Member
பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன், என்னருகில் சொந்தங்கள் கூட்டம் அமர்ந்தார்கள், அதில் ஒரு பெண்மணி சொன்னதை மற்றவர்களுடன் சேர்ந்து நானும் கேட்டது...

செல்வி, “எக்கா என்ன உன் மவன் சத்தம் என் வீடு வரைக்கும் கேட்குது”

ஜெயா, “வா உன்னதான் தேடிட்டு இருந்தேன், உன் மவன் எவளையோ லவ் பண்றானாம், அதுக்குதான் எங்கூட சண்டை போடுறான்”

செல்வி, “அதுக்கு என்னை ஏன் தேடின?:unsure:

ஜெயா, “ராத்திரி முழுசும் FB-ல பேசிட்டு இருந்தான், கேட்டா உங்கூடதான் பேசுறேனு சொன்னான்”

செல்வி, “என்னது என் கூடவா...:oops::rolleyes: அப்ப மவன் என்னைதான் லவ் பண்ணனும், அந்த புள்ளைய எதுக்கு லவ் பண்ணான்...:unsure:

முத்து, “சித்தி என்ன எகத்தாளாமா”

செல்வி, “யாருக்குல எகத்தாளம், எங்கூட பேசுறேனு சொல்லிட்டு, வேற எவ கூடயோ பேசிருக்க, எகத்தாளம் உனக்கா எனக்கால”

ஜெயா, “ஏப்ள எதித்த வீட்ல இருந்துட்டு, நீ எதுக்கு அந்த ராத்திரில அவங்கூட பேசின”

செல்வி, “ஏது ராத்திரி பதினொரு மணிக்கு உம்மவன் எனக்கு குட்நைட் சொல்வான், பதிலுக்கு நான் குட்நைட் சொல்வேன், அது FB-ல இல்ல வாட்ஸப்ல, இந்தா நீயே பாரு” மொபைலை காண்பிக்க, தங்கச்சி மைண்ட் வாய்ஸ் ‘குட்நைட் சொன்னது குத்தமாய்யா' :rolleyes::rolleyes::rolleyes:

ஜெயா, “ஏல இதையா ராத்திரி முழுசும் பேசினானு சொன்ன, நீ செஞ்சது இல்லாம, என் தங்கச்சிய இதுல இழுத்து வைக்க, உம்மொபைல கொண்டால இனிமே மொபைல தொட்ட, அந்த கையை வெட்டிருவேன்”

முத்து, “சித்தி வந்ததுக்கு நல்லா செஞ்சி வச்சிட்டீகளா, உங்க அண்ணன் மவனும் ஒரு புள்ளைய லவ் பண்றான், அதுக்கும் செஞ்சி வைங்க” என்று கோபத்தில் போய்விட்டான்.

செல்வி (மைண்ட் வாய்ஸ்), ‘என்னது நான் செஞ்சி வச்சேனா...:eek::rolleyes::rolleyes: அண்ணன் மவன் வேறயா...,:cry::rolleyes: இதுல என்ன இருக்கோ... குட்நைட்டே சொல்லக் கூடாது' :sneaky::sneaky:

அக்கா தங்கையை பார்த்து சிரிக்க, தன் அக்காவை முறைத்துக் கொண்டே:mad:, “நல்லா அம்மா மவன்னு” சொல்லிட்டு வீட்டுக்கு நடையை கட்டினாள், மூன்று மாதம் கழித்து தன் அண்ணன் மகன் திருமணத்தில் எல்லோரும் இருக்க,

செல்வி, “எக்கா பொண்ணையும் பொண்ணு வீட்டையும் பாத்தா, நம்ம ஆளுங்க மாதிரி தெரியலையே:unsure:

ஜெயா, “ஏப்ள அதான் அன்னைக்கு எம்மவன் சொன்னான்ல, அவன் ஒரு புள்ளைய லவ் பண்றான்னு, அது அவங்கூட வேலை பாக்குற புள்ளையாம் வேற ஆளுங்கதான்”

செல்வி, “ஓ சரி சரி” (அக்கா மவன் அருகில் வந்து உட்கார்ந்தான்)

முத்து, “உங்க அண்ணன் மவனுக்கு ஒண்ணு எனக்கு ஒண்ணா, என்ன நியாயம் சித்தி”

