கொலுசொலி மயக்குதடி - 20

Advertisement

சிவகாமி வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக மகனிற்கு அழைப்பு விடுத்தார்... வேலை நேரத்தில் அழைத்தால் சக்திக்கு மிகுந்த கோபம் வரும்... அதைப்பற்றி எல்லாம் நியாகமே அவரிற்கு இருக்கவில்லை...

போனை எடுத்ததும்... என்ன மா ஆபிஸ்ல இருக்கேன்னு தெரியாதா.. எத்தனை தடவை சொல்றது வேலை நேரத்தில் கூப்பிடாதீங்கனு அவன் பாட்டிற்கு கத்தவும்... சக்தி கண்ணா நான் சொல்ல வருவதை முதலில் கேளுடா...

சக்தியும் சற்று அமைதியாகி... என்னனு சீக்கிரமாக சொல்லுங்க என்றான்...அவன் இந்த அளவிற்கு இறங்கி வந்ததே போதும் என நினைத்தவர் நம்ம சிவாக்கண்ணு ஊருக்கு வந்திருக்கா பா.. படிப்பை முடிச்சுட்டா.. இப்போ அவங்க தொழிலை எல்லாம் அவதான் பார்த்துட்டு இருக்கா என சொல்லவும் சக்தி அமைதியாக கேட்டான்...

ம்ம்.. சூப்பர் மா.. அவனின் மகிழ்ச்சியான பதிலில் தனக்குத்தானே சிரித்துக் கொண்டவர் நாங்க பார்க்கப் போயிருந்தோம் எவ்ளோ அழகாக வளர்ந்துட்டா தெரியுமா... உன்னோட போட்டோவை கூட சிவானி கிட்ட கொடுத்துட்டு வந்திருக்கேன்...

சக்தியும் ஒருவித எதிர்பார்ப்புடன் என்ன சொன்னா மா.. போட்டோ பார்த்தாளா என கேட்டான்...

சிரிச்சுட்டே வாங்கிட்டா டா.. என் முன்னாடி எப்படி பார்க்கறதுனு வெட்கமாக இருக்கும். அவரே ஒன்றை நினைத்து சொல்ல இவனும் சந்தோசமாக தலையாட்டிக் கொண்டான்...

சீக்கீரமாக ஊருக்கு வரீயா.. கல்யாணத்தை பேசி முடிச்சுடலாம் என சிவகாமி கேட்கவும்... அடுத்த மாதத் தொடக்கத்தில் வரேன்மா... பார்த்து பேசிக் கொள்ளலாம் என்று சக்தி ஒப்புக் கொண்டான்....

சரிபா.. நான் உங்க அப்பா கிட்டயும் அத்த மாமா கிட்டயும் உடனே விசயத்தை சொல்லிடறேன் என்றவாறு போனை வைத்து விட்டு கணவரைத் தேடிப் போனார் சிவகாமி....

வெளியே கிளம்பிக் கொண்டிருந்தவர் என்னங்க என்ற மனைவியின் அழைப்பில் தேங்கினார்....

சொல்லு சிவகாமி எதாவது முக்கியமான விசயமா...? ஆமாங்க நம்ம சக்திக்கும் சிவாக்கும் கல்யணம் பேசி முடிச்சிடலாம்ங்க.. சக்திகிட்ட இப்போதான் பேசினேன்..

ஊருக்கு வரச் சொன்னால் பிடி கொடுக்காமல் பேசுபவன் இன்றோ சிவாவை பத்தி சொன்னதும் அடுத்த மாச தொடக்கத்தில் வரேன்னு சொல்லிட்டான்ங்க..

சிவாகாமியின் மகிழ்ச்சி ஏனோ அவரை எட்டவில்லை போலும்... யோசனையாக புருவம் உயர்த்தியவர் முதல்ல உன் தம்பி வீட்ல பேசுமா.. நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்...

சிவகாமியும் உடனே கனவில் மிதக்கத் தொடங்கினார்... அவரைப் பொறுத்தவரை மகன் சம்மதம் சொல்லிவிட்டான்.. இனி திருமணம் நடந்த மாதிரி தான் என்ற எண்ணம்...

