சாரல் 25

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஹாய் நட்பூஸ்,

சாரல் 25 போட்டுட்டேன். போன பதிவுக்கு லைக், கமெண்ட் செய்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றியோ நன்றி. இன்னும் பிளாஷ்பாக் எத்தனை எபி வரும் என்று தெரியலை. சீக்கிரமே முடித்துடுவேன் என நானும் நம்புறேன். நீங்களும் என்னை நம்பணும் ஓகே.

புதிதாக நட்பு வட்டத்தில் இணைந்திருக்கும் நட்பூஸ், my hearty welcome. அப்புறம் இந்த பதிவு 1850 வார்த்தைகள் மக்களே. இதற்கு மேல என்கிட்ட எதிர்பார்த்தா, சாரி அதுக்கு மேல மேல்மாடில சரக்கு இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். Please read and pen your comments. Happy reading.

சாரல் 25

அவளது துருதுரு விழிகள் காந்தமென விஷ்வாவை ஈர்த்து தன்னிலை
இழக்க செய்ய, மீளவே முடியாத பெரும்சுழலில் சிக்கிக் கொண்டவன் போல உணர்ந்தான். முந்தைய இரவு எடுத்த முடிவுகள் அனைத்தும் அவனது கட்டுப்பாட்டை மீறி தடையை தகர்த்துக் கொண்டு வருவதை உணர்ந்தான், ஆணவன். அதற்குள் சத்தம் கேட்டு வெளியே வந்துவிட்டார், கீதா. தாயைக் கண்டு பதறியவள் “அய்யய்யோ அம்மா வராங்க மாமா..!” என அலற, “டேய் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” பொதுவாய் கேட்டவர், மகளிடம் திரும்பி,

“நீ எதுக்குடி அம்மா அம்மானு ஏலம் விட்டுட்டு இருந்த?” என கேட்க,
என்ன சொல்வதென்று தெரியாது திருதிருவென விழித்தபடி அவள் பாவமாய் விஷ்வாவை பார்க்க, அவனோ “சொல்லேன்! சொல்லித்தான் பாரேன்!” எனும் விதமாய் பார்த்து வைக்க, “அய்யய்யோ இந்த மாமா வேற நேரங்காலம் இல்லாம வச்சு செய்யுதே!” மனதினுள் புலம்பிக் கொண்டவள், “மாமா மாமா ப்ளீஸ் காப்பாத்து மாமா!” தாய்க்கு தெரியாது கெஞ்ச அவளது செய்கையை ரசித்தான், விஷ்வா.

“அது ஒண்ணுமிலத்தை மேடம்க்கு சாயங்காலம் சமோசா வேணுமாம்!” என விஷ்வா பேச்சை மாத்த, “ஹப்ப்பாடி தப்பித்தோம்!” என இருந்தாலும், “அடப்பாவி! இப்படியா என்னை கோர்த்துவிடுவ! இவங்க என் காது தீயிற வரையில அட்வைஸ் பண்ணுவாங்க! இதுக்கு உண்மையை சொன்னாக்கூட நாலு திட்டோட முடிந்து இருக்குமே!” மனதினுள் நினைத்துக் கொண்டு, வெளியே பாவமாய் பார்த்து வைத்தாள். அவள் நினைத்தது போலவே கீதா தனது வசை மாரியை பொழிய ஆரம்பிக்க, “இது இப்போதைக்கு முடியாது போலிருக்கே!” என நினைத்துக்கொண்டு, அமைதியாய் நின்றாள்.


விஷ்வாவுக்கு அவளைக் கண்டு பாவமாய் இருக்க, குறுக்கே புகுந்து அத்தையிடம் இருந்து அவளைக் காப்பாற்றினான். “படுபாவி செய்றதையும் செஞ்சுட்டு கடைசில காப்பாத்த வேற செய்றியா! இவ்வளவு நேரம் திட்டவிட்டுட்டு இப்ப வந்து சமாதானம் வேற செய்றான்!” மனதினுள் விஷ்வாவை தாளித்தவள், அவனை முறைக்கவும் தவறவில்லை.


