கொலுசொலி 8

Advertisement

achuma

Well-Known Member
ஹரே கிருஷ்ணா

அருண் காவ்யா திருமண வரவேற்பு இனிதே நிறைவடைந்து, புது மண தம்பிதியினர், குடும்பத்துடன் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

விழா முடிந்து, அனைவரும் வீடு வந்து சேரவே நேரம் இரவு பத்து .
ப்ரியா இருவருக்கு ஆரத்தி எடுத்தாள்.
"டேய் தம்பி கரெக்ட் பிளானிங் டா, எங்கேயும் டைம் வேஸ்ட் பண்ணவே இல்ல, நீ சொன்னது போல கரெக்டா எல்லாம் முடிஞ்சுது."


"நான் கூட, கல்யாணம் முடிஞ்சு, அங்க இருந்து இங்க உடனே வர முடியுமா , இங்கேயும் எல்லா வேலையும் முடியுமான்னு நினைச்சேன், பட் நீ யாரையும் எங்கேயும் இழுத்தடிக்காம வேலையும் சரியாய் செய்ய வெச்ச, வந்தவங்களுக்கும் எந்த சுணக்கமும் இல்லை," என்று விக்ரம் தம்பியை பாராட்டினான்.

"பின்ன என்ன ப்ரோ, கவி ஊருலயும் கல்யாணம் நடக்கணும், இங்கேயும் அப்பா பங்க்ஷன் பண்ணனும் சொல்லறாரு."
"எதுக்கு வீனா இன்னொரு நாளுன்னு, இதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும்."
"அதான் ஒரே நாளுல, வர மாதிரி பார்த்துக்கிட்டேன்."
"என்ன எல்லாருக்கும் அலுப்பா இருக்கும், இப்போ, எல்லாரும் பிரீ தானே."
"போய் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான்."


"பார்த்துக்கோ மா கவி, உன் புருஷனுக்கு நல்லா வேலை வாங்க தெரியும், அதுக்கு இவ்வளவு பெருமை, நீயாவது உஷாரா இருதுக்கோ மா."
"இந்த கல்யாணம் முடியறதுக்குள்ள, எங்களையெல்லாம் பெண்ட் எடுத்துட்டான், உன் புருஷன்," என்று மகனை கிண்டலடித்தார் ரங்கநாதன்.


அதற்குள், ரமா, காவ்யாவை விளக்கேற்ற அழைத்து சென்றார்.
"அத்தை, இப்போவே மணி பத்து ஆச்சு, இப்போ விளக்கேத்தலாமா ,"என்றாள் ப்ரியா .
"நம்ம மண்டபத்துக்கு கிளம்புற வழில, அதான் புள்ளைகள ஒரு கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு, அங்க பூஜை பன்னிட்டு வந்தோம்ல, அதுனால இப்போ விளக்கேத்துறதுல தப்பில்லை."


உடனே ப்ரியாவும் மாமியார் கூறியதற்கு ஏற்ப, காவ்யா விளக்கேற்ற வேண்டியது அனைத்தும் அவளிடம் எடுத்து கொடுத்தாள்.
"அருண் இங்க வா, கவி நீ விளக்கு ஏத்து மா ."
காவ்யாவும் மாமியார் கூறியதற்கு விளக்கு ஏற்றி, வணங்கினாள் .
உடன் அருனும் மனைவியுடன் சேர்ந்து இறைவனை வணங்கினான் .


பிறகு தம்பதியினர் இருவரும், பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி வழங்கினார்.
அருண் காவ்யாவை அழைத்து கொண்டு, விக்ரம் காலிலும் விழுந்து வணங்கினான் .
கார்த்திக்கிடமும் அது போல், நெருங்கியதும் அவன் தடுத்து அருணை அணைத்து கொண்டான்.
"அண்ணி, பதினோரு மணிக்கு மேல முகுர்த்தம் இருக்கு, அதுக்குள்ள, கவிய போய் குளிச்சிட்டு வர சொல்லட்டா."


"எல்லாருமே, களைப்பா இருக்காங்க அண்ணி, இந்த சாங்கியம் எல்லாம் பார்க்க வேண்டாம்."
"நேர அவங்க ரூமுக்கு அனுப்பிடலாம்."
"கவியும் ரொம்ப களைப்பா தெரியுறா, இப்போ, நலங்கு வெச்சி இவங்கள அனுப்புறதுக்குள்ள, கவி இங்கேயே தூங்கி வழிவா போல," என்று காவ்யாவின் களைப்பை பார்த்து ரமா காமாட்சியிடம் கூறினார்.


