கொலுசொலி 1

Advertisement

achuma

Well-Known Member
ஹை, பிரெண்ட்ஸ் , பதிவினை படித்து விட்டு உங்களின் கருத்துக்களை தெரிய படுத்துங்கள் நட்புக்களே.
அடுத்த பதிவு, வரும் வெள்ளி அன்று.
மறக்காம படிச்சிட்டு கமெண்ட்ஸ் சொல்லிடுங்க பிரெண்ட்ஸ்.
All Take Care

கொலுசொலி

ரங்கநாதனின் பூர்வீகம் மதுரை பக்கம், படித்து அவருக்கு மும்பையில் வேலை கிடைக்கவே அங்கு வந்து சேர்ந்தார்.
அதன் பிறகு திருமணம், குழந்தைகள் என்று அவரின் வாழ்வு மும்பை என்று ஆனது.
பிள்ளைகளின் படிப்பும், அவர்களின் வேலையும் என்று இப்பொழுது அந்தேரியில் வசித்து வருகிறார்.

ஜன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி, பத்துக்கு பத்து அறையிலும், ஒரு குடும்பமே வசிக்கும் அளவுக்கு அங்கு அதிகளவில் அது போல் வீடுகள் இருக்கும்.
அவ்வாறு தான் பலரும், வேலைக்காக, குடும்பத்திற்காக என்று அங்கு வசித்து வருகின்றனர்.

அதில், ரங்கநாதனின் வீடு , மூன்று அடுக்கு வீடு.
முதலில் அவர் உழைப்பில் இரண்டு அடுக்கு வீடாக தான் உருவாக்கினார் .
பிறகு காலத்திற்கு ஏற்ப, குடும்பம் பெருசாகவே மூன்று அடுக்கு வீடாக இப்பொழுது, பிள்ளைகளால் உருவானது .
கீழ் தலத்தில், ரங்கநாதன் அவர் மனைவிக்கு, என்று ஒரு அறை, கூடம், சமையலறை, சிறிய பூஜையறை .
முதல் தலத்தில், அவரின் முதல் மகன், விக்ரம் மற்றும் அவன் மனைவி, குழந்தைகளுக்கு என்று ஒரு அறை, அங்கு ஒரு வரவேற்பறை உள்ளது.
அதே போன்று இரண்டாம் தலத்தில், நம் நாயகன் அருணுக்கு, என்று உள்ளது.
அதற்கும் மேல் மொட்டை மாடி .
அங்குள்ள அறைகள் அனைத்தும் சிறிய அளவில் தான் இருக்கும்.

அந்த பகுதியில், அவர் செல்வாக்கு மிகுந்தவர், என்று கூறும் அளவிற்கு, தேவையான வசதிகளோடு, இருக்கின்றனர்.
அதே போல், ரங்கநாதன் குடும்பத்திற்கு என்று மதிப்பும் மரியாதையும் உண்டு.
ரங்கநாதன், புகழ்பெற்ற, மின்சார துறையில் வேலையில் இருந்தார்.
ஒரு விபத்தில் அவரின் ஒரு கால் இழந்து, பிறகு, அவரின் மருத்துவ செலவுகள், சிகிச்சை ,பிறகு கட்டை கால் போன்று பொருத்துவதில் என்று ஏழு வருடங்களுக்கு முன் அவரின் குடும்பம் பெரிதும் துவண்டு போனது.

அதில், அவரின் வேலையும் இழந்து, மனிதர் மிகவும் துவண்டு போனார்.
வீட்டினில் அவரின் அறையே என்று முடங்கி விட்டார்.
அதன் பிறகு குடும்ப பொறுப்பு, என்று அனைத்தும் விக்ரம் சுமந்து, இப்பொழுது வரை குடும்பத்தை தாங்கி நிற்கிறான் .
விக்ரம், மார்க்கெட்டிங் மேனேஜராக லட்சங்களில் வருமானம்.
விக்ரம் குடும்பத்திற்கு மிகவும் பொறுப்பான தலைமகன் .

சென்னையில் உள்ள, நண்பனின் திருமணத்திற்கு சென்று வந்ததில், ஏதோ அவனுக்கு, தமிழ் நாட்டில் இருந்து தான் பெண் வேண்டும், என்று அவனின் ஆசையை, பெற்றோருக்கு தெரிய படுத்தினான்.
அதில், அவர்கள், மகனுக்கு, தமிழ்நாட்டில் உள்ள சொந்தங்களிடம் கூறி, அவர்கள் வழியாக கிடைத்த வரன் தான் பிரியா .
எப்படி, ரங்கநாதனுக்கு ஏற்ற மனைவியாக ரமா இருந்தாரோ, விக்ரமிற்கு, பிரியா ஏற்ற மனைவியாக, அமைந்தாள் .

