'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Final 1

Advertisement

Rudraprarthana

Well-Known Member
Rudra maa enaku baithiyame pidichidum pola iruku , siripum varuthu alukaiyum varuthu...inum oru epila epadi serthu vaipinga da......
Narmuka neenga Preethi nenachi thane sirichinga... Athaan yerkanave serthu vachitene:p:p:p venumna sollunga pirichi vituduren hero army solli Nan ethai seiyama iruken sollunga;)
 

Narmadha GF

Active Member
Narmuka neenga Preethi nenachi thane sirichinga... Athaan yerkanave serthu vachitene:p:p:p venumna sollunga pirichi vituduren hero army solli Nan ethai seiyama iruken sollunga;)
Amada preerhi nenachi thaan sirichen,...
Umaiyil vera levela yochigiringa dear, kadavul epavum ungaluku thoonaiya irupaar.
Ethey pirichi vittuduvingala sari, sari muthala athai panuga parkalam,...... 11185
 

Priyaasai

Active Member
View attachment 11182

வித்யாதேவி அறையில் இருந்து செல்ல அவரிடம் தெளிவாக முடிவை கூறி இருந்தாலும் இன்னும் ப்ரீத்தி முகத்தில் குழப்பம் அகலவில்லை.

இரு மாதங்களுக்கு முன்னர் இருந்த பிரீத்தியிடம் பொறுமையோ நிதானமோ கிடையாது இப்போது வித்யாவின் நிழலின் கீழ் இருப்பவளிடம் பெரும் மாற்றம். அவரை போலவே நிதானமாக, லாவகமாக சாதகபாதகங்கள் கண்டறிந்து ஒரு விஷயத்தை கையாள கற்று கொண்டு இருந்தாள்.

அவளுக்கு தெரியாமல் தேவ் குழந்தையை உருவாக்கியது தவறு என்றாலும் அவன் தவறுக்கு வித்திட்டதே அவள் தானே..?? அதிலேயே அவனை கேள்வி கேட்கும் தகுதியை அவள் இழந்துவிட்டாள். ஆம் யாருமே அவளை கையை காலை கட்டி ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லவில்லையே சொல்ல போனால் அவள் தானே மற்றவர்களை அந்த நிலையில் நிறுத்தி இருந்தாள் இப்போது தன் பிழையை திருத்தியவனை அவளே எவ்வாறு குறை கூறுவாள்...??

சொல்லபோனால் அலர் அவளுக்கு நரகத்தை காட்டி இருந்தாள் என்றால் விஷ்வா ப்ரீத்தியை அந்த நரகத்தில் இருந்து காப்பாற்றி மீட்டு மருத்துவமனையில் அவளுக்கு சொர்க்கத்தை பரிசளித்து இருக்கிறான்.

முதலில் ஆற்றாமையில் ஏமாற்றத்தில் அவன் மீதான கோபத்தில் அது புரியாவிட்டாலும் நாட்கள் கடக்கையில் அவளே கண்டறிந்த மறுக்க முடியாத உண்மை அது..!!

என்ன தான் சரண் அவளை மறுத்தாலும் அவளால் குழந்தையை தனியாக சமூக அந்தஸ்த்தோடு வளர்த்து கொள்ள முடியும் என்று திடமாக நம்பி கொண்டு இருந்தவளுக்கு அவள் நம்பிக்கை எல்லாம் தூள் தூளாக சிதறிய இடம் மருத்துவமனை.

ஆம் மருத்துவமனையில் ப்ரீத்தியை அனுமதிக்கும் போது குழந்தையின் தந்தை பெயரை கேட்கையில் சிறுவயதில் இதே கேள்வியை ப்ரீத்தியிடம் மற்றவர்கள் கேட்டது அதற்க்கு பதிலளிக்க முடியாமல் அவள் நின்ற நிலை நினைவில் எழுந்து அவள் நெஞ்சை சுட்டு பொசுக்கிட இப்போதும் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழிகளில் கண்ணீர் படலத்தோடு மெளனமாக இருந்த போது கம்பீரமாக முன் வந்து தன் பெயரை சொன்ன நொடியிலேயே அவளையும் அறியாமல் அவள் மனதில் விஷ்வதேவ் நுழைந்து விட்டான்.

