கொலுசொலி மயக்குதடி - 27

Advertisement

வாசு உங்க பையனா அத்தை என நிலா கேட்ட கேள்விக்கு என்ன சொல்லப் போகிறாரோ என அவரையே பார்த்தபடி நின்றிருந்தாள்....

உனக்கு எல்லாமே சொல்றேன் சிவாக்குட்டி.. என்றவர் காபியை கலந்து கொண்டு வெளியே வந்தார்..
நிலாவிற்கு வேறு வழி இல்லாமல் போகவும் அவரைப் பின்தொடர்ந்து வந்தாள்...

சக்தியின் அருகில் சிவகாமி அமரவும் வாசுவின் அருகில் நிலா அமர்ந்தாள்.. ஊரைப்பற்றி வாசு அவரிடம் விசாரிக்க நிலா எதையும் யோசிக்க முடியாமல் அமர்ந்திருந்தாள்...

நேரம் ஆயிருச்சு சக்தி இனிமேல் சமைக்க முடியாது சோ நீயும் வாசுவும் போய் வெளியே போய் ஏதாவது வாங்கிட்டு வாங்க....

தன் அம்மா நிலாவுடன் ஏதோ பேசப் போகிறார் என நினைத்த சக்தியும் வாசுவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்..

கதவை பூட்டிவிட்டு சிவகாமி மீண்டும் வந்து நிலாவின் அருகில் அமர்ந்தார்... அவளோ வாசுவைப் பற்றிய சிந்தனையில் அப்படியே அமர்ந்திருந்தாள்....

சிவா என்றவாறு சிவகாமி அவளின் தோளில் கை வைக்கவும் அவரை நிமிர்ந்து பார்த்தாள்...

எனக்கு தெரியும் டா நீ பயங்கர குழப்பத்தில் இருக்கனு... வாசு உன்னோட அத்தை பையன்னு சொன்னேன்ல...

ஆமா அத்தை எனக்கும் அதுதான் குழப்பமாக இருக்கு...

வாசு என்னோட பையன் இல்ல டா... என்னோட அக்கா தேவகியோட பையன்...

என்னது உங்களுக்கு அக்காவா... அவளால் நம்பவே முடியவில்லை...

உங்க அப்பா கூட பொறந்தது இரண்டு பெண் பிள்ளைகள்...

மூத்தவங்க தேவகி.. அடுத்தது நான்... அப்புறமாக தான் உங்க அப்பா என்று விளக்கினார்....

என்ன அத்தை சொல்றீங்க அவளிற்கு உள்ளுக்குள் ஒரு பிரளயமே வெடித்தது...

நம்ம குடும்பம் ரொம்ப பேரும் புகழும் வாய்ந்த குடும்பம்.. எங்க குடும்பத்துல எல்லாரும் மூத்த பொண்ணுனு அவங்க மேல அளவு கடந்த பாசம்.. என்னோட அக்கா தேவகி அப்பாவுக்கு ரொம்ப செல்லம்.. அக்கா அக்கானு உங்க அப்பா அவரையே சுத்தி வருவாரு...

இடையிட்ட நிலா அப்படி ஒரு அத்தையை நான் பார்த்ததே இல்லையே என கேட்டாள்...

நீ பொறக்கும் போதுதான் அவங்க வீட்லயே இல்லையே.. சிவகாமி பேசியது அவளிற்கு குழப்பமாக இருந்தது...

என்ன சொல்றீங்க அவங்க ஏன் இப்போ நம்ம கூட இல்லை...

காதல் மா... எல்லாத்துக்கும் காரணம் காதல்... அந்தக் காலத்திலேயே டிகிரி முடிச்ச எங்க அக்காவை பார்க்க எல்லாருக்கும் பெருமை...

அவங்களை எங்க குடும்பமே ஒரே அடியாக தலைமுழுக காதல் மட்டும் காரணம் இல்லை.. இன்னும் ஒண்ணு இருக்கு..

வேற என்ன அத்தை மறைக்காம சொல்லுங்க.. நிலா அவரை வற்புறுத்தினாள்..

சொல்றேன் மா... தேவகி அக்கா தன்னோட டிகிரி முடிச்ச கையோட அவரிற்கு கல்யாணம் பண்ண அப்பா ஆசைப்பட்டாங்க.... அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்க்கும் படலமும் நடந்தது..

உங்க மாமா இருக்காங்கல... என சிவகாமி சொல்லவும்... நம்ம மாமாவா என அதிர்ச்சியாக கேட்டாள்...

அதற்கு ஒரு கசப்பான புன்னகையை சிந்தியவர் ஆமென்று தலையசைத்தார்...

