சாரல் 19

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஹாய் நட்பூஸ்,


எல்லாருக்கும் வணக்கம். இந்த கதை இடையில் நிறுத்தி, திரும்பவும் நான் தொடர்ந்த போதும், கதைக்கான உங்கள் அன்பும் ஆதரவும், அளவில்லாதது. யாராவது ஒரு வார்த்தை கமெண்ட் செய்ய மாட்டாங்களா என ஏக்கத்தோடு கழித்த காலங்கள் போய், எனக்கே எனக்கா நீங்க கொடுக்கும் அன்பு தான் என்னை தொடர்ந்து எழுதவே வைக்குது.


போன பதிவுக்கு லைக் கமெண்ட் செய்து என்னை உற்சாகப்படுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி. And a special thanks to kalai karthi sis, saras hp sis, shanthy durai aanathan sis, raja deepa sis, siva geetha sis, valli mano sis, rsakthi sis, sumee sis, lakshmi murugan sis, megalasis, sundara ganesan sis, saro jaa sis, shobha kalirajan sis, bharathi moorthy sis, sahanas majas sis, jayabharathi senthilkumar sis, remoraj sis, sowmiyaa balaji sis, vani lavanya sis, Renuga rajan sis, kavitha subramani sis, sanju saraka sis, venmathi M sis, viji rsn 1965 sis, indhu karthick sis, devi tamil sis, ums sis, chithra ravindran sis, revathi D sis, fathima Nazlh sis, fathi Naz sis i think neenga rendu perum onnu thaanu nenakiren. Dr. deebiga karunakran sis, revathi TS sis, அஞ்சாயாள் சண்முகம் சிஸ். எல்லாருக்கும் எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது. சாரி யாருடைய பேரும் விட்டு போய் இருந்தா, மன்னிச்சுக்கோங்க. லிஸ்ட் கொஞ்சம் பெருசா போய்டுச்சு. சில நேரம் யார் பெயரையாவது மிஸ் பண்ணிட்டா எனக்கு கஷ்டமா இருக்கும். அதான் எல்லார் பெயரையும் ஒண்ணாவே போட்டுட்டேன்.


இன்று தான் அப்டின்னு என்னால ஒரு நாளை பிக்ஸ் செய்து ud போடமுடியலை. நான் ஒன்னு பிளான் செய்தா வேற ஒன்னு நடக்குது. அதே மாதிரி கதை கொஞ்சம் ஸ்லோ பிளாட். மெதுவாக தான் நகரும். எனக்கும் இப்டி தான் எழுத வருது. எனக்கு ஏனோ தானோ என்று எழுதி போஸ்ட் செய்துட்டு போக விருப்பமில்லை. ஒரு பதிவுக்கும் இன்னொன்றுக்கும் மூன்று நாள் இடைவெளி எடுத்துக்குவேன். அதே மாதிரி எழுதி முடிச்சுட்டு பல முறை எனக்கு திருப்தி வந்தால் மட்டுமே போஸ்ட் செய்வேன். அதான் இந்த கால தாமதம்.

என்னோட எழுத்துகள் நான் சொல்ல வருவதை சரியாக சொல்லி, உங்கள் உணர்வோட கலக்கணும் என்று எனக்கு பேராசை உண்டு. ஆனா எனக்கு அது இன்னும் வரலை என்று தான் நான் நினைக்கிறேன். என் அளவில் எழுத்துக்களுக்கு பெரும் சக்தி உண்டு. சிலரோட எழுத்துக்கள் நம்மை புன்னகைக்க வைக்கும், மனம் விட்டு வாய் விட்டு சிரிக்க வைக்கும், அழுக வைக்கும், இப்டி எல்லாமே அதற்கு உண்டு. சோ இது தான் நான் லேட் ud கொடுக்க காரணம் என்று சொல்லிக் கொண்டு, உங்களை நம்ப வைக்க எனக்கு வேற வழி தெரியலை. சாரி ரொம்ப பேசிட்டேன். இந்த பதிவுக்கும் உங்க அன்பையும் ஆதரவையும் தாங்க மக்களே.


நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்


சாரல் 19


காரிருளை பூசிக் கொண்டிருந்தது வானம். அதில் மின்னும் வைரங்களாய் நட்சத்திரப் பூக்கள். பூர்ண சந்திரன் தனது குளுமையை பூமிக்கும் கொஞ்சமே கொஞ்சம் கடன் கொடுத்திருக்க, அந்த குளுமை விஷ்வாவை கொஞ்சமும் பாதிக்கவில்லை. நீச்சல் குளத்தின் விளிம்பில் கைகளை பின்னே கட்டிக் கொண்டு, நிலவை வெறித்திருந்தவனின் கண்களில் குளிர் நிலவின் அழகோ கிஞ்சித்தும் படவில்லை. அதில் அவனிடம் கோபித்துக் கொண்ட நிலவும், முகிலவனின் பின்னே தன்னை மறைத்துக் கொள்ள, விஷ்வாவின் நினைவுகளோ பின்னோக்கி சென்றுக் கொண்டிருந்தது.


பிருந்தா இடம் கருதி, தனது அதிர்வை விழுங்கிக் கொண்டு அவனைக் கண்டு கைகூப்பி வணக்கம் தெரிவிக்க, முதலில் விஷ்வா அதனை உணரும் நிலையில்கூட இல்லை. அவனது மூளை ஸ்தம்பித்து போயிருக்க, நொடிகள் கழித்தே தன்னை மீட்டுக் கொண்டான். இரண்டொரு நொடிகளுக்கு பின் தெளிந்தவன், தானும் கைகூப்பி பதில் வணக்கம் செலுத்த முயல, வார்த்தைகள் தொண்டையை விட்டு வெளிவருவேனா? என சதிராடியது. தொண்டைக்குழி ஏறி இறங்க, மிடறு விழுங்கி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், தானும் பதில் வணக்கம் செலுத்தினான்.



“ம்ம்ம் வா பிரகாஷ் சாப்பிட போகலாம்!” அவனை அழைத்த வைத்தியை, ஏதோ தெரியாத பாஷை பேசும் ஊரில் தொலைந்த குழந்தையை போல பார்த்து வைத்தான். அதனை தூரத்தில் இருந்து இரு ஜோடி கண்கள் பார்த்ததை இருவரும் அறியவில்லை. உள்ளுக்குள் முரசு கொட்டும் மனதை அடக்க பெரும் பாடுபட்டான், விஷ்வா. அனைவரின் முன்பும் கம்பீரமாகவே தன்னை காட்டிக்கொள்ள வேண்டிய நிலை அவனுக்கு. ஆனால் தனது கம்பீரம், மிடுக்கு, கர்வம் அனைத்தையும் தொலைத்து, முதல் முறை நடை பயிலும் குழந்தை போல தடுமாறினான்.


“உன் வைப் எங்கப்பா?” அவனிடம் கேட்டவர், அவனின் பதிலை எதிர்பாராமல், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “பிருந்தா நீ அவங்க எங்க இருக்காங்கன்னு பார்த்து கூட்டிட்டு வரியா?” என பிருந்தாவிடம் சொல்லிவிட்டு அவர் திரும்ப, அதற்கு அவசியமே இல்லாது விஷ்வாவின் பின்னே சிறு இடைவெளி விட்டு, சற்று தூரத்தில் நின்றிருந்தாள், அபிரக்ஷிதா. “அடடே வாங்கம்மா உங்களைத்தான் விஷ்வா கிட்ட கேட்டுட்டு இருந்தேன். உங்களை காணலனவும் என்னோட மருமகளை பார்க்க சொன்னேன்!” என்றார் மனிதர்.



