கொலுசொலி மயக்குதடி - 21

Advertisement

மறுநாள் அலுவலகம் போன வாசுவிற்கு அன்றைய நாள் நன்றாக இல்லை போலும்.. மேக்னாவும் மகாவும் தான் முதலில் அவனின் கண்ணில் பட்டார்கள்...

என்ன இந்த பக்கம் என வாசு அவர்களிடம் கேட்கவும்... என்ன சார் ஏன் வந்தீங்கனு கேட்பீங்க போலயே... மகாவின் பேச்சில் அப்பட்டமாய் எரிச்சலை வெளியே காட்டிய வாசு... லுக் மிஸ். அவன் இடைவெளி விட மகா என்று முடித்தாள் அவள்...

எஸ்.... ஓ.கே மகா... முதலில் நீங்கள் நிற்பது எனது ஆபிசில்... நான் கேள்வி கேட்டால் பதில் வர வேண்டும் அதை விடுத்து இவ்வாறு பேசினால் செக்யூரிட்டியை அழைக்க வேண்டி வரும்...

வாசு குரலை உயர்த்தாமல் மெதுவாக அதே சமயம் அழுத்தமாக பேசவும்... மேக்னாவின் உள்ளுக்குள் பயப்பந்து உருள... சாரி சார் வேலை விசயமாக தான் வந்திருக்கோம் மேக்னா பதில் கூறினாள்...

நின்று நிதானித்தவன் உள்ளே வாங்க என்றுவிட்டு அவனது கேபினை நோக்கி நடக்க.. மகாவை எச்சரித்துவிட்டு மேக்னா பின்தொடர்ந்தாள்... மகா அங்கேயே அமர்ந்து கொண்டாள்...

தலையை நீவி விட்டவாறு வாசு அமர்ந்திருந்தான்... மே ஐ கம் இன் சார்... மேக்னா ஒற்றை விரலால் நாசூக்காய் தட்டினாள்...

எஸ் ப்ளீஸ்.. அவள் உள்ளே வர அனுமதி அளித்தவன் மகா இல்லாமல் இவள் மட்டும் வருவதைப் பார்த்து சற்று நிம்மதி பெருமூச்சை வெளியிட்டான்...

சொல்லுங்க மேக்னா.. ஏதோ வேலை விசயம் என்று சொன்னீங்க.. அவன் தொடங்கி வைத்தான்...

எஸ் சார்.. உங்க பி.ஏ போஸ்ட்க்கு தான் சக்தி சார் என்னை அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்க...

அப்பாயிண்ட்டா அது எப்போ நடந்தது... எனக்கே தெரியாமல் என்னோட பி.ஏ வை எப்படி அவன் தேர்ந்தெடுத்தான்.. வாசுவிற்கு கோபம் புசுபுசுவென ஏறியது...

சாரி மிஸ் மேக்னா.. ஆல்ரெடி ஒருத்தரை இதுக்கு செலக்ட் பண்ணியாச்சு.. பை மிஸ்டேக் அந்த அப்டேட் சக்திக்கு போகல போல.. வேறு எதுவும் வேக்கன்சி இருந்தால் இன்பார்ம் பண்றோம்... உங்க ரெஸ்யூமை ரிசப்சனில் கொடுத்துட்டு போங்க...

வாசு கத்திரித்தாற் போல சொல்லிவிட மேக்னாவின் முகம் கோபத்தால் சிவந்தது.. அதை வெளிக் காட்டிடாமல் கவனமாக இருந்தவள்.. ஓஓஓ... இட்ஸ் மை பேட் லக்.... தேங் யூ சோ மச் டூ ஸ்பென்ட் யுவர் வேல்யூவபல் டைம் சார்... ஹேவ் எ நைஸ் டே...

மேக்னாவும் அதற்கு மேல் அங்கே அமராமல் எழுந்து கிளம்பி விட்டாள்..

