"சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!" - 41

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
ஒவ்வொறு செயலையும் நுட்பமாக
பார்த்து உள்வாங்கி இன்று இந்த இடத்தில் பிரீத்தி நிற்க வைத்து
கேள்வி கேட்டு
குற்ற உணர்வில் இருந்து
காப்பாற்றி...
குழந்தை எதிர்காலம் பற்றி பேசி
குறிப்பாக அவளின் எதிர்காலமும்....
ஆளுமை வித்யாதேவி....அபாரம்
எழில்.....wow..... எங்க தல சூப்பர்
 

Priyaasai

Active Member
View attachment 11114

'பீலிங் பெட்டர்' என்று வித்யாதேவி கேட்கவுமே 'ஆம்' என்று தலை அசைத்த ப்ரீத்தியின் முகத்தில் இன்னும் அச்சமும் குழப்பமும் அகலாத நிலை..!!

அதை கண்ட வித்யா அவளிடம், "போதும்ன்னு நினைக்கிறேன் லெட்ஸ் பினிஷ் தி கேம் ப்ரீத்தி" என்று கூற,

'என்ன கேம்' என்று புரியாமல் அவரை பார்த்தவள் 'என்.. என்ன கேம் ஆன்டி' என்று கேட்கவும் தான் சற்று முன் அவளை மேடைக்கு அழைத்தது நினைவில் எழ பதைபதைத்து போனாள்.

"எத்தனை பெரிய முடிவு..!! இங்கு வந்து இருந்த இந்த சொற்ப மாதங்களிலேயே அவர்கள் குடும்ப பாரம்பரியம், அந்தஸ்து, செல்வாக்கு , மரியாதை குறித்து நன்கு புரிந்து வைத்திருப்பவளுக்கு அவர்களின் இம்முடிவு பேரதிர்ச்சியே..!! தன்னை பற்றி எதுவும் தெரியாமல் வீட்டு மருமகள் என்ற ஒரு தகுதியை வைத்து அவர்கள் சாம்ராஜ்யத்திற்கு தலைமை ஏற்க அழைப்பது எந்த விதத்திலும் நியாயமே இல்லை ஆனாலும் ஏன் இப்படி ஒரு முடிவு..?? எதற்காக இத்தனை அவசரமாக..?? என்ற கேள்விகள் அவளது குற்றஉணர்ச்சியை அதிகரிக்க இப்போது இத்தனை பேர் எதிரில் மீடியாவின் முன்னிலையில் அவர்கள் அறிவித்து விட்டபின்னர் இதை மறுக்கவும் முடியாத நிலையில் தான் நிறுத்த பட்டிருப்பது நன்கு புரிந்தது.

ஒருவேளை முன்னமே அவளுக்கு வித்யாவின் முடிவு தெரிய வந்திருந்தால் நிச்சயம் இதை தடுத்திருப்பாள் ஆனால் இப்போது எப்படி இதை ஏற்க என்ற எண்ணமே அவளை சிறுக சிறுக உடைத்து கொண்டிருந்தது. இன்னும் தன்னை குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாத நிலையில் பொய்யாக ஒரு வாழ்வை ஏற்கவும் தயாராக இல்லை அதற்காக அவளின் தகுதிக்கு அதிகப்படியான பொறுப்பிற்கும் அவள் தயாராக இல்லை. சத்தியமாக இச்சூழலை எவ்வாறு கையாள என்று புரியாமல் மனமெங்கும் கூடிப்போன பாரத்துடன் 'கடவுளே' என்று தலையை பிடித்து கொண்டு அமர்ந்தவள் உள்ளுக்குள் மேலும் சுக்கு நூறாக உடைந்து போனாள்.

முதலில் அவளையும் குழந்தையையும் இப்படி அனைவர் முன்னிலையில் அறிமுகபடுத்துவார்கள் என்பதையே எதிர்பாராது போனவளுக்கு அவர்களின் அடுத்த அறிவிப்பு வேப்பங்காயாக கசந்து போனது. போதும் இத்துடன் எல்லாம் செய்த பாவத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் பிராயச்சித்தம் செய்து வாழ்நாளை குழந்தையோடு கழிக்கும் முடிவோடு ஒதுங்கி போக இருந்தவளை அவள் சம்மதமே இல்லாமல் இங்கு இழுத்து வந்தவன் இப்போதும் அவளுக்கு துணை நிற்காமல் போனதில் விஷ்வா மீது ஏக கோபம் முகிழ்த்தது.

