கொலுசொலி 5

Advertisement

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு உங்களின் விருப்பங்கள் மற்றும் கருத்துக்களுக்கு நன்றி நட்புக்களே
மறக்காம படிச்சிட்டு, உங்களின் கருத்துக்களை கூறுங்கள்.
All take care

"அப்பா, அக்கா வந்து இருக்கு ."
அதற்குள், பிரியா வெளியே வந்து, "அப்பா, என்னைக்கு தான் இதை விட போறீங்களோ ," என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள் .
"அட பிரியா குட்டி, நீ எப்போ, வந்த,"
"தெரிஞ்சி இருந்தா, உனக்கு பிடிச்ச, பரோட்டா வாங்கி இருப்பேன்ல ."
"ஆமா இவர் வாங்கி தர பரோட்டாக்கு தான், இவ அங்க இருந்து வந்தா," என்று கையில் புளி கரைத்த பாத்திரத்துடன் வெளியே வந்து கணவரை திட்டி கொண்டிருந்தார் காமாட்சி.
இது தினமும், நடக்கும் கூத்து தான்.
அங்கு பக்கத்தில் உள்ள, புண்ணியகோடியின் அண்ணன் வீட்டினர், இங்கு எட்டி பார்த்தனர்.
"ஏதோ அந்த வீட்டுல பெரிய பொண்ணு வேற வந்து இருக்கா, என்னவா இருக்கும்," என்று காமாட்சியின் ஓரகத்தியும் அவரின் மருமகளும் பேசி கொண்டு இருந்தனர்.
"என்னவோ தெரியலையே அத்தை," என்று மருமகளும் ஒத்து ஊதினாள் .
"கவி, உங்க அப்பன உள்ள இழுத்துகிட்டு, வா."
"பிரியா நீ உள்ள போ, கண்ட கண்ணு எல்லாம் இங்க தான்," என்று அவர்களுக்கு கேட்கும் அளவிற்கு உரக்க கூறி விட்டு, உள்ளெ சென்று விட்டார், காமாட்சி.
சில சொந்தங்கள் இப்படி தான், தன் வீட்டில் என்ன நடந்தாலும், நம் உறவினர்களுக்கு மட்டும் நல்லதே நடக்க கூடாது என்று நினைக்கும் ரகம்.
இவர்களை எல்லாம் மாற்ற முடியாது.
ஒன்று அவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும், அல்லது அவர்களை பழக்கி கொள்ள வேண்டும்.
"கவி கண்ணு, பசிக்குது மா சோறு இருந்தா குடு," என்றதும், தந்தைக்கு உணவு எடுத்து வர சென்றாள் .
"ஏய் உங்க அப்பனுக்கு சோறு வேணுமா, இரு டி அந்த பழைய சோறு கொடுக்காத, கொஞ்ச நேரம் பொறு கருவாட்டு குழம்பு வெச்சிட்டேன், அது கொண்டு போய் சூடா குடு," என்று காமாட்சி வேலையில் கவனமானார்.
கவி அங்கு சமயலறையில் என்ன வேலை என்று பார்த்தாள் .
அங்கு இட்லிக்கு அரிசியும், உளுந்தும் தண்ணீரில் இருந்ததை பார்த்து, அக்காவின் வருகைக்காக என்று தெரிந்து கொண்டாள் .
அன்னை கேளாமல், "அம்மா எப்போ தண்ணீல போட்ட," என்று கேட்டு கொண்டே உரலை கழுவினாள் .
"இவ வரேன்னு, மத்தியானம் போல சொன்னா, அதான் பசங்களுக்குன்னு அப்போவே போட்டுட்டேன்".
"அம்மா நான் இரண்டு நாள் இருந்துட்டு போறதுக்கு, எதுக்கு இட்லி எல்லாம் செய்ற," ப்ரியா அன்னையிடம் கேட்டாள் .
"நீ எப்பவோ வர, பசங்களுக்கு ஏதோ ஒன்னுன்னு செய்ய முடியுமா."
" அதுவும் இல்லாம , முன்ன மாறி, உங்க அண்ணன் வெறும் சோறு குழம்புன்னு செய்யாதான்னு சொல்லிட்டான்."
"இப்போ எல்லாம் காலையில, நாஸ்டா தான், இட்லி இப்போ அடிக்கடி செய்றேன்."