அவர் வந்து அக்காவை பொண்ணு எல்லாம் பார்த்துட்டு நிச்சய தாம்பூலமும் மாத்திட்டாங்க... அக்கா ஏனோ அதற்கு பிறகு யாரோடவும் பேசாம அமைதியாகவே இருந்தாங்க...

நாங்களும் கல்யாண வேலைல அதை சரியாக கவனிக்கல...

கல்யாணத்துக்கு அன்னைக்கு மண்பத்தில் இருந்து... மேலே பேச முடியாமல் அவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது...

அவங்க எங்க எல்லாரையும் விட்டுட்டு போய்டாங்க... அப்பாவுக்கு பயங்கர கோபம்... உங்க அப்பாவை கேட்கவே வேண்டாம் அக்கா கைல கிடைச்சா கொல்ற வெறில இருந்தான்...

மண்டபம் வரை வந்து கல்யாணம் நிற்கவும் நம்ம குடும்பமே தலைகுனிந்து நின்னோம்... கடைசி நேரத்தில் உங்க மாமா தான் மூத்த பொண்ணு போனால் என்ன அடுத்த பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்கனு கேட்டுட்டார்...

சபையில் வச்சு அவர் அப்படி கேட்கவும் என்னோட சம்மதம் கூட கேட்கல எல்லாரும் சரினு சொல்லி எங்களுக்கு கல்யாணம் முடிச்சிருஞ்சு...

அப்பொழுது தனது அத்தையின் நிலை என்னவாக இருந்திருக்கும் என நிலாவால் உணர முடிந்தது.. அவரது கையை ஆதரவாக பிடித்துக் கொண்டாள்...

அன்னைல இருந்து இப்போ வரைக்கும் எனக்கு தனிப்பட்ட விருப்பு விறுப்பு எதுவும் இல்லை.. எல்லாமே குடும்பம் கணவன் மகன் என்றே இருந்துட்டேன்...

தனியுரிமை சுதந்திரம் என பேசும் நிலா கூட அன்றைய சூழ்நிலையில் தனது அத்தை வேறு எதுவும் செய்திருக்க முடியும் என தோன்றவில்லை...

சிறிது நேரம் அவர்கள் எதுவும் பேசவில்லை... நிலாதான் மௌனத்தை கலைத்தாள்..

வாசு உங்க அக்கா பையன்னு எப்படி தெரியும்... எப்போ தெரியும் என நிலா தனது சந்தேகத்தைக் கேட்டாள்...

வாசுவோட அப்பா இறந்த நேரம் எனக்கு தகவல் தெருஞ்சுது.. அதனால அதைப்பத்தி விசாரிக்கத் தான் சக்தி மும்பை வந்ததே. யாரும் இல்லாம தனியாக நின்ன வாசுவைப் பார்த்து சக்தியும் அவனுடனே இங்கே தங்கி விட்டான்...

இதெல்லாம் வாசுவிற்கு தெரியுமா அத்தை அவளால் நம்ப முடியவில்லை வாசு அனைத்தையும் தன்னிடம் மறைத்து விட்டான் என்பதை...

இல்ல டா.. அவனுக்கு எதுவும் இந்த நிமிஷம் வரைக்கும் தெரியாது.. அதை தெரிந்தால் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்...

முகத்தை சேலைத் தலைப்பில் பொத்தியவாறு கேவத் தொடங்கினார்.. அவரால் தாங்க முடியவில்லை...

அனைத்தையும் கேட்ட பிறகு கடந்த காலம் சற்று வருத்தமாக இருந்தது.. அனைத்தையும் தாண்டி வாசு அவளின் அத்தை பையன் என நினைத்தபோது அவளிற்குள் பனிச்சாரல் வீசியது..

வெளியே சென்றிருந்த வாசுவும் சக்தியும் திரும்ப வந்தனர்... என்ன நிலா அத்தையை பார்த்து எல்லாம் பேசியாச்சா என வாசு கேட்டான்...

நிலாவோ கேள்வி கேட்கும் வாசுவின் மீது உரிமையான ஒரு பார்வையை வீசினாள்.. அதற்கான அர்த்தம் புரியாமல் வாசு பார்க்க சக்தியோ தாயின் முகம் பார்த்தான்...

அவரும் ஆம் என கண்களை மூடித்திறக்க ஏனோ தான் அந்நியனாய் ஆன உணர்வு சக்தியின் மனதிற்குள்..

முயன்று அந்த எண்ணத்தை ஒதுக்கினான் சக்தி... இயல்பாக இருக்க முயன்று ஓரளவு அதில் வெற்றியும் கண்டான்..