அவர் இவ்வளவு பேசிய பின்பும் அபியின் பார்வை பிருந்தாவை விட்டு இம்மியும் அகலவில்லை. அவளது முகத்தையே அளவிட்டுக் கொண்டிருந்தது அவளது விழிகள். “ஹா மறந்துட்டேன் பாருங்க. இது என்னோட மருமகள் பிருந்தா!” என வைத்தி தன்போக்கில் அறிமுகப்படுத்த, அப்போதும் அபியிடம் மாற்றமில்லை. இரண்டு நொடிகளுக்கு பின், அவரை பார்த்து புன்னகை செய்ய, வைத்தியின் விழிகளோ அப்போது தான் வித்தியாசத்தை உணர்ந்தது. அவரது பார்வை உணர்ந்து, மீண்டும் ஒரு புன்னகையை சிந்தியவள், “எவ்வளவு தெய்வீகமான அழகு உங்க மருமக. அதான் பிரம்மிச்சு போய்டேன்!” என்றவளின் குரலில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.


பிருந்தாவைக் கண்டு சிறு புன்னகையை உதிர்க்க, அவளோ அதிர்ச்சி தாண்டிய அடுத்த நிலைக்கு சென்று இருந்தாலும், தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள அவளுக்கு அவகாசம் தேவைப்பட்டது. விஷ்வா, பிருந்தா இருவரும் அபி வைத்தியிடம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அதிர்வில் இருந்து மீண்டு சகஜமாகி இருந்தனர். இல்லை ஒரு வேளை தங்களை அப்படி காட்டிக் கொண்டனரோ?



“நேரமாகுது வாங்க போகலாம்!” வைத்தி அழைத்து செல்ல, அவளுக்கு தனிமை தேவையாக இருந்தாலும், தேவையற்றதை தவிர்க்க தானும் கூடவே சென்றாள். பிருந்தாவுக்கு வீட்டாளாய் அனைத்தையும் கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது. இருந்தாலும் மனதின் ஓரம் சிறு சுணக்கம் இருக்கதான் செய்தது. அபியின் கண்களோ விஷ்வாவையும், பிருந்தாவையும் தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இருவரும் தங்களை சகஜம் போல காட்டிக்கொண்டாலும், அவர்கள் அப்படி இல்லை என்பது அவளது கூர்விழிகளுக்கு பட்டவர்த்தனமாகவே தெரிந்தது.


அறுசுவை விருந்துகள் படைக்கப்பட்டிருக்க, அதன் மணமே வயிற்றுக்குள் பசியை உண்டு பண்ணியது. ஆனால் அதனை அனுபவித்து மகிழும் நிலையில் தான் அவனில்லை. உணவு, தொண்டைக்குள் சிக்கிய மீன் முள்ளாய் அவனை அவஸ்தைக்குள்ளாக்க, முயன்று, அதன் சுவையோ மனமோ என்னவென்று உணராமலே ஏதோ பேருக்கு விழுங்கி வைத்தான், விஷ்வா.



உணவு முடிந்ததும், வைத்தி மற்றவர்களை கவனிப்பதில் மும்மரமாக இருக்க, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஷ்வா மற்றவருடன் ஒன்றாது மெதுவாய் தனியே வந்துவிட்டான். நீச்சல்குளத்தின் விளிம்பில் நின்றிருந்தவன் மனதிலோ பெரும் புயலே அடித்துக் கொண்டிருந்தது. தன்யா ராகுல் இருவருக்கும் உணவூட்டி, தானும் அமர்ந்தவளுக்கு நிச்சயமாய் உண்ணும் எண்ணம் கொஞ்சமும் இல்லை. தலை விண் விண்ணென தெறிக்க, கொஞ்ச நேரம் தனியாக இருந்தால் நன்றாக இருக்கும் போல தோன்றியது.


அப்போது குழந்தைகளோடு தன்யா ராகுல் இருவரும் விளையாடிக் கொண்டிருக்க, வழக்கம் போல தன்யா தம்பியை சேர்த்துக்கொள்ள மாட்டேன் என வீம்பு செய்து, மற்றவர்களையும் அவனுடன் விளையாட விடாமல் தடுக்க, ராகுலுக்கு அழுகையில் உதடு பிதுங்கியது. “இரு அம்மாக்கிட்டயே உன்னை சொல்றேன்!”அழுதபடி ஓடி வந்த சிறுவன் கண்களில் கண்ணீர் மறைக்க, எதன் மீது மோதி தடுமாறி விழுகத் தெரிந்தான்.