"காவ்யாக்கு, தினம் ஒரு காயோட சாப்பாடு செஞ்சி கொடுக்க சொல்லிட்டான்."
"முன்ன எல்லாம், நான் மட்டுமே வேலை செய்யும் பொது, அந்த வீட்டுல கொடுக்குறத, உங்க மூணு பேருக்கு பங்கு போட்டு கொடுப்பேன்."
" அப்பறம் அவன் தலை எடுத்து எவ்வளவோ மாற்றம் தான்."
"நான் ஒருத்தி தானே வீட்டுல இருக்கேன்னு, ஏதோ ஒன்னு செய்து சாப்பிட கூடாதுன்னு, அதுக்கு தான் இப்படி எல்லாம் சொல்றான் உன் அண்ணன்," மகனை பற்றிய பெருமையே அந்த அன்னையிடம் .
"ஆனா என்ன ஓடு எல்லாம் ஒழுகுது, இந்த வீட்டை கொஞ்சம் மாத்துடான்னு சொன்னா கேட்க மாட்றான்."
"நம்மள ஏமாத்தி புடுங்குனதுங்க எல்லாம், என் கண்ணு முன்னாடியே, மேல மேல கட்டிக்கிட்டு வாழுதுங்க, நான் பாரு, எப்படி இருக்கேனோ ,"
இவரின் புலம்பல் எப்பொழுதும் ஓயாது என்று மகள்கள் இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்து கொண்டனர்.
காவ்யா அவள் வேலையில் கவனமாக முதலில் உளுந்து போட்டு அரைத்து கொண்டிருந்தாள் .
பிரியா உதவிக்கு வந்தாலும் தடுத்து விட்டாள் .
பிள்ளைகள் இருவரும், உரலில், காவ்யா உளுந்து போட்டு அரைத்து கொண்டிருப்பதை பார்த்து, அதிசியம் போல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அங்கு ரங்கநாதன் வீட்டில் மிக்ஸி, கிரைண்டர் என்று தான் இருக்கிறது.
"என்ன சித்தி இது," என்று கேட்டான் ப்ரியாவின் முதல் மகன் விமல் .
"நானு நானு," என்று மாவில் கை வைத்தான் இரண்டாம் மகன் வினோத்.
"டேய் குட்டி, கை நீ வைக்க கூடாது பட்டு, கை நசுங்கிடும்," என்று காவ்யா அவனுக்கு புரிய வைத்து, அவள் வேலையில் இருந்தாள் .
"விமல் கண்ணா இதுக்கு பேரு உரல், கிரைண்டர்ல செய்றது விட இதுல செய்தா ருசியா இருக்கும்," என்று அவனுக்கு விலக்கினாள் காவ்யா .
"ஆமா டா எல்லாரும் கிரைண்டர் வாங்குற நேரம் உங்க தாத்தா எனக்கு இந்த உரல் வாங்கி கொடுத்தார், மகராசன்," என்று அங்கலாய்ப்புடன் அங்கு சமையல் வேலையில் காமாட்சி.
ப்ரியாவிற்கும், காவ்யாவிற்கும் காமட்சியின் புலம்பலில் சிரிப்பு வந்து விட்டது.
"உங்களுக்கு சிரிப்பா போச்சு டி என்ன பார்த்தா," என்று அதற்கும் ஒரு குட்டு .
"கவி உளுந்து அதிகமா தான் போட்டு இருக்கேன், பாதி மாவு மைய அரச்சுதும் எடுத்து தனியா வை."
"நாளைக்கு வடைக்கு போடுலாம் ," என்று காமாட்சி கூறி கொண்டே சமயலை முடித்தார்.
"விமல் கண்ணா உங்க தாத்தனுக்கு இந்த சோறு குடுத்துட்டு வா ," என்றார் காமாட்சி .
விமலும் அவன் தாத்தாவிற்கு உணவு கொடுத்து வந்தான் .
"ப்ரியா இந்தா புள்ளைங்களுக்கு சாப்பாடு கொடு," என்று பிரியாவிடம் உணவை கொடுத்து காவ்யாவுடன் அமர்ந்து கொண்டார்.
குழந்தைகள் இருவரும் பாட்டியின் கைவண்ணம் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தனர்.
அங்கு ப்ரியா தினம் செய்யும் சமையல் சப்பாத்தி , ஏதேனும் ஒரு ஸப்ஜி தான் .
இதன் ருசி பிள்ளைகளை இன்னும் கொஞ்சம் கேட்டு உன்ன வைத்தது .
