கொலுசொலி மயக்குதடி - 24

Advertisement

சாப்பிட்டு முடித்த வாசுவும் நிலாவும் மறுநாள் ஆபிஸ் போவது பற்றி பேசத் தொடங்கினார்கள்...

ஏன் நிலா பேசாம நீ என்னோட கேபின்ல இருந்துக்கோ..
மேக்னாவுக்கு வேணும்னா சக்தி கேபின் கொடுத்துடலாமா...


வாசு சொல்வதைக் கேட்டு ஒரு புறம் சிரிப்பாகவும் மறுபுறம் வருத்தமாகவும் இருந்தது...

இது நல்லா இருக்குமா சொல்லுங்க... ஒன் மன்ந்த் மட்டும் தானே.. அதுக்கு அப்புறமாக பார்த்துக்கலாம் பா.. அவ உங்க கேபின்ல இருக்கறதுல என்ன பிரச்சனை சொல்லுங்க...

அவ பார்க்கற பார்வையே எனக்கு பிடிக்கல வாசுவிற்கு ஏனென்று புரியவில்லை இருந்தாலும் மனது சஞ்சலமாகவே இருந்தது..

அதையெல்லாம் சொல்லி அவளையும் டென்சன் பண்ண விரும்பாமல் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டான்...

இரண்டு தடவை பார்த்துட்டு அவ பார்வையை கண்டு பிடிச்சீங்களா.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை.. தூங்கலாம் வாங்க.. சரியென இவனும் தூங்கப் போனான்...

மறுநாள் நேரமாகவே எழுந்த நிலா இரு வேளைக்கும் சமைத்து பாத்திரம் எல்லாம் கழுவி வீட்டைப் பெருக்கி முடித்தாள்..

குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கையில் வாசு எழுந்து குளித்து முடித்து விட்டு வந்தான்...

நிலா பூஜையறையில் இருப்பதை பார்த்தவன் சத்தம் இல்லாமல் கிச்சனிற்குள் போனான்..

நிலா பூஜை முடித்து வரவும் வாசுவும் இருவருக்கும் காபியுடன் வந்தான்..அதைக் கண்டவள் எதுக்கு வாசு இதெல்லாம் நானே போட்டு இருப்பேன் எனவும்.. அவனாே கண்ணசைவில் எடுத்தக் கொள்ளச் சொன்னான்...

அவளும் சிறு சிரிப்புடன் எடுத்துக் கொண்டு ரெடியாக அவள் அறைக்கு கிளம்பியவளை வாசுவின் குரல் தடுத்தது..

இங்கேயே உட்காரு நிலா...அவளும் சரியென அவனின் அருகில் அமர்ந்து கொண்டாள்..

அவளை பார்ப்பதும் பின் காபியை குடிப்பதுமாய் இருந்தான்..

என்ன விசயம் சொல்லுங்க... வாசுவைப் பார்த்து அவள் கேட்கவும்... என்ன ட்ரெஸ் போடப் போற.. சற்று தயங்கி தான் கேட்டான்...

இது என்ன கேள்வி சாரி தான்... நேத்து எதுக்கு வாங்கிட்டு வந்தோம் சார்...

அவன் என்ன கேட்க வருகிறான் என நிலாவிற்கு சுத்தமாக புரியவில்லை..

சரி போய் ரெடியாகி வா.. அவன் சொல்ல வந்ததை சொல்லாமல் விடவும்...ஏன் என்னனு சொல்லுங்க...

ஆபிஸ்ல எல்லாரும் மாடர்னாக இருப்பாங்க.. நீ மட்டும் சேலை கட்டுனா ஒரு மாதிரி உனக்கு இருக்கும்ல...

அவன் சொல்ல வருவது புரியவும் மெலிதாக சிரித்தவள் இதுதானா உங்க கவலை... இன்னைக்கு நீங்களே தெருஞ்சுப்பீங்க என்றவள் உள்ளே சென்றாள்...

வாசு வேகமாக நிலாவின் கையிலும் இருந்த காபி கப்பை வாங்கிக் கொண்டான்..