அதிலும் எப்போது லேபர் வார்டில் என் குழந்தை உரிய அங்கீகாரத்தோடு பூமியில் கால் பதிக்க வேண்டும் என்று கூறி அவள் மறுப்பையும் பொருட்படுத்தாமல் தாலி கட்டினானோ அப்போதே இரும்பால் செய்யப்பட்டு இருந்த அவள் மனக்கதவை சுக்குநூறாக உடைத்து அவள் மனதில் சத்தமே இல்லாமல் குடியேறி ப்ரீத்தியின் நன்மதிப்பை பெற்ற ஆண்களில் முதலிடத்தில் இருந்த சரணை பின்னுக்கு தள்ளி விஷ்வா முதலிடம் பெற்று உயர்ந்து நின்றான்.

'குழந்தையால் தொடங்கிய இருவருக்குமான பந்தம் அந்த நொடி அதையும் கடந்து விஷ்வா மீதான மதிப்பும் மரியாதையும் அவளிடம் வலுபெற்று இருந்தது. ஆபத்பாந்தவனாக அவளை காத்து அவள் செய்யவிருந்த பிழையை திருத்திய ஆண்மகனை எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது போகும்..??'

'ப்ரீத்திக்கும் அவனை பிடித்து இருந்தது'.

ஆனால் சுயநலமாக செயல்பட்டு, தன்னை போன்ற ஒருத்தியால் அவன் வாழ்வு கலங்க பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவன் சேலத்திற்கு அழைத்த போது நாதன், எழில் எத்தனை கூறியும் அவள் அன்னை ப்ரீத்தியின் காலிலேயே விழுந்த போதும் கூட விஷ்வாவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று அவனுக்காகவே பிடிவாதமாக செல்ல மறுத்திருந்தாள்.

"தன் போராட்டத்தில் காரணமே இல்லாமல் அவன் வாழ்வு சிக்கி சிதைந்து போவதை அவள் விரும்பவில்லை.

ப்ரீத்தியை பொறுத்தவரை அவள் கலங்கமானவள்..!!

ஒரு புறம் குழந்தையின் எதிர்காலம் அச்சுறுத்தினாலும் அவர்களை காப்பாற்றியதால் அவன் வாழ்வு அழிவதை அவளால் ஏற்றுகொள்ள முடியவில்லை... அவனுக்கு ஏற்ற துணை அவள் இல்லை, நிச்சயம் அவனுக்கு ஒரு நல்ல பெண் வாழ்க்கை துணையாக கிடைத்து அவன் வாழ்வு செம்மைபடவே விரும்பிய ப்ரீத்தி தன்னை பற்றி, குழந்தையை பற்றி கூட கவலை கொள்ளாமல் அவரை விவாகரத்து செய்து விடுகிறேன் விஷ்வாவை மற்றொரு திருமணம் செய்து கொள்ள சொல்லுங்கள்" என்று அவனுக்காக மற்றவர்களிடம் போராடினாள்.

ஆனால் அன்று ப்ரீத்தியின் முடிவை கேட்டவர்களுக்கு அவள் ஆங்காரத்தின் உச்சியில் பேசுவதாகவே பட்டது..!! ஒரு தாயாக தன் குழந்தை நலனை கூட பார்க்க மாட்டேன் என்கிறாளே என்று அலருக்கு கட்டுபடுத்த முடியாத கோபம் அதனாலே அவளை கடுமையாக பேசி இருப்பாள். ஆனால் இவை அனைத்திற்கும் பின் அவள் விஷ்வாவின் வாழ்வை மட்டுமே கருத்தில் கொண்டு இருந்தாள் என்பதை விஷ்வாவை தவிர யாருமே அறிந்து கொள்ளவில்லை என்பது தான் நிஜம்..!! அவள் மனம் அவன் நலனை நாடும் என்று புரிந்ததாலேயே விஷ்வா அவளை கட்டாயபடுத்தி அழைத்து வருவதற்கான முன்னேர்ப்படுகளை (வீடியோ) செய்து வைத்திருந்தான்


ஆனால் ப்ரீத்திக்கோ அதன் பின் விஷ்வா அவளிடம் நடந்து கொண்ட முறைகள் அவள் கனவிலும் எதிர்பாராதது அதிலும் பிரசவித்த தாய் என்றும் பாராமல் விஷ்வா அவளிடம் முறைகேடாக நடந்ததை எல்லாம் எந்த கணக்கில் சேர்க்க என்று யோசித்தவளுக்கு ஒருவேளை விஷ்வா அன்று சரணை அவள் கட்டாயபடுத்தியதை தனக்கு புரியவைக்கவே அவ்வாறு செய்திருக்கிறான் என்று அவன் தரப்பை யோசித்து சமாதானம் கொள்ள முயன்றாலும் அவள் முன் அவன் காட்டிய காணொளி விஷ்வரூபம் எடுத்து நின்றது.