அதற்குள், கார்த்திக்கும் வந்து சேர்ந்தான்.
வாசலில் உண்டு முடித்த மயக்கத்தில் அப்படியே படுத்து உறக்கத்தில் இருந்த தந்தையை கண்டு கொண்டே வீட்டினுள் வந்தான்.
"வா ப்ரியா, எப்படி இருக்கே, டேய் குட்டீஸ்," என்று இரு பிள்ளைகளையும் இரு கைகளிலும் அள்ளி கொண்டு, இருவரையும் ஒரு சுற்று சுற்றினான்.
"சாப்டீங்களா,"
"சாப்பிட்டோம் மாமா,"
"சரி மணி பத்து ஆக போது, ஒடுங்க ரெண்டு பேரும் உள்ள, தூங்குங்க," கார்த்திக் இருவரையும் பார்த்து கூறி அவன் வேறு உடை மாற்றி வந்து அமர்ந்தான் .
"அண்ணா ," என்று ப்ரியா அழைத்ததும்,
"கவியும் பசங்களும் தூங்கட்டும், அப்பறம் பேசலாம்," என்றதும்
"நம்ம இங்க இருக்க கூடாது போல, நம்ம இல்லாம பேச வேண்டிய விஷயம்," என்று அறிந்து கொண்ட, காவ்யா, அவளே உணவை போட்டு உண்ண ஆரம்பித்தாள்.
அண்ணன் மீது எந்த அளவிற்கு பாசமோ, அதே அளவிற்கு பயமும்.
இதுவரை சிரித்து பேசி என்று மூவரும் இருந்ததில்லை, ஆரம்பத்தில் காமாட்சியின் கட்டுப்பாட்டில் வளர்ந்த பெண்கள் இருவரும், நாளடைவில், கார்த்திக்கின், சொல்லுபடி வளரும் சூழல் .
முதலில் சாப்பாடு போட்டு கொண்டு வந்து அமர்ந்தாள்.
பிறகு பாதி சாப்பாட்டில் காவ்யா, தட்டுடன் எழுந்து சென்று, அதில் பக்கோடா போட்டு கொண்டு வந்து அமர்ந்தாள் .
அதில் வீட்டினர் அனைவர்க்கும் சத்தமில்லாமல் ஒரு புன்னகை .
"சரியான பக்கோடா பைத்தியம், மறந்து போயிட்டாளாம், போய் எடுத்து வந்து சாப்பிடறா பாரு," என்று ப்ரியாவிடம் கூறி சிரித்து கொண்டார் காமாட்சி.
கார்த்திக் , "முடிஞ்சுதா கவி"
என்றதும்
"முடிந்தது" என்பது போல், தலையை மட்டும் அசைத்தாள் .
"போய் பசங்கள தூங்க வெச்சிட்டு, நீயும் தூங்கு."
" அக்கா நாளைக்கு இங்க தான் இருப்பா, அப்போ, பேசிக்கோ," என்றான் கட்டளை போல் .
ப்ரியாவின் கை பையை திறந்து, வினோத்தின் காலுக்கு போட வேண்டிய மருந்தை எடுத்து கொண்டு, பிள்ளைகளுடன் படுக்கை அறைக்கு சென்று, படுத்து விட்டாள் காவ்யா .
"டேய், என்ன டா ஏதாவது முக்கியமான விஷயமா, காவ்யா போனதுக்கு அப்பறம் பேசனும் சொல்ற."
" இவ திடீர்ன்னு வந்து நிக்கும் போதே நினைச்சேன் ."
"என்னவோ, "
"இருங்க நம்ம மூணு பேரு தான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன்" என்ற முணுமுணுப்புடன் சென்று உணவு பாத்திரம் எடுத்து வந்தார்.
மூவரும் முதலில் எதுவும் பேசாமல், உண்டு முடித்தனர்.
"அடி யேய், இப்போவாச்சும் சொல்லு," என்றார் மகளிடம் .
"அம்மா நான் இங்க வரும் போதே அண்ணா கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன், வீட்டுக்கு வா பேசிக்கலாம்ன்னு சொல்லுச்சு ."
"அவர் தம்பி அருணுக்கு, நம்ம காவ்யா," என்று ப்ரியா இழுத்து நிறுத்தியதும்,
"நான் சம்மதிக்கவே மாட்டேன்." கத்தி விட்டார் காமாட்சி .
