கொலுசொலி மயக்குதடி - 22

Advertisement

சக்தி எதுவும் சொல்லாமல் வெளியே கிளம்பி போய் விடவும் மற்ற இருவரும் என்ன செய்வதென தெரியாமல் திகைத்தனர்...

அவன் கோபமாக பேசியிருந்தால் கூட சமாதானம் பண்ணலாம்... அவனின் அமைதியான இந்த முகம் எனக்கு புதிது நிலா... இதை எப்படி ஹேண்டில் பண்றதுனு தெரியலயே... வாசு புலம்பத் தொடங்கியிருந்தான்...

இவ்வளவு தானே இதுக்கு போய் கவலைப் படலாமா... நிலா எளிதாக சொல்லி விட்டாள் ஆனால் வாசு தான் யோசனையாக இருந்தான்...

சிறிது நேரம் பொறுத்த நிலா இதற்கு மேலே வேலைக்கு ஆகாதென எழுந்து வெளியே கிளம்பினாள்...

ஹேய் நிலா எங்க போற..... வாசு பதறிப் போய் கேட்கவும் ... கூல் வாசு வெய்ட் அன்ட் சீ... கண் அடித்தவாறு அவள் போகவும் இருந்த மனநிலை சட்டென்று மாறியது... சிறு புன்னகையுடன் வேலையை பார்க்கத் தொடங்கினான்...

நிலா நேராக சக்தியைத் தேடிப் போனாள்... சக்தி மீட்டிங் ஹாலில் மேக்னா மற்றும் மகாவுடன் பேசிக் கொண்டிருந்தான்..

அங்கே போன நிலா வாசுவின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்... அதை ஏனோ ஓர்வித இறுக்கமான முகத்துடன் சக்தி பார்த்தான்.. பெண்கள் இருவருமோ இவ எதுக்கு இப்போ இங்க வந்தா என கோபமாக பார்த்தனர்...

ஹாய் யங் லேடிஸ்... ஒரு சின்ன குழப்பம்... சக்தி சார் சொன்னதுல எந்த மாற்றமும் இல்லை... நாளைக்கு வந்து வாசு சார்க்கு பி.ஏ வா ஜாய்ன் பண்ணிக்கோங்க... ஆல்ரெடி ஆஃபர் லெட்டர் இருக்குல... அதை நாளைக்கு வரும்போது எடுத்துட்டு வாங்க...

மற்றவர்கள் இவள் சொல்வதை நம்ப மாட்டாமல் பார்க்க மேக்னா தான் சுதாரித்து அவசரமாக தேங் யூ சோ மச் என்றாள்..

வித் ப்ளசர் மேக்னா இப்போ கிளம்புங்க நாளைக்கு ஒன்பது மணிக்கு வந்திருங்க... அவ்வளவு தான் என நிலா முடித்து விட அவர்கள் விட்டால் போதுமென்று கிளம்பி விட்டார்கள்...

சக்தியும் நிலாவும் மட்டும் அந்த அறையில் இருந்தார்கள்... கனத்த மௌனம் நிலவியது.. சக்தி அவள் பேசியதை எல்லாம் வேடிக்கை தான் பார்த்தானே ஒழிய எதுவும் பேசவில்லை...

என்ன யோசிக்கறீங்க சக்தி.. என் மேல எதுவும் கோபமா....?

அவளை நிமிர்ந்து பார்த்த சக்தியோ.. கோபம் எல்லாம் இல்லை வருத்தம் தான்.. என்னால தானே உனக்கு இந்த நிலைமை இல்லனா இப்போ ஊர்ல இராணி மாதிரி இருந்திருப்ப இல்லையா...

தப்பு சக்தி.. அங்கே நான் இளவரசினா இங்க வாசுவோட மனசில் இதய இராணியாக இருக்கேன்.. என்னை சந்தோசமாக வச்சுக்குவாரு.. உங்க ப்ரண்ட் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குல...

அதெல்லாம் இருக்கு நிறையவே... ஊருக்கு வரவே மாட்டியா...

சக்தியின் கேள்வியில் முகம் இறுகிப் போனாள்...

நான் உங்களை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுக்கு ஒரு முக்கியமான ரீசன் இருக்கு சக்தி... சீக்கிரமாவே அது என்னனு உங்களுக்கு தெரியும்... அப்போ நீங்களே புருஞ்சுப்பீங்க.. நான் இனி இங்கே தான்...