"ஆம் அவள் குரலில் வேறு ஒருவரை பேச வைத்து அவளை பற்றி கேவலமாக சித்தரித்த வீடியோவை எப்படி யோசித்தும் அவளால் நல்ல முறையில் எடுக்க முடியவில்லை".

அந்த இடம் தான் விஷ்வா மீது அவளுக்கு இருந்த நன்மதிப்பு , மரியாதை எல்லாம் சரிந்து போய் அவன் மீதான அவள் கோபம் அதிகரிக்க காரணமாக அமைந்த இடம்.

விஷ்வா வீடியோவை காட்டிய போது கோபம் கொண்ட ப்ரீத்திக்கு நிச்சயம் அவன் அவளை பயமுறுத்தியது போல சமூக வலைதளங்களில் வெளியிடமாட்டான் என்ற நம்பிக்கை ஆரணியில் இருந்து சேலம் வரும்போதே அவளுக்கு ஏற்பட்டு இருந்தது..

இத்தனை நடந்த பிறகும் அத்தகைய நம்பிக்கை அவளுக்கு எப்படி ஏற்பட்டது என்பது ப்ரீத்திக்குமே ஆச்சர்யம் தான்..!! ஆனால் இருமாதங்களுக்கு முன் விஷ்வா அவளை அழைத்து வரும்போதே அவளுக்கு அந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தான் என்பது தான் நிதர்சனமான உண்மை..!!

ஆனால் அவளை அழைத்து வந்த அன்றே அதாவது குழந்தை பிறந்த இரண்டாவது நாள் இரவே முதலிரவிற்க்காக அறையை தயார் செய்து ஒரு பெண்ணாக அவள் உணர்வுகளை, நம்பிக்கையை கொன்று அவள் கோபத்தை வானளவு சம்பாதித்து இருந்தான் விஷ்வா.

அந்த இடத்தில் விஷ்வா பற்றி அவள் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும், நம்பிக்கையும் சுக்குநூறாக சிதறி போக பாவம் ப்ரீத்தி அங்கே முழுதாக உடைந்து போயிருந்தாள். உணர்ச்சி வேகத்தில் காதலின்றி அவன் ஆசைக்கு இணங்குவதாக வாக்கு கொடுத்து இந்த நொடி வரை அதை எண்ணி உயிரோடு மடிந்து கொண்டிருக்கிறாள்.

விஷ்வா பற்றிய அவள் புரிதல் இப்படி இருக்கையில் இங்கு வந்த பிறகு அவனை பற்றி மற்றவர்கள் கூறியதை கேட்டவளுக்கு மனம் முழுக்க சஞ்சலம்..!!

என்ன தான் கணவன் இல்லாமல் அவளால் தன்னிச்சியாக குழந்தையை வளர்க்கும் திடம் இருந்தாலும் குடும்பம் மட்டுமல்ல கணவன், குழந்தைகளுடனான மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதும் அவள் கனவுகளில் ஒன்று தான்.

மற்றவர்களிடம் அவனை பற்றி அவள் கேட்டது ஒன்று , அவனை பற்றி கண்கூடாக அவளே பார்த்தது வேறொன்று..!! இதில் எது நிஜம்..?? எது பொய்..?? என்ற கண்டுபிடிக்கவே முடியாத அளவு விஷ்வா அவளை குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தான்.

என்னதான் உறவுகளுக்காக இந்த முடிவு என்று வித்யாவிடம் கூறி இருந்தாலும் அவள் ஆழ்மனதில் வேரோடி போயிருக்கும் விஷ்வாவே அவள் முடிவிற்கான முழு முதற்காரணம் என்பதை ப்ரீத்தியே இன்னும் உணரவில்லை.

இப்போது அதை எல்லாம் நினைத்து பார்த்தவளுக்கு குழப்பமே மிஞ்சியது..!!

ஆனால் மனம் விட்டு பேசினால் தீராத பிரச்சனைகள் இல்லையே அதனால் விஷ்வாவிடம் பேச முடிவு எடுத்தவளுக்கு விஷ்வா அன்று இரவு நடந்து கொண்ட முறைக்கும், வீடியோவிற்கான சரியான விளக்கம் கொடுக்கையில் அவள் மனதில் இருக்கும் சிறு சஞ்சலமும், கசடும் விடை பெற்று அவனுடனான வாழ்க்கை இன்னுமே சிறப்பாக அமையும் என்று மனதார நம்பினாள்.