புகைப்படத்தை பார்த்ததும், விக்ரமிற்கு மிகவும் பிடித்து, விடவே, உடனடியாக அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.
பிரியா குடும்பத்தினர் வசதியில் மிகவும் பின் தங்கிய குடும்பம்.
ரங்கநாதன் தம்பதினியினர், ஏற்ற தாழ்வு பார்க்காது, மரியாதை கொடுக்கும், குணம் கொண்டவர்கள்.
பிள்ளைகளையும் அப்படியே வளர்த்தார்கள்.

விக்ரம் மாப்பிளையாக அமைந்ததில், பிரியா குடும்பத்தினர் தான், புண்ணியம் பெற்றவர்கள், என்று அவள் வீட்டில் எப்பொழுதும் நினைத்து கொள்வர்.
உண்மையில், அங்கு பிரியாவை புகுந்த வீட்டினில் தாங்கினர், என்றே கூறலாம்.
ப்ரியாவும், விக்ரமிற்கு, ஏற்ற துணை.

அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்த, ஐந்து வருடம் கழித்து, இரண்டாம் மகன், பிறக்கும் நேரம் தான், ரங்கநாதனுக்கு விபத்து ஏற்பட்டு, குடும்பம் துன்பத்தில் மூழ்கியது.
அப்பொழுது, விக்ரமுக்கு அவள் துணை இல்லையென்றால், குடும்பம் எப்படி இருந்து இருக்குமோ, என்று அனைவரும் நினைப்பர்.

மருத்துவமனை, சென்று வருவது, வீட்டு வேலைகள், உணவு, என்று அவளுக்கு நேரம் சரியாக இருக்கும்.
அருணும் அப்பொழுது, தான் கல்லூரி, இரண்டாம் ஆண்டில் இருந்தான் .
நடுவில் பண பற்றாகுறை, , என்று பல பிரச்னை.
இதில், சரியான கவனிப்பு பிரியாவிற்கு இல்லாமல் போனதில், இரண்டாம் பிரசவத்தில் அவளுக்கு சிக்கல் .

அதில் குழந்தை பிறக்கும் போது எதுவும் தெரியவில்லை .
அவன் ஒரு வருடம் கழித்து நடக்கும் போது, இடது பக்க கால் ஏதோ சாய்ந்தது போல், இருப்பதாக வீட்டினர் கண்டுபிடித்தனர்.
உடனே மருத்துவரிடம் கேட்டதற்கு, அவளின் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட, உடல் குறைபாடு, என்று, கூறி, இதற்க்கான சிகிச்சை, அவனின் ஆறு வயதில் தான் செய்ய முடியும் என்று, சில மருத்துவ, அறிவுரைகள் கூறினர் .

அதில் குடும்ப உறுப்பினர், அனைவரும் மேலும் வருந்தினார்.
தன்னால் தானோ, தான் சரியாக கவனிக்கவில்லையோ, என்று, விக்ரம், நினைப்பான் .
ரங்கநாதன், ரமா மருத்துவமனையை பழி என்று கிடைத்ததில், மருமகளை சரியாக கவனிக்கவில்லையோ என்று வருந்துவர்.

ஆனால், அதற்கான காரணம், அருண் மட்டுமே, என்று, உறுதியாகவே நினைப்பான்.
தான் கவனமாக இருக்காமல் விட்டோமோ, என்று அருண் எப்பொழுதும் நினைத்து வருந்தும் நிலை .
அது அவனுக்கு மட்டுமே, தெரிந்த காரணம்.

பிரியா, அவ்வீட்டின் ஆணிவேர்.
ரங்கநாதனிற்க்கு ஏற்பட்ட, விபத்திற்கு பிறகு, கணவருடன் ரமா, அதே அறையில் காலத்தை கழித்தார்.
தம்பதியினர், தேவையில்லாது, அறையில் இருந்து வெளியே வருவதில்லை.
அங்கு அனைத்தும், பிரியா இன்றி எதுவும் இல்லை, என்ற நிலை தான்.
விக்ரம் பிரியாவிற்கு திருமணம் முடிந்து, பத்து வருடம் ஆகிறது.
முதல் மகன், நான்காம் வகுப்பும், இரண்டாம் மகன், lkgயில் இருக்கிறான்.
பிள்ளைகள் படிப்பும், புகழ்பெற்ற பள்ளியில் தான்.

இதோ, இன்றும், குடும்ப தலைவனாக, பூஜை செய்து விட்டு, ரங்கநாதன், அவர் அறைக்குள் முடங்கி கொண்டார், அவருடன், ராமாவும் சென்று விட்டார்.
பிரியாவும், குழந்தைகளுக்கு, உணவு எடுத்து வைத்து, உன்ன செய்தாள் .