அவளது பார்வையைக் கண்டு ஜெர்கானவன், “அத்தை அத்தை போதும் போதும் சாயங்காலம் வந்து தொடருங்க. அவளை விட்டுட்டு வேற நான் போகணும்!” குறுக்கே புகுந்து அத்தையை அமைதிப்படுத்தியவன், “சாயங்காலம் எதாவது வெளிய சாப்டுட்டு வந்த!... அவ்வளவு தான்…” மகளிடம் எச்சரித்தவர், “டேய் உனக்கும் தான். என்கிட்ட சொல்லிட்டு அந்த பக்கம் அவளுக்கு எதாவது வாங்கிட்டு வந்து கொடுத்த…. ரெண்டு பேருக்கும் ராத்திரி சோறு கிடையாது பார்த்துக்கோங்க!” மிரட்டிவிட்டே சென்றார்.


தாயின் தலை மறைந்ததும், கையில் இருந்த தனது பையை வைத்து ஆத்திரம் தீரும் மட்டும் அவனை நன்றாக மொத்தினாள். அவள் கொடுத்த அடிகள் அனைத்தையும் சிரிப்புடனே வாங்கிக்கொண்டான்.

அன்றைய காலைப் பொழுது அவர்களுக்கு ரணகளமும், குதூகலமுமாக விடிய, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே, கல்லூரிக்கு வந்தாள். அவளது முகத்தைக் கண்டு சரண்யா என்னவென்று விசாரிக்க, அவளிடமும் சிடுசிடுத்தாள். அன்றும் அவளை அழைக்க விஷ்வா வந்து நிற்க, தூரத்தில் தோழிகள் இருவரும் வருவதை கண்டுக் கொண்டவன், பிருந்தாவின் ஒவ்வொரு அசைவையும் பைக்கில் சாய்ந்து நின்றபடி ரசித்துக் கொண்டிருந்தான்.

சரண்யா எதுவோ கேட்க அதற்கு அவள் தீவிரமாய் பதிலளிப்பதும், நெற்றியில் தவழும் முடியை ஒதுக்கி விடும் பாங்கு, அவளது தலையாட்டலுக்கேற்ப அசைந்தாடும் ஜிமிக்கி என ஒவ்வொன்றையும் அவன் பார்த்து ரசிக்க, அவனைக் கண்டுவிட்ட சரண்யா இருபுருவம் உயர்த்தி கேலியாய் அவனைக் கண்டு சிரிக்க, அவள் கண்டு கொண்டாள் என்றுணர்ந்து விஷ்வாவின் வதனம் வெட்கம் சுமந்துக் கொண்டது. தோழியின் பார்வை செல்லும் திசையைக் கண்டு தானும் தனது பார்வையை திருப்பிய பிருந்தா, இருவரையும் கண்டு புருவம் சுருக்கினாள். இவள் சிரிப்பதும் அதற்கு அவன் அழகாக வெட்கப்படுவதும் கண்டு அவளது வயிற்றில் உருவமில்லா ஒன்று மேலெழும்பி தொண்டையை அடைத்தது. அதுவரை சகஜமாக இருந்தவளின் நடை சட்டென ஓய்ந்துப் போனது.

“ஹாய் விஷ்வா!” சரண்யா சொல்ல, எந்த விகல்பமுமின்றி, அவளைக் கண்டு “ஹாய்!” என மகிழ்வாய் கையசைத்தான். இருவரையும் கண்டு உள்ளுக்குள் ஏதோவொன்று உடைந்தது பிருந்தாவுக்கு. சரண்யாவின் கண்களுக்கு பிருந்தாவின் முகமாற்றமும் தப்பவில்லை. சுரத்தேயின்றி வண்டியில் அமர்ந்துக் கொண்டவள், அமைதியாய் வர, புதிதாய் காதல் வயப்பட்ட விஷ்வாவும் அவளின் அருகாமை ஒன்று போதுமென்று அந்த பயணத்தை வெகுவாய் ரசித்துக்கொண்டே வந்தான்

.
வீடு வந்த பின்பும் அவளது மௌனம் தொடர, விஷ்வாவுக்கு அது பெரிதாக தெரியவில்லை. அதற்கு அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாளென அவளது மௌனம் தொடர, கிலுகிலுப்பையை போல சலசலக்கும் பெண்ணவளின் அமைதியில் குழம்பித்தான் போனான் ஆணவன். அவளிடம் என்னவென்று கேட்கவும் முடியாது அவளது மௌனத்திற்கான காரணமும் புரியாது தவித்தான். பேதைப் பெண்ணுக்கும் தனது மனமும் புரியவில்லை. அவளைக் கவனித்து வந்த சரண்யா என்னவென்று கேட்க அவளிடமும் அதே மௌனம் தான். இதுவே ஒரு வாரமும் தொடர, எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டுமென தவித்து அன்று அவளைக் காண காலேஜ் வந்தான்.

