சிக்கன் மிளகு வறுவல்

Advertisement

T.Nirmala

Member
அரைக்க தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் 100g
பச்சை மிளகாய் 3
இஞ்சி 1 துண்டு medium
பூண்டு 1 small தோல் உரிக்க தேவையில்லை
சோம்பு 1 ஸ்பூன்.

மேலே உள்ள பொருட்களை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.

பொடி செய்ய தேவையான பொருட்கள்.

மிளகு 1 table spoon
சீரகம் 1 ஸ்பூன்

வறுக்க தேவையான பொருட்கள்

சிக்கன் 500கிராம்
தனியா தூள் 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிது
பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கியது
கருவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு.
தக்காளி 1 சிறியது. விதை இல்லாமல் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

செய்முறை

குக்கெரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் முதலில் அரைத்த மசாலா மற்றும் தனியா, மிளகாய், மஞ்சள் பொடி போட்டு வாசனை வரும்வரை கிளறவும். பிறகு சுத்தம் செய்த சிக்கன் போட்டு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். குக்கரை மூடி 3 விசில் விடவும். அதில் தண்ணீர் விட கூடாது. சிக்கனிலேருந்து வரும் தண்ணிய போதும். விசில் இறங்கியதும் குக்கரை அடுப்பில் வைத்து பொடித்து வைத்த மிளகு, சீரக தூளை போட்டு கிளறவும். ட்ரயாகும் வரை கிளறவும். கடைசியாக தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு நன்றாக கிளறி இரக்கவும்.

டிப்ஸ்.
எப்போதும் சிக்கன் and மட்டன் fry பண்ணும் போது கடைசியில் பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு நன்றாக கிளறி இறக்கினால் வாசனை நன்றாக இருக்கும்
 

Suganya Vasu

Writers Team
Tamil Novel Writer
I loveeee to eat chicken with pepper .... Whenever I try its bad....I missing something....Now i I'll try this.....

Thanks sis for sharing this.....
 

T.Nirmala

Member
ஓவர் குக் ஆகும்னு தெரிஞ்சா 2 விசில் விடுங்க போதும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top