சித்திரையில் பிறந்த சித்திரமே 12

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சித்திரையில் பிறந்த சித்திரமே 12
இன்று நிரஞ்சன்-நிவேதாவினின் திருமணம்
அன்றைய சண்டைக்கு பிறகு உதயா மீண்டும் லெட்சுமியிடம் பேச முயற்சிக்கவில்லை.அவனின் அம்மா மட்டும் தினமும் அவளிடம் பேசிவிடுவார்.இதையெல்லாம் காண்பவன் நம்ம கூட பேசனும்னா மட்டும் தான் இவளுக்கு கஷ்டமாஇருக்கும் என மனதிற்க்குள்ளேயே திட்டி தீர்த்து விடுவான்.பின்னே வெளியே திட்டினால் தான் என் மருமகளை திட்ட நீ யார் என்று சண்டை பிடித்துவிடுவாரே அவன் அம்மா.
நேற்று இரவு உதயா நிச்சயத்திற்க்கு வரவில்லை
“ ஏதோ முக்கியமான வேலையாம்மா அதுனால தான் அவனால வர முடியலையாம் மா உன் கிட்ட சொல்ல சொன்னான் ,கல்யாணத்துக்கு வந்துருவானாம் மா “ என லெட்சுமியிடம் உதயாவின் அம்மா சொல்லி கொண்டிருந்தார்.
அவளும் இந்த ஒரு வாரமாக உதயாவை அதிகம் தேடினால்
கல்யாணத்தில் வைத்து எப்படியாவது அவனிடம் சாரி கேட்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தால்
அவன் வாங்கி தந்த சேலையில் அழகாய் தயாராகி வந்தவளை அவளின் மாமியார் தலை நிறைய மல்லிகை பூவை சூட்டி அழகு பார்த்தார்.
“ இப்படி மட்டும் என் பையன் உன்னை பார்த்தான் இன்னைக்கே எனக்கும் கல்யாணம் பண்ணி வைங்கனு சொல்ல போறான் பாரு “
என கூறி சிரிக்க
“ எங்க அத்தைக்கு மட்டும் என்ன எவ்வளவு அழகா இருக்கீங்க மாமா அப்போ இருந்து உங்களையே சைட் அடிக்கீறாங்க பார்த்து அறுபதாம் கல்யாணத்துக்கு தேதி குறிக்க போறாங்க “
“ போடி வாயாடி இரு என் புள்ள வரட்டும் உன்னை சொல்லிக்கொடுக்குறேன் “
“ எப்போ அத்தை உங்க புள்ள வருவாரு “
“ வந்துடுவான் டா நீ போய் உங்க அக்காவோட இரு போ “
இவள் மேலே ஒரு வேலையாக மாடி ஏறி செல்ல அவள் இடையோடு அழுந்த பதிந்த கரம் ஒன்று அவள் வாயையும் பொத்தி அவளை மறைவான பகுதிக்கு தூக்கி சென்றது.
“ என்னடி அம்மாகிட்ட என்ன கேட்டீயாம் “
“ இல்லை ,நான் கேட்கலையே “
“ ஓ நீ கேட்கலையா “
அப்பொழுது தான் கவனித்தால் அவனின் கையில் காயம்
“ என்னாச்சு என்ன கையில காயம் “
“ அது நேத்து ஒரு கலவரம் அதுல பட்ட காயம் தான் பெருசா இல்ல “
“ என்ன பெருசா இல்ல பாருங்க கட்டு போட்டுருக்குறத பார்த்தாலே தெரியலை எவ்ளோ பெரிய காயம்னு,இதுல என்ன வேற தூக்கி இருக்கீங்க இறக்கிவிடுங்க முதல்ல என கண்கள் கலங்க்கிய வாறு கூற “
“ என்ன டி இந்த புடவைல ரொம்ப அழகா இருக்க ,உன் கிட்ட பேசகூடாதுனு தான் இருந்தேன் ஆனா முடியலை “என அவளை சகஜமாக்க முயல
“ சாரி ,அன்னைக்கு நான் தான் அன்னைக்கு உங்க மனசு கஷ்டபடுற மாதிரி பேசிட்டேன் என்ன மன்னிச்சிடுங்க “ இப்பொழுதும் அவள் கண்களில் கண்ணீர்
“ ஏ லூசு முதல்ல அழுகைய நிறுத்து ,நீ ஒரெ ஒரு தடவை மாமானு கூப்புடு என் கோவம் எல்லாம் பறந்துரும் என்னடி பேச்சையே கானோம் “
“ மாமா சாரி மாமா “என அவனை தள்ளி விட்டு ஓடியவளை கண்டு இருடி உன்னையே மாமா சாரி(SAREE) வாங்கி தாங்கனு கேட்க வைக்கிறேன் என மனதிற்க்குள் சபதம் போட்டான்.
அவள் மல்லு கட்டும் போதே அந்த பார்வை பார்ப்பவன் இப்போ மாமானு கூப்புட்டதுக்கு அப்பறம் சும்மாவ இருப்பான்
அவனை தள்ளி விட்டு ஓடி வந்தவளுக்கு இங்கு ஒரே வெக்கம் (பிள்ளைக்கு வெக்கபடலாமா தெரியும் )
அவனை அப்படி சொல்லி விட்டு வந்தவளுக்கு அவன் காயத்தை எண்ணி வருத்தமும் நடந்ததை எண்ணி வெக்கமும் ஒரு சேர வந்தது.
திருமணத்தில் அவன் அறியாமல் இவள் பார்வை முழுவதும் அவன் புறம் மட்டுமே இருந்தது.


