சிரிக்க மட்டும் 4

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஒரு பெரிய அலுவலகத்தில் பணி புரிந்து வந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டார்.

பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை.

அடுத்து என்னசெய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி,

"நீங்க ஏன் ஒரு வெட்னரி டாக்டர் கிட்டபோகக் கூடாது?"

என்று கேட்டாள்.

அதிர்ச்சி அடைந்த கணவன்,

"உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா?" என்றான்.

மனைவி சொன்னாள்,

"எனக்கொன்றும் இல்லை.
உங்களுக்குத் தான் எல்லாம் கெட்டுப்போச்சு.

காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு,

அப்புறம்
காக்கா மாதிரி குளிச்சிட்டு,

குரங்கு மாதிரி லபக் லபக்னு தின்னுட்டு,

பந்தயக் குதிரை மாதிரி வேக வேகமாக ஆபிசுக்கு ஓடி,

அங்க மாடு மாதிரி உழைக்கிறீங்க.

உங்களுக்குக் கீழே உள்ளவங்க கிட்ட
கரடி மாதிரி கத்துறீங்க.

மேலே உள்ளவங்க கிட்ட
பூனை மாதிரி பம்முறீங்க.

சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்ககிட்ட

நாய் மாதிரி குரைக்கிறீங்க.

அப்புறம்
முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை முழுங்கிட்டு,

எருமை மாடு மாதிரி தூங்குறீங்க.

அதனால தான் சொல்றேன்.
உங்களுக்கு வெட்னரி டாக்டர் தான் சரிப்பட்டு வரும்.

"என்ன சொல்வதென்று புரியாமல் கணவன் விழிக்க,

மனைவி சொன்னாள்,

"என்ன ஆந்தை மாதிரி முழிக்கிறீங்க?"
 
Advertisement

Sponsored