சின்னஞ்சிறு இரகசியமே 1 அத்தியாயம் 3

Advertisement

Vanathi

New Member
சரவணனும் தமிழரசியும் விஜய் அமர்ந்திருந்த டேபிளுக்கு பின்னே அவர்களுக்கு முதுகு காட்டி அமர்ந்தார்கள். அவர்களும் இவர்களுக்கு எதிர் திசையில் பார்த்தவாறுதான் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் அமர்ந்ததும் நித்யா உணவு வாங்குவதாகச் சொல்லி எழுந்து சென்றாள். விஜய் செல்பவளையே பார்த்திருந்தான்.

தமிழ் தன் நண்பர்களுக்கு ஒரு வேலை வந்துவிட்டதாகவும் முடிந்ததும் சரவணனுடன் வீட்டிற்குச் செல்வதாகவும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு சரவணனிடம் " டேய் இப்ப அவனுக்கு ஃபோன் பண்ணு " என்றாள்.

சரவணன் இயர் ஃபோனை மொபைலுடன் இணைத்து தமிழுக்கு ஒன்றை கொடுத்துவிட்டு மற்றொன்றை தன் காதில் மாட்டிக் கொண்டு விஜய்க்கு அழைத்தான்.
திடீரென்று " ஹேன்ட்பேகா நான் இருந்தா... ஹேன்ட்பேகா நான் இருந்தா... உன் தோளுலதான் தொங்கியிருப்பேன்... உன் தோளுலதான் தொங்கியிருப்பேன்... " என தன் மொபைல் ஒலிக்கவும் சுகமான கனவிலிருந்து மீண்ட எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தான் விஜய்.

" தொங்குவடி தொங்குவ... ஒட்ட அறுத்துருறேன் இரு... " என்று முணுமுணுத்தாள் தமிழ்.

சரவணனிடமிருந்து அழைப்பு என்றதும் விஜய் எடுக்கலாமா வேண்டாமா என யோசித்தான். நித்யாவைப் பார்க்க, அவள் வரிசையில் நின்றிருந்தாள். வர நேரமாகும் என்று தெரிந்து அழைப்பை ஏற்றான்.

" சொல்றா... "

" மச்சான் எங்க இருக்க? "

" அதான் உனக்கு மெசேஜ் பண்ணியிருந்தேனே... ஃப்ரெண்ட் வீட்லதான் இருக்கேன். "

அவன் பதில் இருவரையும் கடுப்பேற்றியது.

" உன் ஃப்ரெண்ட் என்ன வீட்ட மால் ஃபுட் கோர்ட்ல கட்டி வச்சிருக்கானா... " சரவணன் கேட்டதும் விஜய்க்கு தூக்கிவாரிப் போட்டது.

" அதோ அங்க கௌண்டர்ல ஒருத்தன் கம்ப்யூட்டர தட்டிட்டு இருக்கானே அவனா உன் ஃப்ரெண்டு? பார்த்தா டாக்டர் மாதிரி தெரியலையே " தமிழ் நக்கலடிக்க கேட்டவனுக்கு வியர்க்கவே ஆரம்பித்துவிட்டது. சுற்றிமுற்றி இருவரையும் தேடினான்.

" மூதேவி பின்னாடி பாரு " சரவணன்.

விஜய் சட்டென்று பின்புறம் திரும்பிப் பார்க்க, தமிழும் சரவணனும் பொறுமையாக திரும்பி நண்பனை ஏறிட்டார்கள்.

விஜய் நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். ' சுத்தம். இனி ஏழரை சனி எப்ப விடுமோ... ரெண்டும் வெரைட்டி வெரைட்டியா வச்சு செய்யுமே ' என நினைத்து எச்சில் விழுங்கினான்.

இருவரும் எழுந்து வந்து விஜய்யின் அருகில் ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்தார்கள். அவன் கண்களில் மரண பீதி.

" சரவணா... ஒரு சிட்டுவேஷன் சாங் போடு " தமிழ் விஜய்யை பார்த்துக் கொண்டே சொல்ல, அவனும் போட்டான்.

" மாட்டிக்கிச்சே... மாட்டிக்கிச்சே... மாட்டிக்கிச்சே... மாட்டிக்கிச்சே... "

" டேய் டேய் போதும் நிறுத்துடா " விஜய்.

" இங்க என்ன பண்ற? " சரவணன்.

" மால்ல என்னடா பண்ணுவாங்க? "

" அந்த வெங்காயம் எங்களுக்கும் தெரியும்... ஃப்ரெண்ட் வீட்டுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு மால்ல என்ன வேலை உனக்குன்னு அவன் கேட்டான். " தமிழ்.