காபி கப்பை கழுவி வைத்தவன் அவனும் ரெடியாக போனான்... கிளம்பி வந்தவன் சோபாவில் அமர்ந்து கொண்டான்..

நிலாவின் ரூமை பார்க்க அது இன்னும் பூட்டியே இருந்தது...
கதவைத் தட்டலாமா என நினைத்த நேரம் கதவு திறக்கப்பட்டது.. அவளைப் பார்த்தவன் திறந்த வாயை மூடவில்லை..


அவள் நடந்து வந்ததில் இருந்த நிமிர்வு அவனை சற்று அசைக்கத்தான் செய்தது.. அனிச்சையாக எழுந்தவன் அவளின் முன்னால் தான் சிறுமையாக ஆனதைப் போல உணர்ந்தான்...

அவனின் முகத்தை வைத்தே அவனது மனநிலையின் மாற்றத்தை உணர்ந்தவள்.. கமான் வாசு.. இப்படி எதுக்கு யோசிக்கறீங்க.. நான் எப்பவும் உங்க நிலா தான்.. வாங்க போய் சாப்பிடலாம் அவனை அழைத்து விட்டு முன்னே நடந்தாள்...

ஏற்கனவே ஆபிஸ் விவரங்களை பற்றி பேசி இருந்தாலும் இப்போதும் அதைப்பற்றி கேட்டபடியே நிலா அவனிற்கு பரிமாறி தானும் உண்டாள்...

மதிய உணவை ஹாட்பேக்கில் அடைத்தவர்கள் வீட்டை பூட்டிக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள்...

பைக்கை விடுத்து காரை எடுத்துக் கொண்டு வந்து வெளியே நிறுத்தினான் வாசு..

ஏன் என நிலா கேட்டாள்...
உள்ளே ஏறு நிலா சொல்றேன்..நிலாவும் சரியென ஏறி அமர்ந்தாள்.. அதற்கு பின்பு நிலா அவனையே பார்க்க.. வாசுவும் எனக்கு இத்தனை நாளாய் கார் தேவைப்படவில்லை... அதனால் தான் பைக் எடுத்துக் கொண்டேன்..


அது மட்டும் தான் ரீசனா வாசு.. நிலா சரியாக அவனைக் கணித்துக் கேட்கவும்... வாசு உடனே அவளையே பார்த்தவாறு வெளிக்காற்று வீச பைக்கில் போவது எனக்கு பிடிக்கும் நிலா...அவன் இரசனையுடன் மனதை மறையாமல் சொல்லினான்...

எனக்காக எதுக்கு இந்த மாற்றம் வாசு.. நீங்க நீங்களா இருங்க.. எனக்கு அதுதான் வேணும்... நம்ம கல்யாணத்துக்கு அப்புறமாக நீங்க சுதந்திரமாக இருங்க வாசு..

நெஜமாக சொல்றியா நிலா.. நாளைல இருந்து கார் வேணாமா.. சந்தேகத்துடன் தான் கேட்டது தவறோ என மறுபடியும் கேட்டான்..

அதிலேயே பைக் பயணத்தை அவன் எந்தளவு விரும்புகிறான் என அறிந்த நிலாவும் ஆமா வாசு ஆமா... உறுதிப்படுத்த அவள் இரண்டு தடவை சொல்லவும் அவன் சந்தோசமானான்...

ஆபிஸ் வந்திருக்க இருவரும் ஜோடியாக இறங்கினார்கள்..

செக்யூரிட்டி அவர்களை ஆச்சர்யமாய் பார்க்கவும் அதனை உணர்ந்த வாசு வருங்கால முதலாளி அம்மா.. பேரு நிலா என அறிமுகம் செய்தான்...

மார்னிங் மேம் என அவர் சொல்லவும்.. மரியாதையாய் பார்த்து வணக்கம் வைத்தாள்.. அதில் இருந்த நிமிர்வில் தானாய் அவருக்கு பணிவு வந்தது...