என்ன சொல்ற நீ... வேற காரணமா அது என்னனு சொல்லு... சக்தி பரபரத்தான்...

நிலா கொஞ்சமும் பதறாமல் அதை விடுங்க சக்தி.. நான் ஒண்ணு சொல்றேன் கேட்பீங்களா....

நிலா அவ்வாறு கேட்கவும் யோசிக்காமல் கண்டிப்பாக பண்றேன் என சக்தி வாக்களித்தான்...

நெகிழ்ந்து போன நிலாவோ இன்னும் ஒன் மன்ந்த்ல நீங்க ஊருக்கு கிளம்பனும்...

அதை சற்றும் எதிர்பார்க்காத சக்தி... வாட் நான் ஏன் போகனும்....

இவ்ளோ நாளா அத்தை மாமா உங்களை விட்டு இருக்காங்க.. இனியாச்சும் போய் அவங்க பக்கத்தில் இருங்க.. மாமாக்கு ரெஸ்ட் கொடுங்க...

அப்புறமாக எதுக்கு ஒன் மன்ந்த் டைம்... இப்போவே கிளம்பலாம்ல... சக்தி புரியாமல் அவளைக் கேட்டான்....

ஹலோ என்ன உடனே ஓடப் பார்க்கறீங்க... நான் எப்படி சமாளிப்பேன்... ஒழுங்கா உங்க வேலையை சொல்லிக் கொடுத்துட்டு போங்க.. அடுத்த ஜி.எம் நான் தானே இங்க..

அசால்ட்டாக நிலா சொல்ல எதற்கும் அஞ்சாத சக்தியே அவளைப் பார்த்து அதிர்ந்து போனான்...

இப்போ எதுக்கு இவ்ளோ ரியாக்சன்... ஷாக்கை குறைங்க... ஷாக்கை குறைங்க...

நிலாவின் மாடுலேசனில் வாய்விட்டு சிரித்தான் சக்தி...

நீ இருக்கியே.. சரியான அறுந்த வாலு.. பாவம் வாசு என்ன பாடுபடப் போறானோ.. நண்பனை நினைத்து கவலைப் பட்டவாறு சக்தி பேசினான்..

நான் முதல்லயே உங்க ப்ரண்டுக்கு ஒரு வாக்கு கொடுத்திருக்கேன் சக்தி... நிலா சீரியசாய் பேசவும்.. என்ன வாக்கு அது.. சக்தியும் ஆர்வமாக கேட்டான்...

நிலா தீவிரமான முகபாவனையுடன்... வெங்காயம் மட்டும் வாசுவை உரிக்க விட மாட்டேன் என்றாள்...

அந்த ஈர வெங்காயத்தை எதுக்கு இப்போ சொல்ற.. என்ன வாக்குனு சொல்லு...

அட லூசு சக்தி... வெங்காயம் உரிச்சா கண்ணுல தண்ணி தண்ணியா வரும்ல.. அதுக்கு கூட கண் கலங்க விட மாட்டேன்னு சொல்லியிருக்கேன். சோ கவலையே படாதீங்க உங்க ப்ரண்டை நல்லா பார்த்துப்பேன்...

ஒரு ப்ளோவுடன் நிலா சொல்லி முடித்தாள்.. இதையும் காது கொடுத்து அவள் சொல்லி முடிக்கும் வரை சக்தி கேட்டான்...

அடிப்பாவி அப்படியே என்னை லூசுனு சொல்லிட்டல்ல.இதெல்லாம் ஒரு வாக்கா.. நீ என்ன மக்கா... சக்தி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்...

அட அட அட..வாக்கா மக்கா.. என்ன ஒரு ரைமிங்... சூப்பர் பாஸ்...சக்தினா கொக்கா என இவளும் ஏதோ கண்டுபிடிப்பு போல கூறிக் கொண்டாள்...

கண்ணில் நீர்வர சிரித்த சக்தி..போதும் போதும் இதுக்கு மேல என்னால சிரிக்க முடியாது... சொல்லி விட்டு ஹையோ முடியலயே.. என மறுபடியும் சிரித்தான்...

சிரிக்காதீங்க இது அவ்ளோ பெரிய காமெடி இல்லை.. நிலா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள்...

ஓ.கே.. ஓ.கே சிரிக்கல... வாயின் மேல் கையை வைத்துக் கொண்டவன் அவளின் முகத்தை பார்த்து மறுபடியும் சிரிக்கத் தொடங்கினான்...