இப்போது அவள் முகத்தில் தெளிவு பிறக்க உடனே பூஜையறைக்கு ஓடி சென்றவள் கைகளை கூப்பி கண்களை மூடி நின்று மனதார விஷ்வாவை கணவனாக வரித்து அழுத்தமாக அவனை தன் நெஞ்சில் பதிய வைத்தவள் அவனுடனான வாழ்விற்கு தன்னை தயார் படுத்த தொடங்கி இருந்தாள்.

****


மேலும் ஒன்றரை மாதங்கள் கடந்த பிறகு :

'அத்தை' என்று அவர் அறை முன் சென்று நின்றாள் ப்ரீத்தி.

'உள்ள வாம்மா'

'என்ன விஷயம் ப்ரீத்தி..??' என்றார் துணிகளை அடுக்கியவாறே,

'அத்தை ஏன்..??' என்று ஆரம்பித்தவளுக்கு அவர் முடிவையே கேள்வி கேட்பதா..?? என்ற தயக்கம் மேலிட ஒரு நொடி நிதானித்து மனதினுள் வார்த்தைகளை கோர்த்து அவருடன் பேசுவதற்காக ஒத்திகை பார்த்து நின்றாள் ப்ரீத்தி.

அவளிடம் இருந்து சத்தம் வராமல் போகவும் திரும்பியவரோ 'சொல்லு ப்ரீத்தி' என்றார்.

குரலை செருமிக்கொண்டவள், 'அத்தை.. அவ.. அவரை வீட்டுக்கு வர சொல்லுங்க'

எவரை மா ..??

"உன்... உங்க பையனை"

'இவ்வளவு நடந்த பிறகும் என் பையனை வீட்டுக்குள் சேர்ப்பேன்னு எப்படி நம்புற..??' என்று கேட்கவும் அதிர்ந்து போனாள் ப்ரீத்தி.

'அத்தை ப்ளீஸ்.. அத்தை என்னோட தப்பு தான் அவர் தப்புக்கு காரணம் அப்படி பார்த்தா நீங்க என்னை தான் முதல்ல வீட்டை விட்டு அனுப்பி இருக்கணும் ஆனா எதுக்கு தேவை இல்லாம அவரை தண்டிக்கிறீங்க...??


அப்போ அவன் பண்ணினது தப்பில்லைன்னு சொல்ல வரியா..??

'என்னை பொறுத்த வரை தப்பு இல்லை அத்தை.., போதுமா..??' என்று அவள் அழுத்தம் திருத்தமாக கூற,

'அப்போ நீயே கூப்பிடு'

'நானா..??' என்றவளிடம் திகைப்பு

'ஆமா நீயேதான்..!! இதோ பார் ப்ரீத்தி நீ வேணும்ன்னா பெரிய மனசு பண்ணி என் பையனை மன்னிச்சு இருக்கலாம் ஆனா உன் அளவு எல்லாம் எனக்கு பெருந்தன்மை இல்லமா..!! என்னால என் பையனை மன்னிக்க முடியாது எனக்குன்னு சில ப்ரின்சிபல்ஸ் இருக்கு அதுல என் பையன் எப்படி இருக்கணும்னு நினைக்கிறேனோ அதன்படி அவன் இல்லை, என் பையனா இருக்க தகுதியை இழந்துட்டான். இனி வேணும்ன்னா உனக்கு புருஷனா இருந்துட்டு போகட்டும் நான் அதை தடுக்க மாட்டேன் உனக்கு வேணுமா நீயே அவனை கூப்பிட்டுக்கோ ஆனா இனி இந்த வீட்டுக்கு நானா அவனை கூப்பிட மாட்டேன்' என்று உறுதியாக கூறிவிட,

"அத்தை ப்ளீஸ் அத்தை எனக்காகவாது அவரை மன்னிச்சிடுங்க..!! என்னோட தப்பை சரி செய்ய போய் தானே அவர் தப்பு செய்ய வேண்டியதா போச்சு... எத்தனை முறை சொல்றது உங்க பையன் தப்பு செய்யறதுக்கான மூலகாரணம் நான் மட்டுமே.., என்னையே மன்னிச்சிட்டீங்க அவரை மன்னிக்க மாட்டிங்களா..??' என்றவளுக்கு தாய் மகன் பிரிய தான் காரணமாகி போனோமே என்ற குற்றஉணர்வு சில நாட்களாகவே அதிகரித்து இருந்தது.

இப்போதெல்லாம் அவள் மனம் முழுக்க வித்யா தேவ்வை எப்படி சேர்த்து வைப்பது என்ற எண்ணம் மட்டுமே..!!