' எப்படியாவது சமாளிச்சிடு ராஜா ' என்று விஜய்யின் மனசாட்சி கதற " ஃப்ரெண்ட் வீட்டுக்குத்தான் போனேன். ஆனா அவன் அவனோட ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டான். அதான் நான் மாலுக்கு வந்துட்டேன். " என்றான்.

" ஆஹான்... நீ வந்த சரி... நித்யாவும் கூட எதுக்கு வந்தா? எங்கள விட்டுட்டு நீங்க ரெண்டு பேரு மட்டும் தனியா என்ன சுத்திட்டு இருக்கீங்க? " சரவணன்.

' சுத்தம்... அவளையும் பார்த்துட்டானுங்களா... இனி கடவுளால கூட நம்மள காப்பாத்த முடியாது போலயே ' என்று மேலும் மேலும் கதறிய மனசாட்சியின் வாயைப் பொத்திவிட்டு " அது... போரடிக்குதுன்னு சொன்னா. அதான் மாலுக்கு போலாம் வரியான்னேன். வந்துட்டா. "

சரவணன் தமிழைப் பார்த்து " தமிழு... நல்லா பாரு என் காதுல பூ எதாவது சுத்தியிருக்கு? " என்க, அவளும் " இல்லயே. என்ன பாரு... எனக்கு ரெண்டு காதும் குத்தியிருக்குதான... " என்றாள்.

" ஏன்டா நீ உன் இஷ்டத்து புருடா உடுவ... நாங்களும் அப்படிங்களா சாமின்னு தலையாட்டனுமா? " தமிழ்.

விஜய் திருட்டு முழி முழித்தான். " இவங்கிட்ட என்ன பேச்சு... நித்யாவுக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்து என்னடின்னு கேட்டா உண்மைய சொல்லிட்டு போறா... " சரவணன் சொல்லிவிட்டு எழவும், " அதான " என்று தமிழும் எழுந்தாள்.

" ஐய்யோ டேய்... அவளுக்கு ஒன்னும் தெரியாது. அவகிட்டயும்தான் பொய் சொல்லி கூட்டிட்டு வந்திருக்கேன். பொத்திட்டு உட்காருங்க ரெண்டு பேரும். " விஜய் அவசர அவசரமாக இருவரையும் பிடித்து இருக்கையில் அமர்த்தினான்.

" அவளுக்கே தெரியாதுன்னா... அப்ப விஷயம் பெரிசு போலயேடா " தமிழ்.

" நம்மகிட்ட இவன் எதையோ பெருசா மறைக்கிறான் " சரவணன் தாடையை சொரிந்தான்.

" என்ன கூந்தலுக்கு பொய் சொன்ன? மரியாதையா என்னன்னு சொல்லிடு " தமிழ்.

" இப்ப வேணாம். அப்பறமா சொல்றேன்டி " விஜய் பரிதாபமாகக் கேட்டான்.

" இவன் வேலைக்கு ஆகமாட்டான். நித் " என்று கத்தப் போன சரவணனின் வாயைப் பொத்தி " டேய் கெடுத்துத் தொலையாதடா. உன் கால்ல கூட விழுறேன். சத்தியமா நானே அப்புறம் என்ன விஷயம்னு சொல்றேன். " என்றான் விஜய்.

சரவணன் அவன் பிடியிலிருந்து விடுபட முயல தமிழுக்கு அவன் வார்த்தைகள் மூளையில் பல்பை எரிய வைத்தன.

" டேய் சரவணா... கால்ல கூட விழுறேன்றான்டா " வாயை காதுவரை இழுத்து புன்னகைத்தபடி அவள் சொல்ல, சரவணனுக்கும் அவளின் கூற்று புரிந்து கண்கள் மின்னின.

' முடிஞ்ச்சு... ஏதோ ப்ளான் பண்ணிடுச்சுங்க ' என்று தலையில் கை வைத்துக் கொண்டான்.

தமிழும் சரவணனும் ஒருவரையொருவர் பார்த்து வில்லத்தனமான சிரிப்புடன் நம்பியார் போல கையைப் பிசைந்து கொண்டார்கள்.

நித்யா வந்தாள். " ஹேய் எவ்ளோ நேரம் உங்களுக்கு வர்றதுக்கு? அப்படியென்ன வேலை? " என்று ட்ரேவை டேபிளில் வைத்தாள். அதில் நான்கு பர்கர் இருந்தது.