அவளுக்குமுன் சரண்யா வர, அவளிடம் தனது மனக்குமுறலை கொட்டினான் விஷ்வா. அதனைக் கேட்டு மென்மையாய் சிரித்தவள், “அவளுக்கு உங்க மேல ரொம்ப பொசசிவ் விஷ்வா சார். அனேகமா அன்னைக்கு நீங்க அவளைக் கூப்பிட வந்தனைக்கு இருந்து தான் அப்படியிருக்கானு நான் நினைக்கிறேன்!” அவள் சொல்ல, முயன்று தனது நினைவடுக்கை தட்டி யோசித்து பார்த்தவனுக்கு சரண்யா சொல்வதும் உண்மையாக இருக்குமோ என்றும் தோன்றியது. அதையே கண்ணில் தாங்கி அவன் சரண்யாவைப் பார்க்க, “என்ன யோசனை விஷ்வா சார்? அப்படி இருக்குமோ இல்லை.. அப்படி தான்!” என்றாள் சரண்யா. அங்கு வந்த பிருந்தாவின் கண்களில் விஷ்வாவை பலநாள் கழித்து பார்த்ததால் தோன்றிய சிறு மின்னல், அடுத்த நொடியே இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது கண்டு வந்த வேகத்திலேயே மறைந்தது.

முகம் சிறுத்து போக, உதடுக் கடித்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள், இருவரையும் கண்டும் காணாதது போல கடந்து செல்ல, அவள் செல்வதை உணர்ந்து பதறியபடி சரண்யாவை பார்க்க, அமைதியாக இருக்கும்படி கண்களை மூடித்திறந்தாள். அடுத்த நாள் காலையில் சரண்யா பிருந்தாவிடம் பேச விழைய, தோழியை கடந்து சென்றாள், பிருந்தா. “ஏய் பிருந்தா! ஏய் பிருந்தா!” சரண்யா அவள் பின்னே ஓடி வர, தனது நடையை எட்டிப்போட்டாள் பெண். வேகமாய் அவளை அடைந்து அவளின் முன் மறைத்தபடி நிற்க, பேசாது முகம் திருப்பினாள், பிருந்தா. அவளது முகத்திருப்பலில் கோபமடைந்த சரண்யா, “என்னடி உன் பிரச்சனை? எதுக்குடி என்னை அவாய்ட் பண்ற?” குரலில் கோபம் கொப்பளிக்க சரண்யா சூடாக கேட்க, மௌனமே அவளிடம்.
“பதில் சொல்லுடி!” சரண்யா மறுபடி கேட்க, திரும்பி நின்றுக்கொண்டாள், பிருந்தா.

“உன் விஷ்வா மாமாவை உன்கிட்ட இருந்து நான் பிடுங்கிக்கிட்டு போயிடுவேனோனு தானேடி என்னை கண்டா இப்படி மூஞ்சியை திருப்பிக்கிட்டு ஓடுற?” சரண்யா கேட்க அவள் நிலையில் மாற்றமில்லை.

“நான் கேட்டுட்டு இரு…” பொறுமை இழந்தவள் அவளை தன்புறம் திருப்ப, பிருந்தாவின் கண்ணீர் சுமந்த விழிகளைக் கண்டு அதிர்ந்து தான் போனாள், பெண். “ஹே பிருந்தா எதுக்குடி இந்த அழுகை?” தோழியை தொட, “இல்…லடி… நா…ன் என்னதான் நீங்க ரெண்டு பெரும் சேரணும்னு நினச்சாலும் இப்பெல்லாம் என்னால உங்க ரெண்டு பேரையும் இயல்பா சேர்த்து வச்சு பார்க்க முடியலை. மனசெல்லாம் எதோ சொல்லத்தெரியாத வலி… எதோ என்னோட கைப்பொருள் என்னைவிட்டு போற மாதிரி தோணுது!” மனதில் அடக்கி வைத்திருப்பதை அழுத்தம் தாளாது தனது தோழியிடம் பகிர்ந்துக்கொண்டாள், கோதை.