திருமணம் இனிதாக நடந்து முடிந்தது
கீர்த்தியும் அர்ஜூனும் அடுத்து தங்களது திருமணத்தை எண்ணி கனவுகளில் மூழ்கி இருந்தனர்
இங்க நம்ம ஹிரோ கல்யாணத்துல ஹிரோயின எடுத்த போட்டாவா பார்த்து பல்ல காட்டிகிட்டு இருக்காரு
அடி பிச்சிப் பூ உன்ன பார்த்தப்போ
வார்த்தை வரல உன்ன வர்ணிக்க தான்


அடி கருப்பு நெறத்தழகி அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி ஓதட்டு செவப்பழகி
சில்லறையா செதறிட்டேன் டீ
உன் சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன் டீ


உன் குங்கும ஒதட்ட வச்சி
குலுங்க சிரிக்கையில
இதழ் ரெண்டும் துடிக்குதடி
அத பாத்து என் மனசு தவிக்குதடி


உன் ஒதட்டுக்கு சொந்தக்காரன் டீ
நான் இன்சூரன்சு பண்ணிருக்கேன் டீ


உன் ஒதட்டுக்கு சொந்தக்காரேன் டீ
நான் இன்சூரன்சு பண்ணிருக்கேன் டீ


கட்டுக் கோப்பில் வாழ்ந்தவன் டீ
கட்டுப்பாட்டில் இருந்தவன் டீ
கலஞ்சது என் தவம்டி
உன்ன பாத்து கலஞ்சது என் தவம்டி


அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி
ஓதட்டு செவப்பழகி
சில்லறையா செதறிட்டேன் டீ
உன் சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன் டீ


பொண்டாட்டி காலிங்க்

“ கருவா டார்லிங் நமக்கு கால் பண்றா இன்னைக்கு அடிக்கிற மழை நம்ம காதலுக்கு தான் “

“ சொல்லு செல்லம் “

“ கை இப்போ வலி பரவாயில்லையா “

‘ வலியே இல்லடி நீ ஏன் கவலை படுற “

“ எப்படி கவலை படாம இருப்பாங்க “

“ அப்போ என் மேல பாசம் வந்துருச்சு போல என் பொண்டாட்டிக்கு “

“ உங்ககிட்ட எல்லாம் பேச முடியுமா நான் போனை வைக்கிறேன் ஒழுங்கா மாத்திரை போட்டு ரெஸ்ட் எடுங்க “என கூறி போனை வைத்தவளுக்கு ஒரு வேலை அவங்க சொல்லுற மாதிரி நமக்கு காதல் வந்துருச்சோ என நினைக்க தோன்றியது .

“ உன் காதல இன்னும் நீயே உணரலடி கண்டிப்பா நான் உன்னை எங்கிட்ட வந்து ‘மாமா ஐ லவ் யூ “ அப்படினு சொல்ல வைப்பேன் பாருடி

ஹிரோ பாட்ட கண்டினியூ பண்ண போய்ட்டாரு நம்ம அப்பறம் மீட் பண்ணலாம்

சித்திரம் சிந்தும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top