சித்திரையில் பிறந்த சித்திரமே-22

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சித்திரையில் பிறந்த சித்திரமே-22
"இலக்கில்லாமல் இவள் ஓடிக்கொண்டிருக்க மன முழுதும் இவள் மாமா வந்து விட மாட்டாரா என்பதே"


"இவளின் குரல் அவனுக்கு கேட்கும் முன் டிரைவர் அவனுக்கு அழைத்து சொல்லிவிட்டான்"

"விஷயத்தை கேட்டவுடன்,அவன் அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள அவளுக்கு அவன் அணிவித்த மோதிரத்தில் உள்ள ஜிபியெஸ்ஸை இவன் போனுடன் இணைத்தவன் அவள் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிய முற்ப்பட்டான்"

"வண்டியில் அமர்ந்து வண்டியை கிளப்பியவன்,அருகிலிருந்த ஸ்டேசனுக்கும் அழைத்து சொல்லி விட்டான் அவ்விடத்திற்க்கு விரைந்து செல்ல சொல்லி"

"மனம் முழுக்க ஒரு தவிப்பு என் கருவா டார்லிங்கிற்க்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று,எத்தனையோ பிரச்சனைகளையோ சந்தித்தவன் பலரை காப்பற்றியவன் தான் ,ஆனால் இன்று தன்னவளுக்காக மனம் தவித்தது"

"தோப்பிற்க்கு வந்தவன் அவள் இருக்கும் இடத்தை தன் போன் மூலம் பார்த்துவிட்டு விரைந்து ஓடினான்"

"அதற்குள் இங்கு தூரத்தியவர்களிடம் சிக்காமல் ஓடியவள் ஒரு இடத்தில் மரத்தின் வேர் தடுக்கி கீழே விழ போக அந்நேரம் பார்த்து ஒருவன் அவள் காலை நோக்கி கட்டையை வீச அதில் அவள் காலில் பலத்த அடிபட இவளோ"

"மாமா" என அலறிக்கொண்டே கீழே விழ

"அந்த ரவுடிகளில் ஒருவன் எங்க தம்பியை குடும்பம் நடத்த விடாம பண்ணான்ல உன் புருசன் இப்போ உன் கூட குடும்பம் நடத்தி அதை உன் புருசனுக்கே வீடியோ எடுத்து அனுப்புறோம்டி
என சொல்லி கொண்டே அவளை நெருங்க "


"இவளுக்கு இதயம் முழுதும் உதயா தான் ,தன் மாமானுக்கு மட்டுமே உரித்தான தான் இன்று கண்டவர்களின் முன் காட்சிபொருள் ஆக போவதை எண்ணி துடித்துகொண்டிருந்தாள்"

"அவளின் அருகே நெருங்கியவனின் தலையை எங்கிருந்தோ வந்த கல் பதம் பார்த்தது"

"கல் வந்த திசையை நோக்கி அனைவரும் திரும்பி பார்க்க"

"அங்கே உதயமானான் நம் உதயா"

"கண்கள் இரண்டும் கோவத்தில் இருக்க அவன் முகத்தை பார்க்க அத்தனை ஆக்ரோஷம் அதில்"

"அவர்களை நோக்கி வந்தவனை கண்டு எல்லோரும் பயந்து ஓட,அவர்களை சுற்றி வளைத்தனர் போலீஸார்"

"இவன் அவர்களை எல்லாம் அடி பின்னிவிட்டான்"

"இவள் முனுமுனுப்பாக மாமா என்று கூறி கொண்டே சொல்ல மயக்கத்திற்க்கு சென்றாள்"

"இவன் வேகமாக தன்னவளை நோக்கி ஓடினான்"