தன்போக்கில் சொன்னவள், தனது தவறு உணர்ந்து திடுக்கிட்டு சரேலென நிமிர்ந்து தோழியின் முகத்தைக் காண, அங்கு அவள் எதிர்பார்த்ததுக்கு நேர்மாறாய் சரண்யாவின் முகத்தில் புன்னகை தவழ்வது கண்டு தோழியை குழப்பமாய் ஏறிட்டாள். “ஹப்பாடி உன்னோட மனசுல இருக்க லவ்வ உணர உனக்கு இவ்வளவு நாளா ஆச்சுடி?” கேலி கலந்த குரலில் ஆச்சரியம் போல வினவினாள், சரண்யா.


“என்னடி சொல்ற?” பிருந்தா அதிர்வாய் கேட்க, “ஏண்டி மரமண்டை! உங்க மாமாவ பார்க்க கூடாதுன்னு எனக்கு தடா போடுவ. யார் அவர் கிட்ட பேசுனாலும் பொசுபொசுன்னு உனக்கு உள்ள எரியும்! அதையும் தாண்டி உன் முகத்தை அந்த நேரம் பார்க்கணுமே நெற்றிக் கண்ணு ஒன்னு இல்லாதது தான் பாக்கி!” சரண்யா தோழியைக் கிண்டல் செய்ய, தன்னை இவள் இவ்வளவு கவனித்திருக்கிறாளா? எனும் ஆச்சரியம், தன் மனதைக் கண்டுக்கொண்டாளே எனும் வெட்கம், அனைவருக்கும் தெரியும்படியாகவா நடந்துக் கொண்டிருக்கிறேன் எனும் சிறு சங்கடமென கலவை உணர்வில் தத்தளித்தாள், பிருந்தா.

தோழியின் முகத்திலிருந்தே அவளது எண்ணவோட்டத்தை அறிந்துக் கொண்டவள், அவளை கேலி செய்து ஒரு வழி ஆக்கினாள். புதிதாய் காதல் கொண்ட மனது மனம் கவர்ந்தவனை காண ஆவலாய் பறக்க, மாலை எப்போது வருமென காத்திருந்தவள், அவனுக்காக ஆவலும் எதிர்ப்பார்ப்புமாக ஆளுக்கு முன்னே ஓடினாள். அவள் எதிர்ப்பார்த்தவன் வராது போக முகம் சுணங்கி தான் போனாள்.

வீடு வந்து சேர்ந்தவள், ஒருநொடி ஆவலுடன் கதவின் பிடியில் கை வைத்தவளை பயமும், தயக்கமும் ஆட்கொண்டது. ஒரு வாரமாக அவனிடம் பாராமுகமாக நடந்துக் கொண்டு, திடீரென தனது காதலை எப்படி வெளிபடுத்துவது என ஒரு தயக்கம் பூதாகரமாய் எழுந்து அவளை தவிக்க செய்தது. விறுவிறுவென உள்ளே வந்தவளின் நடை உள்ளே அவனது குரல் கேட்டதும் சற்று நிதானமாகியது.

வாயிலில் அரவம் கேட்டதும், சற்றென்று நிமிர்ந்து பார்த்தான், விஷ்வா. இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தொக்கி நிற்க, அனைத்தும் சில பல நொடிகள் அவுட் ஆப் போக்கஸ் ஆகி தாங்கள் இருவர் மட்டுமே இருப்பது போன்ற தோற்றம் எழுந்தது பெண்ணுள்.

மகளின் அசையா தோற்றம் கண்டு “ஹேய் பிருந்தா பிருந்தா” என இருமுறை சத்தமாக அழைக்க, தன்னிலை மீண்டவளுக்கு தன்னை நினைத்தே வெட்கமாகி போனது. வேகமாய் தலையை குனிந்துக் கொண்டவள், தலை நிமிராது தாய் கேட்க கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்து விட்டு விருவிருவென தனது அறைக்குள் புகுந்துக் கொண்டாள். கதவை அடைத்துவிட்டு படுக்கையில் அமர்ந்திருந்தவள் இதயமோ வேகமாய் துடிப்பதை அவளால் உணர்ந்துக்கொள்ள முடிந்தது. எப்போது எங்கே காதல் வயப்பட்டோம் என யோசித்தவளின் மனதிற்கு அதற்கான விடை தான் தெரியவில்லை. கண்களை திறந்துக் கொண்டே கனவுலகில் சஞ்சரித்தவள் சுற்றம் சூழல் அனைத்தையும் மறந்தாள்.

