சித்திரையில் பிறந்த சித்திரமே-17

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சித்திரையில் பிறந்த சித்திரமே-17

கல்யாணம் நடந்து முடிந்த நிம்மதியில் அனைவரும் இருக்க எல்லாரும் உதயா வீட்டிற்க்கு லெட்சுமியை அழைத்து செல்ல நேரம் பார்க்க அதை கேட்ட லெட்சுமிக்கு தன்னை அறியாமல் பயம் சூழ்ந்தது

அவளின் கலக்கத்தை அறிந்த உதயாவும் அவள் கையை அழுத்தி கொடுத்து அமைதி படுத்த முயன்றான் .

"கருவா டார்லிங் இப்படி எதுக்கு இருக்க சிரிடி "
...................................


"அங்கு கமலின் நிலையோ மிகவும் பரிதாபமாய் இருந்தது"

"இத்தனை நாள் தன்னோடு இருந்து சண்டையிட்ட அக்கா இனிமேல் தனது அக்காவாய் இல்லாமல் இன்னோருத்தரின் மனைவியாய் நினைக்க நினைக்க அவனால் இயல்பாய் இருக்க முடியவில்லை"

"லெட்சுமியின் அம்மாவோ இன்னும் ஒரு படி மேலே போய் அழுது கொண்டிருந்தார்"

"தன் கணவருக்கு பிறகு தான் நேசம் முழுதும் வைத்திருக்கும் இன்னோரு உறவு தனது மகள் இன்று அவளின் பிரிவு அவரை மிகவும் பாதித்தது"

"இது அனைத்து கல்யாண நிகழ்விலும் நடப்பது தான் பெண்ணை கொடுக்கும் ஒவ்வொரு பெண் வீட்டினரின் கலக்கத்தையும் வார்த்தையில் வடித்து விட முடியாது தான்"

"லெட்சுமி பார்த்து இருந்துக்கோ" என கமல் கூற

"டேய் என் பொண்டாட்டிய பார்த்துக்க தான் நான் இருக்கேன்ல நீ என்ன அவகிட்ட வேற தனியா சொல்லுற"

"நீங்க பார்த்துபீங்கனு தெரியும் மாமா,ஆனா கொஞ்சம் பயம் தான் மாமா"

"கமல் அக்கா போயிட்டு வரேன் டா"என கூறி கண் கலங்க

அக்காவை அணைத்திருந்தான்

இருவரும் சில நிமிடங்கள் அழுதவர்கள்

"அம்மாவ பத்திரமா பார்த்துக்கோ.டெய்லி போன் பண்ணு அக்காவ மறந்துடாதடா"

"ஏய் லூசு உன்னை போய் மறப்பேனா,நீயும் உடம்பை பார்த்துக்கோ சரியா"

"ஹம் சரி"

"அம்மா போயிட்டு வரேன்,உடம்ப பார்த்துக்கோங்க"

"அத்தை நீங்க இப்படி இருந்தீங்கனா அவ சந்தோசமா இருப்பாளா,பிளிஸ் அத்தை அமைதியா இருங்க " என உதயா லெட்சுமியின் அம்மாவை சமாதானம் பண்ண

"இல்ல மாப்பிள்ளை நான் சரியாகிடுவேன்,நீங்க அவள பத்திரமா பார்த்துப்பீங்க ஆனா பெத்த மனசுல மாப்பிள்ளை அதான் பித்து பிடிச்சிருக்கு,எங்க வீட்டு மகாராணி மாப்பிள்ளை அவ
எங்க வீட்டுல இன்னைக்கு என்ன சமைக்கனும் அப்படிங்குறத கூட அவளுக்கு பிடிச்ச மாதிரி அவகிட்ட கேட்டு தான் சமைக்கனும்னு அவங்க அப்பா சொல்லுவாரு அப்படி இருக்கும் போது நாளைக்கு அவ எங்க வீட்டுல இல்லை அப்படிங்குறத ஏத்துக்க முடியலை மாப்பிள்ளை அவ்ளோதான்"


"ஏன் அத்தை இப்படி பேசுறீங்க ,அவ எப்பவும் உங்க பொண்ணு தான் உங்களுக்கு எப்ப இவள பாக்கணும்னு சொன்னாலும் பார்க்க வாங்க இல்ல எங்கிட்ட சொல்லுங்க நான் கூட்டிட்டு வரேன் சரியா"

சந்தோசமாய் தலையசைத்தார்

"எல்லாரிடமும் விடைபெற்று உதயாவின் வீடு நோக்கி கார் பறந்தது"

"வாசலிலேயே ஆரத்தி கரைத்து வரவேற்றனர்,வலது காலை எடுத்து வைத்து வீட்டின் உள்ளே சென்றாள்"

"சாம்மி ரூமில் விளக்கேற்றினால் திருமதி.லெட்சுமி உதயாவாக"

"இனி இந்த வீடு தான் அவள் எல்லா சொந்தமாய் இருக்க போகிறது என்ற எண்ணத்துடன்"

எல்லாரும் சாமி கும்பிட்டுவிட்டு ஹாலில் வந்தமர்ந்தனர்

அங்கிருந்த உறவுகார பெண் ஒருவர் உதயாவின் அன்னையிடம்

"என்ன மதினி இனிமே எல்லா வேலையும் உங்க மருமகளே பார்த்துக்குவாளா " எனக்கேட்க

"நல்லா கேட்டுக்கோங்க கல்யாண்ம் பண்ணி மருமகள் கொண்டு வர்றது வீட்டு வேலைக்காக இல்ல,நான் என் மருமகள மகளா பார்த்துக்கணும் தான் என நினைக்கிறேன் புரிஞ்சிதா மதினி"என திருப்பி கொடுக்க லெட்சுமிக்கு மனம் முழுதும் நிம்மதியால் நிறைந்தது.