"அவளை கையில் ஏந்தியவன்.இவனுங்கள எல்லாம் லாக் அப்ல போடுங்க,நான் வந்து கவனிச்சுக்கிறேன் எனக் கூறி கொண்டே காரை நோக்கி ஓடினான்"
"விரைந்து மருத்துவனை சென்றவன் ,அவளை அனுமதிவிட்டு அவளின் வீட்டிற்க்கும் ,தன்னுடைய பெற்றோருக்கும் தகவல் கொடுத்தவன் அமைதியாய் உட்கார்ந்து விட்டான்"


"வேணியும் ,மகேஸ்வரனும் விரைந்து வந்தவர்கள் அவனை பிடித்து உலுக்கியவர்கள் "

"உன்னால தானட எங்க மருமளுக்கு இதெல்லாம் உன்னால தான் அவன் இப்படி ஆஸ்பத்திரில படுத்து இருக்கா"என வேணி அவனுடன் கண்ணீருடன் சண்டையிட்டு கொண்டிருந்தார்.

"லெட்சுமியின் அம்மாவும் ,தம்பியும் வந்தவர்கள் எதுவும் பேசாமல் அவள் இருந்த அறையை பார்த்துவிட்டு அழுதுகொண்டே சேரில் அமர்ந்துவிட்டார்கள்"

"மருத்துவர்கள் அவளின் அறையில் இருந்து வெளியே வர.எல்லாரும் அவளை சூழ்ந்து கொண்டனர்"

"எப்படி இருக்கா டாக்டர் என் மருமக"

"கால்ல ஃப்ராக்சர் ஆகிடுக்குமா ,அப்பறம் சின்ன காயத்துக்கு எல்லாம் கட்டு போட்டிருக்கோம்,அவங்களுக்கு இன்னும் மயக்கம் தெளியலை,ஆனா மாமானு முனுமுனுத்துக்கிட்டே இருக்காங்க"

"அவங்க மாமா யாரோ போய் பார்க்க சொல்லுங்க"

"நொடியும் தாமதிக்காமல் அந்த அறைக்குள் நுழைந்தான் உதயா"

"இன்னும் ஒரு மாசத்துக்கு அவங்க நடக்க கூடாது பார்த்துக்கோங்க"

"லெட்சுமியின் அம்மா இன்னும் அழுது கொண்டிருக்க"

"மன்னிச்சிடுங்க அண்ணி உங்க பொண்ண நாங்க நல்லபடியா பார்த்துக்கலை" என அவள் கையை பிடித்து கொண்டு வேணி சொல்ல

"ஐயோ அண்ணி அப்படியெல்லாம் இல்ல,அவள நீங்க என்னை விட நல்லாவே பார்த்துக்கிட்டீங்க,இது யாரும் அறியாம நடந்தது,இதுக்கு யாரும் பொறுப்பில்லை அண்ணி விடுங்க"

"அங்கு துவண்டு போய் படுத்திருந்தவளை பார்த்தவன்"

"அவளை நெருங்கி அவளின் நெற்றியில் முத்தம் வைத்தான்"

"மாமாவ டென்ஷன் பண்ணாம சீக்கிரம் கண்ண முழிடி கருவாடார்லிங்" என சொல்ல

"மெதுவாய் அவள் கருவிழி அசைந்தது"

"கண்விழித்தவள் கண்டது தன் கணவனின் கண்ணீரைத்தான்"

"மாமா"

"ரொம்ப வலிக்குதாடி"

"இனிமே வலிக்காது என் மாமா வந்துட்டார் இல்ல அதுனால"

"ரொம்ப பயந்துட்டீயாடி"

"ஹம் லைட்டா மாமா"

"சாரி டி,எல்லாம் என்னால தான்"

"அப்படினு யார் சொன்னா,லைப்னா ஒரு திரில் வேணும் மாமா"

"அவளின் இதழோடு இதழ் பொறுத்தியவன்"

"அவனின் ஒட்டு மொத்த காதலயும் அதில் காட்டிவிட முனைந்தான்"

"சிறிது நேரத்தில் விட்டவன்,"ஐ லவ் யூடி பொண்டாட்டி"

"நீ ஒரு மாசத்துக்கு நடக்க கூடாதாம்டி"

"நீங்க இருக்கறவரைக்கும் எனக்கு என்ன கவலை ,என்ன இனிமே நீங்க தான் தூக்கனும் ஓகேவா"

"காலமுழுக்க நானே தூக்கிறேன் டி ,என் கருவா டார்லிங்"என நெற்றியை முட்டினான்.

