சவீதா முருகேசனின் கொடிச்சி ( மலை மகள் ) அறிமுகம்

Advertisement

mallika

Administrator
ஹாய் மக்களே,
நானே தான் மறுபடியும் வந்திருக்கேன் இந்த முறை வேற ஒரு புதிய களத்துடன். பதிவுகள் மடவரல் முடிந்ததும் தொடங்கும். கதையில் இருந்து ஒரு சின்ன டீசர்
அன்று
----------
வீட்டில் இருந்து கிளம்பும் போதே மணி ஏழரை ஆகியிருந்தது. ‘கடவுளே கிளம்பும் நேரமே சரியில்லையே, முதல் நாளே அந்த ஏட்டு சொல்லியிருந்தாரே. நாளைக்கு இன்ஸ் வருவாரு சீக்கிரம் வந்திடுங்கன்னு’
‘எஸ்ஐ வேற லீவுல இருக்காரு. இவரு வந்து என்ன சொல்லப் போறாரோ’ என்று மனதில் ஓட தன்னுடைய ஸ்வெட்டரை இழுத்துவிட்டுக் கொண்டு வேக எட்டுக்கள் போட்டாள் மெல்லினா.
அடுத்த பத்து நிமிடத்தில் அவள் ஸ்டேஷனுக்குள் நுழைந்திருக்க ஏட்டு கோவிந்தன் இவளை சங்கடமாய் பார்த்தார். ‘என்னாச்சு சார்??’ என்று இவள் பார்வையால் கேட்க அவர் சைகையால் இன்ஸ்பெக்டர் வந்திருக்கும் தகவலை கூறினார். உடன் டிஎஸ்பி வேறு வந்திருக்கிறார் போலும்.
இவள் சத்தமில்லாமல் நேரே உள்ளே நுழைந்தாள். “கோவிந்தன் எங்கே??” என்று ஒரு குரல் கேட்க “வந்துட்டேன் சார்” என்று அவர் முன்னால் நின்றார் கோவிந்தன்.
“எங்கே அந்த பொம்பிளை ஏட்டு காலையிலையே வரணும்ன்னு சொல்லியிருக்கீங்களா இல்லையா. ஆடி அசைஞ்சு வீட்டு வேலை முடிச்சுட்டு தான் வருவாங்களா அந்தம்மா”
“நேத்தே ஸ்டேஷன்க்கு போன் பண்ணி சொல்லியிருந்தேன் தானே” என்றார் அந்த அதிகாரி.
“சார் அவங்க வந்திட்டாங்க அப்போவே” என்றார் இவர்.
---------
மெல்லிய குரலில் இவள் பேசுவதை காதில் வாங்கியவரின் விழிகள் எங்கெங்கோ பாய்ந்தது. அவருக்கு வயது ஐம்பதை தாண்டியிருக்கும். மகள் வயது உடையவளை அவர் பார்க்கும் பார்வையே வேறு விதமாய் இருந்தது. ஒரு வழியாய் பேசி முடிந்த மெல்லினா நிமிர்ந்து அவரிடம் “சார் பேசிட்டேன்”

“இப்படித்தான் பேசுவாங்களா?? குரல்ல ஒரு ஏத்த இறக்கமே இல்லை. ஆமா நீயெல்லாம் எப்படி இந்த வேலைக்கு வந்தே??” என்றார் அவர்.

“சார் வந்து...”

“எக்ஸாம் எழுதினியா??”

“சார் மெல்லினா நம்ம ஆனந்தனோட பொண்ணு”

“யாரு ஹார்ட் அட்டாக்ல செத்து போனானே அவனா??”

“ஆமா சார்”

“கோவிந்தன் நீங்க போய் டீ வாங்கிட்டு வாங்க” என்று அவரை வெளியே விரட்டிவிட்டார். இன்னும் சிலரும் அங்கு இருந்தனர், அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு.

“கூடப்பிறந்த அண்ணன் தம்பின்னு யாருமில்லையா??”

“இல்லை சார்”

“ஓ!! அதான் பொம்பிளை பிள்ளைக்கு வேலையை கொடுத்திட்டாங்களா??”