சிரித்து முடித்த சக்தியோ.. நிஜமாகத் தான் சொல்றியா... நான் ஊருக்கு போனதும் ஜி.எம் போஸ்ட்ல இருக்க போறியா.. உனக்கு இருக்க திறமைக்கு நான் ஒரு மாசம் சொல்லித் கொடுக்கறது எல்லாம் காமெடியாக இருக்கும்...

சக்தியின் கேள்வியில் இயல்பான நிலாவோ.. அப்படி எல்லாம் இல்லை சக்தி இதுல உங்களுக்கு இருக்க அனுபவம் ரொம்ப அதிகம்.. அதை கத்துக்கனும் பா.. வேற ஒண்ணும் இல்லை.. அதோட உடனே உங்களை கிளம்ப விடக்கூடாது அதுக்காகவும் தான்... உங்களோட இனி இருக்க வாய்ப்பு கிடைக்குமானு தெரியலயே...

நிலா அவ்வாறு சொல்லவும்.. அவளை கனிவாக பார்த்த சக்தியோ நீ என்னோட மாமா பொண்ணு சிவா.. எங்க அம்மா உன்னோட அத்தை.. இந்த பந்தம் எப்போதும் மாறாது.. உனக்கு எல்லா உரிமையும் இருக்கு...

நிலாவின் கண்களில் சட்டென கண்களில் நீர் கோர்த்து விட.. அதெல்லாம் இல்லை சக்தி.. இனிமேல் நான் நிலா தான்.. சிவா எப்பவோ செத்துட்டா.. அவளிற்கு மறுபடியும் உயிர் கொடுக்க நினைக்காதீங்க என்றவள் வேகமாக இருக்கையை விட்டு எழுந்து விட்டாள்...

வெகு நேரம் ஆகியும் நிலா வராமல் போனதால் அவளைத் தேடி வந்த வாசு இறுதியாக அவள் பேசியதைக் கேட்டு வருத்தமாக நின்றான்...

வெளியே வந்த நிலாவும் வாசுவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்... அதற்கு மேலே அவனும் எதுவும் பேசாமல் நடந்தான்...

என்ன நிலா ஆச்சு... அமைதியாகவே அமர்ந்திருந்த நிலாவை பார்த்து வாசு கேட்டான்.. சக்தியிடம் சொன்ன முடிவை அவனிடம் சொல்லி முடித்தாள்....

சிறிது யோசித்த வாசுவும்... எல்லாம் ஓ.கே.. பட் அந்த மேக்னாவை வேலைக்கு வைக்கனுமா...
அதுதான் யோசனையாக இருக்கு என இழுத்தான்...

எனக்கும் இதே யோசனை தான்.. சக்திக்கு மனசு சங்கடப்படக் கூடாது அதனால தான்... அந்த பொண்ணு வேலைக்கு வரட்டும்.. நானும் இருக்கேன்ல பார்த்துக்கலாம்...
நிலா உறுதியாய் சொல்லவும் அவனும் அரைமனதாக சரியென்றான்...

அப்புறமாக ஒண்ணு.. பி.ஏ வந்ததும் ஓவராக ஆட்டம் போட்டால் கொன்றுவேன் நிலா நிஜமாகவே மிரட்டினாள்...

நான் எல்லாம் ஏகபத்தினி விரதன்மா.. உன்னைத் தவிர யாரையும் பார்க்க மாட்டேன்... சட்டைக் காலரை தூக்கி விட்டான்...

பொய்யாக கூட பார்ப்பேன் என கூறாத வாசுவின் மேல் காதல் பெருகவும்... என்ற அழகு மச்சான்... அவன் முகத்தை வழித்து நெட்டி முறித்தாள்....

எஸ்... மீ... மீ... அவளைப் பார்த்து அழகாக சிரித்தான் வாசு...

ஆமா ஆமா.. நீங்க தான்.. நீங்களே தான்...அவனை பார்த்து காதலாக சிரித்தாள் நிலா...

இருவரின் சிரிப்பு சத்தமும் இணைந்து அந்த அறையில் சங்கீதமாய் ஒலித்தது...

மயக்குவாள்...

இந்த மகிழ்ச்சி எப்போதும் நீடிக்குமா...
நிலாவின் இந்த புதிய முடிவுகளால் இவர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன...
பொறுத்திருந்து பார்ப்போம் இனிவரும் அத்தியாயங்களில்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top