எத்தனை நேரம் அவ்வாறு அமர்ந்திருந்தாலோ ஒரு கட்டத்தில் முகத்தை அழுந்த துடைத்து வித்யாவை எறிட்டவள், "சாரி ஆன்டி நா.. நான் வேணும்ன்னு எதுவும் பண்ணலை ஐ ... ஐ டிட்ன்ட் எக்ஸ்பெக்ட்..!! ஆனா ஏன் ஆன்டி இப்படி ஒரு டிசிஷன்..?? ப்ளீஸ் ஆன்டி ஐ பெக் யு வெளி.., வெளியே நீங்.. நீங்க சொன்னதை ஐ மீன் நான் என்..னை.. என்னை..." என்றவளுக்கு அதிர்ச்சியில் மீண்டும் வியர்க்க தொடங்க,

"சாரி ஆன்டி என்னால முடியாது நா.. நான் நான் ஒரு அசிங்கம் எனக்கு போய் நீங்க இது தப்பு..!! ப்ளீஸ் ஸ்டாப் பண்ணுங்க உங்களை எதிர்த்து பேசுறதா நினைக்காதீங்க ஆனா இது நடக்க கூடாது என்னால இனியும் யாருக்கும் கஷ்டம் கொடுக்க முடியாது. ஆனா இப்படி ஒரு இடத்துல உங்களை மறுக்கிற கொடுமை அமையும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.., நீங்க நினைக்கிற மாதிரி நான் இல்லை இந்.. இந்த என்று மூச்சை ஆழ்ந்து எடுத்தவள் இந்த குடும்பத்துக்கு என்னால அவமரியாதை தேடி தர முடியாது ஆன்டி போதும் எல்லாமே போதும் உங்களுக்கெல்லாம் உண்மை தெரியாது, ஒருவேளை இது நடந்த பிறகு உங்களுக்கு தெரிஞ்சா உங்களோட முடிவை எண்ணி நீங்களே ரொம்ப வருத்தபடுவீங்க" என்று அவர் முன் இருகரங்களையும் கூப்பியவள்,

"ப்ளீஸ் பார் காட் சேக் இதை எல்லாம் ஸ்டாப் பண்ணுங்க" என்று திக்கி திணறி ஒருவழியாக கோர்வை இன்றி அவள் நினைத்தை ப்ரீத்தி கூறி முடிக்க அங்கு கனத்த மௌனம்.

அறையின் வாயிலை அடைத்து கொண்டு நின்றிருந்த வித்யா தேவி மெல்ல அடிகள் எடுத்து வைத்து அவள் முன் வந்து நின்றவர், "நீ யாருன்னு தெரியாமையா உன்னை இத்தனை நாள் என் வீட்ல வச்சி இருக்கேன்னு நினைக்கிற ப்ரீத்தி..??" என்று அழுத்தமான குரலில் கேட்க ப்ரீத்தியின் விழிகள் அதிர்ச்சியில் நிலை குத்தி போனது.

"சரி எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் முதல்ல வா உனக்காக எல்லாரும் காத்திருக்காங்க.. முதல்ல சைன் பண்ணு அப்புறம் டாக்டர்ஸ் கூட சின்ன மீட் இருக்.." என்றவர் முடிக்கும் முன்னமே 'நோஓஒ' என்று உரக்க கத்தி இருந்தாள் ப்ரீத்தி.

"நோ ஆன்டி நோ ப்ளீஸ் என்னை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு..?? உங்க பையன் கொண்டு வந்து உங்க முன்னாடி நிறுத்திட்டதால நான் என்று தன்னை சுட்டி கான்பித்தவளுக்கு கண்ணீர் அதிகரிக்க விம்மியவாறே அவரிடம் ப்ளீஸ் என்னை பத்தி ஏதோ த..ப்..பா தப்பா தெரிஞ்சி வச்சி இருக்கீங்க நினைக்கிறேன் இல்லன்னா இந்த.." என்றவளை இடை நிறுத்தியவர்,