'நாளைக்கு ஆதிரையன் இப்படி ஒரு தப்பை பண்ணிட்டு வந்தா நீ ஏத்துப்பியா ப்ரீத்தி..??'

'இல்லை' என்று உறுதியாக தலை அசைத்தாள்.

'உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா ப்ரீத்தி..??' என்று கேட்க அவள் மௌனித்து போனாள்.

ஒன்றரை மாதங்கள் கடந்த பிறகும் தேவ் வீடு வந்து சேரவில்லை அவனுக்கு அழைக்கவும் ப்ரீத்திக்கு பெரும் தயக்கம்.. கணவனாக மனதினுள் வரித்து கொண்டிருந்தாலும் எந்த கசடுகளும் தீர்க்கப்படாத நிலையில் இயல்பான மனைவியாக அவனை அழைத்து என்ன பேச..?? எப்படி பேச..?? என்று புரியாது குழம்பி போயிருந்தாள்.

பல விதமாக யோசித்து இரண்டு மூன்று முறை கைபேசியை எடுத்து விஷ்வா எண்ணை எடுத்தவள் அப்படியே வைத்துவிட்டு இறுதியில் அவன் நேரில் வரவும் பேசிக்கொள்ளலாம் என்று அவள் காத்து கொண்டிருக்க இத்தனை நாட்களாக அவன் வரவே இல்லை.. அதுதான் இப்போது அவளே துணிந்து வந்து வித்யாவை கேட்டுவிட்டாள்.

'இது அம்மா மனசு ப்ரீத்தி அவ்ளோ சீக்கிரம் சமாதானம் ஆகாது, அவனை ஏத்துக்காது விட்டுடு..!! நீயே போய் கூப்பிடு என்னை கட்டாயபடுத்தாத' என்றுவிட்டார்.

அவளோ அங்கிருந்து நகராமல் நின்றவள் , "அத்தை என்னால உங்களுக்கு கஷ்டம் வேண்டாம் எனக்காக அவரை மன்னிச்சிடுங்க..!! உங்களுக்கு அவர் மேல எவ்ளோ ப்ரியம்ன்னு எனக்கு தெரியும் ப்ளீஸ் அவரை கூப்பிடுங்க அவருக்கும் உங்க மேல பாசம் அதிகம் உங்களை பிரிஞ்சி எப்படி இருப்பாரு..??" என்று கேட்க

"நேத்து வந்த உனக்கு தெரியுது ஆனா அவனுக்கு நிஜமாவே என் மேல பாசம் இருந்திருந்தா இப்படி ஒரு தப்பை பண்ணி இருப்பானா ப்ரீத்தி..??" என்று கலங்கிய விழிகளுடன் கேட்டவர்

'இல்லமா முடியாது..!! இனி அவன இந்த வீட்டுக்கு வர சொல்லி நான் கூப்பிட மாட்டேனே தவிர அவன் வந்தா தடுக்க மாட்டேன்..வேணும்னா நீ கூப்பிடு..!!' என்று கூற

'நிஜமாவா அத்தை' என்று கேட்டவளின் முகத்தில் அத்தனை மலர்ச்சி..!!

'ஹ்ம்ம் கூப்பிடு' என்று அவர் கூற ப்ரீத்தியிடம் தயக்கம் கால்களை நகர்த்த முடியாமல் அங்கேயே தேங்கி நிற்க,

'என்ன ப்ரீத்தி'

"அதில்லை அத்தை ஆனா நான் எப்படி..? நான் கூப்பிட்டா வருவாங்களா..??"

"நீ தானே சொன்ன இப்போ இல்லனாலும் பின்னாடி காதல் வர வாய்ப்பு இருக்குன்னு..!! உனக்கு வந்தா மட்டும் போதுமா..?? அவனுக்கு வர வேண்டாமா...?? நீ இப்படி பேசாமயே இருந்தா அவனுக்கு எங்கிருந்து உன் மேல காதல் வரும்..?? இனி அவன் உனக்கு கணவன் மட்டுமே என் பிள்ளையாக முடியாது அப்போ நீ தான் கூப்பிடனும் போய் கால் பண்ணி வர சொல்லு" என்று அவர் அங்கிருந்து கிளம்ப,

'அத்தை அப்போ அவரை நீங்க மன்னிக்கவே மாட்டீங்களா..??'