" நாலு பேருக்கும் சேர்த்தா வாங்குன? " சரவணன்.

" இல்ல. மூனு எனக்கு ஒன்னு விஜிக்குன்னு வாங்குனேன். நல்லதா போச்சு. இப்ப ஆளுக்கு ஒன்னு. " நித்யா.

" அதான பார்த்தேன் " தமிழ்.

" சரி சொல்லு. என்ன வேலை? ஏன் இவ்ளோ லேட்? நானும் இவங்கிட்ட கேட்டுட்டே இருக்கேன். வருவீங்க வருவீங்கன்னு மட்டும் சொல்லிட்டே இருந்தான். "

தமிழ் விஜய்யை பார்த்துக் கொண்டே " அது... ஒருத்தனுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிருச்சு. சீரியஸ்ஸா இருக்கான். அதான் பார்க்க போயிருந்தேன். "

" அப்புறம் என்னாச்சு? "

" இதுவரைக்கும் ஒன்னும் ஆகல. இனிமேதான் எரிக்கனுமா பொதைக்கனுமான்னு டிஸ்கஷன் போயிட்டு இருக்கு. " தமிழ் சொல்லவும் விஜய்க்கு அவள் தன்னைத்தான் குறிப்பிடுகிறாள் என புரிந்து போனது.

' பழனி முருகா... இதுங்க கிட்ட இருந்து என்ன நல்லபடியா காப்பாத்திட்டா, பழனிக்கே வந்து எங்க அப்பனுக்கு அலகு குத்துறேன்டாப்பா... ' மனதில் வேண்டிக் கொண்டான்.

" அம்மாவ வெளிய கூட்டிட்டு போய் வர்றதுக்கு எவ்ளோ நேரம்டா உனக்கு? " நித்யா சரவணனைக் கேட்க, அவன் ' நீ உட்ட உதாரா ' என்பதுபோல விஜய்யை பார்க்க, விஜய் தலையை குனிந்து கொண்டான்.

" அம்மாவ விட்டுட்டு வர வழியில தமிழ் ஃபோன் பண்ணா. இங்க ஒரு பாடிக்கு பாடை கட்டனும் வரியாடான்னா... சரி கழுதைய பண்ணிவுட்டு போவோமேன்னு அங்க போயிட்டு இங்க வந்தேன். " என்றுவிட்டு விஜய்யின் தோளில் பலமாகத் தட்டினான்.

நித்யாவிற்கு இவர்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லை. அதை கவனிக்கும் நிலையிலா அவள் இருக்கிறாள்... பர்கர் வா வா என்கிறது வாய் போ போ என்கிறது. அதனால் வயிற்றில் கவனம் செலுத்தினாள்.

ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டார்கள். விஜய் வாயில் வைக்கப் போக, தமிழ் சரவணன் இருவருமே அவன் கையைப் பிடித்து தடுத்தார்கள்.

" என்னடா? " அவன் பாவமாகக் கேட்க,

" அப்படியே சாப்பிடக்கூடாதுடி தங்கம்... கொஞ்சம் டெகரேஷன் பண்ணனும். அப்பதான் பர்கருக்கு மரியாத. இந்தா அக்கா பண்றேன் பாரு " என்று தமிழ் தக்காளி சாஸை எடுத்து விஜய்யின் பர்கர் மேல் பிதுக்க ஆரம்பித்தாள்.

விஜய்க்கு இதயமே வெடித்து விட்டது. அவனுக்குத் தக்காளி சாஸின் வாடை கூடப் பிடிக்காது. அருகில் யாராவது பயன்படுத்தினால்கூட இவன் தன் உணவை உண்ண மாட்டான். அது தெரிந்துதான் தமிழும் இந்த சதி வேலையை செய்கிறாள்.

சரவணன் " அடச்சி. என்ன டைட் மோஷனா? குடு இங்க " என்று அந்த பாட்டிலை பிடுங்கி " இப்படி லூஸ் மோஷன் மாதிரி பிதுக்கனும் " என சரக்கென்று பாதி பாட்டிலை அந்த பர்கரில் கொட்டினான். அந்த சாஸே தேவலாம் போல, அதற்கு அவன் சொன்ன வருணனையைத்தான் விஜய்யால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

" டேய் என்னடா பண்றீங்க கருமம் " விஜய் முகம் சுழித்தான்.

" அதுக்குள்ளவா... இருடா தம்பி நாங்க இன்னும் முடிக்கல " என்று தமிழ் அந்த பர்கரை... பார்கரை... பிசைய ஆரம்பித்தாள்.