சிவகாமி அதன் பின்பே யோசித்தார்.. நமக்கு சிவானி இங்க வந்த பின்னாடி நடந்த எல்லாமே தெரியும் என்றாலும் இனியும் எப்படி தனியே விடுவது என யோசித்தார்..

சக்தி அவரை இங்கு அழைத்து வரும்போதே அனைத்து கதையையும் கூறியே தான் கூட்டி வந்தான்...

சிவகாமி தான் எப்படி பேசுவது எனத் தெரியாமல் சரியான வார்த்தைகள் தேடிக் கொண்டிருந்தார்...

சாப்பிட்டு முடித்து நேரம் கடக்கவும் சக்தி தான் கிளம்பலாமா என தனது அன்னையை வினவினான்..

அவர்களை அப்படி விட்டு செல்லவும் முடியாமல் என்ன செய்வது என யோசித்தபடியே இருந்தார்...

ரொம்ப நாளைக்கு அப்புறமாக பார்த்திருக்கேன்.. அத்தை இங்கேயே இருக்கட்டுமே... ஒன் மன்ந்த் அப்புறமா நீ ஊருக்கு போகும் போது கூட்டிட்டு போ என நிலா கேட்டாள்..

அவ்வளவு நாள் அம்மா எப்படி இருக்க முடியும்... சக்தி யோசனையாக இழுத்தான்..

இருக்கட்டும் சக்தி கண்ணா.. அப்பாகிட்ட நான் பேசிக்கறேன் சிவகாமி ஒரு தீர்வை சொல்லிவிட்டார்...

அப்போ ஓ.கே.. நான் இப்போ கிளம்பறேன் நாளைக்கு வரும்போது அம்மாவோட திங்க்ஸ் எடுத்துட்டு வரேன் என முடித்து விட்டான்..

அனைவரும் சரியென சொல்லவும் சக்தி சொல்லிக் கொண்டு கிளம்பினான்...

வாசுவை உறங்க சொல்லி விட்டு நிலா அவளது ரூமிற்கு அத்தையை அழைத்துக் கொண்டு போனாள்....
இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடியே இருந்தனர்...

என்கிட்ட நீ சொல்லி இருக்கலாம்டா உனக்கு சக்தியை கல்யாணம் பண்ண விருப்பம் இல்லனு.. அத்தை அதையும் மீறி உன்னை கட்டாயப்படுத்தி இருக்க மாட்டேன்.. என்னால தானே நீ இப்படி வீட்டை விட்டு வந்துட்டியே டா...

அத்தை ப்ளீஸ் நீங்க கவலைப் படாதீங்க... நான் வீட்டை விட்டு வர எந்த விதத்துலயும் நீங்க காரணம் இல்லை...

என்னமா சொல்ற சிவகாமிக்கு அவள் சொல்வதன் அர்த்தம் புரியவில்லை.. இதுக்கு மேல என்னை கேட்காதீங்க அத்தை... அந்த விசயம் என்னோட முடியட்டும்.. நான் இப்போ நல்லா இருக்கேன்...

ஏன்மா.. உங்க அப்பா அம்மாவை பற்றி எதுவும் கேட்கவே இல்லையே... அவங்களை ஒரே அடியாக வெறுத்துட்டியா...

நிலாவின் உடல் விரைத்து இறுகிப் போனது.. அவங்களைப் பத்தி கேட்க என்ன இருக்கு அத்தை.. இப்போ அவங்க நல்லாத் தான் இருப்பாங்க.. நான் எதையும் அவங்களைப் பத்தி தெருஞ்சுக்க விரும்பல என முடித்து விட்டாள்..

பெருமூச்சை விட்டவர் மென்மையாக அவளின் தலையை கோதினார்... அதில் அவள் சாந்தமாக அவரின் மடியில் படுத்து கண்களை மூடிக் கொண்டாள்...

இருவரும் பல்வேறு சிந்தனைகளுடன் அன்றைய இரவைக் கழித்தார்கள்... வாசு அவர்களை விட் பெரும் குழப்பத்தில் உறக்கத்தை தொலைத்திருந்தான்...

மயக்குவாள்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

நான் நினைத்த மாதிரியே சிவகாமிக்கு ஒரு அக்கா இருந்திருக்காங்க
ஆனால் எதுக்கு செல்வலிங்கம் தேவகியைப் பொண்ணு கேட்டு அது நிச்சய தாம்பூலம் வரை வந்திருக்கே
தேவகி வேற யாரையாவது விரும்பினாரா?
இல்லை செல்வலிங்கத்திடம் ஏதாவது பிரச்சினையா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top