அவரின் கத்தலில், அப்பொழுது தான் நன்றாக தூங்க ஆரம்பித்த காவ்யா எழுந்து அமர்ந்தாள் .
அவளுக்கு முதலில் ஒன்றும் விளங்காமல், பிறகு அன்னையின் கூற்றை கவனிக்க அவளுக்கே அதிர்ச்சி.
தனக்கு திருமணம், அதுவும் அக்காவின் மச்சினன், அன்னையின் மறுப்பு, என்று ஒன்றும் புரியாமல் தெளியாமல் சிலை போல் அவள் .
"அந்த பொறுப்பில்லாதவனுக்கு, நம்ம காவ்யா முடியவே முடியாது."
"இவன் உங்க அப்பன போலவே வருவான், பாரு."
"இப்போ வரைக்கும் உன் வீட்டுக்காரன் தான் எல்லாம் பார்க்குறாரு."
"குடும்ப பொறுப்பு ஒன்னும் தெரியாது, குடி பழக்கம் வேற."
" உன்னை அவ்வளவு தூரம் கொடுத்தோம், எதுக்கு அந்த அளவுக்கு உன்னை நல்லா பார்த்துக்குறாங்கன்னு தானே."
"நம்ம கவிக்கும் அப்படி தான் மாப்பிளை வேணும்ன்னு நான் வேண்டாத தெய்வம் இல்லை, ஆனா, இப்படி கெட்ட பழக்கம் உள்ள பையன, என் பொண்ணுக்கு நான் கொடுக்கவே மாட்டேன்."
"கவி வாயில்லா பூச்சி, அதுக்கு ஒரு வலி வேதனைன்னா கூட சொல்லாது."
இதற்கு மேலும் அன்னை கூற்றை காது கொடுத்து கேட்க முடியாது, என்று, கார்த்திக் அவரின் பேச்சை நிறுத்தினான்.
"அம்மா போதும், இருங்க கொஞ்சம் ," சத்தமில்லாமல், அந்த அழுத்தமான குரலில் அவர் கப்சிப் .
"நீ சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடி ப்ரியா ."
"அவர் உங்க கிட்ட பேசிட்டு வர சொன்னாரு அண்ணா "
"உங்களுக்கு என்ன முடிவுன்னு கேட்க சொன்னாரு."
"நீ என்ன நினைக்குற ப்ரியா ," கார்த்திக் அவளிடமே கேட்டான் .
அதில் ப்ரியா அமைதி .
"சொல்லு, அந்த வீட்டுல வாழுற மருமக நீ, உன் மச்சினனுக்கு கேட்குற, எப்படி இருந்தாருன்னு தெரியும், இப்போ எப்படி இருக்காருன்னும் தெரியும்," என்றதும், அவள் அண்ணனையே பார்த்து இருந்தாள் .
"என்னையே பார்த்தா ,"கார்த்திக் கேட்டதும்
"ஹான் அண்ணா, என் தங்கச்சிக்குன்னு பார்க்கும் போது, நான் அம்மா சொல்றதுக்கு தான் சரின்னு சொல்லுவேன்."
"பாரு டா, பாரு, ப்ரியாவே சொல்றா ,"அவரின் கொதிப்பு இன்னும் அடங்கவில்லை.
"அம்மா," என்று குரல் உயர்ந்ததும் அடங்கி விட்டார்.
"உன் பக்கம் சொல்லிட்ட தானே, சரி" கார்த்திக் .
"அம்மா உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கா, நம்ம தங்கச்சிக்கு நான் நல்லது தான் பண்ணுவேன்னு நம்புறீங்களா, "அன்னையை பார்த்து கேட்டான்.
இது என்ன அபத்தம் என்று தான் பெண்கள் நினைத்தனர்.
"கார்த்திக், என்ன டா, ஏதோ என் ஆதங்கம், உனக்கு சம்மதம்ன்னு தான் நினைக்குறியா, சரி டா ராஜா, ஏதோ ஒரு காரணம் இருக்கும், நீ சொன்னா சரி தான்."
"என்ன வார்த்தை பேசிட்டான், சின்ன வயசுலயே, பொறுப்பா எல்லாம் பார்த்து குடும்பத்துக்கு என்று செய்தவன்."
"ப்ரியா, விக்ரம் மாப்பிளை, உனக்குன்னு எல்லாம் பார்த்து பார்த்து தான் செய்றாரு."