"இப்போ நாம கொஞ்சம் வெளிப்படையா பேசலாமா ப்ரீத்தி அதுக்கான நேரம் வந்துடுச்சின்னு நினைக்கிறன்" என்று கேட்க,

'ஆன்டி' என்று சட்டென நிமிர்ந்து அவரை பார்த்தவளிடம் உட்சபட்ச அதிர்வு

அவள் அதிர்ச்சியை சிறு புன்னகை மூலம் அங்கீகரித்தவர் "என் பையனுக்கும் உனக்கும் என்னமா சமந்தம்..??" என்று கூர்மையாக அவர் வார்த்தைகள் வந்து விழ ஸ்தம்பித்து போனாள் ப்ரீத்தி.

மெளனமாக சில நொடிகள் அவரை வெறித்தவள் தன் பதிலுக்காக அவர் காத்திருப்பதை கண்டு, ' நா.. நான் நா அவர் ' என்றவளுக்கு பேச்சு எழாமல் போக

'சொல்லுமா' என்றவரின் பார்வையே உன்னை நான் அறிவேன் என்பதாக இருக்க அதை உணராத ப்ரீத்தி,

'நா... நான் வை..' என்று ஆரம்பிக்கவுமே அவளை தடுத்து நிறுத்தியவர்

"உன் கழுத்துல என் பையன் தாலி கட்டினதால நீ அவனுக்கு வைப்ன்னு எனக்கு நல்லா தெரியும் அதே சமயம் என் கேள்வி அது கிடையாது..!! என்னோட கேள்வி என்னன்னு புரியாத ஆள் நீ இல்லைன்னும் எனக்கு தெரியும் சோ திரும்ப அவனோட வைப், குழந்தைக்கு அம்மா இப்படி எதுவும் சொல்லி நேரத்தை கடத்தாம உனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் சொல்லு" என்றார்.

இரு மாதங்களுக்கு முன்புவரை அவன் யாரோ அவள் யாரோ அடிப்படை புரிதலோ, காதலோ, நம்பிக்கையோ இல்லாத இந்த உறவை பற்றி அவளும் என்னவென்று சொல்வாள்..?? நடுங்கிய இதழ்களை பற்கள் கொண்டு சிறைபிடித்து தன் நடுக்கத்தை குறைக்க முற்பட்டவளுக்கு இப்போது என்ன பதில் சொல்வது, அதிலும் விஷ்வாவிடம் யாரிடமும் உண்மையை கூற மாட்டேன் என்று வாக்கு கொடுத்து இருப்பவளுக்கு இப்போதைய இவர் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்ற தவிப்பு..!!

நேரம் ஆக ஆக மனதில் சொல்லில் அடங்கா சஞ்சலம் மூண்டு ப்ரீத்தியின் தவிப்பு அதிகரிக்க ஒரு கட்டத்தில் ப்ரீத்தியையும் அறியாமல் கண்ணீர் உடைபெடுக்க தொடங்கி விட்டது... எத்தனையோ சூழலை அழகாக வடிவமைத்து அதில் பலரை கைதியாக்கி தன் காரியத்தில் வெற்றி அடைந்தவளுக்கு இப்போது தானே சூழ்நிலை கைதியாய் நிறுத்தப்பட்ட நிலையில் செய்வதறியாத கையறு நிலையில் நின்றிருந்தால்.

' சொல்லுமா ' என்ற வித்யாதேவியின் குரல் திடுமென ஒலிக்க அதில் அவள் உடல் ஒரு நொடி அதிர்ந்து அடங்கியது.

'ஆன்டி' என்று அவரை பார்த்தவள் "ப்ளீஸ் என்.. என்னை எதுவும் கேட்காதீங்க என்னால எதுக்கும்..." என்று கண்களை துடைத்து கொண்டவள் "நா... நாங்க ரெண்டு பேரும்" என்று தொடங்கியவளுக்கு வித்யாவின் கண்களை பார்த்து பொய் சொல்லும் தைரியம் இல்லாமல் போக அப்படியே நிறுத்தி இதழ்கள் துடிக்க அவரை பார்த்தாள்.

***

"என்ன நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்ன்னு சொல்ல வந்தியா..??" என்று கேட்க பிரீத்தியிடம் கனத்த மௌனம்..!! அதை அமோதிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை.