தன் மீது வந்து எதுவோ மோத, அதில் சிந்தை கலைந்து குனிந்து பார்த்தான், விஷ்வா. அனிச்சை செயலாய் தன்மீது வந்து மோதிய சிறுவனை பிடித்துக்கொண்டான்.
அரையிருளில் அவனுக்கு யாரென்று சரியாக தெரியாமல் போக, கூர்ந்து நோக்கினான். விழுகப் போனவனை தடுத்து நேராய் நிற்க வைத்தவன், தன் முன்னே செப்பு வாய் அழுகையில் பிதுங்க, கண்கள் கலங்கி, கண்ணீர் கன்னங்களை நனைத்திருக்க, முகம் கசங்க நின்றிருந்த சிறுவனை கூர்ந்து பார்த்தான்.


அந்த அழுகையிலும் “சாரி!” பயந்தவாறே மன்னிப்பு கேட்டான் சிறுவன். சிறு கூரிய விழிகளும், சொப்பு வாயும், கொழுகொழு கன்னங்களும் என அச்சு அசலாய் சிறுவயது பிருந்தாவை உரித்து வைத்திருந்த ராகுலை கண்டு அதிர்ந்து போனான், விஷ்வா.



அதே நேரம் எங்கே இருந்தாலும் தன் மக்களின் மீது ஒரு கண் வைத்திருக்கும் பிருந்தா தனது பிள்ளைகளை காணாது தேடினாள். தன்னுள் உழன்றுக் கொண்டு பிள்ளைகளை கவனியாது விட்டுவிட்டேனே என தன்னையே கடிந்துக்கொண்டு இருவரையும் தேடி சென்றவளது கண்ணில் தன்யா மட்டும்பட, அவளிடம் தம்பி எங்கே எனக்கேட்க, வேறொரு குழந்தை தன்யா ராகுலை அழ வைத்ததையும், அவனும் அழுதுக்கொண்டே நீச்சல்குளம் பக்கம் சென்றதையும் சொல்ல, அதிர்ந்து நெஞ்சில் கைவைத்து, விடுவிடுவென மகனை தேடிச் சென்றாள், பிருந்தா.



பரபரப்புடன் நடையை எட்டிப் போட்டு, மகனை தேடி, “ராகுல்! ராகுல்!” என அழைத்தபடி நீச்சல்குளம் பக்கம் சென்ற பெண்ணவளின் காதில், “உங்க அம்மா பேரு பிருந்தாவா?” எனும் விஷ்வாவின் குரல் விழுந்ததில், அதிர்ந்து அங்கேயே வேர்ப்பிடித்த மரமாய் நின்றுவிட்டாள்.


புதியவனை கண்ட அதிர்ச்சியில் இருந்த சிறுவன், எங்கே தான் இடித்ததற்கு அடித்து விடுவானோ என பயந்து அவனின் கண்கள் இன்னும் கண்ணீரை சொரிய, அதில் உருகிய விஷ்வா, அவனது உயரத்துக்கு மண்டியிட்டு, அவனது தாய் பெயரை கேட்க, தாய் பெயரைக் கேட்டதில், கலக்கம் மறந்து, “ஐ எங்க அம்மா பேரு தான் பிந்தா!” சிறுவனும் மழலையில் மிளிற்ற, அவனது பாவனையில் சிறுவயது பிருந்தா நினைவில் ஆடினாள்.



