சித்திரையில் பிறந்த சித்திரமே 11

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சித்திரையில் பிறந்த சித்திரமே 11
நடப்பவற்றையெல்லாம் ஒரு அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டீருந்தவளின் அருகில் வந்தவன்
“ ஏய் என்னாச்சு டி “ என கேட்க
“ இப்போ நீங்க என்ன பண்ணீங்க “
“ இங்க வைச்சு எதுவும் பேச முடியாது ,முதல்ல வண்டியில ஏறு “
அமைதியாக சென்ற பயணம் ஒரு பார்கில் முடிவடைந்தது , வண்டிடியை நிறுத்தினான்
“ இறங்கு கருவா டார்லிங் “
இப்போ ஏன் இங்க கூட்டிட்டு வந்திங்க்க இங்க யாரையாவது அரெஸ்ட் பண்ணபோறீங்களா “
“ நான் எங்க அரெஸ்ட் பண்ணுறது என்ன தான் ஒருத்தி மொத்தமா அரெஸ்ட் பண்ணிட்டாளே அவ கண்ணுக்குள்ள “
“ சும்மா பேச்ச மாத்தாதீங்க உண்மைய சொல்லுங்க நீங்க அங்க அரெஸ்ட் பண்ணுறதுக்காக தான் போனீங்க அப்பறம் ஏன் என்னை கூட்டிட்டு போன மாதிரி சீன் போட்டீங்க “
“ ஏய் நான் சொல்லுறத முதல்ல கேளு டி “ என கையை தொட முயன்றவனின் கையை தட்டி விட்டால் அவனும் கோபத்தில்
கையை விட்டவன்
“ நல்லா நான் என்ன சொல்லுறேன் கேளு,அந்த நாளு நாய்களும் சேர்ந்து ஒரு பொண்ண கிண்டல் பண்ணி இருக்காங்கா ,அவனுங்கள அந்த பொண்ணு செருப்ப கழட்டி அடிச்சா, அதுக்கு இந்த நாளு நாய்களும் சேர்ந்து அந்த பொண்ணை கெடுத்து அவ மூஞ்சில ஆசிட் அடிச்சிட்டாங்கா,இவனுங்க பணத்த வைச்சு வெளிய வந்துட்டாங்க ஆனா அந்த பொண்ணுக்கு என்ன நியாயம் டி கிடைக்கும் சொல்லுடி “
“ அதுக்கும் இப்போ நீங்க அரெஸ்ட் பண்ணதுக்கும் என்ன சம்பந்தம் “
“ இப்போ வரும் போது உன்னையும் தான தப்பா பேசுனாங்க ஈஃப்டிசிங் கேஸு கொடு நான் பார்த்துக்கிறேன் “
“ இதுல என்ன பெருசா அவனுங்களுக்கு தண்டனை கிடைச்சுரும் இதுக்கு அவனுங்கள நடு ரோட்டுல ஓட விட்டு அவனுங்க மேல ஆசிட் அடிக்கனும் “
“ அதெல்லாம் இப்போ நடந்திருக்கும் கருவாடார்லிங் அந்த பொண்ணு இந்நேரம் அவனுங்க மேல ஆசிட் அடிச்சுஇருப்பா ,அவனுங்களுக்கு இப்போ ஒரு டாக்டர் குடும்ப கட்டுப்பாடு பண்ணீருப்பாரு அவனுங்க பண்ண தப்புக்கு இது தான் தண்டனை , ஆனா
நான் அரெஸ்ட் பண்ணும் போது தப்பிச்சி போனாங்கனு ரெக்கார்ட் வேனும்ல அதுக்குதான் இது “
“ யாரோ ரௌடிங்க வந்து இதை பண்ணுனதா தான் இருக்கனும் இதுல அந்த பொண்ணு பேரு எந்த இடத்துலையும் வெளிய வரகூடாது அதுக்கு தான் இது நான் பண்ணது தப்பானு சொல்லுடி “
அவளுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை யாரோ ஒரு பொண்ணுக்காவே இவ்ளோ பாக்குறவன் பொண்டாட்டிக்காக பார்க்கமாட்டானானு முதல் முறையாக அவளுக்குள் நல்ல எண்ணாம் தோன்ற்யது அவன் மேல்
“ ஏய் என்னாச்சு டி “
“ ஒன்னும் இல்ல அந்த பொண்ணு பாவம் இல்ல ‘
“ இல்ல பிரச்சனைய கண்டு பயப்படுறவங்க தான் பாவம் போராறவங்க இல்ல “
“ சரி வா கிளம்பலாம் “
அடுத்ததாக அவன் அழைத்து சென்றது ஒரு துணிக்கடைக்கு
அவனே ஒரு நீல நிறத்திலான ஒரு பட்டு புடவையை செலக்ட் பண்ணி பில் போடும் போது திரும்பி பார்க்கையில் அவள் ஒரு லாங் ஸகர்டை ஆசையுடன் பார்ப்பது தெரிந்து கடையில் வேலை பார்பவர்களிடம் சொல்லி அவளுக்கு தெரியாமல் அதையும் பில் போட்டு வாங்கி விட்டான்.
பட்டு சேலையை மட்டும் அவளிடம் கொடுத்தவன்
“ கருவா டார்லிங் இதை தான் நீ உங்க அக்கா கல்யாணத்தன்னைக்கு கட்டுற சரியா ,இந்தா எங்க அம்மா உன் கிட்ட பேசனுமா பேசு “
“ சொல்லுங்க அத்தை “
“ என்னமா ஓவரா மிரட்டுரானா சொல்லு அவன தூக்கி உள்ள வைச்சிரலாம் “