'ப்ரீத்தி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..??' என்று அவளருகே அமர்ந்து கேட்க

பக்கவாட்டில் திரும்பி அவரை பார்த்தவள், 'எ.. என்.. ன ஆன்டி' என்று திணற,

"ஆன்டி இல்ல அத்தை..!! ஒருவேளை என் பையனை நீ லவ் பண்ணது நிஜமா இருந்தா நீ இந்த வீட்டுக்கு வந்த போது உங்களுக்குள்ள என்ன பிரச்சனை இருந்திருந்தாலும் என்னை அத்தைன்னு கூப்பிட்டு இருப்ப.., ஏன்னா எத்தனை தான் இங்க்லீஷ் பேசினாலும் வெளி நாட்டில் சுத்தினாலும் என் பையனுக்கு அப்பாவை அப்பான்னும் அம்மாவை அம்மானும் கூப்பிடறதுல தான் இஷ்டம்.., நாகரீக மாற்றத்தால என்னை மம்மின்னு கூப்பிடாதவன் அவனோட பிரெண்ட்ஸ் கூட எங்களை அம்மா அப்பான்னு கூப்பிடறதை தான் விரும்புவான்., பிரெண்ட்ஸ்சே அப்படின்னா அவனில் சரிபாதியான நீ எப்படின்னு யோசிச்சிக்கோ..!!" என்று அவர் கூறும்போதே அன்னிச்சையாக எழுந்து நின்ற ப்ரீத்தியின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

" உனக்கும் என் பையனுக்கும் பல வருஷ காதலால புரிதல் இருந்திருந்தா வந்த அன்னைக்கே அவனோடவே அவன் ரூம்க்கு போயிருப்ப ஆனா நீ போகலை அட்லீஸ்ட் நான் வந்து சொன்ன பிறகாவது போனியா இல்லையே எப்படி எல்லாம் அவன் ரூம்க்கு போறதை தவிர்க்க பார்த்த அப்புறம் பெரும் யோசனைக்கு அப்புறம் அவன் ரூம்க்கு போன என்று அவளை கூர்மையாக பார்க்க ப்ரீதியால் அவர் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்தாள்.

"அடுத்து என் பையனும் நீயும் வருஷக்கணக்கா லவ் பண்ணி இருந்து என்னை பத்தி பேசி இருந்தா எம்பிஏ முடிச்சி இருக்க என்னை பார்த்து நான் டாக்டரான்னு கேட்டு இருக்க மாட்ட.., அடுத்து அவன் எங்க போயிருக்கான்னு தெரியாம ஹாஸ்பிட்டல் போயிருக்கான்னு என்கிட்ட சமாளிச்சி இருக்க மாட்ட முக்கியமான விஷயம் என்னதான் ரெண்டு பேருக்கு நடுவுல பிரச்சனை இருந்தாலும் அவனை பத்தின நினைப்பே இல்லாம இருந்திருக்க மாட்ட இதோ இப்போ ஹாஸ்பிட்டல் பொறுப்பை ஏத்துக்க சொன்னா அதை எதிர்பார்க்காம மயங்கி விழுந்திருக்க மாட்ட இதெல்லாம் போதுமே உனக்கும் என் பையனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு புரிஞ்சிக்க..!!" என்று கூறவும் தான் அவள் எத்தனை சொதப்பி அவளை கண்டுகொள்வதற்கான வாய்ப்பை அவருக்கு அளித்திருக்கிறாள் என்பதே புரிந்தது.

'உன்னை பத்தின இந்த உண்மை போதுமா..?? இப்போ வந்து சைன் பண்றியா..??' என்று கேட்க

தனக்கும் அவர் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிந்த பின்னரும் அவளை அங்கீகரித்து இருக்கும் அவர் அன்பின் முன்னால் கூனி குறுகி நின்ற ப்ரீத்தி இதழ்களை அழுந்த மடித்து தன் கேவலை கட்டுபடுத்தியவாறு 'இல்லை' என்று தலை அசைத்தவள் அவர் முன் மண்டியிட்டு அவர் கரம் பற்றி தன் நெஞ்சோடு சேர்த்து பிடித்தாள்.