அவள் கிளம்பிய அடுத்த நொடி அப்பாடா என மூச்சை வெளியிட்டான் வாசு...

உடனடியாக மொபைலை எடுத்தவன் நிலாவிற்கு அழைப்பு விடுத்தான்..

என்னங்க என்னாச்சு... இந்த நேரத்தில் கால் பண்ணியிருக்கீங்க... எடுத்ததும் ஹலோ கூட சொல்லாமல் அவனைக் கேள்வி கேட்டாள் நிலா..

நீ எங்க இருக்க சொல்லு நிலா... உனக்கு க்ளாஸ் எப்போ முடியுது... ஒன் மன்த்னு தானே சொன்னே...

வாசுவின் குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்து கொண்ட நிலா... வாசு காம் டவுன்.. நானே சொல்லனும்னு நினச்சேன்.. எனக்கு க்ளாஸ் எல்லாம் ஓவர்.. இன்னைக்கு சர்டிபிகேட் வாங்கிட்டா அவ்ளோ தான்...

நிலா சொன்ன பிறகே நிம்மதி அடைந்தவன்... சரிமா.. அப்போ வாங்கினதும் நம்ம ஆபிஸ் வந்துடு.. நான் உனக்கு லொகேசன் ஷேர் பண்றேன்.. இன்னைக்கே எனக்கு பி.ஏ வாக நீ ஜாய்ன் பண்ணிக்கோ...

இன்னும் ஒன் ஹவர்ல இங்கே முடிஞ்சுடும்... சீக்கிரமாக வந்துடறேன்... சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்...

அதற்கு பின்பே வாசுவால் வேலையை பார்க்க முடிந்தது...

வாசுவின் கேபினில் இருந்த வந்த மேக்னாவோ ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தாள்... வெளியில் மகாவோ மும்முரமாக போனில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள்...

மேடம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க... மேக்னா அவளைப் பார்த்து கேட்கவும்... ஏன் கண்ணு தெரியலயா... மகா எரிந்து விழுந்தாள்...

வேலை இல்லைனு சொல்லிட்டாங்க அந்த வாசு... மேக்னா சொன்னதைக் கேட்டு அவசரமாக அவளை நிமிர்ந்து பார்த்தவள்..ஆர் யூ ஷ்யூர்... ஏன் அப்படி சொன்னான்..

அவன் இவன்னு சொல்லாத மகா.. முதல்ல ரெஸ்பெக்ட் கொடுத்து பழகு... மேக்னா அடிக்குரலில் சீறினாள்...

ம்க்கும்... இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.. வா போய் சக்தி கிட்டயே கேட்கலாம்... ஒரு முடிவுடன் மகா முன்னே நடக்க.... வேறு வழியின்றி அவளை பின் தொடர்ந்து மேக்னாவும் நடந்தாள்...

சக்தி ஏதோ வேலையாக இருக்கவும் அனுமதி கூட கேட்காமல் மகாவும் அவளைத் தொடர்ந்து மேக்னாவும் உள்ளே நுழைந்தார்கள்....

அரவம் கேட்டு நிமிர்ந்த சக்தி.. திடீரென இவர்கள் இருவரும் நுழைவதைப் பார்த்து அறிவில்லையா இப்படித்தான் அனுமதி கூட கேட்காமல் உள்ளே வருவீங்களா....

சக்தி கத்தவும்....ஷ்ஷ்ஷ் இப்போ எதுக்கு இப்படி கத்தறீங்க... கொஞ்சம் பொறுமையாக என்ன சொல்ல வரேன்னு கேளுங்க...
இவ்வாறு கூறியது சாட்சாத் நம்ம மகா தான்... மேக்னா தான் அவளின் இந்த புதிய முகம் கண்டு வாயை பிளந்து நின்றாள்..

சக்தி என்ன நினைத்தானோ உட்காருங்க என சொல்லவும் இருவரும் அமர்ந்தார்கள்...