கொத்து பரோட்டா போல மாற்றிவிட்டு கொஞ்சம் எடுத்து ஒரு பெரிய உருண்டையாக உருட்டி " வாயத்தொரடி செல்லம்... ஆ காட்டுங்க... என் தங்கம் சாப்புடுடி " என்க, " டேய் இதுக்கு தூக்கு தண்டனையே பரவால்லடா... கொஞ்சோன்டு வெசத்த வாங்கி ஊத்தி உட்ருடா மச்சான். " என்று அழ ஆரம்பித்தான்.

தமிழ் அவன் வாயைப் பிடித்துத் திறக்க, சரவணன் அவன் தலையை அசையாமல் பிடித்துக் கொண்டான்.

விஜய் கதறக் கதற அந்த உருண்டையை உள்ளே தள்ளி அவனை சாப்பிடச் செய்தார்கள்.

கெட்ட கெட்ட வார்த்தைகளில் இருவரையும் திட்டிக்கொண்டே அதை விழுங்கினான். அதன் பிறகுதான் மூவரும் ஒன்றை கவனித்தார்கள்.

பேக்ரௌன்ட் மியூசிக் ஓடிக் கொண்டிருந்தது. " கிஸ் மி... க்ளோஸ் யுவர் ஐஸ்... அன்ட் மிஸ் மி... க்ளோஸ் யுவர் ஐஸ்... " என்று.

என்னடாவென்று பார்த்தால் இது நித்யாவின் வேலை. இங்கு நடக்கும் எந்த கலவரமும் தெரியாமல் பர்கரை பல்லுக்கும் வலிக்காமல் பன்னுக்கும் வலிக்காமல் மெதுவாகக் கடித்து, கண்ணை மூடிக் கொண்டு வாயை சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்குச் சென்று மீண்டும் யு டர்ன் போட்டு சென்னைக்கே வந்ததுபோல ஸ்லோ மோஷனில் சுழற்றி ஒவ்வொரு அணுதுகளாக மென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அதற்குத்தான் இந்த பேக் ரௌன்ட் மியூஸிக்.

" அந்த விளம்பரத்துல வர பொண்ணு கூட இவ்ளோ ஸ்லோ மோஷன்ல சாப்பிட்டிருக்காதுடா... இவ என்னைக்கு முடிப்பாளோ... இத முடிச்சிட்டு ஒன்ஸ் மோர் வேற கேப்பாளே " சரவணனுக்கே கண்ணைக் கட்டியது என்றால் விஜய் தன் எதிர்காலத்தை நினைத்துப் பயந்தான்.

' மறந்து போயி கூட கல்யாணத்தன்னைக்கு இவ கண்ணுல பாலையும் பழத்தையும் காமிச்சிடவே கூடாது. முக்கியமா ஃபர்ஸ்ட் நைட்ல. இல்லைன்னா அறுவதாம் கல்யாணத்துலதான் எனக்கு புள்ளயே பொறக்கும் '

நித்யா இரண்டு வாயை சாப்பிட்டு முடிப்பதற்குள் விஜய்க்கு அந்த பர்கருக்கும் சாஸுக்கும் நடந்த கலப்புத் திருமணத்தில் பிறந்த பெயரே வைக்க முடியாத அந்த கன்றாவியை ஊட்டிவிட்டு தமிழும் சரவணனும் தங்களுடையதை உண்டுவிட்டு நித்யாவின் வாயையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். விஜய் மட்டும் வாயை கையால் பொத்திக் கொண்டிருந்தான். வாய்க்குள்ளே சென்ற ஏலியன் எப்போது வெளியே வருமோ...

ஒருவழியாக நித்யா உண்டு முடித்துவிட்டு " இன்னொன்னு " என்று கேட்க ஆரம்பிக்க, " நாளைக்கு விஜய் உன்ன கூட்டிட்டு வந்து கடையவே வாங்கித் தருவான். இப்ப வா ஷாப்பிங்க பண்ணனும் " என சரவணன் அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

விஜய்க்கு ஷாப்பிங் என்றதும் மண்டையில் அபார மணி ஒலித்தது. தமிழிடம் " ஏன்டி ஷாப்பிங்ல ப்ளான் எதாவது இருக்கா? " என்க, அவள் " ச்சே ச்சே... ப்ளானே ஷாப்பிங் தான். " என்று அவனை இழுத்துச் சென்றாள்.