"கவி இன்னும் என்ன இங்கேயே நின்னுட்டே, அங்க செகண்ட் பிளோர்ல நம்ம ரூம் இருக்கு போய் ரெஸ்ட் எடு."
அவள் அன்னை முகம் பார்த்து நின்றாள். காமாட்சி தலையசைத்ததும் தயக்கத்துடன் அறைக்குள் சென்றாள்.


"அத்தை, மாமா, ரெண்டு பேரும், எங்க பிளோர்லேயே எதிர்க்க இருக்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க."
"அண்ணி, பசங்க தூங்க போய்ட்டாங்க, நீங்க போங்க, இந்த பால் எல்லாம் வேண்டாம்," என்று சமையலறையில், இருந்த ப்ரியாவிடம் கூறினான்.


இவனின் அடுத்த கட்டளை தன்னிடம் என்று, முன்பே தெரிந்து இருந்த ரங்கநாதன் எப்பொழுதோ அறைக்குள் சென்று முடங்கி விட்டார்.
காமாட்சி தான் பல்லை கடித்து கொண்டு அவனின் அலப்பறையயை தாங்க முடியாமல்,"டேய் எங்களுக்கு தெரியாத எப்போ, மருமகள அனுப்புனும்ன்னு," என்றார்.


"அம்மா, இப்போ, இங்க என்ன எல்லாருக்கும் வெட்டியா பேச்சு, ஏற்கனவே எல்லாரும் டயர்டா இருக்கீங்க."
"அன்னைக்கே முகுர்த்தம் நேரம் குறிச்சப்போ, பதினொரு மணிக்கு மேல முகுர்த்தம்ன்னு தெரியும் ."

"அது எல்லாம் நான் பார்த்துக்கறேன், நீங்க போங்க," அதற்கு மேலும், அங்கு பெரியவர்கள் இருப்பார்களா ."
காமாட்சி எப்பொழுதோ, அவர் கணவருடன் மாப்பிளை கூறிய அறைக்குள் சென்று விட்டார்.
காமாட்சியும் "இவன் கிட்ட நமக்கு தேவையா," என்று தலையில் தட்டி கொண்டே சென்று விட்டார்.
அங்கு விக்ரம் தான், தம்பியை முறைத்து கொண்டு நின்று இருந்தான்.


"ப்ரோ, அப்பறம் சைட் அடிக்கலாம், எனக்கு சூடா ஜீரா வாட்டர் வெச்சி பிளாஸ்க்ல ஊத்தி குடு ."
"இந்தாங்க, மச்சான், இங்க படுத்துகோங்க," என்று கார்த்திக்கும் போர்வை தலையணை என்று கொடுத்தான்.

"இன்னைக்கு நிறைய ஸ்வீட், ஒரு மாதிரி ஜீரணம் ஆகாத மாதிரி இருக்குது."
"கவி கூட சரியா சாப்பிடல," என்று சாவகாசமாக அமர்ந்து, கார்த்திக்கிடம் பேசினான்.


"ஆமா மாப்பிளை, எங்களுக்கு இவ்வளவு ஸ்வீட் எல்லாம் பழக்கம் இல்லை.
கல்யாணத்துல இனிப்பு, ஏதாவது ஒன்னு தான் இருக்கும்."
"ஆனா இந்த ஊர்ல, சாப்பாடு கம்மியா இருக்கு, தட்டு நிறைய எல்லா வகை இனிப்பும் ஒரே நேரத்துல இருந்தா அத பார்த்ததுமே வயிறு நிறைஞ்ச மாதிரி ஆயிடுச்சு."


"கவி இனி, இது எல்லாம் பழகணும்," என்று கையில் போர்வையுடன் அருணிடம் பேசிக்கொண்டிருந்தான்.
விக்ரமும் தம்பிக்கு மற்றும், அருணுக்கு பிறகு அவனுக்கு என்று மூன்று குவளையில் ஜீரக தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.
மூன்று பேரும் குடித்து முடித்ததும்,"டேய், அருண், அப்பறம் ,"
"ப்ரோ அண்ணணாச்சேன்னு பார்க்குறேன்."
"இரண்டு குழந்தைக்கு அப்பாவ இருந்துகிட்டு, நீ பண்ற அலம்பு தாங்கல ."