சரி சொல்லுங்க என்ன விசயம்.. இன்னைக்கு மேக்னாவுக்கு ஜாய்னிங்ல அதுல எதுவாச்சும் சந்தேகமா...

எங்க ஜாய்ன் பண்றது... ஆல்ரெடி பி.ஏ வை செலக்ட் பண்ணிட்டாராம்.. சோ கிளம்புங்கனு சொல்லிட்டாரு...
மேக்னாவை பேச விடாமல் மகாவே பேசவும் பல்லைக் கடித்தவாறு நடப்பதை மேக்னா வேடிக்கை தான் பார்க்க முடிந்தது..

ஓஓஓஓ.... சற்று நிதானித்த சக்தி நீங்க இரண்டு பேரும் மீட்டிங் ஹால்ல வெயிட் பண்ணுங்க நான் கன்பார்ம் பண்ணிட்டு கூப்பிடறேன்...
சக்தி நேராக வாசுவைத் தேடிப்போனான்..

என்ன இது மறுபடியும் வெயிட் பண்ணனுமா... மகா மீண்டும் பழைய குணத்திற்கு திரும்பி விட்டாள்..

மேக்னாவிற்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே போயிருந்தது.. பேசாமல் கிளம்பலாம் என்றால் சக்தி வேறு காத்திருக்க சொல்லி விட்டான்.. வேறு வழி இல்லாமல் மீட்டிங் ஹாலிற்கு கிளம்பி விட்டார்கள்...

சக்தி போகும் முன்னே யாரோ வாசுவின் அறையில் பேசிக் கொண்டிருக்க வெளியே இருந்த சேரில் அமர்ந்து கொண்டான்..

நேரம்தான் கடந்ததே தவிர உள்ளே இருப்பவர் பேசி முடிப்பதாய் தெரிவில்லை. இடையில் போய் குறுக்கிட்டும் இதைக் கேட்க முடியாது.. ச்சே... என நொந்தவாறு சக்தி காத்திருக்க வேண்டி ஆனது...

உள்ளே இருந்தவர் பேசி முடித்து வெளியே வரவும்... நிலா அங்கு வரவும் சரியாக இருந்தது..

நிலா அவனைக் கண்டுவிட்டு சிறு சிரிப்பை கொடுத்து விட்டு வாசுவின் அறைக்குள் போய் விட்டாள்...

இவ எதுக்கு இப்போ இங்க வந்திருக்கா... என்ன காரணமாக இருக்கும்... உள்ளே போனால் தெரியப் போகிறது என நினைத்தவனுக்கு கூடவே தயக்கமும் வந்து விட்டது. இதுபோன்ற தடுமாற்றம் இதுவே முதல்முறை...

சக்தி பலமான யோசனையுடன் வாசுவின் அறைக்குள் நுழைய எதிரில் இருந்த சேரை வாசுவின் அருகில் போட்டு அமர்ந்து நிலா வாசுவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்...

வாசு யாரு டா அந்த புது பி.ஏ.. ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை.. அவனின் குரலில் இருந்த அமைதியில் குற்ற உணர்வுடன்... நிலா தான் டா.. ஏற்கனவே அவகிட்ட சொல்லிட்டேன்..

இதுக்கு தான் வந்திருக்காளா...?சக்தி எதுவும் பேசாமல் ஒரு பார்வையோடு கிளம்பி விட்டான்....

மற்ற இருவரும் தான் அவன் போவதை தடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்....

மயக்குவாள்...

மேக்னாவிற்கு வேலை கிடைக்குமா...
வாசு என்ன முடிவு எடுப்பான்
சக்தியின் மனநிலை என்னவாக இருக்கும்..
இனிவரும் அத்தியாயங்களில்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

இப்போ எதுக்கு மேக்னா மகா இரண்டு பேரையும் சக்தி கூட்டு சேர்த்துக்குறான்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top