கணவனும், கொழுந்தனும், வருவார்கள் என்று பார்த்தல், அங்கு ஏதோ அண்ணனுக்கும் தம்பிக்கும், வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்தது.
மாமனார், மாமியாருக்கு, அவர்களின் அறைக்கே உணவே சென்று விடும்.

"டேய் என்ன இன்னைக்கும், உனக்கு உன் பிரெண்ட்ஸ் பார்க்கணுமா, எங்களோட இருக்க முடியாதோ, எனக்கே எப்போவோ தான் லீவு கிடைக்குது, எங்களோட வீட்டுல சாப்பிட்ட என்ன உனக்கு," என்று அருணுடன் விக்ரம் உரிமை சண்டையிட்டு கொண்டிருந்தான்.
"அண்ணா, நான் கிளம்புறேன், வீட்டுல போர், மச் "என்று சலித்து கொண்டே, கிளம்ப வாசல் வரை சென்று விட்டான் .
"தம்பி, என்ன சாப்பிடாம போறீங்க, இன்னைக்குமா" என்று பிரியா ஒரு பார்வை பார்த்தாள்.

அதற்குள், இளைய மகன் "சித்தா," என்று அழைத்து கொண்டே, இடது காலை, ஒரு பக்கம் சாய்ந்து நடந்து வந்தான் கையில் இனிப்புடன்.
அதில் அருணுக்கு, ஒரு நிமிடம் அக்காலை பார்த்து உள்ளம், கசிய தன்னால் தானே, என்று வருந்தி, அண்ணன் மகனின் வருகைக்கு ஏற்ப, மண்டியிட்டு அமர்ந்தான்.

"இந்த சித்தா," என்று அவனுக்கு இனிப்பு ஊட்டி விட்டது, அந்த வாண்டு.
யாரும் தெரியா வண்ணம், இமையோரம், கசிந்த நீரை, மறைத்து, சிறிது மட்டும் எடுத்து கொண்டு, குழந்தைக்கே மீதி இனிப்பை ஊட்டி விட்டு, கிளம்பி விட்டான் .
இதற்க்கு பயந்து தானே, வீட்டினிலே அதிகம் இருப்பதில்லை .

"என்னங்க, அதுக்குள்ள, தம்பிய அனுப்பிடீங்க, எல்லாரும் சாப்பிட்டதும், ஷினி ஆன்டி, அவங்க பொண்ணுக்கு, நம்ம தம்பிய கேட்டாங்க, அது பற்றி பேசலாம்ன்னு இருந்தேன்."
"உங்களுக்கு தம்பிக்கு, கல்யாணம் பண்ற ஐடியா இருக்கா இல்லையா," என்று பொறுப்பாக கணவனிடம் சண்டைக்கு நின்றாள் .

"ரியா, டார்லிங், நீ சண்டை போடுறியா, கொஞ்சம் சொல்லிட்டு செய், எனக்கு, பயமே வர மாட்டங்குது," என்று மனைவியை கிண்டலடித்தான் .
"உங்களுக்கு சிரிப்பா இருக்கா, அவர் வீட்டுலயே பார்க்க முடில, ஒரு மாசமா, நானும் அத்தை மாமனுக்கு சொல்லி பார்த்துட்டேன், இன்னைக்காவது நீங்க வீட்டுல பிடிச்சி வைப்பீங்கன்னு பார்த்தா, அவர் கிளம்பிட்டாரு ."

"சரி டீ , எங்களுக்கு, அவனை எதுலயும் போர்ஸ் பண்ணி பழக்கம் இல்லை."
"இன்னைக்கும் அவனுக்கு அவங்க கூட்டாளிகளோட, இருக்கனும், கிளப்பிட்டான்."
"இப்போ என்ன, நான், ஆபீஸ்ல, இருந்து கூட அவனுக்கு போன் போட்டு பேசுறேன், சலிச்சிக்காத, " என்று அவளின் தோளில் கை போட்டு அணைத்தான் .
"அஹ போதும், போதும், ஹால்ல, என்ன பண்றீங்க," என்று அவன் கையை தட்டி விட்டு, சிட்டாக பறந்தாள் .

பிறகு மாமனார், மாமியாருக்கு உணவு எடுத்து சென்றாள் .
"என்ன மா, இன்னைக்கும் அவன் வெளியே கிளம்பிட்டான், என்று ரமா, கேட்டதும், அவர் கடைக்கு கிளம்பிட்டாரு அத்தை."
"அப்படியே அவர் பிரெண்ட்ஸும், பார்த்துட்டு வரேன் கிளம்பிட்டாரு."

"ஹ்ம்ம், என் கால் மட்டும் சரியா இருந்து இருந்தா, அவன் ஒழுங்கா காலேஜ் படிச்சி இருப்பான்," என்று ரங்கநாதன் வருந்தினார்.