"அதுல எதாவது இல்லைன்னு சொல்லுவியா நீ."
"என்னை நல்லா பார்த்துக்குறாரு அண்ணா," ப்ரியா .
"நீ அவரோட பொறுப்புன்னு இந்த திருமண வாழ்க்கை, ஒரு பந்ததுல உங்கள இணைச்சி இருக்கு."
"அதுக்கு ஏத்தது போல, தானே உன்னை பார்த்துறாரு."
"நீ அதே போல, உங்க குடும்பத்தோட உன் மச்சினன ஒப்பிட்டு, பார்த்துட்டு, மேம்போக்கா சொல்ல கூடாது."
"காவ்யா, அவரோட பொறுப்பு, அவருக்கு வர மனைவியை அவர் பார்த்துப்பாரு."
அங்கு காமாட்சி அமைதியாக மகனின் கூற்றை கவனித்தார்.
"எந்த இடத்திலேயும் அவர் மனைவியை அவர் விட்டு கொடுக்க மாட்டார்."
"அம்மா இவ்வளவு நேரம் அவர் பற்றி நீங்க நினைச்ச இருந்த ஒரு பக்கம் மட்டுமே சொன்னீங்க."
"அவர் மேல எந்த நல்லதும் உங்க கண்ணுக்கு தெரியலையா, வீட்டுல, கஷ்டம்ன்னு இருக்கும் போது, விக்ரம் மாப்பிளைக்கு தொந்தரவு கொடுக்காம, அவர் படிப்பை பாதிலையே நிறுத்தினாரு ."
"மூணு வருஷம் துபாய்ல வேலை பார்த்தாரு, பொறுப்பு இல்லைனா, அந்த நாட்டுல மூணு வருஷம் இருந்து இருக்க முடியுமா."
"இங்க சொந்த ஊருக்கு வந்து சொந்தமா தொழில் வெச்சி, பொழப்பை நடத்துறாரு."
"இங்க மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் பொருத்தமா மட்டும் முதல்ல பாருங்க."
"உங்க அனுமானத்தை, ப்ரியாவை தவிர அந்த வீட்டுல, வேற யார்கிட்டயாவது சொல்லி பாருங்க."
"உங்களால, சொல்ல முடியுமா, அப்படியே சொன்னாலும், அவரை விட்டு கொடுக்க மாட்டாங்க."
"அந்த வீட்டுல இருக்குறவர்களே, சும்மா இருக்கும் போது, நம்ம வெளியில இருந்து வாய்க்கு வந்ததை பேச கூடாது."
"எல்லாத்தையும் விட, ப்ரியாவும் காவ்யாவும் ஒரே வீட்டுல, இருப்பாங்க, " என்று அன்னைக்கு, ஏற்றது போல், கூறி முடித்தான்.
"இது எல்லாத்தையும் விட, அருண் பற்றி எனக்கு நல்லா தெரியும்,நம்பி நம்ம காவ்யாவை கொடுக்கலாம்," என்றதும்.
ப்ரியா சரி என்று சம்மதம் கூறினாள் .
"நாளைக்கு காலையில, நான் ரங்கநாதன் மாமாக்கு பேசுறேன் மா, நீ இப்போ, நம்ம விக்ரம் மாப்பிள்ளைக்கு சொல்லிடு."
"டேய், இந்த ஜாதகம் எல்லாம் பார்க்க வேண்டாமா, " காமாட்சி கேட்டார்.
"இன்னைக்கு மாப்பிளை எனக்கு பேசுனாரு மா அப்போவே, நான், அவர் ஜாதகம் காபி ஒன்னு கேட்டேன், எனக்கு போன்ல அனுப்பிட்டாரு."
"என் பிரெண்டோட அப்போவே போய் பாத்துட்டு, வந்துட்டேன்."
"ஒஹ், என், மேல நம்பிக்கை இல்லாம, இவரே, தம்பிக்காக பேசுனாரா," என்று மனதினில் நினைத்து, வேதனை அடைந்தாள், ப்ரியா.
தங்கையின் முகம் கவனித்து, "என்ன மா ரொம்ப டல்லா இருக்க ."
"இல்லைனா, உனக்கு எப்போ, அவரு பேசுனாரு," என்று ப்ரியா கேட்டாள் .
"எவரு,"
" அதான் என் புருஷன், "
"ஹேய், இல்ல, நம்ம அருண் மாப்பிளை தான் பேசுனாரு," என்று சிரித்தான்.
