சித்திரையில் பிறந்த சித்திரமே-18

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சித்திரையில் பிறந்த சித்திரமே-18



காலையில் கஸ்டப்பட்டு லெட்சுமி கண்விழிக்க கல்யாண சோர்வும் நேற்று முதலிரவு சோர்வும் சேர்ந்து இன்னும் கொஞ்சம் தூங்கலாம் என்று தோன்றினாலும் ஒரு புத்துணர்ச்சி இருக்க தான் செய்த்து.



எழுந்து கொள்ள முயன்றவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் அவள் கணவன்.



"ஏய் பொண்டாட்டி இன்னும் கொஞ்சம் நேரம் இப்படியே இருடி"



"மாமா விடுங்க"



"ஏய் என்னடி"



"மாமா குளிக்கனும்,பிளிஸ் விடுங்க"



"அப்போ மாமாவ கொஞ்சம் கொஞ்சிட்டு போ"



"அதெல்லாம் முடியாது"



"அப்ப என்னாலையும் விட முடியாது "என கழுத்தில் முகம் புதைத்தவனை விலக்கும் வழி தெரியாது முழித்தாள் பெண் அவள்



"மாமா பிளிஸ் மாமா விடுங்க"



எதுவும் பேச முடியாத வண்ணம் அவளின் இதழை முற்றுகை இட்டான்.



அவனிடமிருந்து வழுக்கட்டாயமாக பிரிந்தவள்



"மாமா உன்னோட பெரிய தொல்லையா போச்சு போயா"



"என்னது யா வா,என்னடி மாமாவ இப்படி மரியாதை இல்லாம எல்லாம் பேசுற"



"அப்படித்தான் பேசுவேன் எனக்கு உரிமை இருக்கு"



"என் பொண்டாட்டிக்கு மிரட்டுறா,அரட்டுறா ஒரு நைட் ல வந்த மாற்றமா இதெல்லாம்,அப்பா என் பொண்டாட்டி பக்கா போலீஸ்காரன் பொண்டாட்டியா மாறிட்டாளே"என தனக்குதானே பேசிகொண்டிருப்பவனை கண்டு முறைத்தவள் அவனை விட்டு விலகி குளியலறை சென்றாள்"



"குளித்து வந்து ஒரு பட்ரோஸ் நிற பட்டு புடவை அணிந்தவளை கண்டு விசில் அடித்தவாறே அவளை நெருங்கியிருங்ந்தான்"



அவளின் பின் கழுத்தில் முகம் புதைத்து மஞ்சள் வாசம் பிடித்தவன்

"செம வாசனையா இருக்கடி கருவா டார்லிங்"



"மாமா போய் குளிங்க " என குரல் கொஞ்ச கூறியவளை இன்னும் இறுக்கியணைத்தவன்



"என்னடி உன் ஸிபிக்கர் சௌண்ட் கம்மியா இருக்கு இன்னைக்கு"



"நீங்க பக்கத்துல வந்தாலே இப்படி தான் மாமா பேச முடியுது பிளிஸ் தள்ளி நில்லுங்க"



"போடி லூசு,தள்ளி நிக்கிறதுக்கு தான் தாலி கட்டிருக்கேனாடி என் பொண்டாட்டி"



"இப்படியே பேசிகிட்டு இருந்தீங்கன்னா நான் அழுதுருவேன் மாமா.பிளிஸ் போய் குளிங்க மாமா"



"சரி டி " என அவள் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு சென்றான்.



குளித்து முடித்து வெளியில் வந்தவன் கண்களால் தன்னவளை தேட அவள் அறையில் இருந்தால்தானே



"தப்பிச்சிட்டியாடி கேடி,இரு மாட்டாமயா போயிருவ" என மனதிற்க்குள் அவளை திட்டியவன்



ஹாலிற்க்கு வந்தான் அங்கு அவன் கண்ட காட்சி



சோபாவில் ஒரு புறம் அவன் அம்மா அமர்ந்திருக்க மறுபுறம் அவன் அப்பா அமர்ந்திருக்க நடுவில் லெட்சுமி அமர்ந்து அவள் மீன் விழிகளை மீட்டி கதை பேசிகொண்டிருந்தவளை தான்



திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்கு நேற்றே மண்டபத்தில் கல்யாணத்தோடு விருந்தையும் முடித்திருந்தனர் உதயாவின் வேலையின் காரணத்தினால்



"அம்மா எனக்கு டீ"



"போய் கிச்சன்ல ஆள் இருப்பாங்க வாங்கிக்கோ"



"ஏம்மா கல்யாணம் பண்ணி வைச்சிடீங்கள்ள உங்க மருமக கிட்ட இந்த வேலையெல்லாம் சொல்ல மாட்டீங்களா"



"ஏன் இத்தனை நாள் நீயாதான டீ குடிச்ச,இப்ப மட்டும் என் மருமள வேலை சொல்லுற"என உதயாவின் அப்பா கோபப்பட



