*சிந்தனை கதை...*

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
*எதை இழக்கிறோம்..??*

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான். அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி, அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள்” என்றான்.

உடனே பிச்சைக்காரன் “அப்படியானால் ஒரு ரூபாய் தந்து விட்டு இந்தக் கல்லை வைத்துக்கொள்” என்றான். அதற்கு வைர வியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன்” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன். இல்லை என்றால் வேண்டாம் என்றான்.

பிச்சைக்காரன், "அப்படியானல் பரவாயில்லை. அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான். வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்து விடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.

அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி, அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான். இதை சற்றும் எதிர்பாராத முதல் வைர வியாபாரி அதிர்ச்சியுடன் “அட அடி முட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்து விட்டு, இவ்வளவு சந்தோசமாக செல்றாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய்“ என்றான்.

அதை கேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “யார் முட்டாள்..?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது. அதனால் அதை இந்த விலைக்கு விற்று விட்டேன். மேலும், எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை. எனவே, நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன், அதன் மதிப்பு தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய். இது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்“ என்றவாறே நடக்கலானான்.

*கருத்து : இப்படித் தான் நம்மில் பலர் மிகச் சிறிய சந்தோசங்களுக்காக விலை மதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடுகிறோம். அது மட்டுமல்லாமல் கருமித்தனம் எப்போதுமே தோல்வி தரும்.*
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top