அதில் கண்கள் விரிந்து, ப்ரியா பார்த்தால், என்றால்
"ஹ்ம், உனக்கு எப்பவோ மாப்பிளை ஆகிட்டாரு போல,"
"அந்த புள்ளைக்கு, நம்ம காவ்யா புடிக்குமோ, அவன் அவசர படுற போல இருக்கு ."
"அம்மா மரியாதை, நம்ம கவிக்கு, அவர் தான் மாப்பிளை ."
"சரி டா அவர் என்ன தான் சொன்னாரு," என்று கேட்டார், காமாட்சி.
"ஹ்ம்ம் நம்ம கவிய ரொம்ப பிடிக்குமாம், எனக்கு தருவீங்களான்னு, ஏதோ மிட்டாய் கேட்குறது போல, கேட்டாரு," என்று கூறினான்.
"எனக்கு ப்ரியா கல்யாணத்துல இருந்து, அருண் மாப்பிளைய தெரியும் மா, ரொம்ப நல்ல மாதிரி, விக்ரம் மாப்பிளை போல தான்."
"நல்ல பிரென்ட் எனக்கு. "
"கவிக்கு நல்ல வாழ்க்கை காத்திருக்கு மா, மனசார சம்மதம் சொல்லு."
" நீ எது சொன்னாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும் டா, நாங்க பேருக்கு தான் பெத்தவங்க."
"தங்கச்சிங்களுக்கு நீ தான் அப்பா மாதிரி, அதுனால உன் ரெண்டு பொண்ணுங்களுக்கு நீ நல்லது தான் செய்வ ."
"நாளைக்கு கவி கிட்ட நீயே சொல்லிடு."
"திடுக்குன்னு கல்யாணம்ன்னா புள்ள என்ன நினைக்குமோ, அது வேற எனக்கு நினைப்பு தான்," என்று காமாட்சி மகனிடம் கூறினார்.
இவ்வாறு அங்கு மற்றவர்களின் பேச்சு சத்தத்தில், சுத்தமாக தூக்கம் பறந்து, அனைத்தும் கேட்டு கொண்டிருந்தாள் காவ்யா .
"என்னை எப்போ பார்த்தாரு அவரு, எனக்கு அவர் முகம் கூட நினைப்புல வர மாட்டிங்குது."
" பிடிக்குமாமே , ஐயோ,கவி அவ்வளவு தூரம் நீயும் கல்யாணம் செய்துகிட்டு போனா, அக்கா மாதிரி தான் உன்னால இங்க அடிக்கடி வர முடியாது."
"நாளைக்கு அண்ணன விட்டு பேச சொல்றாங்க, அண்ணா கேட்ட எனக்கு சரின்னு தான் சொல்ல வரும், என்ன பண்ணட்டும் ."
"அவ்வளவு தூரம் நானும் இருக்கணுமா," என்று சிணுங்கி கொண்டே முழித்திருந்தாள் .
அடுத்த நாள், கார்த்திக்க தந்தை, தெளிவாக இருக்கும் போது அவரிடம் சம்மதம் பெற்றான்.
கவியவிடம் கேட்டு அவள் முகம் பார்த்து நின்றான்.
அண்ணன் எது கூறினாலும், சரியாக தான் இருக்கும் என்றே வளர்ந்த அவள் என்ன என்று கூறுவாள் .
"நீ சொன்னா சரி ணா," என்று கூறி விட்டாள் .
அதன் பிறகு வேகம் வேகம் தான்.
ப்ரியாவும் ஊருக்கு சென்று விட்டாள் .
விக்ரம் ப்ரியா அடுத்த நாள் ஊருக்கு வந்து சேர்ந்த உடன், அவளிடம் விட்ட வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டான்.
வீட்டினருக்கும் மகிழ்ச்சியே.
அவ்வீட்டின் கடை குட்டியின் திருமணம் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இல்லை.
வருட கணக்காகியது என்று ரமா தான் எதற்கும் நேரில் சென்று பெண் பார்த்து விட்டு வரலாம் என்று கூறினார்.
அதற்கு, அருண் மட்டும் வரவில்லை, காவ்யா இப்பொழுது இருக்கும் புகைப்படம் வேண்டும் என்று மட்டும் கூறி அனுப்பினான்.
