கொலுசொலி 2

Advertisement

achuma

Well-Known Member
ஹாய் பிரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க.
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துக்களும் கொடுத்த அனைவர்க்கும் நன்றி.

அன்பின் இனியா, கதையில, நிறைய கமெண்ட்ஸ், வந்தது.
அது என்னை மேலும் எழுத ஊக்கிவித்தது.
அதே ஆதரவு , இந்த கதைக்கும் கொடுங்க .
எனது எழுத்துக்களில் ஏதேனும் தவறு இருந்தால், அதையும் சொல்லுங்க பா, நான் திருத்திக்கிறேன்.
இங்க, வெள்ளி மற்றும் சனி கிழமை, விடுமுறை
அப்போ எல்லாரும் வீட்டுல இருப்பாங்க.
நான் அந்த நேரத்தில லேப்டாப் எடுத்தா, வீட்டினர்க்கு காதுல இருந்து புகை வரும்.:):LOL:
அவங்கள கவனிக்கலையேன்னு கடுப்பாவங்க.
lkg பையன் கூட, மூஞ்ச தூக்கி வெச்சிப்பான் .
அதுனால், இன்றைக்கே இரண்டாவது பதிவு கொடுத்து, மூன்றாவது பதிவு, ஞாயிற்று கிழமை தருகிறேன்.
All take care



தன் தோள் சாய்ந்து போதையில் இருக்கும் தம்பியின் நிலை கண்டு ஒரு பக்கம் கோவமும், அதையும் மீறிய வருத்தமும் என்று விக்ரம் தத்தளித்து கொண்டிருந்தான்.
பிறகு அவனை தோளில் தாங்கி கொண்டு, அவன் அறையில் கொண்டு படுக்க வைத்து,


"உன்னையே நீ ஏன் வருத்திக்கிற, நீ அவ விழுந்து கிடந்தத உடனே கவனிச்சு இருந்தா, அவளை, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இருப்ப தானே."
"நடக்கணும் இருக்க வேண்டியது நடந்துச்சு, அதுக்கு நீ தான் காரணம்ன்னு, இப்படியே உன்னை நீ அழிச்சிப்பியா ."


"உடம்பு என்ன ஆகுறது, பகல் எல்லாம் எப்படி உழைக்கிற, நைட்ல இப்படி குடிச்சி உடம் கெடுத்துக்கிறியே," என்று விக்ரம் எவ்வளவு திட்டினாலும், அந்த போதையிலும், உண்மை காரணத்தை அருண் கூறாமல்,
"உனக்கு தெரிந்தது அவ்வளவு தான் அண்ணா," என்று மனதிற்குள்ளே நினைத்து கொண்டான்.


"சாப்பிட்டியா அருண் ."
"சாப்பிட்டேன் பிரதர், நீ ஒரி பண்ணாத, போ போய் படு, நானும் தூங்குறேன், " என்று திரும்பி படுத்து விட்டான்.


தம்பியின் தலை கோதி, ஏசி உயிர்ப்பித்து, கதவை சாத்தி விட்டு, உறங்க சென்று விட்டான் விக்ரம்.
அண்ணன் சென்றதை உறுதி படுத்தி விட்டு, அவன் தலையணை அடியில் மறைத்த வைத்த அவன் நாயகியின் தாவணி (துப்பட்டா ) எடுத்து இறுக்கமாக கண்ணில் கட்டி கொண்டு படுத்து விட்டான் .


அதுவே அவன் மனதிற்கு ஆறுதல், அவன் வாழ்வதற்கான உயிர் மூச்சு, என்று இருக்க கட்டி கொண்டான் .
எதில் இருந்தோ தப்பிப்பதற்காக, கண்ணை மூடி கொண்டான்.
அந்த தாவணி அவன் மேனியில் பட்டதும், சிறிது ஆசுவாசம் வர பெற்றவன் ," தினம் உன்னை பார்க்காம எனக்கு தூக்கமே வர மாட்டிங்குது ."


"இந்த வீட்டுல யாருக்காவது, அறிவு இருக்கா டீ, என்ன நம்ம பையனுக்கு, 29 வயசு ஆகுதே, அவனுக்கு கல்யாணம் பண்ணனும் தோணுதா ."
"ஹ்ம்ம், இந்த வீட்டுல சின்ன பையனா இருந்துகிட்டு, நானும் எதுவும் பேச முடியாது, இவங்க ஏதாவது அப்படி கல்யாணம் பேச்சு எடுத்தாங்கன்னா, நானும் என் மனசுல இருக்குறத சொல்லலாம் பார்த்தா எங்கே ,"
என்று அலுத்து கொண்டான் .