அதை பார்த்த வாசுவும் மகிழ்ச்சியுடன் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே போனான்.. எப்போதும் போல சக்தி நேரமாகவே வந்திருக்க... இருவரின் ஜோடி பொருத்தம் பார்த்து வியந்து போனான்...

வெல்கம் அவர் பேம்லி என்றவாறு கையில் பூங்கொத்தை கொடுக்க.. நன்றி கூறி பெற்றுக் கொண்டாள்..

மேரேஜ் முன்னாடி நிலாவை அறிமுகப்படுத்த வேணாம் என சக்தி சொல்லவும்.. வாசு ஆல்ரெடி செக்யூரிட்டி கிட்ட சொல்லியாச்சு... நிலா வாசுவைப் பார்த்தவாறே சொன்னாள்...

சக்தி வாசுவைப் பார்த்து முறைக்கவும்... நிலாவின் பின்னே ஔிந்தான்...

ஹலோ என்ன என்னோட வருங்கால ஹப்பியை என் முன்னாடியே மிரட்டறீங்களா...

அவளின் அதிகாரத்தில் சக்தி பயந்து போனான்...

என்ன மேடம் இவன் என்னோட ப்ரண்ட்.. அதுக்குள்ள இப்படி பண்றீங்களே...சக்தி கேட்ட கேள்வியில் அவசரமாய் வாசு அவனைப் பார்த்தான்...

ஆனால் நிலாவோ அசராமல்.. என் முன்னாடி தானே மிரட்ட வேணாம்னு சொன்னேன்.. நான் போனதும் நீங்க வாசுவை போட்டு புரட்டி எடுங்க நான் கேட்கவே மாட்டேன்..

அடிப்பாவி.. சொன்னது வாசு இல்லை சக்தி தான்.. வாசு அவளின் மேல் பார்வையை பதித்தவன் விலக்கவே இல்லை...

நொடியில் நிலைமையை இயல்பாக்கிய நிலாவைக் கண்டு அவளின் மேல் அன்பு பெருகியது.. சக்தியின் முகமாற்றத்தை சற்று நேரம் முன்பு தானே பார்த்து பயந்தான் அவன் வருந்தி விடுவானோ என்று... இப்பொழுது அதை நிலா சகஜமாக்கி விட்டாள்...

சரி அப்போ எல்லார் கிட்டயும் மீட்டிங் வச்சு சொல்லிடலாம்... எல்லாரையும் மீட்டிங் ஹால்ல அசெம்பள் ஆக சொல்றேன்...

சக்தி திட்டமிட வாசுவும் நிலாவும் சரியென சம்மதிக்கவும்.. அதுவரைக்கும் வாசு கேபின்ல இரு நிலா என்று விட்டு சக்தி கிளம்பினான்..

ஒரு மணி நேரத்திற்கு பிறகு அனைவரும் மீட்டிங் ஹாலில் இருக்க ஜோடியாக உள்ளே நுழைந்தார்கள்...

அனைவரின் பார்வையும் நிலாவின் மேலே இருந்தது...மஞ்சள் வண்ண சில்க் காட்டன் புடவையை அவள் உடுத்தியிருந்த நேர்த்தியே அவளின் மேல் நன்மதிப்பை உருவாக்கியிருந்தது..

அதோடு ஒப்பனை என சிறிதும் இன்றி தூக்கி சொருகப்பட்ட கொண்டையும்.. சிறு கம்மலும் ஒரு கையில் வாட்ச் கழுத்து முழுதும் மறைக்கப்பட்ட த்ரீ போர்த் ப்ளவுஸ் என முழு பார்மல் லூக்கில் பார்த்த அனைவரும் நேற்று சாதாரண காட்டன் சுடியில் வந்தவரா இவர் என வியந்தார்கள்...

வந்தவள் வாசுவின் வலது புறம் அமர அந்த இடத்தில் அமரும் சக்தி இடதுபுறம் மாறியிருந்தான்.. அதிலே பலருக்கும் அவளின் பொசிசன் புரிந்தது. மரியாதையும் பயமும் கலந்து பார்வையை அவளின் மேலே செலுத்தினார்கள்....

குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அந்த மீட்டிங் ஹாலில் நிலவிய அமைதியை கலைத்தது வாசுவின் ஹலோ காய்ஸ் என்ற அமைதியான குரல்தான்..

அவனையே அனைவரும் பார்க்க.. மீட் மிஸ் நிலா.. நியூ ஜெனரல் மேனேஜர் அண்ட் ஆல்சோ மை ப்யூச்சர் வொய்ப்....

அவன் சொல்லி முடித்தது தான் தாமதம் பலத்த கரகோசம் அந்த அறையை நிறைத்தது...

அங்கே இருந்த நேகாவும் மேக்னாவும் அவளை பார்த்து பொறாமையில் பொங்கினார்கள்.. இருந்தும் அதைக் காட்ட முடியாமல் அமைதியாக தான் இருக்க முடிந்தது...

அப்போ சக்தி சார் என ஒருவர் இழுக்க.. இன்னும் ஒன் மன்ந்த்ல ரிலீவ் ஆகறார்.. டியூ டூ சம் ரீசன்ஸ்.. வாசு சுருக்கமாக முடித்து விட்டான்...

அதற்கு பின்பு நிலா நன்றி சொல்லியும் சக்தி அவன் போவது பற்றி அறிவிப்பை தன் வாயால் சொல்லியும் முடித்ததும் மீட்டிங் முடிந்து அனைவரும் கிளம்பினார்கள்....

மேக்னாவை அங்கேயே இருக்க சொன்னான் சக்தி...

மற்றவர்களோடு அவளும் கிளம்ப சக்தி சொன்னதால் மீண்டும் வந்து அமர்ந்தாள்....

ஒரு சின்ன சேன்ன்ஜ் நீங்க என்னோட கேபின்ல இருக்க போறீங்க.. சோ அங்கே வெயிட் பண்ணுங்க அங்க எக்ஸ்ட்ரா இருக்க டேபிள் தான் உங்க ப்ளேஸ்.. நான் போனதும் நிலா என்னோட சீட்ல இருக்க போறாங்க.. சோ என்னோட கேபின்தான் உங்களுக்கு சரியாக இருக்கும்..

சக்தி சொல்லியதில் வாசு குஷியானான்.. நிலா சக்தியை ஒரு பார்வை பார்க்க வெயிட் என கண்ணை காட்டினான்..

சரி மேக்னா நீங்க போய் என்னோட கேபின்ல வெயிட் பண்ணுங்க இன்னைக்கு வொர்க் பத்தி உங்க டேபிள்ல பைல்ஸ் இருக்கும் அதைப் பாருங்க...

சக்தி சொன்னதை கேட்டதும்.. அடப்பாவி அப்போ எல்லா ஏற்பாட்டையும் நீயே பண்ணிட்டு தான் மீட்டிங் வந்தியா என நிலா முறைத்தாள்...

நம்மளை ஒரு அறிமுகம் கூட பண்ணல இந்த மீட்டிங்ல.. இவளுக்கு மட்டும் ஓவர் மரியாதை.. அதோட வாசு என் பக்கம் திரும்புவே இல்லை.. இப்போ கூட சக்தி தான் சொல்றான்.. நான் யாருக்கு பி.ஏ.. அதுதான் போனால் போகுதுனு பார்த்தால் அவனாட கேபின்ல இருக்க வச்சிட்டானே...

மேக்னாவோ மனதிற்குள் அவனை அர்சித்துவிட்டு வெளியில் ஓ.கே சார் என பவ்யமாக கூறிவிட்டு வெளியேறினாள்...

ஏன் சக்தி இன்னும் ஏதாவது இருக்கா சொல்லுங்க.. நிலா கையை கட்டியவாறு பொறுபையாக கேட்டாள்.. அடக்கப்பட்ட கோபம் அதில் இருந்தது.. வாசு தான் படு குஷியில் அமைதியாக இருந்தான்...

உங்களுக்கான பைல்ஸ் எல்லாம் வாசு கேபின்ல இருக்க உங்க டேபிள்ல இருக்கும்..