அருணை தவிர மற்ற குடும்பத்தினர், சென்னை வந்து காவ்யாவை பார்த்து விட்டு சென்றனர்.
வீட்டினர் அனைவருக்கும் காவ்யாவை மிகவும் பிடித்து போனது.
கார்த்திக் தான் காவ்யாவின் தற்போதைய புகைப்படத்தை அருணிடம் தொலைபேசியில் அனுப்பி வைத்தான்.
அவன் காவ்யாவின் தற்போதைய முகம் அவனுக்கு இன்னும் பிடித்தது,
இரவில் அவள் புகைப்பத்தை பார்த்துகொண்டே ஒரு உறக்கம்.
அவனுக்கு இந்த வயதில் இது எல்லாம் சிரிப்பாக இருந்தது.
"விக்ரம், கார்த்திக் மட்டுமே கல்யாண செலவு செய்ய வேண்டாம், நாமளும் கொஞ்ச பங்கு கொடுக்கலாம், பிரியா கல்யாண நேரத்திலயும் அந்த புள்ள, கொஞ்ச கஷ்ட பட்டுச்சு," ரமா தான் கூறினார் .
"ஹ்ம்ம், அதான் மா, நானும் லோன் போடலாம் இருக்கேன் ."
" கொஞ்சம் நாலு மாசம் கழிச்சி கல்யாணம் வைக்கலாமா," என்று விக்ரம் அங்கு பேசி கொண்டிருந்ததில், அது மட்டும் அருண் செவியில் விழுந்தது.
"அண்ணா, நான் பார்த்துக்கறேன், ஒரு மாசத்துலையே கல்யாணம் வைங்க," என்றான்.
இது வரை, அவன் எதுவும் பணம் என்று கொடுத்ததில்லையே, அதில் வீட்டினருக்கு ஆச்சரியம் தான்.
ரங்கநாதனுக்கு மகிழ்ச்சி, மகன் அவன் திருமணத்திற்கு அவனே செலவு பொறுப்பாக எடுத்து செய்கிறானே என்று.
"விக்ரம், அவன் கல்யாணம், அதான் அவன் செய்றேன்னு சொல்லிட்டான் இல்ல, நீ கார்த்திக் போன் போட்டு, இரண்டு பக்கமும் சேர்ந்து செய்யலாம்ன்னு சொல்லு, அந்த புள்ள தவிக்க போது."
"கல்யாணத்தை, சென்னைல வெச்சிடலாம் அண்ணா, எனக்கு தெரிஞ்ச பிரெண்டு இருக்கான், காஞ்சிபுரத்துல எல்லாருக்கும் டிரஸ் எடுக்கலாம், காவ்யாவுக்கு நானே செலக்ட் பண்றேன் ."
"டேய் உனக்கு எங்க டா காஞ்சிபுரத்துல பிரெண்டு இருக்கான்," என்று மண்டை காய்ந்தது, விக்ரமுக்கு.
நடுவில் இரண்டு நாள், அருண் எங்கு சென்றான் என்று தெரியவில்லை.
குடும்பத்தினர் அனைவருக்கும், உடை எடுத்து வந்தான்.
அதிலும் காவ்யாவிற்கு கேட்கவே வேண்டாம்.
முகுர்த்தம் சேலை, அவள் நிறத்திற்கு ஏற்றது போல், குங்கும நிறத்திலும், வரவேற்பில் அணிய, அதிக வேலைப்பாடுகள் செய்த ஆகாய வண்ண சோலி என்று அவ்வளவு பொருத்தமாக இருந்தது.
"அம்மா இந்த செயின் நல்லா இருக்கா நம்ம பக்க போட வேண்டியது" என்று ஒரு தாலி சரடு எடுத்தான் .
"அப்பறம் நான் கார்த்திக் மச்சான் கிட்ட பேசிட்டேன், சென்னைல மண்டபம், சாப்பாடு எல்லாம் அவர் பார்த்துக்குறார்."
"வீடியோ, போட்டோ, நம்ம ரிலேட்டிவ், எல்லாருக்கும் ட்ராவல், அப்பறம் ரெண்டு பக்க பத்திரிகையும் நம்ம பார்த்துக்குலாம்ன்னு சொல்லிட்டேன்."
"டேய் நான் ஏதாவது பேச இருக்கா," என்று ரங்கநாதன் கூட கிண்டலடித்தார்.
ஒரு தொகை என்று அண்ணன் மற்றும், தந்தையின் கையில் கொடுத்தான்.