விழிகளில் கண்ணீர் திரண்டிருக்க, உதடு மடித்து பொங்கும் விழிநீருடன் இருவரையும் பார்த்திருந்தாள், பெண். அவளையும் மீறி கண்ணீர் கரகரவென வழிந்து, மார்பு சேலையை நனைக்க, வேகமாய் சுற்றும் முற்றும் தன் விழிகளை சுழற்றியவள், அவசரமாய் பெருகும் விழிநீரை துடைத்துக் கொண்டாள். குரலை செருமிக்கொண்டவள், “ராகுல்!” சத்தமிட்டு மகனை அழைக்க, அதில் இருவரும் திரும்பி பார்த்தனர். “அம்மா!” என அழைத்தபடி, முயல் குட்டியாய் துள்ளி வந்த மகன், அன்னையை காலோடு கட்டிக்கொண்டான். தாவி வந்த மகனை தோளோடு அணைத்துக் கொண்டவளை தான் விஷ்வாவின் விழிகள் பார்த்தபடி இருந்தது.



மகன் உயரத்திற்கு குனிந்தவள், “ராகுல்! அம்மா உன்னை இங்கெல்லாம் தனியா வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல!” என கேட்கவும், தவறு செய்த பாவனையில், முகம் சுருக்கி “சாரி அம்மா! இனிமே தெய்ய மாட்டேன்!” வாக்களித்தான் மகன்.


“சரிப் போ! பெரிய பாட்டிக்கிட்ட இரு!” மகனை அனுப்பி வைத்துவிட்டு நிமிர்ந்தாள். அதுவரையும் விஷ்வா தனது பார்வையை மாற்றவில்லை. பெண் மனம் அவனிடம் பேச சொல்லி உந்த, மறு மனமோ வேண்டாமென தடுத்தது.


முடிவில் அவளையும் அறியாது அவளது கால்கள் அவனை நோக்கி அடியெடுத்து வைத்தது. அவள் தன்னை நோக்கி வரவும், வேகமாய் தனது பார்வையை திருப்பிக் கொண்டானே தவிர, அங்கிருந்து அகலவில்லை அவன். அடிவயிற்றில் இருந்து கிளம்பிய வலி, தொண்டை வரை பரவ, தடுமாறினான் ஆண்மகன். இயலாமையால் கைகளை மடக்கி தனது தொடையில் குத்திக் கொண்டவன், அடைத்த தொண்டையை செருமிக்கொண்டு அவள்புறம் திரும்பினான்.


அவனைக் கண்டு இளநகை பூத்தாள், மலரவள். “நல்.. நல்லா இருக்கியா பிந்…” விஷ்வா கேட்க, அதே நேரம் அவளும் “நல்லா இருக்கீங்களா விஷு மா…” இருவரும் அடுத்து வார்த்தையை முடிக்க முடியாது தடுமாறி நின்ற நேரமது.


“ம்ம்மக்கும்….. எப்படி இருக்க பிருந்தா?” என்றவன் குரல் கலங்கி ஒலித்ததுவோ? தன்னையே அந்த நொடி அவன் வெறுத்த நேரமது. யாரை கடந்து வந்துவிட்டேனென அவன் சொல்கிறானோ! அப்படி தன்னையே அவன் நம்ப வைக்கிறானோ! அந்த நம்பிக்கை எல்லாம் ஆட்டம் கண்டு, தவிடு பொடியாவதை கண்முன் கண்டான்.



“நான் நல்லா இருக்கேன் வி..ஷு… மா..ம” என்றவள், வேகமாய் “மாமா” என திருத்திக் கொண்டாள். மனதின் அடியாழத்தில் இருக்கும் நேசம், காலம் மாறினாலும்,

தன்னை மாற்றிக் கொள்ளுமா? பிந்து என்ற அவனின் அழைப்பும், விஷு என்ற அவளின் அழைப்பும், காதலின் வெளிப்பாடு மட்டும் அல்லவே. அது நம்பிக்கையின் வெளிப்பாடு. நேசம் கடந்த அன்பின் வெளிப்பாடு. காதல் தோற்று இருக்கலாம், ஆனால் காதலையும் தாண்டிய அன்பும் என்றும் தோற்காதே!