அவரோ திரும்பி ப்ரீத்தியை அழுத்தமாக பார்த்தவர், 'இப்போ முடியாது ஆனா அவன் தப்பை உணர்ந்து உன்கிட்ட மன்னிப்பு கேட்டு உன்னை சந்தோஷமா வச்சிட்டு என் பேத்தியை எப்போ என் கையில கொடுக்குறானோ அப்போ அவனை மன்னிக்க வாய்ப்பு இருக்கு' என்று கூற விரிந்த விழிகளுடன் அவரை பார்த்த ப்ரீத்தி திகைத்து போனாள்.

இருவருக்கிடையில் இன்னும் எதுவுமே தீர்க்கபடாமல் இருக்கையில், அவனுக்கு தன்னை பிடிக்குமா..?? தன் மீது காதல் வருமா..?? தன்னை மனைவியாக ஏற்று கொள்வானா..?? என்றே தெரியாத நிலையில் அவர் கூறிய செய்தி ப்ரீத்தியை திகைக்க வைக்காமல் வேறு என்ன செய்யும்..??

வித்யாவோ அவள் நின்ற நிலையை கண்டு எழுந்த புன்னகையை இதழினுள் மறைத்தவர், 'என்ன ப்ரீத்தி உனக்கு நம்பிக்கை இருக்கா..??'

'எ..எதுக்கு அத்தை'

'உன் புருஷன் என் பேத்தியை கையில கொடுப்பான்னு உனக்கு நம்பிக்கை இருக்கான்னு கேட்டேன்'

அவர் கேட்கவும் அதிகரித்த இதயத்துடிப்பில் தவித்து பதிலளிக்க முடியாமல் அமைதி காத்தவள் சில நொடிகளுக்கு பின் 'நம்பிக்கை இருக்கு அத்தை' என்றாள் மெல்லிய குரலில் தலை குனிந்தவாறு.

"இது போதும் நீ தான் என் நம்பிக்கையே ப்ரீத்தி..!! " என்றவர்

'இன்னும் என்ன பார்த்துட்டு இருக்க போய் கால் பண்ணி கூப்பிடு' என்று வெளியே கிளம்பினார்.

அறைக்கு திரும்பியவள் பெரும் குழப்பத்துடனும் தயக்கத்துடனுமே விஷ்வாவிற்கு அழைக்க மறுபுறம் 'ஹலோ' என்ற அவனின் கம்பீர குரல்.

எப்போதும் தன்னை சீண்டும் விதமாகவே ஆரம்பிப்பவன் இன்று அமைதியாக 'ஹலோ' என்றதில் திணறி போனவளுக்கு 'என்ன பேசுவது..??' என்ற தயக்கம் மேலோங்க இதழ்களை கடித்து நின்றாள்.

'ஹ... ஹலோ.. தேவ்..!!'

'ஹாய் டார்லிங் என்ன அதிசயம் எனக்கு கால் பண்ணி இருக்க..??' என்றவனிடம் பல நாள் கழித்து அவளிடம் பேசும் உற்சாகம்.

'எப்படி இருக்கீங்க..??' என்றாள் மென்மையான குரலில்.

ப்ரீத்தி அவ்வாறு கேட்கவும் அவன் நெற்றி சுருங்கியது. அவள் குரல், வார்த்தை, பேசும் விதம் அனைத்தும் மாறி இருப்பதை உணர்ந்தவன் பதிலளிக்காமல் அமைதியாகி போக விஷ்வா முகத்தில் என்றும் இல்லாத இறுக்கம். புருவங்கள் முடிச்சிட எப்படி அவள் மாற்றம் சாத்தியம்..?? என்று யோசித்தவனின் மனம் இறுதியில் வித்யாவில் வந்து நிலைத்தது.

அவன் அத்தனை சொல்லியும் ப்ரீத்தி மனம் பற்றி யோசிக்காமல் இப்படி செய்திருக்கும் அன்னை மீது கோபம் முகிழ்த்தது.

'தேவ் கேட்குதா..?? எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்'.

முகம் இறுக அவள் கேள்விக்கு பதிலளிக்காது போனவன் குரலை செருமி,


"கனவெது !! நினைவெது !! கேட்கும் பொழுதிது
காமப் பசி வர அடங்காது
வலம் இது இடம் இது !! வாட்டும் கதை இது
தீண்டும் வரையிலும் விளங்காது
நடுங்கலாம் குளிர் வாடையில்
அடங்கலாம் ஒரு ஆடையில்
தயங்கலாம் இடைவேளையில்
உறங்கலாம் அதிகாலையில்
கூடலில் !! ஊடலில் !!
காணுகின்ற காதல், என்னிடம்

நான் தேடுகின்ற யாவும், உன்னிடம்"

என்று பாடலை முடிக்க அதுவரை அமைதி காத்த ப்ரீத்தியின் முகத்தில் உணர்வுகள் துடைக்கப்பட்டு இருந்தது.