"இந்தாங்க பா, நீங்களும் அண்ணாவும் தான் பார்ப்பீங்க, அமௌன்ட் இதுல இருக்கு."
குடும்பத்தினர் தான் வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தனர்.
"அம்மா இன்னைக்கு, வீட்டுல பூஜை போட வர சொல்லி இருக்கேன்,"
காமாட்சிக்கு ஒன்றும் புரியவில்லை கார்த்திக் கூறியது.
"என்ன பா," என்று முழித்தார்.
"சும்மா ஓடு, பிரிச்சி போட்டுக்கிட்டு இருக்க அதுக்கு, ஒரு முறை, மாடி எழுப்பி வீடு கட்டிடலாம்ன்னு இருக்கேன்."
காமாட்சிக்கு மகிழ்ச்சி தான், "சரி தான் பா, ஆனா, கல்யாண செலவு இருக்கும் போது எப்படி ."
"அம்மா, அருண் மாப்பிளை என்ன செலவு செய்ய விட மாட்டேங்குறாரு."
"நானே கேட்டு தான் மண்டபம், சாப்பாடுக்குன்னு நான் பார்ப்பேன்னு சொன்னேன்."
"கவிக்கு, அவ படிப்பு முடிஞ்சதும் ஒரு தொகைன்னு பணம் சேர்க்க ஆரம்பிச்சேன்."
"அது தாரளாமாவே இருக்கு."
" நம்ம அப்போ ப்ரியாக்கு சரியா செய்யல, கொஞ்ச கொஞ்சமா தான் அவளுக்கு செய்ய முடிஞ்சுது."
"இப்போ, அவளுக்கு நகை, எடுக்கலாம் ."
"ப்ரியாவுக்கு எப்படியோ, கொஞ்ச கொஞ்சமா செய்து ஒரு முப்பது பவுன் கொடுத்தோம் இல்ல ."
"அதே அளவுக்கு கவிக்கு போடலாம், அப்பறம் மாப்பிளைக்கு, ஒரு ஏழு பவுன் , சரியா."
"டிரஸ் எடுக்கலாம், மாப்பிளைக்கு நம்ம தான் பட்டு சட்டை, வேட்டி எடுத்து கொடுக்கணும்."
ஹான் அப்பறம் அவ காசு அப்டியே, அவ பேருல பேங்க்ல இருக்கு, அது அவளுக்கு அப்டியே இருக்கட்டும், அதுல இருந்து எதுவும் எடுக்க கூடாது."
காமாட்சி மலைப்பாக அனைத்தும் பார்த்து இருந்தார்.
"இவ்வளவு பணம் இவன் கிட்ட இருக்கா, கந்த துணி போட்டுக்கிட்டு திரியிறானே, ஒரு டிரஸ் எடுடான்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்."
"என் புள்ள தங்கம்," என்று எப்பொழுதும் போல் மெச்சி கொண்டார்.
வீடு கட்ட ஆட்கள் வந்து சேர்ந்தனர்.
"ஹ்ம் வாங்க, மொத்தம் மூணு ரூம் இருக்கு, இது எலாம் ஓடு எடுத்து கட்டணும், அப்பறம் இங்க இருக்க காலி இடத்துல, ஒரு ரூம் போட்டு சேர்த்து கட்டனும், இந்த பக்கம் மாடி வர மாதிரி வழி வைக்கணும், எல்லாத்துக்கும் எவ்வளவு ஆகும் பார்த்து சொல்லுங்க," என்று அவன் சத்தத்தில்
பக்கத்து வீட்டில் இருக்கும் அவர்களின் உறவினர்கள் வந்து எட்டி பார்த்தனர் என்றால், காமாட்சி அவர்களை மிதப்பாக ஒரு பார்வை பார்த்து, கழுத்தை வெட்டி சென்றார்.






































 

Saroja

Well-Known Member
கார்த்திக் ரொம்ப அருமை
கச்சிதமா வாழ்க்கையை
வழி நடத்துறான்
அருணும் விவரம் தான்
அழகான பதிவு
 

achuma

Well-Known Member
கார்த்திக் ரொம்ப அருமை
கச்சிதமா வாழ்க்கையை
வழி நடத்துறான்
அருணும் விவரம் தான்
அழகான பதிவு
Thanks sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top