சிவானி எந்தவித கவலையும் இன்றி பிசினசில் முழு கவனத்தையும் செலுத்தினாள்... மகள் பார்த்துக் கொள்ளும் தைரியத்தில் இராஜசேகரும் சற்று ஓய்வானார்...

வேலை முடித்து வரும் சிவானியோ ரூமிற்குள் போய் முடங்கிக் கொள்ளாமல் தாயுடனே நேரத்தை கழித்தாள்.. அவர் செய்யும் ஒவ்வொன்றையும் கவனமாக பார்த்து பார்த்து சமையல், பூஜை, தோட்டம், வீட்டை பராமரித்தல் என அனைத்தையும் சீக்கிரமாக கற்றுக் கொண்டாள்..

மகள் வீட்டின் பொறுப்புகளை பார்த்து பார்த்து கவனிப்பதை கணவனிடம் பகிர்வதும், அவரோ அவளின் நிர்வாகத் திறமையை பற்றி பேசுவதும் வாடிக்கையாகி போனது..

நாட்கள் அதன்போக்கில் இறக்கை கட்டிப்பறக்க சக்தியும் சொந்த ஊரிற்கு வந்து சேர்ந்தான்....

வாசுவும் ஏதோ வேலை விசயமாக சக்தியோடு சேலத்திற்கு வந்தான்... சக்தி அவனை வீட்டில் தங்குமாறு கேட்கவும் அவனோ மறுத்து ஹோட்டலில் தங்கிக் கொண்டான்.. அது ஏனென்று பிறகு சொல்கிறேன்பா...

சக்தி வீட்டிற்கு வந்ததும் அவனைப் பெற்றவர்கள் கண்ணே மணியே என கொஞ்சவில்லை.. அது சக்திக்கு அறவே பிடிக்காத ஒன்று...

வீட்டிற்கு வந்ததும் குளித்து உடைமாற்றி விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்...

அவனது குணம் தெரிந்தே சிவகாமி அமைதியாகிட தகப்பனோ எள்ளும் கொள்ளும் வெடிக்க மனைவியை முறைத்தவாறு ரூமிற்கு போய் விட்டார்...

சக்தி காரை கோவைக்கு செலுத்தியன் நேராக சிவானியின் வீட்டில் தான் நிறுத்தினான். அன்னம் அவனை பார்த்துவிட்டு உள்ளே அழைத்து உபசரித்தார்.. அவனின் கண்களோ வீட்டை சுற்றி அலைபாய்ந்தது.. அதை புரிந்து கொண்ட அன்னமோ சிரித்தவாறு... அவரும் சிவாவும் கம்பெனிக்கு போயிருக்காங்க என்றார் சிரித்தவாறே...

ஏமாற்றத்தை உள்ளுக்குள் மறைத்தவாறே பரவாயில்லை அத்தை... அவங்க வந்தால் நான் வந்துட்டு போனதாக சொல்லுங்க..எனக்கு முக்கியமான வேலை ஒண்ணு இங்க இருந்தது.. அங்க போறதுக்கு முன்னாடி இங்கு வந்துட்டு போலாம்னு வந்தேன் என சமாளித்தவாறு எழுந்து கொண்டான்...

ஹாலில் பெரிய சைசில் மாட்டியிருந்த சிவானியின் புகைப்படம் அவனது கண்ணில் பட்டது... அதைப் பார்த்ததும் அவளது உருவம் அவனின் ஆழ்மனதின் அடி ஆழம் வரை புதைந்து போனது...

சாப்பிட ஏதாச்சும் எடுத்துட்டு வரேன் இரு சக்தி என அன்னம் பரபரக்க இருக்கட்டும் அத்தை நம்ம வீடுதானே இன்னொரு நாள் சாப்பிடறேன் என்றவாறு உடனே கிளம்பி விட்டான்...