பாடல் முடிக்கும் முன்னமே ஏதேனும் பேசுவாள் என்று அவன் எதிர்பார்த்து இருக்க அவள் அமைதியில் விஷ்வாவும் அவளே பேசட்டும் என்று அழுத்தமாக அமைதி காத்தான்.


ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு தன்னை சமன்படுத்தியவள் 'வீட்டுக்கு எப்போ வரீங்க..??' என்று அவள் கேட்டதும் தான் தாமதம்,

'சாரி டார்லிங் ஐ வாஸ் ஸ்டக் வித் வொர்க்... நீ காத்திருந்தியா..??' என்று கேட்க என்ன பதில் சொல்வது என்று புரியாமல் ப்ரீத்தி மெளனமாக நின்றாள்.

"ஊப்ஸ் நீ கேட்ட ரெண்டு மாசம் டைம் என்று ஒரு நொடி கண்களை மூடி திறந்தவன்.. டூ மந்த்ஸ் முடிஞ்சு அதுக்கும் மேலே நாள் ஆகிடுச்சில டார்லிங்.., நான் வராததால டிஸப்பாயின்ட் ஆகிட்டியா என்ன..??"

ப்ரீத்தி ஏதோ பதில் சொல்லும் முன் தொடர்ந்த விஷ்வா, " ரியலி சாரி பேபி வொர்க் டென்ஷன்ல மறந்தே போயிட்டேன்..., அப்போ திருவிழாவுக்கு நீ ரெடியா ஸ்வீட்டி ..??" என்றவனின் குரலில் என்றும் போல குழைவு இல்லை அத்தனை கடுமை..!!

ஆனால் ப்ரீத்தி இருந்த நிலையில் அதை கவனிக்க தவறி இருந்தாள்.

'தேவ் நீங்க வீட்டுக்கு வாங்க நாம பேசிக்கலாம்..'

'திருவிழாக்கு ரெடியா..??' அழுத்தமாக வந்து விழுந்தது அவன் வார்த்தைகள்.

'சாரி தேவ் யாருக்கும் சொல்ல மாட்டேன் சொன்னேன் ஆனா அத்தை கிட்ட எல்லாமே சொல்ல வேண்டிய சூழல், அவங்களுக்கு நம்மை பத்தி தெரிஞ்சிடுச்சி, உங்க கிட்ட பேசினாங்களா..??" என்ற கேள்வி அவளுக்கே அபத்தமாக தோன்ற நாக்கை கடித்தவள்,

'தேவ் ஒருவேளை அத்தை உங்ககிட்ட எது கேட்டாலும் என் மேல தான் தப்புன்னு சொல்லிடுங்க' என்று முயன்று வார்த்தைகளை தேர்ந்தெடுத்து அவள் பேச,

'ஆர் யு ரெடி..??' என்று பற்களுக்கு இடையில் அவன் வார்த்தையை துப்ப,

நெற்றியை பிடித்து கொண்ட ப்ரீத்தி 'நா.. நான் அத பத்தி உங்ககிட்ட பேசணும் ப்ளீஸ் வீட்டுக்கு வாங்க எல்லோரும் காத்திருக்கோம்' என்றவளுக்கு எப்படியாவது அவன் வீட்டில் அவன் பெற்றோருடன் அவனை சேர்த்து விடும் வேகம்.

'ஆன்சர் மை குவெஸ்டீன் டார்லிங்..!!' என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.

'தேவ் ப்ளீஸ் கம் ஹோம்'

அவ்வளவுதான் விஷ்வா பொறுமை இழந்துவிட்டான்.

'தேவ்'

'தேவ்'

'இருக்கீங்களா..??'

விழிகள் சிவந்திருந்தவன் மீண்டும் பாடலை பாட தொடங்கி விட்டான்...


"முடி தொட முகம் தொட மோகம் முழ்கிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
உருகிட உருகிட ஏக்கம் உருகிட
கூடும் அனல் இது குளிர் வீசும்
குலுங்கினேன் உடல் கூசிட

கிறங்கினேன் விரல் மேய்ந்திட"

இப்போது அவன் குரலில் அத்தனை காரம் தெரித்தது.


"மயங்கினேன் சுகம் சேர்ந்திட
தழும்பினேன் எனை நீ தொட...
பாய்ந்.."


என்றவன் பாடலை நிறைவு செய்யும் முன்னமே கண்களை இறுக மூடி நின்ற ப்ரீத்தி, "ஒகே ஓகே தேவ் பட் ப்ளீஸ் வீட்டுக்கு வாங்க" என்றவளின் குரலில் பெரும் மாற்றம்.