அதன் பிறகான நாட்களில் அவனை ஏறிட்டு பார்க்க முடியாத அளவு தயக்கமும், பயமும் அவளை ஆட்கொள்ள, அவனை தவிர்த்தாள். அவளது விலகலில், இன்னும் பயந்து போன விஷ்வா, தனது காதல் கொண்ட மனதை அடக்கவும் வழி தெரியாது தவித்தான். பேசாமல் தனது மனதை வெளிப்படுத்தி விடுவோமா என யோசித்தவன், “வேண்டாம் அவ சின்ன பொண்ணு. இது அவளுக்கு காதலிக்கிறதுக்கான வயசும் கிடையாது. தேவையில்லாம சின்ன பொண்ணோட மனசை கெடுக்காத. அவ படிக்கணும்!” அவனுள் இருந்த நல்லவன் அறிவுறுத்த, மௌனியாகிப் போனான், விஷ்வா.

அவளை அமைதியாக கண்களால் பின்தொடர்வதே அவனுக்கு போதுமானதாக இருக்க, படபட பட்டாசாய் தன்னிடம் சலசலக்கும் தனது பிந்துக்குட்டியை தேடி தவித்தது ஆண் மனம். இருவரின் கண்ணாமூச்சி ஆட்டமும் முடிவுக்கு வரும் நாளும் வந்தது. வழக்கம் போல கீதா பிருந்தாவை விட சொல்ல, நெடுநாள் கழித்து இனிய பரபரப்பு தொற்றிக்கொண்டது அவனுள். வேகவேகமாய் வண்டியை துடைத்தவன், அவள் வரும் வழியையே ஒருவித ஆர்வத்தோடு பார்த்திருந்தான்.

கீதா மகளிடம் இதனை சொல்ல, “வேண்டாம்மா நான் பஸ்லயே போய்க்கிறேன்!” அவள் மறுக்க, “இனிமே பஸ் பிடிச்சு நீ எப்ப காலேஜ் போவ? விஷ்வா வெளிய தான் நிக்குறான். ஒழுங்கா காலேஜ் கிளம்பு காலையில சீக்கிரம் எழுந்திரிக்கிறதே இல்லை. ஆடி அசைஞ்சு எழுந்துட்டு, இன்னைக்கு லீவ் போட நெனச்ச அவ்வளவுதான்!” பிருந்தா மறுப்பதற்கான காரணம் தெரியாது, அவளை திட்ட, “வேண்டாம்மா நான்…” என்றவளின் வார்த்தை வாயிலில் நின்ற விஷ்வாவைக் கண்டு தேய்ந்து மறைந்து போனது. அவளது வார்த்தைகளைக் கேட்டு முகம் சுருங்கிப் போன விஷ்வா, அவள் பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டான். இருவரின் முகத்தையும் கண்டு, “என்ன? ரெண்டு பேருக்கும்… மறுபடி சண்டையா? இன்னும் சின்ன பிள்ளை மாதிரியே பண்ண வேண்டியது. ஒழுங்கா கிளம்பி போற வழியை பாரு!” என்றபடி உள்ளே சென்றுவிட்டார்.

அவனது கூம்பிய முகம் அவளை வதைக்க, பேசாது அவனை பின்தொடர்ந்தாள். நேரம் இருப்பது உணர்ந்து, வழியில் ஒரு கடையில் நிறுத்தினான். கேள்வியாய் அவனைப் பார்க்க, அவள் முகம் காண மறுத்து ஒரு இடத்தில் அமர்ந்துக் கொண்டான். அவனது வதனத்தை நேராய் பார்க்க முடியாது, அங்குமிங்கும் அவள் தனது பார்வையை ஓட்ட, “என்கூட பேசக்கூட பிடிக்கலையா பிந்தும்மா?” உயிர் உருக்கும் குரலில் விஷ்வா கேட்க, அவனது குரலில் அதிர்ந்து, அமைதியாய் ஏறிட்டாள்.