என்ன டவுட் இருந்தாலும் ஜஸ்ட் ஆஸ்க் மீ... அவ்வளவு தான் என முடித்து விட்டான்..

ஓ.கே தேங்யூ.. என்றவள் வாசுவை ஒரு தடவை திரும்பி முறைத்து விட்டு கிளம்பி விட்டாள்...

என்ன ஓ.கே வா சக்தி கேட்க.... டபுள் ஓ.கே என கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்..

முன்தினம் முதலே சஞ்சலமாக இருந்த வாசு சக்தியிடம் சொல்லி விட்டான்.. அதனால் தான் சக்தியும் இன்று கேபினை மாற்றியிருந்தான்...

இருந்தும் குழப்பமாக இதெல்லாம் சரியாக வருமா டா என கவலையாக கேட்டான்.. நான் இருக்கேன்ல டோன்ட் வொர்ரி என சக்தி ஆறுதல் சொன்னான்...

வாசுவும் ஒருவாறு தெளிந்து கேபினிற்கு கிளம்பினான்.. சக்தி தான் ஓர்வித இறுக்கமன முகத்துடன் கண்களை மூடி அமர்ந்தான்.. கண்களுக்குள் அனைத்தும் படமாக ஓடத் தொடங்கியது...

மயக்குவாள்...


நிலா ஆபிஸ் வந்தாச்சு..இனி என்ன நடக்க போகுதோ..

மகா மேக்னா வருகையில் நேகாவை மறந்துட்டோம் அவ வேற என்ன பண்ண போறாளோ..

நிலா வேற கோபமாக போயிருக்கா..

சக்தி வேற என்ன மைன்ட் செட்ல இருக்கான்னு தெரியல.

பார்க்கலாம் என்ன நடக்கும்னு...?

இனிவரும் அத்தியாயங்களில்..
ஒரு முக்கியமான விசயம் அடுத்த எபில இருக்கு.. அது சஸ்பென்ஸ்... காத்திட்டு இருங்க..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

ஹா ஹா ஹா
கில்லாடி வாசு
மேக்னாவை பக்கத்துலேயே வர விடலை
சக்தியை வைச்சு ஆஃப் பண்ணிட்டான்
ஆமாம்
இவளுக்குத்தானே வேலை
மகா எதுக்கு ஒட்டுப்புல்லு மாதிரி கூடவே வந்திருக்கிறாள்?
ஆனால் மேக்னாதான் கடைசியில் நேக்னாவாயிடுச்சு

அப்படி என்னத்தை சக்தி மைண்ட்லே ரீவைண்ட் பண்ணிப் பார்க்கிறான்?
இவன் கோயம்புத்தூர் போனால் நேகா தன்னாலே ஆப் ஆகிடுவாளா?
இல்லை மேக்னா மாதிரி வாசுவுக்கு வலை வீசுவாளா?
 
Last edited:
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

ஹா ஹா ஹா
கில்லாடி வாசு
மேக்னாவை பக்கத்துலேயே வர விடலை
சக்தியை வைச்சு ஆஃப் பண்ணிட்டான்
ஆமாம்
இவளுக்குத்தானே வேலை
மகா எதுக்கு ஒட்டுப்புல்லு மாதிரி கூடவே வந்திருக்கிறாள்?
ஆனால் மேக்னாதான் கடைசியில் நேக்னாவாயிடுச்சு

அப்படி என்னத்தை சக்தி மைண்ட்லே ரீவைண்ட் பண்ணிப் பார்க்கிறான்?
இவன் கோயம்புத்தூர் போனால் நேகா தன்னாலே ஆப் ஆகிடுவாளா?
இல்லை மேக்னா மாதிரி வாசுவுக்கு வலை வீசுவாளா?
நேக்னாவை மீண்டும் மேக்னா ஆக்கிட்டேன் டியர்... நன்றிகள் பல...

உங்களின் கேள்விகளுக்கு அடுத்தடுத்த அத்தியாயங்களில் பதில்கள் கிடைக்கும்..
பொறுத்திறுங்கள் டியர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top