ததும்பி நிற்கும் அவர் அன்பின் முன்னால் புன்னகையை கூட நடிப்பிற்காக கொண்டு வர முடியாத நிலையில் அவரிடம் இனியும் உண்மையை மறைக்க முடியாது என்று அவர் முகத்தை பார்த்தவள்,

"இல்ல ஆன்டி உங்களுக்கு எல்லாம் தெரியாத பல உண்மைகள் இருக்கு என்றவள் நான் ப்ரீத்தின்னு உங்களுக்கு தெரியும் ஆனா இந்த ப்ரீத்தி என்று ஆரம்பித்தவள் அறியா வயதில் காதல் என்ற பெயரில் பிரகாசத்தால் அவள் தாய் வஞ்சிக்கபட்டதில் தொடங்கி அவனால் ப்ரீத்தி புறக்கணிக்கப்பட்டது அவன் பெயரை உபயோகிக்க முடியாமல் உயிர் பயம் கொண்டு மறைந்து வாழ்ந்தது பார்வதியால் கிடைத்த கல்வி முதற்கொண்டு இத்தனை நாட்கள் பிரகாசத்திற்கு எதிராக அவள் மேற்கொண்ட உக்கிரமான போர் அதன் உக்திகள், குழந்தையை அடிப்படையாக கொண்டு அவனை கருவறுக்க நினைத்தது. அதனால் பாதிக்க பட்டவர்கள் என்று குழந்தை, சரண், கீர்த்தி, நாதன், தீபிகா என்று அனைவரையும் பற்றி கூறி முடித்திட வித்யாதேவியின் பார்வை அவள் மீது இன்னும் கூர்மையாக படிந்தது.

"எங்குமே தான் செய்த தவறை நியாயபடுத்தியோ அல்லது அவள் தரப்பை வித்யா ஏற்று கொள்ளும் விதமாக எந்த வித ஏற்ற இரக்கமோ இல்லாமல் உள்ளதை உள்ளபடி நடந்தததை நடந்த படி அவள் கூறிய விதம் நிச்சயமாக வித்யாவிடம் பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தது. எங்குமே தன் எதிர்காலம் குறித்த சிந்தனை இல்லாமல் தன் வாழ்வை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பின்றி தன் தவறுகளை அவள் பட்டியல் போட்டதிலேயே வித்யாதேவிக்கு அவள் குணம் புரிந்தது".

இதே அவளிடத்தில் வேறு யாராவது இருந்தால் முழுக்க முழக்க சுயநலமாக செயல்பட்டு மொத்த பழியையும் பிரகாசத்தின் மீது போட்டு தன்னை நிரபராதியாக காட்டி இருப்பர் ஆனால் ப்ரீத்தி அவ்வாறு செய்யாமல் தான் பிரகாசத்திடம் செல்லும் முன்னர் போட்ட கணக்குகள் ஆனால் அதன் பின்பான சூழல் எவ்வாறு அவளை தன் முடிவை மாற்ற வைத்தது என்று கூறியவள் அது அவள் வரையில் சரி என்று அந்த நேரம் தோன்றி இருந்தாலும் அது மிகப்பெரிய தவறு என்று உரைத்தவள் இறுதியாக தான் மேற்கொண்ட போரில் குழந்தையை ஆயுதமாக்க நினைத்தது எத்தனை பெரிய முட்டாள் தனம் என்று ஒத்துக்கொள்ள வித்யாதேவி அவளை அதிசயித்து தான் பார்த்தார்.

அனைத்தையும் கூறி முடித்தவளிடம் எல்லை இல்லா நிம்மதி.., அதே சமயம் சரண் கீர்த்தியின் முகம் மனதில் எழ மனமெங்கும் வலி பரவி அதிகரிக்க கண்ணீருடன் அவரிடம்,

"நான் யார் என்னன்னு உங்ககிட்ட சொல்லிட்டேன் இதுக்கு மேல நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் ஆனால் இனிமேலும் உண்மையை மறைச்சி உங்களை எல்லாம் ஏமாத்தி என்னால இருக்க முடியும்ன்னு தோணலை என் மனசாட்சி என்னை கேள்வி கேட்குது..!! ஆமா நான் பொய் சொல்லி இருக்கேன் ஏமாத்தி இருக்கேன் அது எல்லாம் நான் பிறக்க காரணமானவனை அழிக்கிரதுக்காக ஆனா அது என்னோட குணம் இல்லை அதுலயும் என்மேல மலையளவு நம்பிக்கை வச்சி இருக்க உங்க கிட்ட பொய் சொல்றதுன்னு இல்லை என்னால உண்மையையும் மறைச்சி இருக்க முடியலை" என்று கண்ணீரை துடைத்தவள்