உயிரானவளின் மௌனமும் விலகலும் தந்த பாதிப்பில் கண்களில் நீர் தேங்கியிருக்க, அவளது முகத்தையே பார்த்திருந்தான். அவனோடு சண்டையிட்டு, சரிக்கு சரி வாயாடுபவள் தான், ஏனோ தமிழில் உள்ள அத்தனை வார்த்தைகளும் மறந்துப்போன உணர்வு அவளுள். பல நாட்கள் கழித்து அவன் முகம் காண்கிறாள். சில நொடிகளுக்கு மேல் அவனது கண்களை நேராய் சந்திக்க இயலாமல், புதிதாய் முகிழ்த்த வெட்கம் தடைபோட, தனது பார்வையை தழைத்துக் கொண்டாள். அவனது விழிவீச்சு வாயடைத்து போக செய்ய, பேசாமடந்தையாகி போனாள். அதையும் தவறாகவே புரிந்துக் கொண்டான் ஆண்மகன். “போலாம்!” சட்டென அவன் எழுந்துக்கொள்ள, அவனை பின்தொடர்ந்தாள், பிருந்தா.

அங்கே ஊரில்,
வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார், முத்துவேலின் தந்தை சிவசிதம்பரம். அப்போது அங்கே வந்தார் தரகர். “என்ன சுப்பு இந்த பக்கம்?” கேட்டார், பெரியவர்.

“இல்லைங்கையா…. டவுன்ல கொஞ்சம் பெரிய ஆளுங்க. தோப்பு துரவுன்னு நம்மளை விட வசதி, சொத்து பத்து எல்லாம் நிறைக்க தான்… அவங்களுக்கு பொண்ணு தேடுறாங்க… எனக்கு சட்டுன்னு நம்ம பாப்பா நினவு வந்துச்சு…. அதான்… பெரியவர்கிட்ட ஒரு வார்த்தை….” சுப்பு இழுக்க,


“யாருடா இவன்? என் பேத்திக்கு ஐயனார் கணக்கா, எம்பேரன் பக்கத்துலயே இருக்க, நான் ஏன் என் பேத்தியை வெளிய கொடுக்கணும்? அவளுக்கு இப்பதான் பத்தொம்போது வயசாகுது… இப்ப அவளுக்கு செய்யுற எண்ணமும் எங்களுக்கில்ல!” நறுக்கு தெறித்தார், போல் சொன்னார் சிவசிதம்பரம். “சந்தோசங்கையா. அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேன்!” விடைபெற்றார் சுப்பு.

கணவனுக்கு மோர் எடுத்து வந்த கல்யாணியிடம், “என்ன நான் சொல்றது? சரிதானே கல்யாணி!” மனைவியிடமும் ஒப்புதல் கேட்க, அவருக்கும் அந்த எண்ணம் இருந்தாலும், சுப்பு சென்ற பிறகு, “நீங்க பாட்டுக்கு சொல்லிபுட்டீங்க! பெத்தவங்க மனசுல என்ன இருக்குனு ஒரு வார்த்தை கேட்டீங்களா?” கல்யாணி கேட்க,

அவர்களின் சம்பாஷணையை கேட்டபடியே நுழைந்த சுந்தர், “என்னத்தை இப்படி சொல்லிபுட்டீங்க? என்ற தங்கச்சி மக என் வீட்டுக்கு மருமகளா வந்தா கசக்குதா என்ன?” மறைமுகமாய் தனது விருப்பத்தையும் பெரியவர்களுக்கு உணர்த்தினார், சுந்தர். அதில் பெரியவர்கள் முகமும் மலர, “ம்ம் சரிதான்! ஆம்பளைங்க ரெண்டு பெரும் முடிவு பண்ணுனா சரியா? வீட்டு பொம்பளைங்க கிட்ட ஒருவார்த்தை கேட்க வேண்டாமா?” கல்யாணி கேட்க, “ இதுல என்னைவிட உங்க மகளுக்கு தான் அண்ணன் மகளை எடுக்க ஆசை அதிகம்! நாளைக்கே கல்யாணம் சொன்னா குத்திச்சுகிட்டு நிப்பா உங்க மக!”
என்றார், சுந்தர்.