ஒருவர் மற்றவர் மீது கொண்ட அக்கறையும், அதன் வெளிப்பாடும் தான் அவ்வழைப்பு. தங்களையும் மீறி அது வெளிப்பட்டு விட்டாலும், தவறாய் தோன்றவில்லை இருவருக்கும். “நான் நல்லா இருக்கேன் மாமா!”


“நீங்க எப்படி இருக்கீங்க?” வினவினாள், பிருந்தா.


“நீ எப்படி இருக்க?” இருவரும் ஒன்றுப்போல கேட்க, இருவரின் முகத்திலும் மெல்லிய புன்னகையின் சாயல்.


“அத்தை எப்படி இருக்காங்க மாமா?” என்றவளிடம்,


“ம்ம் நல்லா இருக்காங்க!” என்றவன், “அது உன் பையனா?” என்றான்.


“ம்ம்ம் ஆமா மாமா!” என்றவள் முகத்திலோ ஒரு மென்மை. அதை உள்வாங்கியவாறே அமைதியாக இருந்தான், விஷ்வா. ஒரு குறுநகையுடன், “உங்க வைப் ரொம்ப அழகா இருக்காங்க மாமா!” என்றவளிடத்திளோ, அவளது குரலிலோ நிச்சயம் பொறாமை என்பது துளியும் இல்லை. தனது அன்புக்குரியவருக்கு ஆனந்தம் அடையும் ஜீவனின் மகிழ்ச்சி தான் அதில் இருந்தது.


“தேங்க்ஸ்!” என்றவனிடம் ஒரு தயக்கம்.


“மு…ரளி….முரளி தான் உன்னோட ஹஸ்பன்டா!” என கேட்க, கணவனது நினைவில் சட்டென்று உள்ளுக்குள் மூண்டது கலக்கம். அவளையும் மீறி கண்களில் வெளிப்பட்டு விட, சுதாரித்து மறைத்துக்கொண்டு தலையசைத்தாள்.



ஆனால் அவளது நொடி நேர தயக்கமும், அவள் விழிகள் வெளிப்படுத்திய கலக்கமும் சிறுவயது முதல் அணுஅணுவாய் அவளை அறிந்து வைத்திருந்தவனின் கண்களில் இருந்து தப்புமா? அவனது விழிகளும் அதனை குறித்துக்கொண்டது. ஆனால் அவனும் அதனை மறைத்துக்கொண்டான்.


“குழந்தைங்க…!” அவள் இழுக்க, “ஒரு பொண்ணு பேரு பிரகதி!” அவன் பதிலிறுக்க, உள்ளுக்குள் ஒரு ஆசுவாச மூச்சு அவளுள்.


“ரொம்ப அழகான பேர் மாமா! மாமாக்கு(விஷ்வாவின் அப்பா) ரொம்ப பிடித்த பெயர்!” எனவும் விஷ்வாவிடம் பெரும் மௌனம். எதோ நினைவில் சொன்னவள் அதன்பிறகே தனது தவறு உணர்ந்தாள். “சாரி மாமா! என்னால மாமா!”


“பரவாயில்லை விடு பிந்… பிருந்தா!” இருவரின் நினைவிலும், சுந்தர் உடனான பசுமையான மலரும் நினைவுகள். அவர் நினைவில் இருவரும் மூழ்கி கிடந்த தருணமது. நொடிகளுக்கு பின் இருவரும் தன்னிலை அடைய, அடுத்து என்ன பேச என இருவரிடமும் பெரும் தயக்கம்.


“உன் பையன் உன்னைய மாதிரியே இருக்கான் பிருந்தா!” என்றவனின் வார்த்தையில், அச்சிறு பாலகன் மீதான நேசமே தெரிந்தது. அவளது முகமோ இப்போது வெளிப்படையாகவே கசங்கிப் போனது. அவனது விழிகள் அவளின் ஒவ்வொரு அசைவுகளையும், ஒவ்வொரு வார்த்தைகளையும், அவளது உள்ளத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் அவளது நயனங்களையும் தான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதை அவள் அந்த நேரம் மறந்துதான் போனாள்.