"அம்மா உன்னை தனியா கூப்பிட்டு பேசும் போதே நினைச்சேன்."
"என்ன என்னை, கரெக்ட் டைம்க்கு ரூம்க்கு அனுப்புறியா, உன் கூட பேசவா, எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க ."
"நான் கேட்ட பிளாஸ்க் எங்க, இந்த பத்து நிமிஷத்துல ஒன்னும் ஆகிடாது," என்று பல்லிடுக்கில், வார்த்தையை கடித்து துப்பினான் அருண்.
கார்த்திக் எப்பொழுதோ போர்வையால் முகத்தை மூடி கொண்டு குப்புற படுத்து விட்டான், அருணின் பேச்சை கேட்க முடியாமல்.
தம்பியை ஒன்றும் கூற முடியாமல், அவன் கேட்ட பிளாஸ்கை எடுத்து கொடுத்து விட்டான்.


"நீ போடா ராசா, என்னைக்கு யார் பேச்சை கேட்டு இருக்க."
அருணும் அண்ணனின் புலம்பலை சிரித்து கொண்டே மாடி ஏறினான் .
அருண் வழி காட்டிய அறைக்குள் சென்று குளித்து, ஏற்கனவே காமாட்சி கொடுத்து அனுப்பிய பையில் இருந்து சேலை எடுத்து உடுத்தினாள் .



அவளுக்கு தூக்கம் கண்களை சுழற்றியது.
தூங்கினால், ஏதாவது தப்பாக எடுத்துகொள்வானோ, என்ற பயம் வேறு.
புது இடம், கணவனின் அறை, இவையெல்லாம் பெண்ணிற்க்கு ஒரு பதற்றத்தை கொடுத்தது.
அறைக்குள், காவ்யா, பொம்மை போல், அமர்ந்திருந்தாள்.
அறை எவவ்ளவு சிறிய அளவில் இருக்கிறது என்று அந்த அறையையே பார்த்துக்கொண்டிருந்தாள் .
ஒரு கட்டில், ஒரு அலமாரி மற்றும் அந்த அறையிலே, ஒரு குளியலறை."
அங்கிருந்து, வெளி பக்கம் ஒரு வாசல், அது வராண்டா போல் சிறிதாக இருந்தது.
"எவ்வளவு குட்டியா இருக்கு, இந்த ரூம்ல, ஒரு கட்டில், ஒரு பீரோ, அவ்வளவு தான் ரூம் முடிஞ்சுது."
தடுக்கி விழாம நடக்குறது கஷ்டம் தான் என்று நினைத்து கொண்டாள் .


"ஹாய் கவி, "என்று கூவிய படியே அறைக்குள் நுழைந்தான்.
அவனை கண்டதும் எழுந்து நின்றாள் .
"ஒய் நான் என்ன ஸ்கூல் வாத்தியாரா, ஸ்கூல் ஸ்டுடென்ட் மாதிரி எழுந்து நிக்கிற.
இந்தா கவி இது ஜீரா வாட்டர், நிறைய இனிப்பு பார்த்ததும் நீ சரியாவே சாப்பிடல, ஒரு மாதிரி குமட்டல்ல இருக்குன்னு மண்டபத்துல உன் அக்கா கிட்ட சொன்ன இல்ல, இது குடி கொஞ்ச பெட்டரா பீல் பண்ணுவ .
அவளும் அமைதியாக வாங்கி கொண்டாள் .


இரு நான் பிரெஷ் அப் பன்னிட்டு வரேன்" என்று அவன் பேசி கொண்டே அலமாரியின் கதவை திறந்து, அவனுக்கு தேவையான உடைகளை எடுத்தான் .
கட்டிலுக்கு எதிரே இருந்த அலமாரியை திறந்ததும் அங்கு அடுக்கி வைக்க பட்டிருந்தது துணிகள் அவள் கண்ணுக்கு காட்சியளித்தது.
அங்கு ஆண்களின் உடைக்கு நடுவில் பொருத்தமே இல்லாமல் பிங்க் வண்ணத்தில் கருப்பு ரோஜா இதழ் கொண்ட துணி அவன் துண்டு எடுக்கும் போது வந்து விழுந்தது.
அந்த உடையை மீண்டும் சிரித்து கொண்டே கவியை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும், கட்டிலில் அந்த துணியை போட்டு விட்டு, அவன் குளியலறையில் புகுந்து கொண்டான்.
அவள் அந்த துப்பட்டாவையே பார்த்து கொண்டு இருந்தாள் .