“ ஐயோ அத்தை அப்படியெல்லாம் இல்லத்தை “
“ நீ பேசிக்கிட்டு இரு நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்துடுறேன் “
“ அவன் கொஞ்சம் கோவ படுவான்மா ஆனா நல்ல பையன் தான்மா “
எனக்கு ஒரு பொண்ணு வேனும்னு ஆசைமா ஆனா தயாக்கு அப்பறம் எனக்கு குழந்தையே இல்லமா “
நீ எனக்கு ஒரு பொண்ண இருக்கியா மா “
“ அத்தை “
“ கண்டிப்பா இருப்பேன் அத்தை “
“ சரிமா நிரஞ்சன் கல்யாணத்துல பார்போம் “
“ சரிங்க அத்தை “
“ சரி பாப்பு வைச்சிடுறேன் “
( போனை வைத்தவுடன் எல்லாரும் நம்மள சட்டுனு அவங்க வீட்டுல ஏத்துக்கிட்டாங்க ,ஆளுக்கு ஒரு செல்ல பேரும் வைக்கிறாங்கா ஆனா இவங்க பாசத்துக்கெல்லாம் நம்ம சரிப்படுவோமா என யோசனையிலே உழன்றவளை உதயாவின் குரல் களைத்தது)
“ ஹலோ மேடம் என்ன கொஞ்சி முடிச்சாச்சா மாமியாரும் மருமகளும் “
“ நாங்க கொஞ்சுனா உங்களுக்கு என்ன பிரச்சனை “
“ என்னையும் கொஞ்சவிட்டா எனக்கு என்ன பிரச்சனை வர போகுது ,இங்க கைய தொட்டாலே கோவம் வருது போ மா போ போய் உன் மாமியாரே கொஞ்சு “
“ எதுக்கு இப்போ கோவப்படுறீங்க “
“ ஓ இதுவே மேடம்க்கு கோவமா தெரியுதா,அப்போ ஏனக்கு நீ பண்ற காரியத்துல எல்லாம் வர்ற கோவத்துக்கு உன்ன அடிக்கனும்னு தோனுதே அப்போ என்ன சொல்லுவ “
“ அப்போ நீங்க கோவப்பட்டா இன்னைக்கு அவங்கள அடிச்ச மாதிரி என்னையும் அடிப்பீங்களா “என கண் கலங்கியவாரே கேட்க
“ போடி லூசு உன்ன அடிச்சுட்டு நான் நிம்மதியா இருந்துருவேனாடி “
“ நீ எனக்கு எப்பவுமே சின்ன பிள்ளை தாண்டி உன்னை என்னால எல்லாம் அடிக்க முடியாது,ஆனாலும் நீ போலிஸையே இப்படி புஸ்வாணம் ஆக்கிட்டீயேடி “
“ சரி சாப்புடு உன்ன வீட்டுல விட்டுட்டு நான் ஸ்டேசனுக்கு போனும் “
அப்பொழுது தான் கவனித்தால் அங்கு இருந்தது எல்லாம் அவளுக்கு பிடித்த உணவுகள்
எப்படி இதெல்லாம் கண்டுபிடிச்சு இருப்பாங்க என தோன்றிய போதும் அமைதியாகவே உண்டால்
வீட்டில் அவளை இறக்கி விட்டவன் யாரும் இருக்கிறார்களா என் பார்த்து விட்ட
” கருவா டார்லிங் என்னடி மாமாவ கண்டுக்காம போற “
புரியாமல் விழித்தவளை
அருகே இழுத்து அவள் நெற்றியில் அழுந்தமாக முத்தம் வைத்தவன்
“ஐ லவ் யூ டி பொண்டாட்டி “என கூற
வெக்கத்தில் தலை குனிந்து நின்றவளை நிமிர்த்தியவன்
“ நான் உனக்கு எத்தனை கிப்ட் கொடுத்திருக்கேன் என்ன ஒரே ஒரு தடவை மாமானு கூப்புடுடி பிளிஸ்” என கெஞ்ச
அதெல்லாம் முடியாது நீங்க கொடுத்த எல்லா கிப்டயும் வேணா திரும்ப வாங்கிக்கோங்க “ என கூற
அவனுடய முறைப்பில் சிலையென நின்று விட்டால்
“ ஒன்றும் சொல்லாமல் கோவத்தையெல்லாம் வண்டியில் காண்பித்து வேகமாக ஓட்டி சென்றுவிட்டான் “
“ எவ்ளோதான் பாசம் வைச்சாலும் இவளுக்கெல்லாம் புரியவே புரியாது கல்யாணம் வரைக்கும் பேசவே கூடாது இவ கூட “
அவன் கோவமாக சென்றதற்க்கு அப்பறம் தான் புரிந்தது ஐயோ நம்ம அவங்க மனச கஸ்டப்படுத்திட்டோமோ என்று
இருந்தாலும் உள்ளிருக்கும் ஈகோ அவளை போன் பண்ணி சமதானம் செய்ய விடவில்லை.
“ காதல் அது கைகூடுமா ?
திருமணம் அது தித்திக்குமா ?
இருமணம் தான் இணையுமா ? “
நம்ம ஹிரோவுக்கு சூட்சுவேசன் சாங்க்
வேணா வேணாண்ணு நினைக்கலையேநானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்


பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத


கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே
சித்திரம் சிந்தும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top