இதையெல்லாம் சிரித்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்து அவனின் ஆருயிர் மனைவி சிரித்துக்கொண்டிருந்தாள்,அவளை பார்த்து பல்லைகடித்தவன்



அவன் அம்மாவிடம் திரும்பி

"அம்மா நான் ஒரு முக்கியமான கேஸ் விசயமா ஸ்டேசன் போறேன் ,போயிட்டு ஒரு ஒரு மணி நேரத்துல வந்துருவேன் கோவிலுக்கு போகனும்னு சொன்னீங்க்கள"



"கிளம்பிறேன் மா"



"டேய் காபி குடிச்சுட்டு போடா"



"அதையும் உங்க செல்ல மருமகளுக்கே ஊட்டி விடுங்க"என அவன் வெளியே சொல்ல போக



"நில்லுங்க" குரல் அவனின் மனைவியுடையது



"என்னடி"



"நான் போய் டீ எடுத்துட்டு வரேன்,குடிச்சுட்டு போங்க"

அமைதியாக அவனும் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டான்.



"ஏன் டா அவளை இப்படி வேலை வாங்குற"



"அம்மா இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலை,அவ எனக்கு பொண்டாட்டியா இல்ல உங்க பொண்டாட்டியா"



"இப்படி கண்டிசன் போடுறீங்க"



"இதென்னடா கேள்வி,அவ என் மரும டா அவளுக்கு நான் சப்போர்ட் பண்ண வேண்டாம்" என முறுக்கி கொள்ள



இவர்களின் செல்ல சண்டையை வாசலில் நின்று மனது நிறைவுடன் லெட்சுமியின் அம்மாவும் கமலும் நின்று பார்த்து கொண்டிருந்தனர்.



டீ கொண்டு வந்தவள் உதயாவிடம் கொடுத்துவிட்டு,வாசலில் இருந்து உள்ளே நுழைந்த அம்மாவையும் தம்பியையும் கட்டிக்கொண்டாள்



"அம்மா"



"எப்படி பாப்பா இருக்க"



"பார்த்தா எப்படி தெரியுறேன்"



"எங்கண்ணே பட்டு போகும் போல அவ்ளோ அழகா இருக்க "



"பெத்தவ கண்ணு கொள்ளிக்கண்ணு அண்ணி ,என் மருமக மேல கண்ணு வைக்காதீங்க"



"இது போதும் அண்ணி என் பொண்ணு சந்தோசமா இங்க இருக்கா அது மட்டும் இல்லாம அவளுக்கு இன்னோரு அம்மா அப்பாவா நீங்க கிடைச்சுருக்கீங்க,ரொம்ப நன்றி அண்ணன்,அண்ணி உங்களுக்கும் நன்றி அண்ணி"



"அண்ணி என்ன இது பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு"



"விடுமா எங்களுக்கு பொண்ணு இல்லாத லெட்சுமி தீர்த்துவைக்கிறா இதுக்கு ஈடா என்னவேணும்னாலும் பண்ணலாம்"



"இப்போ ஒரு அரை மணி நேரம் தான் அவகூட பேசிகிட்டு இருந்தோம் ஆனா அவ்ளொ சந்தோசமா இருந்தோம் நானும் என் பொண்டாட்டியும் ,இந்த சந்தோசத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம் எங்க மருமளுக்கு" என உதயாவின் அப்பா கூற



அனைவரும் அங்கு மகிழ்ச்சியில் இருந்தனர்.



"சரி எல்லாரும் சாப்பிடுங்க,நான் இப்போ வந்துருவேன்" என உதயா கிளம்ப



"அத்தை சாப்பிடுங்க.டேய் கமல் நீயும் சாப்புடுடா "என கூறி நகர்ந்தான்



"எல்லாரும் சாப்பிட லெட்சுமி மட்டும் உதயா வந்தவுடன் சாப்பிடுகிறேன் என்றுவிட்டாள்" எல்லோரும் சரியென விட்டு விட்டார்கள்.



உதயா வந்து உண்டவுடன் எல்லோரும் சேர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் சென்று மனதார வேண்டி விட்டு வெளியே வரும் போது



பின் தங்கி வந்து தன்னவள் கரம் பற்றியவன் நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டவன்



"என்னடி கருவா டார்கிங் ரொம்ப பெரிய வேண்டுதளோ சாமிக்கிட்ட ,தீவிரமா வேண்டிக்கிட்ட"



"ஹம் ஆமா மாமா"



"என்னடி அது"



"அது வந்து"



"எங்க வந்து ஒழுங்கா சொல்லுடி"



"இல்ல மாமா என் மாமாவுக்கு முன்னாடி என் உயிர் போயிடனும் அப்படினு வேண்டிக்கிட்டேன்"

என தயங்கி கூற



"உதயாவின் முகத்தில் கரை கடந்த கோபம்"



"கோபத்தில் நம்ம ஆளு என்ன பண்ண போறாருனு கொஞ்சம் வெயிட் பண்ணி பார்போம்"



சித்திரம் சிந்தும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top