குளியலறை கதவை மீண்டும் திறந்து, "கவி " என்று மென்மையாக அழைத்தான்.
உடனே துணியின் மீது இருந்த பார்வையை விலக்கி அவனை பார்த்தாள் .
"அந்த துப்பட்டா யாருதுன்னு கண்டு பிடி கவி," என்று சிரித்து விட்டு மீண்டும் கதவை அடைத்தான் .
"இது என்னோடது தானே, எங்க எல்லாம் தேடுனேன் ."
"ஹ்ம்," என்று உதடு பிதுக்கி சிணுங்கி கொண்டாள் .
"ஆமா இது என்னோட பிறந்த நாளுக்கு அண்ணா வாங்கி கொடுத்தது, ஆசை ஆசையா போட்ட டிரஸ்."
"அப்போ, ஏதோ சொந்த காரங்க கல்யாணம்ன்னு இவரும், இவர் அம்மாவோட வீட்டுக்கு வந்து இருந்தாரே."
"அப்போ இவர் தான் எடுத்து இருக்காரா ."
அன்று இவளுக்கு பிடித்த உடையின் ஷால் காணும் என்று அழுதத்திற்கு, காமாட்சி திட்டியதும் நினைவு இருக்கிறது.
அவருக்கு அக்கம் பக்கத்தினர் யாரையும் பிடிக்காது.


ஆகையால் புது உடை யார் திருடி இருப்பார்கள் என்ற கோவத்தில் அன்னை என்னவெல்லாம் பேசினார்.
அதற்குள், இலகு உடைக்கு மாறி அருண் வெளியே வந்தான்.
வீட்டினில் அணியும் கையில்லா பனியன், மற்றும் ஷாட்ஸ் அணிந்து கொண்டு அவன் வந்தான்.
அவனை அவ்வாறு பார்க்க காவ்யாவிற்கு தான் கூச்சமாக இருந்தது .
அவள் மீண்டும் தலை தாழ்த்தி கொண்டதில் சிரித்து கொண்டான்.


"கண்டு பிடிச்சிட்டியா கவி, அன்னைக்கு என் பொண்டாட்டி எவ்வளவு அழுகையோட, டிரஸ் எடுத்தவங்கள கண்டு பிடிக்காம விட மாட்டேன்னு வீர வசனம் எல்லாம் பேசுன ."
"அதான் இப்போ, உனக்கு ஹெல்ப் பண்லாம்ன்னு நானே இது எடுத்து கொடுத்துட்டேன்."
"உன் சபதத்துக்கு உதவின சந்தோஷம் எனக்கு," என்று சிரித்தான் .
அவனை முறைக்கவும் முடியாமல், அமைதியாக இருந்தாள் .


"ஓகே சில், வா வெளியே போகலாம்," என்று பால்கனி கதவை திறந்து அழைத்து சென்றான் .
சில்லென்ற காற்று முகத்தில் மோதியதும் அந்த ஊரின் அழகை ரசித்து பார்த்தாள் .
எங்கும் விளக்கு வெளிச்சம், ஊரே, இந்த இரவு நேரத்தில, நட்சத்திரத்துக்கு போட்டி போட்டு கொண்டு, மின்னி கொண்டிருந்தது.
சல சல என்று பேச்சுக்கள் சத்தம்.
இந்நேரம் அவளின் ஊரே அடங்கி இருக்கும்.
அதுவும் இவள் தெருவில் ஒரு தெரு விளக்கு தான்.