அங்கிருந்து கிளம்பியவன் காரை ஆள் அரவமற்ற சாலையில் ஒதுக்குப்புறமாக நிறுத்தினான்... டேய் உனக்கு அறிவிருக்கா.. அவ வீட்டில் இருக்காளா இல்லையானு தெரியாம நீ பாட்டுக்கு வந்துட்ட.. அத்தை செம ஷார்ப் மாமாகிட்ட சொல்லுவாங்க... ச்சே கடைசியில் சிவாவை பார்க்கவும் முடியல.. மனதிற்குள் புலம்பியவாறு காரை ஸ்டார்ட் செய்து அவனது வீட்டிற்கு கிளம்பினான்...

அன்று இரவே அன்னபூரணி இராஜசேகரிடம் பேசிவிடவும் இருவரும் மகிழ்ச்சியாக திருமணத்தை குறித்து சிவாகாமியிடம் பேசிவிட்டார்கள்...

அவர்கள் செய்த ஒரே தவறு சிவானிக்கு தெரியாமல் எல்லா ஏற்பாட்டையும் செய்தது தான்.. திடீரென்று ஒருநாள் மகளை அழைத்தவர்... சிவானிக்கண்ணு இந்த வாரம் வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு... உனக்கும் சக்திக்கும் கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ணலாம்னு இருக்கோம்டா...

என்னது என அதிர்ந்து போய்விட்டாள் சிவானி...

என்ன ஆச்சு கண்ணு... அவரோ குரலை உயர்த்தினார்... அன்னபூரணிக்கு நிலைமை கைமீறப் போவதாய் அபாயமணி அடித்தது.. இருவரின் பிடிவாதம் பற்றி நன்கு அறிந்தவர் இவர்...

அப்பா எனக்கு சக்தி மேல அப்படி ஒரு எண்ணமே இல்லை.. சொந்தத்தில் கல்யாணம் பண்றது மருத்துவ ரீதியாக நல்லது இல்லை...

நாங்க எல்லாரும் பேசி முடிச்சுட்டோம் இப்போ இப்படி சொன்னால் என்ன அர்த்தம்... அவரின் குரல் கர்ஜனையாய் கேட்டது...

எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று அர்த்தம்... அவளும் நிமிர்ந்து குரலை உயர்த்தி பேசினாள்..

என்ன.... இராஜசேகர் கத்தவும்... ஏங்க கொஞ்சம் பொறுமையாக இருங்க... இடையில் நுழைந்து அன்னபூரணி தடுக்க பார்த்தார்...

முடியாது அன்னம்.. ஒண்ணு சக்தியை கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டின் பெருமையை காப்பாத்தனும்... இல்லையா இந்த வீட்டை விட்டு இந்த நொடியே கிளம்பனும்... என்னனு கேட்டு சொல்லு...

அவரின் முடிவைக் கேட்டு அன்னபூரணி பதறிப் போக சிவானியோ கல்லைப் போல இறுகி நின்றாள்...

கடைசியில் நீங்களும் சராசரி பெற்றோரை போல நடந்து கொண்டீர்கள் அல்லவா... பரவாயில்லை.. பிடிக்காத திருமணத்தை செய்வதைக் காட்டிலும் எங்காவது போவதே மேல்... தானும் இந்த குடும்பத்து வாரிசு என இளகாமல் நின்று நிரூபித்தாள்..

அப்போ நீ கிளம்பலாம்.. இனிமேல் உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முடித்தவர் அறைக்குள் சென்று கதவை பட்டென அறைந்து சாத்தினார்..

நேரே தனது அறைக்குப் போனவள் அனைத்து நகைகளையும் கழற்றி வைத்துவிட்டு.. தனது பார்ட் டைம்மில் சேர்த்த பணத்தை சேமித்த வங்கிக்கணக்கின் ஏடிஎம் கார்டை மட்டும் கைப்பையில் வைத்துக் கொண்டு கீழே வந்தாள்...

நான் போறேன் மா.. என்னை மன்னிச்சிடுங்க.. என்னோட இந்த முடிவு சரிதான்னு சீக்கிரமாகவே புருஞ்சுப்பீங்க. சிவகாமி அத்தை கிட்ட என்னை மன்னிக்க சொல்லுங்க..