“அப்புறம் என்னப்பா இந்த தடவை முத்து வந்தோன இதுபத்தி பேசிடலாம்!” பெரியவர் சொல்ல, “அட சும்மா இருங்ககுங்றேன்… ரெண்டு பேருக்கும் இன்னும் வயசு வரலை. மொதல ரெண்டு பேருக்கும் சாதகம் பார்த்து… அப்புறம் பேச்சை ஆரம்பிக்கலாம்.. அதுவரை உங்க வாயை திறக்காதீங்க!” மிரட்டினார் கல்யாணி.

“யாருடி இவ ஆரம்பத்துல இருந்தே கோக்குமாக்காவே பேசிக்கிட்டு இருக்கா? போடி போ உள்ள எதாவது வேலையிருந்தா பாரு!” மனைவியை உள்ளே அனுப்ப முனைந்தார், மனிதர். அதில் கணவனை வெட்டும் பார்வை பார்த்தபடி உள்ளே சென்றார், பாட்டி. பிற்காலத்தில் தனது வார்த்தைகள் தானோ பலித்துவிட்டது என எண்ணி எண்ணி மறுகினார், பாட்டி.

“நீ ஒன்னும் தப்பா கிழவி சொல்றதை எடுத்துக்காதையா! நான் அவகிட்ட சொல்றேன்!” மருமகனை சமாதானம் செய்தார், சிதம்பரம். “ஐயோ என்ன மாமா மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு. யாரு அது என் அத்தை தானே! பெரியவங்க சொன்னா ஒரு அர்த்தமிருக்கும்!” அத்தைக்கு பரிந்துக் கொண்டு வந்தார், சுந்தர். அவரைக்கண்டு மென்புன்னகை சிந்தியவர், “அதானே நீயாச்சு உன் அத்தை விட்டுக்கொடுக்கிறதாச்சு! அவளுக்கும் உள்ளுக்குள்ள உன் மகனுக்கு பேத்தியை கொடுக்கணும் என்ற ஆசை இருக்கு!” தனது மனதை வெளிப்படுத்தினார், சிதம்பரம்.

“அத்தை சொல்றதுல தப்பே கிடையாது மாமா. ரெண்டும் சின்ன பிள்ளைங்க. நம்ம பேசுறது காத்து வாக்குல வெளிய போகவும் வாய்ப்பு அதிகம். அவங்களுக்கு இப்ப அந்த எண்ணமில்லைனாலும், நம்மளே அவங்க மனசுல ஆசையை விதைச்ச மாதிரி ஆகிடக் கூடாதுன்னு தானே அத்தை சொல்றாங்க!” அத்தையின் மனதை அறிந்தவராய், சுந்தர்.

“அப்படி சொல்லுயா! இந்த கூறுகெட்ட மனுஷனுக்கு அதெல்லாம் எங்க புரிய போகுது! பேரன் மனசுல என்ன நினைப்பிருக்கோ?” என்றார், பாட்டி.

“அத்தை என் மருமகளை கட்டிக்க உங்க பேரனுக்கு கசக்குமா? அம்மன் சிலையாட்டம் அந்த மீனாட்சி மாதிரி அழகு பெத்த பொண்ண என் தங்கச்சி பெத்து வச்சுருக்கு! அவனுக்கு கட்டிக்க கசக்குதா? கட்டுறா தாலியைன்னு சொன்னா கட்ட போறான்!” பின்னாளில் தானே வேண்டாம் என சொல்லப் போவதை அறியாது தான் போனார், மனிதர்.

கள்ளமின்றி பேசும் சுந்தரையே வாஞ்சையுடன் பார்த்திருந்தனர், மூத்தவர்கள் இருவரும். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் நான் எதற்கு இருக்கிறேன் என விதி நினைத்துக் கொண்டதை பாவம் இவர்கள் மூவருமே அறியாது தான் போனார்கள். அதனை இவர்களின் விதி என்பதா? இல்லை விதியின் சதி என்பதா? இல்லை தன்னை தானே பெரியவனாக நினைத்துக் கொள்ளும் மனிதனின் ஆணவம் என்பதா?

சாரல் அடித்தது….
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top