"உன்னை எப்போ கல்யாணம் பண்றது, உன்னோட எப்போ நேர்ல பேசுறது," என்று சலித்து கொண்டே, உறங்கி விட்டான் .
விடியல் அவர் அவர்க்கு காலில் சக்கரம் கட்டியது போல் தான் அனைவரும் சுழன்று கொண்டிருந்தனர்.
இன்று எப்படியாவது, தம்பியிடம் பேச வேண்டும் என்று காலையே வேலைக்கு புறப்பட்டு சென்ற விக்ரம் நினைத்து கொண்டான் .


என்ன தான் உயர் பதவியில் இருந்தாலும், அடிக்கடி, வாடிகையாளார் புகார்(customer complaint) என்று, வந்து விட்டால், வெளியே அலையும் வேலை விக்ரமிற்கு உண்டு .
அதிக உடல் அலைச்சல் வேறு .


அருண் அவன் கடைக்கு வந்தான்.
ஆரம்பத்தில் வெறும் மொபைல் ஷாப் என்று இருந்தது .
இப்பொழுது, அதனை பழுது பார்ப்பது, (லேப்டாப், சேல்ஸ் என் சர்வீஸ்) என்று ஆரம்பித்து அதுவும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.
அண்ணனுக்கு நிகராக வருமானம் தான் அருணும் சம்பாதிக்கிறான் .
என்ன வீட்டினர், விக்ரம் அளவிற்கு அருணுக்கு பொறுப்பில்லை என்று அவ்வப்போது, நினைப்பர், ஆனால் குறையாக, யாரும் அவனிடம் கூற மாட்டார்கள் .


இதோ, அவன் கடையில் பத்து சேல்ஸ் மேன் இருக்கிறார்கள்.
அனைவரும் ஒரு வாடிக்கியாளர்களுடன் தொலைபேசி, அதன் விலை, என்று அதனை பற்றி பேசி கொண்டு, நேரம் சரியாக இருந்தது.
அங்கு அருணும், முதலாளி என்ற எந்த பந்தாவும் இன்றி, அவர்களுடன் சகஜமாக இருப்பான் .
எப்பொழுதும் அருணை சுற்றி அவன் நண்பர்கள் கூட்டம் இருக்கும்.
அப்பகுதியின் முக்கிய வீதியில், அவன் கடை உள்ளது.


எப்பொழுதும் வாடிக்கையாளர் வருகை அங்கு அதிகம், லாபமும் அதற்கு ஏற்றது போல் தான்.
அருணும் அவன் தொழிலில் கவனமாக இருக்கும் நேரம், வந்து சேர்ந்தாள், ஷினி என்பவரின் மகள், ஷாக்ஷி .


இன்று அருணுடன் எப்படியாவது நேரில் பேசி சம்மதம் பெற்று வருமாறு, அன்னையின் தூண்டுதலின் பேரில் வந்து விட்டாள் .
ரங்கநாதனின் தங்கை முறை தான், சிவகாமியான ஷினி என்பவர்.
தூரத்து உறவு.

வேலை பிழைப்பிற்காக இங்கு வந்து, காலத்தின் போக்கில் தனது பெயரையும் அடையாளத்தையும் மாற்றி கொண்டு, பெரிதும் ஆர்பாட்டமாக சுற்றி கொண்டிருப்பர் ஷினியின் குடும்பம்.
அக்குடும்பத்தில் பிறந்த சாக்ஷி மட்டும் என்ன, அவளும் அதே தான் .


கடையில் அங்கு வேலை செய்து கொண்டிருப்போர், ஒரு நிமிடம் அவளின் வருகையை கண்டு, பவுடர் டப்பா வந்து விட்டது, என்று ஒருவருக்கு ஒருவர் சலித்து கொண்டே வேலையில் கவனமாக இருந்தனர் .
அவர்கள் அனைவரும் சாக்ஷிக்கு வைத்த பெயர், அது.