செல்வி, “என்னல சொல்ற ஒண்ணும் புரியலை:unsure:

முத்து, “ஆமா ஆமா புரியாதுல்ல, நான் அன்னைக்கு இவன் லவ்வை உங்க கிட்ட சொன்னதும், உங்க அண்ணன்கிட்ட பேசி கல்யாணத்த முடிச்சிட்டீக”

செல்வி, “என்னது நான் பேசினேனா... :oops::rolleyes:o_O என்னமோ கல்யாணம் எந்தலைமைல நடக்கற மாதிரி சொல்லிட்டு இருக்க போல லூசு”

முத்து, “ஆமா நான் லூசுதான் உங்கள நம்புனேன்ல”

செல்வி, “நீ என்ன நம்புனீயா எதுக்குல:unsure:

முத்து, “எனக்கு பிரிச்ச வச்ச மாதிரி, அவனுக்கும் பிரிச்சிரிவீகனு நினைச்சேன், ஆனா எனக்கு மட்டும் பிரிச்சி விட்டீக, அவனுக்கு முடிச்சி வச்சிட்டீக, நல்லா வச்சி செய்றீக சித்தி” என்று கோபத்தில் போய்விட்டான்.

செல்வி, “என்னது நான் வச்சி செய்றேனா... எக்கா ஒரு குட்நைட் சொன்னதுக்கு, என்ன ரேஞ்ல நினைச்சு உம் மவன் பேசிட்டு போறான்” :eek::oops::rolleyes::rolleyes::rolleyes:

*****

அத்தை குடும்பத்தார் இவர்கள் அருகில் வந்து அமர்ந்தனர்.

அத்தை, “இந்த காலத்து புள்ளைங்க நம்ம சொல்றத எங்க கேட்கு, எல்லாம் அவங்க இஷ்டம்தான்”

ஜெயா, “என்ன அத்த உங்க புள்ளைக ரெண்டும் லவ் மேரேஜ்தான, அதுக்கு ஒண்ணும் சொல்லலை, இதுக்கு மட்டும் சொல்றீக”

“நான் ஒண்ணும் சொல்லலை, அவுக சந்தோஷம்தானே வேணும், ஆனா புள்ளைக நம்ம சொல்றத கேட்கலைனுதான்”

செல்வி, “இப்ப என்ன அத்த, அவுகெல்லாம் உங்க பேச்ச கேட்காமலா இருக்காக”

மகன் 1, “எம்மா நான் லவ் பண்ணது செல்விக்கு தெரியும்”

செல்வி, ‘என்னது எனக்குத் தெரியுமா... இது அடுத்த கேஸா' என்று முழிக்க, “செல்வி போட்டோ எடுத்தோம்ல” என்று மச்சான் எடுத்துக் கொடுக்க,

அத்தை, “அப்ப உனக்கும் தெரிஞ்சிருக்கா நீயும் மறைச்சிட்டல்ல”

செல்வி, “அத்த அப்ப நான் 10 படிச்சிட்டிருந்தேன், லீவ்ல உங்க வீட்டுக்கு வந்தப்ப, நீங்களும் மாமாவும் வெளிய போயிருந்தீங்க, மச்சான் ஒரு புள்ளைய கூட்டிட்டு வந்து, என்னையும் அந்த புள்ள கூட நிக்க வச்சு போட்டோ எடுத்தாங்க, அந்த புள்ள யாருன்னே தெரியாது, மச்சான் கல்யாணதப்பதான் அன்னைக்கு போட்டோ எடுத்த புள்ளதான், இந்த புள்ளனு தெரியும்” அருகில் இருந்த மச்சான் மனைவியை காட்டினாள்.

மகன் 2, “அம்மா நான் லவ் பண்ணதும் மயினிக்கு தெரியும்”

செல்வி, ‘என்னது உன் லவ்வுமா... இது எப்போனு முழிக்க' “மயினி நீங்கதா போன் செஞ்சு கொடுத்தீங்க” அவன் எடுத்துக் கொடுக்க, அத்தை முறைக்க,

செல்வி, “அத்தை என்ன முறைக்கீங்க, இந்தப் பய ஒரு நம்பரை கொடுத்து, கால் பண்ணச் சொல்லி, ஒரு புள்ளைய கூப்பிடச் சொன்னான், நீயே கால் பண்ணுனு சொன்னதுக்கு, அந்தப் புள்ள கிட்ட படிப்புல சந்தேகம் கேட்கனும், ஆனா அவங்க வீட்ல பயக வாய்ஸ் கேட்டா கொடுக்க மாட்டாகனு சொன்னான், அதான் நான் அந்த புள்ளைக்கு கால் பண்ணேன், ஏப்ள அந்த புள்ள நீதானா” என்று சின்ன மச்சான் மனைவியிடம் கேட்க, அந்தப் புள்ளை சிரித்தாள்.