"அவளின் இரு அக்காக்களும் கூட அவளின் உடன் தான் இருந்தனர்"

"லெட்சு வா போகலாம் என இருவரும் அவளை தயார் படுத்த அழைத்து சென்றனர்"

"லெட்சு உன் மாமியார் வீட்டுக்காரர் எல்லாருமே நல்லவங்க தான் சரியா,நம்ம மூணு பேரும் ஆசை பட்ட மாதிரி நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு சரியா நீங்க இரண்டு பேரும் எதுக்கும் கோவப்படக்கூடாது " என நிவேதா தன் இரு தங்கைகளுக்கும் அறிவுரை கூற

இருவரும் சம்மதமாய் தலை ஆட்டினர்

இருவரும் சேர்ந்து லெட்சுமியை முதல் இரவுக்கு தயார் செய்ய

இவர்களின் கிண்டலில் கலங்கிதான் போனாள் பெண்ணவள்

அலங்காரம் முடித்து அவளை அவள் அத்தையிடம் ஆசிர்வாதம் வாங்க வைத்தவர்கள்

உதயாவின் அறையில் கொண்டு போய் விட்டனர்.

கதவை திறந்து உள்ளே நுழைந்தவளின் அழகை ரசித்த வண்ணம் நின்றான் உதயா

அவளை அழைத்து கட்டிலில் அமர வைத்தவன் அவள் கையில் இருந்த பால் சொம்பை அருகில் வைத்து விட்டு அப்படியே அவள் மடியில் தலை சாய்த்து படுத்து விட்டான்.

அவளும் அவனின் தலையை கோத

"எல்லாமே சீக்கிரமா நடந்து முடிஞ்ச மாதிரி இருக்கு கருவா டார்லிங் நீ என் வாழ்க்கைல வந்தது உன்னை நான் கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணது இப்போ உன் மடியில தலை வைச்சு படுத்துருக்கிறது எல்லாமே நினைச்சு பார்த்தா செம்ம ஃபீலிங்கா இருக்குடி"

வார்த்தைகள் அற்று மௌனாமாய் இருந்தவளை கண்டு எழுந்தமர்ந்தவன்

"உன்ன முத தடவை பார்த்தப்பவே மாமா உங்கிட்ட விழுந்திட்டேன்டி"

"காலம் பூராவும் உங்கிட்ட இப்படி விழுந்து கிடக்கனும்டி "என காதிற்க்குள் அவன் மீசை உராய பேசி கொண்டு கழுத்தில் முகம் புதைத்து கொண்டான்
அவள் சந்தோசத்தில் அவனை இறுக கட்டிக்கொண்டாள்


அவளை நிமிர்த்தி அவளின் நெற்றியில் முத்தமிட்டவன்

மெதுவாக அவன் முத்த யுத்தத்தை தொடங்கினான்
முத்தயுத்தத்தில் பெண்ணவைளை மொத்தமாய் கொள்ளைகொண்டுவிடும் நோக்கில் இருந்தான்
உதயா


அவளின் தயக்கங்களை உடைத்து ,அவளை மென்மையாக கையாண்டு திருமதி உதயாவாக மொத்தமாய் மாற்றினான்

சோர்வில் கண்மூடி அவன் மார்பில் தலை சாய்த்திருந்தவளை நிமிர்த்தியன்
"அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் சந்தோசமா இருக்கீயாடி "என கேட்க


"ஹம் ரொம்ப ரொம்பபப"

"இப்படியே சந்தோசமா சிரிச்சிக்கிட்டே இரு இது தான் என்னோட எனர்ஜி சரியா"

"என் பொண்டாட்டி எப்பவும் சந்தோசமா இருக்கனும் "என கூறி அவன் சிரிக்க

அவன் மார்பில் புதைந்து கொண்டாள்

"லிஸ் காரனே உங்கிட்ட திருடனாக்கிட்டேயே டி" என அவன் சீண்ட

"என்ன சொல்லுறீங்க"

"அவள் காதிற்க்குள் அவன் கிசுகிசுக்க"

"சீ போலிஸ் நீங்களே போரிக்கி மாதிரி பேசாதீங்க மாமா"

அப்போ செஞ்சு காட்டுறேன் வா என அவளை இழுத்து அணைத்து அடுத்து அத்தியாத்தை தொடங்கினான்

சித்திரம் சித்தும்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
"முதன்முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல்
போனதே
என்னில் இன்று நானே
இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
என்னில் இன்று நானே
இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
எங்கே என் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா.........."-ன்னு
உதயா போலீஸ்கார் பாடுறாரோ,
லட்சுமி டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top