முகத்தில் கூடுதலாக, தன்னை சிறப்பாக காட்ட என்றே,ஒப்பனை செய்து, அரைகுறை ஆடையுடன் அருணை பார்பதற்க்கே இங்கு அடிக்கடி வருவாள் .
அவள் அவ்வாறு வரும் போதெல்லாம், அதிக ஆர்பாட்டமாகவும், இக்கடையின் வருங்கால, முதலாளி, என்று சுற்றி கொண்டிருப்பாள் .
ஒரு முறை, இவள் அலட்டல் தாங்காமல், அருண் வந்திருக்கும் நேரம், அங்கு பணிபுரிவோர் கூறியதின் பேரில், இவளை, ஒரு முறை நன்றாக திட்டி விட்டான்.
தந்தையின் தூரத்து உறவு, என்று ஒரு மரியாதைக்காக, மட்டுமே, அவள் கடைக்கு வந்தால், அமைதியாக இருப்பது.
ஆனால் அதே நேரத்தில், அவளின் எல்லை எது என்று அறிய வைத்து, அந்த எல்லையை தாண்டாத, அளவிற்கு, அவளை நிறுத்தி இருக்கிறான்.
ஷாக்ஷிக்கும், அருண் எந்த அளவிற்கு பிடிக்குமோ, அந்த அளவிற்க்கு அவன் ஒரு கண்ணசையவில் பயந்து விடுவாள் .






ஆகையால், அவன் கடையில் இல்லாத நேரம் வந்து, இங்கு ஆர்பாட்டம் செய்து செல்வாள் .
ஷினி, மகளுக்கு, அது வருங்காலத்தில், மகளுக்கு சேர வேண்டியது, அங்கு போய் பொறுப்பாக, கவனித்து வா என்று இப்படி தப்பான, போதனைகள் வழங்கி, மகளுக்கு, அருண் மீதும், அவன் கடை மீதும், ஒரு உரிமையுணர்வு உருவாக்கி விட்டார்.
ஆனால், அருணை நெருங்க முடியவில்லை அவளால் .
இதோ கடந்த ஒரு மாதமாக, ரங்கநாதன் வீட்டில் சாக்ஷி, மற்றும் அருணுக்கு திருமண பற்றி ஷினி பேசியும், எந்த பதிலும் அப்பக்கம் இருந்து வராத காரணத்தால், மகளையே, அருணிடம் நேரடியாக பேசி வருமாறு, கூறி அனுப்பி வைத்தார்.

அன்னை கூறியதற்கு தலையை ஆட்டி வைத்தாலும், இங்கு அருணை நேரில் கண்டதும் ஒரு பயம்.