"அந்நேரம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உள்ளே நுழைய இவன் விலகினான் அவசரமாக"

"என்னாச்சுமா" என வேணி கேட்க

"எனக்கு ஒன்னும் இல்ல அத்தை,மாமா வந்துட்டாங்க என்ன காப்பாத்துக்க"

"அம்மா நீங்க ஏன் இன்னும் அழறீங்க,எனக்கு ஒன்னும் இல்ல,கமல் நீயூமாடா.எனக்கு ஒன்னும் இல்லடா"

"லெட்சுமி,உனக்கு ஒன்னும் இல்லலை,எனக்கு பயமா இருந்துச்சு உனக்கு ஏதாவது ஆகிறுச்சோன்னு"

"எனக்கு ஒன்னும் இல்லை டா,மாமா வந்து என்ன காப்பாத்திட்டாங்க"

"எல்லாரும் வெளியே போங்க" என சிஸ்டர் சொல்ல

"எல்லோரும் வெளியே சென்றுவிட்டனர்".

"அவள் வீட்டிற்க்கு வரவே ஒரு வாரம் ஆகியது"
"அந்த ஒரு வாரத்திற்குள் லெட்சுமியை தாக்க வந்தவர்களின் உயிர் மட்டும் தான் போகவில்லை உதயா அவர்களை ஒரு வழியாக்கிவிட்டான்,அங்கு அவள் வழியில் முகம் சுழிக்கும் போது எல்லாம் இங்கு இவர்களுக்கு தீபாவளி தான்"
"அவள் வீட்டிற்க்கு வந்ததில் இருந்து உதயா அவளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டான்"


"கீழே இருக்கும் அறையை அவளுக்கு தயார் செய்து அங்கேயே அவளை தங்க செய்தனர்"

"வேணியும் மகேஸ்வரனும் அவளை நன்றாக கவனித்தனர்,அவளும் சீக்கிரம் உடல் நிலை தேறி வந்தாள்"

"அன்று உதயா இரவு உணவு சாப்பிட்டு முடித்து வந்து அவள் அருகில் அமர்ந்தவன் அவளின் காலிற்கு மருந்து தேய்த்தான்"

"என்ன மாமா யோசனை பலமா இருக்கு"

"ஹம் ஒன்னும் இல்லடி"

"இல்ல ஏதோ இருக்கு"

"ஓரு திருடி எங்கிட்ட இருந்து நிறைய மறைச்சிருக்காடி,அதான்"

"யார் மாமா அது,நல்லா அடிச்சு விசாரிங்க தெரிஞ்சிட போகுது"

"அப்ப உன்ன அடிக்க நீயே பர்மிஷன் கொடுக்கிற"

"எதுக்கு மாமா என்ன அடிப்பீங்க,நான் உங்ககிட்ட இருந்து எதை மறச்சேன்"

"இதை" என காட்டியவனின் கையில் இருந்ததை பார்த்தவள் பேச்சற்று இருந்தாள்"

சித்திரம் சிந்தும்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
உதயாவிடம் அவனோட கருவா
டார்லிங் என்னத்த மறைச்சாள்,
லட்சுமி டியர்?

துரத்திக்கிட்டு வந்த அந்த
நாய் லெட்சுமியின் காலில்
என்ன வீசினான்னு நீங்க
சொல்லலையே, லட்சுமி டியர்

நடக்கக் கூடாதுன்னா கருவா
டார்லிங்குக்கு ஜாலிதான்
அவளோட மாமா உதயா
தூக்கிக்கிட்டு போவானே
அப்புறமென்ன கவலை?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top