ஐயோ என் சாமி.. உனக்கொரு கல்யாணம் பண்ணி பார்க்க நினைச்சோமே.. கடைசியில் உன்னோட வாழ்க்கை போச்சே என அழுதார்...

நான் என்ன மா துறவறமா போகப் போறேன்... கண்டிப்பாக எனக்கு ஒருத்தரை பிடிக்கும்... அப்படி என் மனசுக்கு பிடித்த ஒருத்தரை பார்த்ததும் கல்யாணம் பண்ணிப்பேன்... நீங்க என்னை நினைச்சு வருத்தப்படாதீங்க.. அப்பாவை பத்திரமாக பார்த்துக்கோங்க... நான் போரேன் மா...

எங்கே தாயின் முன்னால் இனியும் நின்றால் மனம் மாறி விடுமோ என நினைத்து பயந்தவள் விறுவிறுவென வீட்டை விட்டு கிளம்பி இருந்தாள்...

தாயிடம் அவ்வளவு துணிவாக பேசிவிட்டு கிளம்பியவளுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்தது.. அருமை பெருமையாய் வளர்த்து கடைசியில் இப்படி நடந்து கொண்டார்களே.. எனக்கு இனிமேல் வாழ்க்கையில் யார் இருக்காங்க...

ஏதோ நினைப்புடனே இரயில்வே ஸ்டேசன் வந்தவள் அப்போது கிளம்புவதற்கு தயராய் இருந்த இரயிலில் ஏறியிருந்தாள்...

அதற்கு பின்பு நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே... நிலா வாசுவிடம் சொன்னதுபோல் நமக்கும் அதற்கு பின்பு என்ன ஆனது என்று தெரியமல்லவா...

நிலாவின் கதையை கேட்டு வாசு இருந்த இடத்தை விட்டு அசையாமல் அதே இடத்தில் வேரூன்றி போய் அமர்ந்து விட்டான்..

வாசு என்னை மன்னிச்சிடுங்க... தயவு செய்து என்னை தப்பாக நினைக்காதீங்க... நிலா அவனிடம் பேசிக் கொண்டிருக்க... வாசுவோ உன்னோட குடும்பத்தை விட்டு இப்படி வந்தது சரியா டா எனக் கேட்டான்...

வாசு இதுவரை டா என அழைத்தது இல்லை... அவளைப் பற்றி சொன்னதை எல்லாம் கேட்டதும் அவனிற்கு இயல்பாக டா என வந்திருந்தது...

என்னை புருஞ்சுக்க முடியலயா வாசு.. எனக்கு அப்போ எதுவும் சாதகமாக இல்லை.. அதோட அந்த நேரத்தில் நான் அமைதியாக இருந்திருந்தால் இரண்டு பேரின் வாழ்க்கையும் வீணாகியிருக்கும்..

உங்க அப்பா அம்மாவை பார்க்கனும்னு தோணலயா நிலா.. அவளை நன்கு அறிந்திருந்தும் வாசு அவ்வாறு கேட்டான்...

விரக்தியாக சிரித்தவள்... பாருங்க வாசு பேசிட்டே இருந்து ரொம்ப நேரமாச்சு.. நான் போய் மதியத்துக்கு சமைக்கறேன்... நீங்க வேணும்னா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க..

நிலா வேகமாக கிச்சனிற்குள் போய் விட்டாள்.. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் போறியா.. பார்க்கலாம் என்ன ஆகுதுனு... ஏதோ யோசனையுடன் வாசு அமைதியாக அமர்ந்து கொண்டான்..

மயக்குவாள்...

இனி என்ன ஆகப் போகுது.. நிலாவின் கடந்த காலத்தை அறிந்த வாசு அவளின் குடும்பத்துடன் அவளை சேர்ப்பானா...
இருவரும் திருமணப் பந்தத்தில் இணைவார்களா இனிவரும் அத்தியாயங்களில்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

என்னடா அப்பன் இந்த இராஜசேகர்?
சகோதரியின் மகனைக் கல்யாணம் செய்யலைன்னா பெற்று வளர்த்த ஒரே மகளை வீட்டை விட்டு போகச் சொல்லுவானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top