முத்து, “சித்தி எல்லோர் லவ்வுக்கும் நியாயம் செஞ்சீங்க, எனக்கு மட்டும் வச்சி செஞ்சிட்டீக”

செல்வி, ‘என்னது நான் நியாயம் செஞ்சேனா...:oops::rolleyes::rolleyes: எல்லாம் என்ன வச்சி செஞ்சிட்டு இருக்கு'

இந்த கதையை தன் உறவுகளிடம் சொன்னதே செல்விதான், அவர் சொல்லி முடிக்கவும் கூட்டத்தில் ஒருவர், “ஏப்ள செல்வி அதான் யாருக்கும் குட்நைட் சொல்ல மாட்டேங்கியா, போட்டோ எடுக்க கூப்பிட்டாலும் அதான் வரலியா, காசில்லைனு உன் மொபைல்ல கால் பண்ணச் சொன்னா செய்ய மாட்டேனு சொன்னியா”

“எதுக்கு அவுகெல்லாம் செஞ்சது போதாதுனு நீயும் என்ன வச்சு செய்ய போறீயாக்கும்” எல்லோரும் சிரிக்க அவர்களுடன் சேர்ந்து நானும் சிரித்தேன்.

குறிப்பு: பஸ்ல போறப்ப ஒட்டு கேட்டேன்னு நினைக்காதீங்க, ஊர் பக்கம் பஸ்ல சைலண்டா பேசமாட்டாங்க, முன்னாடி இருந்து பேசினா பின்னாடி நல்லாவே கேட்கும், மைக், ஸ்பீக்கரெல்லாம் வேண்டாம் அப்படித்தாங்க நானும் கேட்டது...:D:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool::ROFLMAO::ROFLMAO:
செல்வி அய்யய்யோ பாவம்
இப்படியா எல்லோரும் அவங்களை வைச்சு செய்வாங்க
சரி சரி
அந்த செல்வியக்கா அட்ரஸ் கொஞ்சம் இங்கிட்டு அனுப்புங்கப்பா
 

I R Caroline

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool::ROFLMAO::ROFLMAO:
செல்வி அய்யய்யோ பாவம்
இப்படியா எல்லோரும் அவங்களை வைச்சு செய்வாங்க
சரி சரி
அந்த செல்வியக்கா அட்ரஸ் கொஞ்சம் இங்கிட்டு அனுப்புங்கப்பா

:LOL::LOL::LOL: எதுக்கு மேம் அட்ரஸ் வச்சி செய்றதுக்கா, இல்ல லவ்வுக்கா, வச்சி செய்றதுக்குன்னா அவங்க சொந்தங்களே பார்த்துப்பாங்க:LOL::LOL::LOL:, லவ்வுக்குன்னா சைட்ல நாங்க எதுக்கு இருக்கோம், நீங்க ஆளை மட்டும் சொல்லுங்க மேம்... :p:p:p நல்லாவே (பிரிச்சு)வச்சி செய்வோம்...:p:p:D:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
:LOL::LOL::LOL: எதுக்கு மேம் அட்ரஸ் வச்சி செய்றதுக்கா, இல்ல லவ்வுக்கா, வச்சி செய்றதுக்குன்னா அவங்க சொந்தங்களே பார்த்துப்பாங்க:LOL::LOL::LOL:, லவ்வுக்குன்னா சைட்ல நாங்க எதுக்கு இருக்கோம், நீங்க ஆளை மட்டும் சொல்லுங்க மேம்... :p:p:p நல்லாவே (பிரிச்சு)வச்சி செய்வோம்...:p:p:D:D:D
கம்பேனி சீக்ரெட் ரகசியம்லாம் வெளியே சொல்லக் கூடாதுப்பா, கரோலின் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top