அதுவும் ஒன்பது மணி போல் அவள் தெருவில் யாரின் தலையும் வெளியே தெரியாது.
அவளை பின்னிருந்து அணைத்து, அவள் கழுத்தில் கைகளை மாலையாய் கோர்த்து கொண்டான்.
அவள் நெளிந்து நகர நினைத்தாள் .
"ம்ச், கவி நமக்கு கல்யாணம் ஆச்சு, இப்படி தள்ளி போறதுல அர்த்தமே இல்லை."
"இப்பவும் சொல்றேன், அசையாம நில்லு உனக்கு தான் நல்லது ."
அவளுக்கு தான் தெரியும் அவன் கூறிய வார்த்தை எத்தனை அபத்தம் என்று.
கழுத்தில் இருந்த ஒரு கை அவள் சேலை மறைத்த இடையை அழுத்தமாக பற்றி கொண்டது.
மற்றோரு கை அவள் முகத்தில் சுதந்திரமாக ஊர்வலம் சென்றது .
அதில் அவன் பக்க திரும்பி அவனை பார்த்தாள்.
"என்ன" என்பது போல் புருவம் உயர்த்தி கேட்டான்.
"இங்க கீழ தெருவில யாரும் தூங்கல, வெளிச்சமா இருக்கு, கை எடுங்க, ப்ளீஸ் ."
"யாருக்கும் தெரியாது, ஓகே நீ சொல்லு, உன் துப்பட்டா எப்படி இங்க வந்துச்சு கவி."
"என்ன தூங்கவே விடல தெரியுமா, ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது இந்த ரூம்ல."
"உன் டிரஸ்ல இருக்குற பிளாக் ரோஸ், நான் டிரஸ் பண்ணும் போது, என்னை பார்க்கும் பாரு, எனக்கு ஒரே வெட்கமா போகும்."
"இதோ இந்த முட்ட கண்ணு, என்னை உத்து உத்து பார்க்குற மாதிரியே இருக்கும்."
அவன் கூறியதில் அவளுக்கு தான் வெட்கமானது.
"அம்மா ஏதோ கல்யாணம்ன்னு என்னையும் கூட்டிட்டு உங்க ஊருக்கு வந்தாங்க."
"அப்போ, உனக்கு பிறந்து நாள்ன்னு, இந்த டிரஸ் போட்டுட்டு இருந்த."
" என்னவோ, உன்ன இந்த ட்ரேஸ்ல பார்க்கவே எனக்கு ஏதோ பட்டாம்பூச்சி பீல்."
"பார்த்த உடனே காதல்ல அப்படின்னு எல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லை."
"பட் நானும் நம்புற நிலை அப்போ, உன்னை அவ்வளவு பிடிச்சுது."
"உன் கண்ணு, இந்த ரோஸ் லிப்ஸ், எல்லாம் அப்டியே என்னை கொள்ளுச்சு ."
"என் கண்ணு வேற உன்னையே அடிக்கடி பார்த்துட்டு இருந்துச்சு."
"என் மனசு இவ தான் உனக்குன்னு சொல்லுச்சு."
"அதுக்கு மேல, என் பேச்ச நானே கேட்கல ."
"நீ தான் டிசைட் பண்ணிட்டேன்."
"அப்போ, நீயும் படிச்சிட்டு இருந்த, சரி என் காதல்ல சொல்ல நேரம் வரும் போது சொல்லலாம்."
"அது வரைக்கும் இந்த டிரஸ் கூட டூயட் பாடலாம்ன்னு இதை எடுத்திட்டு வந்துட்டேன்."
"நீ அடுத்த நாள், இத கொடில போட்டு இருந்தியா, அப்போ, யாருக்கும் தெரியாம அபேஸ் பண்ணிட்டேன்."
அவள் அப்பொழுதும் அமைதியாக இருந்தாள், எந்த நம்பிக்கையில் தான் இவன் கையில் சேர்வோம் என்று காத்திருந்தான் என்று கேட்க தோன்றியது.