அவள் பதில் பேசாது நின்றிருந்தாள். “நீ மட்டும் தானா வீட்டில??”

“அம்மா, தங்கச்சி இருக்காங்க சார்”

“ஹான்... உங்கப்பன் செத்து உனக்கு வேலை கிடைச்சிருக்கு அப்படித்தானே” என்றார் அவர் மீண்டும்.

இன்று
---------

“யோவ் இவன் எங்கய்யா இங்க வந்தான்” என்றார் தயாளன்.

“யாரை சொல்றீங்க??”

“அதான் அந்த ஆத்திரேயன்??”

“அவர் வராம வேற யாரு வருவாங்களாம். இவர் தானே இந்த டீம்க்கு ஹெட்டு”

“என்னய்யா சொல்றே??”

“என்ன தயாளன் தெரியாத மாதிரி கேட்கறே??”

“நிஜமா தான் கேட்கறேன் இவன் கான்ஸ்டபிள் தானேய்யா...”

“எப்போ பார்த்த அவரு கான்ஸ்டபிளா இருந்ததை”

“என் ஸ்டேஷன்ல தான் இருந்தான்??”
“யோவ் தயாளு மரியாதை இல்லாம பேசாதய்யா. அவருக்கு புடிக்காது, சின்னவரு பெரியவரு பார்க்க மாட்டாரு. லெப்ட் ரைட் வாங்கிடுவாரு”

“இவன் இப்படி இங்க அதை முதல்ல சொல்லுய்யா”

“யோவ் ஐபிஎஸ் முடிச்சுட்டு டைரக்ட்டா வந்திருக்காரு,ரெண்டு வருஷமா இங்க தான் இருக்காரு. நீ தான் நேத்து வந்திருக்க இங்க”

“நிஜமாவா இவன் ஐபிஎஸ்ஆ”

“என்னய்யா உன் பிரச்சனை ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்க??”

“அதில்லை சரவணா இவன் அங்க இருக்கும் போது நான் கூட குறைய செஞ்சுட்டேன். இப்போ என்னைப் பார்த்தா என்ன செய்வானோ அதான் யோசிக்கறேன்”

-------

ஆத்திரேயன் தயாளனின் புறம் பார்த்தவன் “தயாளன் நீங்க பதில் சொல்ல மாட்டீங்களா. வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கு”

“தெரியும்”

“என்ன சொன்னீங்க??”

“தெரியும்ன்னு சொன்னேன்”

“கேட்கவே இல்லையே??” என்றான் அவன் விடாது.

“தெரியும் சார்” என்று அவர் பதில் கொடுக்கவும் தான் பார்வையை வேறு புறமே திருப்பினான்.

“யோவ் மறந்திருப்பான்னு நினைச்சேன். என்னையவே கேள்வி கேட்குறான்” என்று அருகில் அமர்ந்திருந்தவரிடம் காதை கடித்தார் அவர்.

“என்ன மிஸ்டர் தயாளன் உங்களுக்கு எதுவும் சந்தேகமா. சரவணன் சாரை எதுக்கு டிஸ்டர்ப் பண்றீங்க எது கேட்கறதா இருந்தாலும் என்னை கேளுங்க” என்றான் இவன்.

“ஒண்ணுமில்லை சார்”

“அதை தான் அவர்கிட்ட கேட்டீங்களா??” என்று அதற்கும் ஒரு கேள்வி கேட்டான் அவன்.
--
Regards

Saveetha Murugesan
 

Joher

Well-Known Member
:love::love::love:

போலீஸ் கதை :love:

மெல்லினாவை பார்வை பார்த்தது தயாளன் தானா???
ஆத்திரேயன் வச்சி செய்வான் போல தயாளனை :p
வேணும் இந்தாளுக்கு IPS முடிச்சி வந்தவன் ஏட்டா இந்தாளுக்கு......
அதுவும் ரெண்டு வருஷம் இந்த விஷயம் தெரியாமல் ஸ்கொட்லாந்து யார்டு ல எப்படி குப்பை கொட்டினாரோ.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top