கடையின் உள்ளே நுழையும் போதே, "வா சாக்ஷி," என்று வர வேற்று விட்டு, வேலையில் கவமாகினான், அருண்.
அவள் அவனை பார்வையிலே பருகி கொண்டிருந்தாள்.
ஷினிக்கு, எப்பொழுதும், ரங்கநாதனின் குடும்பத்துடன் ஒரு போட்டி, உண்டு.
ஆரம்பத்தில் அவருக்கு இங்கு வந்த புதிதில் அவர்களுக்கு நிகரான வருமானம் இல்லை.
நாளடைவில், அந்த போட்டி, பொறாமையாக மாறி, இறுதியில், தனக்கு பிறந்த மகள்களை அங்கு கட்டி கொடுத்து, தனது மகள்களே எங்கு ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம்.
முதலில் அவரின் முதல் மகளுக்கு விக்ரமை கேட்டார்.
சரி ஒரு வகையில் தங்கை உறவு, என்று ரங்கநாதன் நினைத்தாலும், விக்ரமின் ஆசைக்கு ஏற்ப, மகனின் எதிர்பார்ப்பின் படி, வெளியே சம்மதம் அமைந்து விட்டது.
அந்த கோவம் ஒரு பக்கம், ஷினிக்கு .
ஆகையால், சாக்ஷி, கல்லூரியில் அடியெடுத்து வைத்ததும், அருணுக்கு தான் ஷாக்ஷியுடன் திருமணம் என்று, மகளுக்கு அருண் மீது ஒரு எண்ணம் வர வைத்ததில், இப்பொழுது, அவள் அருண் மீது பைத்தியமாக இருக்கிறாள் .
பெரியவர்கள் செய்யும் சிறு தவறு, அவர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையே பாதிக்கும்.
ஷினி, பிரியா தான் அவ்வீட்டில் அனைத்தும், என்பதால், அவளிடம் முதலில் கூறி, அவ்வீட்டின் பெரியவர்கள் வரை சென்று, ஆனால் அருணிடம் கூற நேரம் அமையவில்லை.
அவர்களுக்கும், ஷினி, இதில் வருத்தம் அடைய வேண்டாம், சொந்தம் என்றும் வேண்டும் என்ற காரணத்திற்காக, சரி என்று ரங்கநாதன் வீட்டில் பேசி பார்க்கலாம் என்று இருந்தனர்.
ஆனால் யாரும் இன்னும் உறுதியாக கூறவில்லை.
ஆகையால், மகளையே, அனுப்பி விட்டார், அருணிடம் கேட்டு வர .
இவை எல்லாம், நினைத்து, சாக்ஷி அமர்ந்திருந்தாள்.
கண்கள், அவனை ரசித்து கொண்டிருந்தது.
அவனோ, அங்கிருக்கும் வாடிக்கியாளரிடம் உரையாடி கொண்டிருந்தான்.
அவன் முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகை.
"ஹ்ம்ம், சாக்ஷி, இன்னைக்கு இவன எப்படியாவது கைக்குள்ள போட்டுக்கோ டீ," என்று அவளுக்கு அவளே நினைத்து கொண்டாள் .
"ஆள் பாரு எப்படி ஸ்மார்ட்டா இருக்கான், இவன் எந்த டிரஸ் போட்டாலும் சூப்பரா இருக்கு."
முரட்டு ஜீன்சும், ஊதா நிற சட்டையும், கையில் விலையுர்ந்த கை கடிகாரம், அவன் உபயோகிக்கும் வண்டியும் விலையுயர்ந்தது, என்று அனைத்திலும் பிராண்டட் .
"ஹ்ம்ம், கருப்பும் இல்லாம, வெள்ளையும் இல்லாம, அட்ராக்ட்டிவா ஒரு கலர்."
" நல்ல ஹைட், ஜிம் உடம்பு, சூப்பரா ஹீரோ மாதிரி இருக்கான் ."
"அந்த மீசையை அப்படியே இழுத்து, ஒரு கிஸ் கொடுக்கணும் போல இருக்கு, ஆனா, கிட்ட கூட நெருங்க விட மாட்ரானே."
"அம்மா சொல்றது போல, நான் சரியான, பேக்கு, இவன் முறைச்சாலே, ரெண்டடி பின்னாடி போய்டுறேன்."