"ஆன்டி என்னால, என்னோட ஆக்ரோஷத்தால, தப்பு பண்ணவனை தண்டிக்க போய் எக்கசெக்கமான பேரை தண்டிச்சிடேன் அதுலயும் ரெண்டு பேர் வாழ்க்கையை சின்னாபின்னம் ஆக்கிட்டேன் அவங்க காதலையும் எதிர்கால வாழ்க்கையையும் தொலைச்சிட்டு இருக்கும் போது என்னால சுயநலமா இருக்க முடியலை ஆன்டி என் குழந்தை எதிர்காலம் என்னன்னு புரியாம இருந்தபோ நான் தவிச்சதை விட அடுத்தவர்களை கஷ்டப்பட வச்சிட்டு நான் மட்டும் சுயநலமா இருக்கேனோன்னு தோணுது. எனக்கே என்னை பிடிக்கலை இப்படி ஒரு அவஸ்த்தைக்கு பேசாம செத்திடலாம்ன்னு தோணுது.., இது உங்களுக்கு சுயநலமா தோணலாம் ஆனா சரண் கீர்த்தி சந்தோஷமா இல்லாத வரை என்னால நிம்மதியா மூச்சு கூட விட முடியாது எது யாருக்கும் புரியலை" என்று முடிக்க வித்யாவிடம் எந்த அசைவும் இல்லை.

அவளையே வைத்த கண் எடுக்காமல் மெளனமாக பார்த்திருந்த வித்யா முதல் முறை தன் மௌனத்தை உடைத்து அவளிடம் ,"உன்னால அதிகமா காயப்பட்டது சரண் கீர்தின்னு நினைக்கிறியா..??" என்று கேட்க

'ஆம்' என்ற தலை அசைப்பு அவளிடம்

'இல்லை' என்று தீர்க்கமாக கூறியவர் உன்னால எந்த தப்புமே செய்யாம இந்த பூமிக்கு வந்திருக்க குழந்தை தான் அதிகமா காயப்பட்டது இனியும் காயபடபோறது என்று கூற ப்ரீத்தியின் உடலில் மெல்லிய நடுக்கம்.

***

அவள் நடுக்கத்தை கண்டுகொண்ட வித்யா தொடர்ந்து, "சரண் கீர்த்தி காயபட்டாங்க இல்லைன்னு சொல்லல ஆனா அவங்க ரெண்டு பேரும் யாரோ கிடையாது நல்ல புரிதலோட இருந்த காதலர்கள் இன்னைக்கு உன்னால் ஒரு பிரிவு, விரிசல் அவங்களுக்கு நடுவுல ஏற்பட்டது உண்மையா இருக்கலாம்.., ஆனா இதுவே காலம் முழுக்க நீடிக்கும்ன்னு எப்படி நம்புற..??" என்று கேட்க இத்தனை நாள் குற்ற உணர்வில் அவதி பட்டுக்கொண்டு இருந்தவளுக்கு அப்போது தான் இப்படியான ஒரு கோணம் இருப்பதே புரிந்தது.

ஆம் வித்யாவின் வார்த்தைகள் எத்தனை நிஜம்..!! உண்மை காதல் என்றுமே தோற்று போகாதே என்ற உண்மை புரிய அவள் இதழ்கள் புன்னகையில் துடித்தது.

"இன்னைக்கு இல்லைனாலும் காலம் அவங்களோட காயத்தை சீக்கிரமாவே ஆற்றிடும். இத்தனை தடைகளை தாண்டி திருமண பந்தத்தில் சேர்ந்திருக்கும் அவங்களை நிச்சயம் அவங்களோட காதலே கூடிய சீக்கிரம் சேர்த்து வச்சிடும். ஆனா குழந்தை அப்படி இல்லையே..?? உனக்கு வித்யாசம் புரியுதா ப்ரீத்தி..??" என்று கேட்ட அவர் வார்த்ததைகளில் இருந்த உண்மை அவள் மனதை பொசுக்க இதழ்களை நிறைக்க தொடங்கிய புன்னகை வந்த சுவடே தெரியாமல் காணமல் போனது.

