சம்பிரதாயங்களும் சினிமாப் பாடல்களும்

Advertisement

Rajesh Lingadurai

Active Member
Arumaiyana pathivu sir, perumpalum kiramapurangalil entha padalkal undu, ana nan yen ooril thirumana veetle ulla padalkalai kettu ulen.
Savu veetil perumbalum oliperukki vaipathilai yen ooril

மிக்க நன்றி. நீங்கள் சொன்னது உண்மை. பொதுவாக துக்க நிகழ்ச்சிகளில் ஒலிப்பெருக்கி வைக்க மாட்டார்கள். கேள்விப்படாதவர்களுக்கு அது சற்று வித்தியாசமாக தெரியும். ஆனால் ஊர்ப்பக்கம் இது வழக்கமான ஒன்று.
 

Rajesh Lingadurai

Active Member
வாராயோ...என் தோழி...
மணமகளே...மணமகளே வா..வா...
புருஷன் வீட்டில் வாழ்போகும் பெண்ணே....
இந்த மூன்று பாடல்களும் சென்னை டூ கன்யாகுமரி
வரை ஒலிபரப்பாகும் பாடல்கள்....
மணமகனுக்கு ஏன் அறிவுரை இல்லை....!!!??
ஹா....ஹா....நீங்க தான் சொல்லணும்.....

வீடு வரை உறவு,... என்ற பாடலும், ஒலிக்கும்....

மணமகனுக்கு அறிவுரைகள் இல்லை என்பதே ஒரு ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு போலதான் தோன்றுகிறது. இன்று பெரும்பாலும், திருமணத்துக்குப் பின் தனிக்குடித்தனம்தான். காஃபி போடுவதற்கே அம்மாவை சார்ந்து நிற்கும் ஆடவன் மீது திடீரென்று ஒரு குடும்பத்தை சுமக்கும் பணி கொடுக்கப்படுகிறது. ஆகையால், ஆண்களுக்கே அதிகமான அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இருப்பினும் அடுப்பாங்கரை எங்கே இருக்கிறதென்றே தெரியாமல் வாழ்ந்து விட்ட எனது அப்பா போன்ற தலைமுறையினரை ஒப்பிடும்போது இன்று ஆண்கள் வெகுவாக மாறியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். என் அப்பாவுக்கு வெந்நீர் கூட வைக்கத்தெரியாது. எனக்கு சாம்பார் முதல் கோழிக்குழம்பு வரை எல்லாமே அத்துப்படி.

இது காலமாற்றத்தின் எதிரொலி. ஆண்கள் மனநிலையில் சற்று முன்னேற்றம் தெரிந்தாலும், அறிவுரைகள் தேவைப்படாது என்று சொல்லிவிட முடியாது. பெண்கள் குடும்பத்தின் சூழ்நிலை அறிந்தே வளர்கிறார்கள், ஆகையால் அவர்களுக்கு குடும்பம் நடத்துவதில் ஆண்கள் அளவுக்கு சிக்கல்கள் வருவதில்லை. இருந்தாலும் நாம் இன்றும் பெண்களுக்கே மாறி மாறி அறிவுரைகளை வாரி வழங்கி வருகிறோம்.
 
Last edited:

Sainandhu

Well-Known Member
மணமகனுக்கு அறிவுரைகள் இல்லை என்பதே ஒரு ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு போலதான் தோன்றுகிறது. இன்று பெரும்பாலும், திருமணத்துக்குப் பின் தனிக்குடித்தனம்தான். காஃபி போடுவதற்கே அம்மாவை சார்ந்து நிற்கும் ஆடவன் மீது திடீரென்று ஒரு குடும்பத்தை சுமக்கும் பணி கொடுக்கப்படுகிறது. ஆகையால், ஆண்களுக்கே அதிகமான அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இருப்பினும் அடுப்பாங்கரை எங்கே இருக்கிறதென்றே வாழ்ந்து விட்ட எனது அப்பா போன்ற தலைமுறையினரை ஒப்பிடும்போது இன்று ஆண்கள் வெகுவாக மாறியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். என் அப்பாவுக்கு வெந்நீர் கூட வைக்கத்தெரியாது. எனக்கு சாம்பார் முதல் கோழிக்குழம்பு வரை எல்லாமே அத்துப்படி.

இது காலமாற்றத்தின் எதிரொலி. ஆண்கள் மனநிலையில் சற்று முன்னேற்றம் தெரிந்தாலும், அறிவுரைகள் தேவைப்படாது என்று சொல்லிவிட முடியாது. பெண்கள் குடும்பத்தின் சூழ்நிலை அறிந்தே வளர்கிறார்கள், ஆகையால் அவர்களுக்கு குடும்பம் நடத்துவதில் ஆண்கள் அளவுக்கு சிக்கல்கள் வருவதில்லை. இருந்தாலும் நாம் இன்றும் பெண்களுக்கே மாறி மாறி அறிவுரைகளை வாரி வழங்கி வருகிறோம்.

சரியாக கூறியிருக்கீங்க ராஜேஷ்....
கொஞ்சம், என்றாலும் விரும்ப தகுந்த மாற்றமே..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top