"பேசு கவி உன் அண்ணா சொன்னாரு, நம்ம கவி கிட்ட ஏதாவது கேள்வி கேட்டுட்டு பக்கத்து ஊர் வரைக்கும் போய்ட்டு வரலாம்."
"அதுக்கு அப்புறம் தான் பதில் வரும்ன்னு," என்று கிண்டலடித்தான்.
தயக்கத்தை தகர்த்து அவளும் வாய் திறந்தாள் .
"ஏன் இப்படி பண்ணீங்க, அப்போ, இந்த டிரஸ் ரொம்ப ஸ்பெஷல் ."
"சுடிதார், பிங்க் கலர்ல இருக்கும், அதுக்கு பிங்க் ஷால்ல கருப்பு நிறத்தில் ரோஜா டிசைன் தான் இந்த ட்ரெஸ்ஸோட ஸ்பெஷல் ."
ஆசை தீர அந்த உடையை அணிய முடியவில்லையே என்று சிறு பிள்ளை போல் அவள் கேள்வி இருந்தது."
"நான் ரொம்ப தேடுனேன், அப்பவும் நீங்க தான்னு சொல்லவும் இல்லை."
அவள் முகத்தை பார்த்தால் அழுகையை கட்டுப்படுத்தி கொண்டிருப்பதை போல் இருந்தது.
"ஒய் உனக்கு டிரஸ் ஸ்பெஷல்லா இருந்து இருக்கலாம், ஆனா என்னை இத்தனை நாள் உயிர்ப்போடு வெச்சிருந்ததே இந்த டிரஸ் தான்."
"நான் தினமும் நீன்னு நினைச்சு இந்த ட்ரெஸ்ஸோட பேசுவேன் ."
"எனக்கு எவ்வளவோ எதிர்பார்க்காதது எல்லாம் நடந்து போச்சு, அப்போ எல்லாம் உன் ஷால் எடுத்து என் கண்ணை கட்டிப்பேன் ."
"உன் மடில படுக்குற பீல், நான் அப்டியே தூங்கி போய்டுவேன்."
"இவ்வளவு டென்ஷன் ஆகுவியா நீ அப்போ, என்னை எவ்வளவு திட்டி இருப்ப," என்று பொய்யாக முறைத்தான்.
அதற்கே பயந்து, "நான் இல்ல, நான் எப்படியாவது தேடி பார்க்குறன்னு தான் அம்மா கிட்ட சொன்னேன் ."
"அம்மா தான் எந்த திருட்டு கபோதி எடுத்தானோ, அவனுக்கு கை வேகன்னு," சாபம் கொடுத்தாங்க.
அவள் ஏதோ உண்மையை கூறுவதாக கூறினாள் .
இங்கு அருணின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே.
"இதோட போதும் மா, ஒரு ஷால் போனதுக்கு, எனக்கு எவ்வளவு பெரிய சாபம்."
உடனே அவளும் நாக்கை கடித்து கொண்டு, தான் உளறியதை நினைத்து, தன்னை யே திட்டி கொண்டாள் .
அம்மாவை பார்த்த இவர் என்ன நினைப்பாரு, என்று அவனை பாவமாக பார்த்தாள் .
"சரி விடு, மாமியார் தானே திட்டுனது, அம்மா திட்டுறா மாதிரி நினைச்சுக்க வேண்டியது தான்."
"இப்போ சொல்றேன் கவி, எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா, இந்த நிமிஷம், என் பொண்டாட்டியா, எனக்கு ஏதோ அச்சீவ் பண்ண பீல்."
"நீ என்னோட இருக்குறது, எனக்கு அப்படியே பறக்குறது போல, அவ்வளவு சந்தோஷமா இருக்கு," என்று அவள் பட படக்கும் கண்களில் இதழ் பதித்தான்.
அதற்கே அவனிடம் இருந்து அறைக்குள் சென்று விட்டாள் .
அருணும் சிரித்தவாறு தலை கோதி கொண்டே, பால்கனி கதவை அடைத்து விட்டு, அவளை நெருங்கினான்.


"கவி " என்று அவனின் தாபமான அழைப்பில் தடுமாறினாள் பெண்ணவள் .
" எனக்கு நீ இப்போவே வேணும், அருணோட காவ்யாவா மாற உனக்கு ஓகேவா," என்று அவளை இறுக்கி அணைத்தான்.
அவளை கட்டிலில் சரித்து, அவள் மேல் முழு பாரம் படுமாறு படுத்தான்.
"சொல்லு கவி டார்லிங் ," என்ற மையலான அழைப்பில்,
"இப்போ, இவர் என்கிட்டே அனுமதி கேட்குற மாதிரி தான், " என்று நினைத்து கொண்டாள்.
அவளின் கழுத்தில் முகம் புதைத்து, "கவி, கவி," என்ற பிதற்றலில், காவ்யா அவனிடம் மெல்ல மயங்கினாள் .
அவளின் துடிக்கும் இதழில், மென்மையாக முத்தம் வைத்தான்.
சிறிது நேரம் கழித்தே விடுவித்து, அவளின் முகத்தில் மறுப்பிற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போகவே, அவளை முழுதும் ஆட்கொண்டான்.
அவளின் சிணுங்களில் இன்னும் இன்னும் பித்தாகி அவளுள் தொலைந்தான்.
அவன் மென்மையில் பெண்மையை வென்றான்.
ஒரு அழகான தாம்பத்தியம் அங்கு அரங்கேறியது .

Thanks for all your support friends


please read n give your suggestions
All take care





























 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top