'எதுக்கு இந்த ஓகே..??' அப்போதும் அவளை விடவில்லை.

'நீங்க கேட்டதுக்கு'

மூச்சை இழுத்து இதழ்களை குவித்து வெளியேற்றியவன் 'பைன் திருவிழாக்கு ஏற்ப்பாடு பண்ணு' என்றவன் அங்கு அவன் இருக்க போகும் தேதியையும் கூறி கைபேசியை அணைத்து கட்டிலில் வேகமாக வீசி இருந்தான்.

அத்தனை கோபம் ப்ரீத்தி மீது..!!

ஆம் இப்போது அவன் கோபம் தாயிடம் இருந்து மனைவியின் புறம் திரும்பிவிட்டது. காதலை பிச்சையாக பெறுவதில் துளி விருப்பம் இல்லாதவனுக்கு ஒரே மாதத்தில் ப்ரீத்தியின் மாற்றம் எரிச்சலை உண்டாக்கியது.

அவளே அவனை உணர்ந்து அவன் கரம் சேர வேண்டும் என்று விஷ்வா தவித்து கொண்டிருக்கையில், அவன் ஏக்கம், விருப்பம் யாவும் அவன் கண் முன் தவிடு பொடியாகி போனதில் ஏக கோபம்.

கரங்களை பின்னே கட்டி கொண்டு அறையில் இங்கும் அங்கும் நடந்தவன் முகத்தில் அடுத்து என்ன..?? என்ற தீவிரம்.

மறுபுறம் இங்கு கைபேசியை அணைத்த ப்ரீத்தி தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள். அவனிடம் பேசி கசடை நீக்கி புரிதலோடு வாழ்வை துவங்க அவள் துடித்து கொண்டிருக்கையில் அவனோ எதற்கும் வழி வகுக்காமல் அவளுடன் கலந்துவிட துடித்து கொண்டிருக்கிறான்.

'என்ன செய்வது..??'

கணவன் தான், ஒத்த ரசனை கொண்டிருப்பவர்கள் தான் மறுப்பதற்கு இல்லை ஆனால் இயல்பான பேச்சு, புரிதல் என்பது இதுவரை இருவரிடையே இருந்தது இல்லையே..!! அப்படி இருக்கையில் உடனே எங்கனம் அவளும் அவனை ஏற்க..??

விஷ்வாவின் பிடிவாத குணம் பற்றி வசுந்தர கூறி பல முறை கேட்டு இருக்கிறாள் ஆனால் இப்போது தான் முதல் முறை நேரில் பார்க்கிறாள். இன்றும் அவன் பாடிய பாடலை கேட்க முடியாமல் கண்களை இறுக மூடி காதலிருந்து கைபேசியை எடுத்து விட்டவளுக்கு அவனை நேரில் எதிர்கொள்ளும் போது என்ன செய்ய போகிறோம் என்ற பதட்டம்.

இதுநாள் வரை வித்யாவை பார்த்து நிதானத்தை கடைபிடிக்க கற்று கொண்டு இருப்பவளுக்கு எப்படி அவனிடம் தன் தரப்பை அவன் காயப்படாத வண்ணம் பொறுமையாக எடுத்து கூறுவது, அவனுடனான தனிமையை எவ்வாறு கையாள்வது என்று யோசித்தே களைத்து போனாள்.

அரை மணி நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் ஒரு கட்டத்தில் எப்படியோ முதலில் அவன் வீடு வந்து சேர்ந்தால் போதும் பின் நிதானமாக பேசி தீர்க்கலாம் என்ற முடிவுடன் எழுந்து சென்றாள்.

இதனால் தான்..!! தான் நினைத்ததை நடத்தி முடிக்கும் குணம் கொண்ட மகனின் இந்த பிடிவாதத்தை நன்கு அறிந்ததால் தான் வித்யாதேவி மகன் அவன் வாழ்க்கை குறித்து ஒரு முடிவு எடுத்த பின் அவர் எத்தனை விதமாக பேசினாலும் அவனை மாற்ற முடியாது என்று தெரிந்து மருமகள் மூலமாக காய் நகர்த்தி இருவரின் வாழ்வை உறுதி படுத்தி இருந்தார்.

ஆனால் தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி அல்லவா..?? இதோ அவர் திட்டத்தை முறியடிக்க விஷ்வா வேறு திட்டத்தோடு கிளம்பி இந்தியா வந்திறங்கினான்.
Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top