"எப்போ நீ அவங்களுக்கு செய்த குற்றத்தை உணர்ந்து அதுக்கான பிரயாச்சித்தத்தை தேடுறியோ அப்போவோ உன்னோட குற்றம் மன்னிக்கபட்டதுன்னு அர்த்தம்மா . எத்தனையோ பேர் செய்த தப்பை மறைச்சு தண்டனையில் இருந்து தப்பிக்க தான் பார்ப்பாங்க ஆனா நீ செய்த தப்புக்காக உன்னோட வாழ்க்கையோட சேர்த்து குழந்தை வாழ்க்கையையும் பணயம் வச்சி இருக்க..!! உன்னை புத்திசாலின்னு நெனச்சேன் ப்ரீத்தி ஆனா இன்னுமா இந்த தப்பை நீ உணரலை..?? இந்த தப்புக்கு எப்படி பிராயச்சித்தம் தேட போற..??" என்று நெற்றி பொட்டில் அறைந்தார் போல அவர் கேட்கவும் ப்ரீத்தி வெலவெலத்து போனால்.

தன்னால் பூமியில் ஜனித்த ஜீவனை அதற்குண்டான உரிமைகளை மறுத்து கேள்வி எழுப்ப தெரியாது என்ற காரணத்தால் அதை "டேக் இட் பார் கிராண்டட்டாக" எடுத்து விட்டோமா..?? என்ற உண்மை அவள் கழுத்தை நெருக்கி பிடிக்க மூச்சு விடவும் தவித்து போனால்.

எப்படி என் குழந்தையை மறந்தேன் நான்..!! வித்யாதேவி சொல்வது போல சரண் கீர்த்தியை விடவும் அவளால் மோசமாக பாதிக்கபட்டிருப்பது குழந்தை தானே..!! அவர் கூறுவது போல நிச்சயம் சரணால் கீர்த்தியை அதிக நாட்களுக்கு புறக்கணிக்க முடியாது அவள் தூர இருந்த போதே அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து செய்தவன் இப்போது அருகே இருக்கையில் மட்டும் எப்படி தண்டிப்பான் என்ற அடிப்படையை கூட புரிந்து கொள்ள முடியாத முட்டாளாக இருந்திருக்கிரோமே என்ற உண்மை அவளை பலமாக தாக்க செயலற்று போனால்.

குழந்தைக்கு தந்தையின் இனிஷியல் கூட தேவை இல்லை என்ற முடிவை தானே அவள் முதலில் எடுத்தால் இப்போது கூட சரண் கீர்திக்காக தண்டனை ஏற்கும் நோக்கத்தில் விஷ்வாவுடன் தன்னை பிணைக்க துணிந்தவலுக்கு அதன் பின்பு குழந்தையோடு அவனிடம் இருந்து தூரமாக சென்று விட வேண்டும் என்ற முடிவில் தானே இருந்தால் என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் உயிரும் உணர்வுமுள்ள குழந்தையை அதன் வாழ்வின் அடிப்படையை மறுத்து கொண்டிருக்கிறேன் நான் என்ன தாய்..??

அத்தனை பெரிய சுயநல பிசாசா தான் என்ற கேள்வியை அவளுக்கு அவளே கேட்டுக்கொள்ள நிச்சயம் இல்லை என்று கூறிக்கொண்டவளின் குழந்தைக்கான துடிப்பு அதிகரிக்க தலை முழுக்க விண் விண் என்று வலிக்க சுவாசம் தாளம் தப்ப தொடங்கியது..., எப்படி எப்படி மற்றவர்களை பற்றி யோசித்த நான் என் குழந்தையை பற்றி யோசிக்க மறந்து போனேன்.., இப்போதும் விஷ்வாவிடம் இருந்து பிரிந்து சென்றால் அது எப்படி என் குழந்தைக்கு செய்யும் நியாயமாகும்..?? இதுவரை ஒரு தாயாக அவனுக்கு இழைத்த அநீதி போதாதா இனியும் எப்படி அதை தொடர்வாள்..?? ஆனால் குழந்தைக்காக விஷ்வாவுடன் சேர்ந்து இருப்பது நிச்சயம் அவளால் முடியாத காரியம் அப்படி அவள் செய்தால் காரணமே இன்றி.." என்று மேலும் சிந்திக்க முடியாமல் தவித்தவள் ஓடி சென்று வித்யாவை கட்டிக்கொண்டு "ப்ளீஸ் ஆன்டி ப்ளீஸ் சேவ் மீ..!!" என்று தேம்பி அழத்தொடங்கினாள்.