அவனுக்கு புரிந்துவிட்டது. இன்றைக்கு அவன் பர்சே வாய்விட்டு கதறும் அளவுக்கு வாங்கப் போகிறார்கள் என்று. ' சரி... லவ்வுன்னு வந்தாச்சு அப்ப சமாளிச்சுத்தான் ஆகனும் ' என்று மனதை தைரியப் படுத்திக் கொண்டான்.

துணி கடைக்குள் சென்றார்கள். தமிழ் ஒரு பதினைந்து உடைகளை எடுத்தாள். அதில் இரண்டு குட்டி பாப்பாக்களுக்கு போடும் உடைகள்.

" ஏன்டி சின்னப்புள்ள ட்ரெஸ்ஸெல்லாம் வாங்குற? " விஜய்.

" அழகா இருக்குல்ல... "

" இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? "

" அப்ப நீ வங்கித் தர மாட்ட... சரி போ. நித்யா " என அவள் ஆரம்பிக்க " அடியேய்... நீ கடையவே கூட வாங்கிக்கோ. கொஞ்சம் வாய வச்சிகிட்டு சும்மா இரு " என்று கெஞ்ச அவளும் " இந்த ஐடியா நல்லா இருக்கே " என்று யோசித்துக் கொண்டே ட்ரையல் ரூமிற்குச் சென்றாள்.

பிறகு போனால் போகிறது என ஒரு மூன்று உடையை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அந்தப்புறம் சரவணன் விஜய்யை அழைத்தான். ' இவன் என்ன பண்ண காத்திருக்கானோ ' என்று உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டே அவனருகில் சென்றான்.

" மச்சான் நல்லா விசாரிச்சிட்டேன். இந்த கடையிலயே காஸ்ட்லியான ஷர்ட் இது ரெண்டு தானாம். ஒன்னு 4999 இன்னொன்னு 4990. ரெண்டுல எது எடுத்துக்கட்டும்? " ஒன்றுமே தெரியாதவன் போல சாதாரணமாகக் கேட்டான்.

" அதான் நீயே ஒன்னு முடிவு பண்ணி வச்சிருப்பியே... சொல்லு " விஜய்.

அவனை பார்க்கவே சரவணனுக்கு பாவமாக இருந்தது. அதிகம் செலவு வைக்க வேண்டாம் என்று முடிவெடுத்து " ஃபீல் பண்ணாதடா. நான் உனக்காக கம்மி ரேட்லயே வாங்கிக்கறேன். " என்றவன் அருகில் நின்றிருந்த விற்பனையாளரிடம் " இந்த 4990 ஓடதே பில் போட்ருங்க. கார்ட் இவரு குடுப்பாரு " என்றுவிட்டு " ஓன்பது ரூபா கம்மியாதான் நண்பனுக்கு செலவு வச்சிருக்கோம்... இருந்தாலும் சரவணா நீ அநியாயத்துக்கு நல்லவன்டா. உன் இறக்க குணம் வேற யாருக்கு வரும்... " என்று தனக்குத் தானே சொல்லி பாராட்டிக் கொண்டு " அடுத்து ஒரு 8000 ரூபால பேன்ட் இருந்தா காட்டுங்க... வித் ஜாக்கி ஜட்டி. ப்ளூ கலர்தான் வேணும் " என பேன்ட் வாங்கச் சென்றான்.

" அடப்பாவி... நல்லவன் மாதிரியே பேசுனியேடா... " என விஜய் தலையில் கைகுட்டையை போட்டுக் கொண்டான்.

அடுத்து காலணி வாங்குவதற்காகச் சென்றனர். சரவணன் கடைக்குள் செல்லாமல் வாசலில் நின்று கடையையே பார்வையால் அளந்து கொண்டிருந்தான்.

" கடைய எதுக்குடா சைட் அடிக்கற? " நித்யா.

" இல்லடி... இந்த கடை மொத்தமும் சுமாரா என்ன விலை இருக்கும்? " அவன் சொன்னதும் அதிர்ச்சியில் விஜய்க்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது.

தமிழ் அவன் தோளில் கையைப் போட்டு " ஏன் விஜி... நாளைக்கு சோத்துக்கு என்ன பண்ணப்போற? " முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டே கேட்டாள்.

' அதே பயம்தான்டி எனக்கும்... இதுக்கே என் தகப்பன் என்ன எப்படி குமுற காத்திருக்கனோ தெரியலயே ' உள்ளுக்குள் கதறினான் விஜய்.
 

Saroja

Well-Known Member
அடேய்களா இனி சாஸ் பாத்து
இவனுக்கு சொன்னதே
நியபகம் வரும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top