மனம் தாளாது, தன்னையும் மீறி, “பிருந்தா நீ சந்தோச….!” என்றவனின் வார்த்தைகள், அவள் பின்னே கேட்ட, முரளியின் “பிருந்தா!” எனும் அழைப்பில் தடைப்பட்டு போனது. அதில் இருவரும் திரும்ப, முரளியோ தனது நீண்ட கால்களை எட்டி வைத்து அவர்களை நோக்கி வந்திருந்தான். இருவர் முகத்தையும் ஆழ்ந்து பார்த்தபடியே வந்தவன், மனையாளின் முகத்தில் சில நொடிகள் தனது பார்வையை கூடுதலாய் நிலைக்க விட்டான்.


இருவர் முகத்திலும் அதிர்வு தெரிய, அது முரளியின் கண்களுக்கு அழகாய், தவறாகப்பட்டது. திடீரென கேட்ட குரலில் விளைந்த பதட்டத்தில் அவர்கள் இருக்க, அந்த நெடியவனோ சரியாய் தவறாக தப்பிதம் செய்துக் கொண்டான். திடீரென கேட்ட குரல், அதுவும் கணவன் குரலாக இருக்கவும், உள்ளுக்குள் பிருந்தாவுக்கு கலக்கம் மூண்டது.


அந்த குளிர் காற்றிலும் அவள் முகத்தில் முத்துமுத்தாய் வேர்வை பூக்கள் அரும்பியிருக்க, கணவனையே பயந்த விழிகளுடன் அசையாமல் பார்த்திருந்தாள். விஷ்வாவோ அதற்குள் மீண்டிருந்தான். அருகில் வந்திருந்த முரளி, “ஹல்லோ விஷ்வா சாரி உங்ககிட்ட அப்ப சரியா பேச முடியல!” என்றவன்,


“உங்களுக்கு என் வைப்பை முன்னாடியே தெரியுமா?” விஷ்வாவிடம் இலகுவான குரலில், ஆழமான பார்வையுடன் கேட்க, விஷ்வாவின் கண்களோ அவனது பார்வையை சளைக்காது எதிர்கொண்டான். பிருந்தா தவிப்பாய் நின்றிருக்க, அதனையும் முரளியின் கண்கள் குறித்துக்கொண்டது.

“ம்ம்ம் தெரியும்… சின்ன வயசுல இருந்து! பக்கத்து வீடு… மாமா பொண்ணு!” என்றானே பார்க்கலாம்.


முரளியின் விழிகளோ நிச்சயம் அவனது இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதை அப்பட்டமாய் காட்டியது. அடுத்த நொடியே தேர்ந்த வியாபாரியாய் அதனை மறைத்துக் கொண்டவன், “ஒஹ்! பிருந்தா என்கிட்ட சொல்லவே இல்லை!” என்றவன், மனையாளின் முகத்தை கண்டான்.


“சாரி அங்க அப்பா தேடிக்கிட்டு இருப்பாங்க நம்ம இன்னொரு நாள்…… சாவகாசமா பேசலாம்!” என்றவன் அந்த இன்னொரு நாளில் அழுத்தத்தை கூட்ட, பிருந்தாவின் தோளில் கைப்போட்டு, தன்னோடே அழைத்துச் சென்றான். அவனது குரலில் அதன் பாவனையில் அதிர்ந்துப் போய் இருந்தவள், ஒருமுறை விஷ்வாவை திரும்பி பார்க்க, அவள் மீதான அவன் பிடி இறுகியது. தோள் மீதான அழுத்தத்தில் திடுக்கிடலுடன் பிருந்தா கணவன் முகம் காண, இறுகி இருந்த தாடை அவனது கோபத்தை அவளுக்கு பறை சாற்றியது. அதில் உள்ளுக்குள் பெண்ணவளுக்கு குளிர் கண்டது.


செல்லும் பிருந்தாவையே வேதனை கமழ பார்த்திருந்தான், விஷ்வா. அதில் அவளுக்கான பரிவு தான் இருந்தது.


சாரல் அடித்தது…











 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top