"இப்போ, ஏன் மாமா, வறுத்த படறீங்க, அவர் படிக்கல, அதுனால்,என்ன, சொந்தமா மொபைல் ஷாப் வெச்சி இருக்காரு, தம்பிக்கு வருமானம் இல்லைனா, ஷினி ஆன்டி அவங்க பொண்ணுக்கு கேட்பாங்களா," என்று வக்காலத்து வாங்கினாள் .

"அதில் பெரியவர் இருவரும் சிரித்து விட்டு, "அதான, அந்த ஷினி, லேசு பட்டவ இல்லை, ஏற்கனவே நம்ம முத பயனுக்கு அவ பெரிய பொண்ண கேட்டா, நம்ம வெளிய பார்த்தோம்."
"இப்போ, இரண்டாவது பொண்ணுக்கு கேட்குறா, அருணுக்கு வருமானம் இல்லைனா, பொண்ணு கொடுப்பாளா என்ன," என்று ரமாவும் அந்த ஷினி என்பவரை பற்றி நொடித்து கொண்டார்.

அங்கு பேச்சுகளோடு, பெரியவர்களுக்கு, உணவு வேலை முடிந்தது.
மற்ற வீட்டு வேலைகள் அனைத்தும், முடித்து, குழந்தைகளை, உறங்க வைத்து, துவைத்த துணி எல்லாம், முடிப்பதற்கு எடுத்து வைத்தாள் .

உடனே, ப்ரியாவின் அன்னையிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரவே, பிரியா அவள் போன் எடுத்து அன்னையுடன் பேச ஆரம்பித்தாள் .
"ஹ்ம்ம் சொல்லு மா, பூஜை முடிஞ்சுதா," என்றதும், "எல்லாம் ஆச்சு டீ, நீங்க எல்லாம் சாமி கும்புடீங்களா, சாப்டாச்சா," என்று கேட்டார் ப்ரியாவின் அன்னை, காமாட்சி .

"இப்போ தான் மா, அவர் பசங்க , எல்லாரும் தூங்குறாங்க, நீ என்ன பண்ற, அப்பா, வீட்டுல இருக்காரா ."
"ஆமா அந்த ஆளு குடிச்சிட்டு எங்க உழுந்து கிடக்குதோ, அதுக்கு நல்ல நாளுன்னு ஏதாவது தெரியுமா," என்று சலித்து கொண்டார்.
"இப்படி குடிச்சி குடிச்சி தான், அவங்க கூட பிறந்தவங்க, வீட்டு பத்திரத்தில ஏமாத்தி கையெழுத்து வாங்கிடாங்க ."
" இப்போ, அந்த சோகத்தை மறக்குறன்னு இன்னும் குடி அதிகம் தான் ஆச்சு,"
" ஏதோ நான் கொஞ்சம் சுதாரிப்பா இருக்கவே, மூணு வீட்டுல ஒரு வீடு என் பேருல இருந்தது, இல்லை, அதுவும் கொடுத்துட்டு நாடு தெருவுல தான், இருந்து இருக்கனும்."

எப்பொழுதும் போல், மகளிடம் புலம்பி கொண்டிருந்தார்.
சொந்தங்களால், ஏமாற்ற பட்ட வலி, அன்னை எப்பொழுதும் இப்படி தான், புலம்புவர் என்று பெருமூச்சு, விட்டு கொண்டே

" அம்மா, நல்ல நாள் அதுவுமா, இப்படி புலம்பாத மா, அப்பாவ இன்னைக்காவது எதுவும் சொல்லாம இரு."
"பக்கத்துல, இருக்க, அந்த ராசாத்தி அக்கா பையன அனுப்பி, அப்பா எங்க இருப்பாருன்னு பார்த்து கூட்டிட்டு வர சொல்லு."
"அவருக்கு திட்டாம சாப்பாடு போடு " என்று அன்னயை தேற்றி, அனைவருக்கும் ஏற்ப பதில் கொடுத்து, அழைப்பை துண்டித்தாள், பிரியா .

அதற்குள், பொழுதும் கழிந்து, இரவு, பத்து மணி, நேரம், வீட்டு கதவை தட்டினான் நம் நாயகன் .
விக்ரம் சென்று கதவை திறந்து, தம்பியின் நிலை கண்டு வருந்தினான்.
அவனை நெருங்கிய, நேரம் மதுவின் வாடை, அருண் மேலிருந்து.

"டேய்," என்று விக்ரம் பல்லை கடித்ததும், "சாரி ப்ரோ, என்னால மறக்க முடியல, என்னால தான் எல்லாம் என்னால தான்," என்று உளறி கொண்டு, அவன் தோள் சாய்ந்து விட்டான் .
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு ஆரம்பம்
என்ன ஆச்சு
அருணால
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top