அவளை அணைத்து கொண்ட வித்யாவும் ஆதூரமாக முதுகை வருடி "காம் டவுன் ப்ரீத்தி, முதல்ல சரண் கீர்த்தியை விட்டு வெளியில வந்து யோசி உன்னோட முடிவு குழப்பம் இல்லாம இன்னும் தெளிவா இருக்கும்" என்று கூற உடனே நிமிர்ந்து அவளை பார்த்தவள்,

'எப்படி ஆன்டி எப்படி..?? இதை எல்லாம் கேட்ட அப்புறம் உங்களுக்கு என்மேல கோபம் வரலையா..?? இவ்ளோ சாதாரணமா இருக்கீங்க உங்களால எப்படி முடியுது' என்றால் ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக

'வரலை'

'ஏன்..??'

'முதல்முறை கேட்டாதானே ஷாக் ஆக முடியும் எனக்கு ஏற்கனவே உன்னை பத்தி எல்லாம் தெரியும்' என்றார் அமைதியான குரலில்.

'ஆன்டி' என்றவளிடம் உச்சபட்ச அதிர்ச்சி

'எப்.. எப்..ப..டி ...??'

'எழில்'

'மாமாவா..??'

ஆம் எழிலே தான் அலர் ஒரு உண்மையை மறைத்ததால் நாதனுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட மனபிணக்கு அவனுக்கு கற்று கொடுத்த பாடம் விஷ்வாவின் வார்த்தைகளை மீறி முதலில் வித்யாவை தேடி வந்து ப்ரீத்தி குறித்த உண்மைகளை அவரிடம் தெரிவிக்க செய்திருந்தது.

அவன் அறிந்த வரையில் வித்யாவால் பொய்யை சகித்து கொள்ள முடியாது இனிக்கும் பொய்யை விட கசக்கும் உண்மையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேர்ப்பவர்... நிச்சயம் உண்மையை எடுத்து கூறினால் ப்ரீத்தியை மன்னித்து ஏற்றுகொள்ள வாய்ப்பு அதிகம் என்பதால் ப்ரீத்தி குறித்த உண்மைகளை அவரிடம் கூறியவன் அவளை ஏற்று கொள்ளும்படி கூற வித்யா முகத்தில் எண்ணிலடங்கா உணர்வுகளின் ஊர்வலம்.

"அடிப்படையில ப்ரீத்தி நல்லவ தேவைன்னா டெஸ்ட் பண்ணி முடிவு பண்ணுங்க உங்களால் அப்பவும் ப்ரீத்தியை எத்துக்க முடியலைன்னா எங்க வீட்டு பெண்ணை கண்ணியமா நானே வந்து கூட்டிட்டு போறேன் இன்னொரு அசிங்கம் அவளுக்கு எந்த காலத்திலும் நடக்க கூடாது" என்று கூற யோசனையில் வித்யாவின் நெற்றி சுருங்கியது.

எழில் பேசி முடிக்கவும் 'இதுல தேவ் எங்க இருந்து வந்தான்..?? ப்ரீத்திக்கும் தேவ்க்கும் எப்படி சம்பந்தம்..??' என்ற மில்லியன் டாலர் கேள்வி அவரை உலுக்க அடுத்த விமானத்திலேயே மகனை பார்க்க கிளம்பி இருந்தார்.



ஹாய் செல்லகுட்டீஸ்...

இதோ "சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!" அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன்... பலருக்கு வித்யா விஷ்வாவை எந்த கேள்வியும் கேட்கலையான்னு சந்தேகம் உங்களுக்கான பதில் அடுத்த அத்தியாயத்தில்.. படிச்சிட்டு உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்
Lovable undetstanding mamiyar n husband
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top