"ஆனா இன்னைக்கு மட்டும் இவன்கிட்ட சம்மதம் வாங்கல, இவ்வளவு அழகா பிறந்த நான் ரொம்பவே வேஸ்ட்," என்று தன்னயே திட்டி கொண்டு, அவன் வேலை முடிய காத்திருந்தாள் .
பணம் செலுத்தி, ஒரு தொலை பேசி வாங்கி கொண்டு, வாடிக்கையாளர் சென்ற உடன், அடுத்து யாரேனும் வருவதற்குள்,
"அருண் ப்ளீஸ், வாங்களேன், காபீ ஷாப் போலாம் ," எங்கு ஏதேனும் திட்டி விடுவானோ, என்று வேகமாக கூறி முடித்தாள் .
அவள் இதுவரை, அவனிடம் எங்கும் வெளியே அழைத்ததில்லை, அதில் கண்கள் விரிந்து ஒரு நொடி பார்த்தாலும், உடனே நெற்றியை சுருக்கி, கொண்டு,
"ஷாக்ஷி, எனக்கு வேலை இருக்கு, அதுவும் இல்லாம, இது என்ன புதுசா, என்ன வெளியே கூப்பிட்ற."
"என் பிரெண்ட்ஸ் தவிர யாரோடும் என்னால வெளிய போக முடியாது," நீ என் நட்பு வட்டத்திலும் இல்லை என்று மறைமுகமாக கூறினான்.
அவனுக்கு இவளின் ஆர்வ பார்வையும், பேச்சும் ஓரளவிற்கு இவளின் எண்ணம் புரியும்.
ஆனால், தந்தையின் உறவு, என்ற மதிப்பிற்க்காக மட்டுமே, அவள் வருகைக்கு, அமைதி கொள்வான்.
தேவையில்லாத பேச்சுக்கள் அவளிடம் என்றும் இல்லை.
அவளை ஒரு எல்லையில் நிறுத்தவே பட்டு கட்டரித்தார் போல் பேசுவான்.
ஆனால், ஷினி, அடிக்கடி, மகளை ரங்கநாதன் வீட்டிற்கு அழைத்து சென்று, பெரியவர்கள் முன்பு, அடக்கமாக இருப்பது போன்று, பழக்கினார் .
அவளும் அவர்களின் முன்பு சிறப்பாகவே நடித்தாள் .
திருமணத்திற்கு பிறகு பார்த்து கொள்வோம் என்ற எண்ணம் அன்னைக்கும் மகளுக்கும்.
ஏன் பிரியாவை கூட , ஒன்றும் இல்லாமல் செய்து, தனது மகளின் கையே ஓங்கி நிற்க அனைத்து போதனைகளும், இப்பொழுதே மகளுக்கு வழங்கப்பட்டது.
இது எதுவும் அருணிற்க்கே தெரியாதே.
அங்கு பிரியா, ரங்கநாதன், ராமாவை ஏமாற்றுவது போல் , இங்கு அருணிடம் முடியாதே என்று தவித்தாள் .
"இப்போ, வெளிய கூப்பிட்டாலும் வர மாட்டான், இங்க எல்லார் முன்னும் பேசுனா, என்ன ஏதாவது திட்டிட்டா, ஏற்கனவே இங்க வேலை செய்றவங்க என்ன இளக்காரமா தான் பார்க்குறாங்க ," என்று மனதில் நினைத்து, "ப்ளீஸ் அருண், ஒரு டென் மினிட்ஸ், உன் கூட கொஞ்சம் பேசணும் ,"என்று கெஞ்சவே ஆரம்பித்து விட்டாள் .
"கடைக்கு வெளியே, வா சாக்ஷி," என்று கடையின் படிக்கட்டு வழி நின்று கொண்டான்.
யாரும் இல்லை என்று உறுதி எடுத்து கொண்டு, அவனின் அருகில் சென்று நின்றாள் .
இப்போ சொல்லு , என்று கால்களை விரித்து, கைகளை கட்டி கொண்டு, அவன் நிமிர்ந்து நின்ற விதம் பார்த்து, பேச வந்ததை மறந்து, அவனை சைட் அடிக்க ஆரம்பித்து விட்டாள் .
"இவன் ஏன் படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டான், இவன் ஸ்மார்ட்னெஸ்க்கு இவன் படிப்பை முடிச்சி இருந்தா, எங்கேயோ இருப்பான் ."
அதற்குள் விசு படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல், சாக்ஷி முகத்தில் மிகவும் நெருக்கமாக, ஷினி வந்து சேர்ந்தார் கூடவே அவரின் அறிவுரையும் .
"அடியேய் , நீ பேருக்கு இன்ஜினியரிங், சொல்லிட்டு, எல்லா பாடத்திலும் அரியர் வெச்சி இருக்க."
"இந்த காலத்துல, பொண்ணு, நல்லா படிச்சி கை நிறைய சம்பாதிக்கணும்ன்னு நினைக்குறானுங்க ."
"ஒழுங்கா என் அண்ணன் பையன, மடக்குற வழிய பாரு."
"அவங்க தான் தகுதி, படிப்பு, வசதி எதுவும் பார்க்காம உன்னை, ஏத்துப்பாங்க ."
"அதுவும் இல்லாம, நீ அங்க சுதந்திரமா இருக்கலாம்."
"என் அண்ணி, பொண்ணு இல்லாத குறைய, போக்க மருமகளுங்கள தாங்குவாங்க."
"அங்கே ஒன்னும் இல்லாத பிரியா பாரு, எப்படி வாழுறாளோ ."
"அதுவுமில்லாம, அவளே எல்லா வேலையும் செய்றா, நீ அங்க போய் ராணி போல இருக்கலாம்."
"அவன் நல்லா பார்த்துப்பான், சொந்தமா தொழில் செய்றான், கை நிறைய வருமானம், ஒழுங்கா அவன உனக்கு பிடிக்க வை," என்று கூறிய அனைத்தும் கண் முன் தோன்றியது .
"மச் சாக்ஷி," என்றதும், சுதாரித்து, "அருண், உங்களுக்கு, என்னோட பார்வை பேச்சு, எதுவம் புரியலையா ," என்று தைரியத்தை வரவழைத்து நேரடியாக கேட்டே விட்டாள் .



















 

Saroja

Well-Known Member
அடக்கடவுளே இவ இப்ப
இவன் கிட்ட நல்லா. வாங்கிட்டு போகப் போறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top