கொலுசொலி மயக்குதடி - 18

Advertisement

வாசு லெட்டரை வெளியே எடுக்கவும்... நிலா அதை பிடுங்கிக் கொண்டு... நிஜமே பக்கத்தில் இருக்கு அப்புறமாக இந்த லெட்டர் எதுக்கு என கேட்டாள்....

சரி அப்போ நீயே சொல்லு என்னதான் நடந்தது.... நீ ஏன் வீட்டை வீட்டு தனியாக ட்ரைன்ல ஏறினனு.. சக்தியை பார்த்தது பேசியது எல்லாம் ஏன் சொல்லல...

வாசுவை இடையிட்டு தடுத்தவள்... சக்தி உங்க ப்ரண்டுனு தெரியாது.. இல்லனா அவங்க பேசியதை நான் உங்ககிட்ட சொல்லியிருப்பேன்... மத்தபடி மறைக்கனும்னு இல்ல எதுக்கு தேவையில்லாத பிரச்சனைனு நெனச்சேன்..

நிலா அவனைப் பார்த்ததை சொல்லாமல் விட்டதற்கான காரணத்தை சொன்னதும் சரி விடு.. உன்னைப் பத்தி இப்போவாச்சும் சொல்லு... அவனும் அமைதியாக கேட்டான்..

பெருமூச்சை வெளியிட்டவாறு தன்னைப்பற்றி சொல்லத் தயாரானாள் நிலா...

என்னோட பேரு சிவானினு தான் தெரியுமே.. மத்ததை சொல்றேன் என அவளும் தொடங்கினாள்...

வாங்க அவளோட ப்ளாஷ்பேக் போலாம்...
அதுமுடியும் வரை சிவானி என்றே வைத்துக் கொள்ளுங்கள் நம் நிலாவை..

சிவானி பிறந்து வளர்ந்தது பூர்வீகம் எல்லாமே தமிழ்நாட்டில் உள்ள கோயம்பூத்தூர் தான்... கொங்கு தமிழ் கொஞ்சும் கோவையில் பிறந்த செல்வச்சீமாட்டி...

சரவணம்பட்டியில் பெருமதிப்பும் புகழும் செல்வமும் மிக்கவர் இராஜசேகர்... அவரது பேச்சுக்கு கோவை வட்டாரத்தில் மிகப்பெரிய மதிப்பு இருந்தது.. அவரது மனைவி அன்னபூரணி கனிவும் அன்பும் கொண்ட மனையாட்டி.. வந்தவருக்கு இல்லையென்று ஒருபோதும் சொல்லாமல் வாரிவழங்கிடும் மனம் கொண்டவர்....

இந்த தம்பதிகளின் ஒரே புதல்வி தான் சிவானி... தன் தந்தை சிவநேத்ரனின் நினைவாக தான் சிவானி என பெயர் வைத்திருந்தார் இராஜசேகர்...

இயல்பிலேயே மிகுந்த அறிவுத்திறமை கொண்டிருந்த தங்களின் மகளைக் காணும் போதெல்லாம் அகமகிழ்ந்து போவார்கள் பெற்றவர்கள் இருவரும்.. தங்களின் உலகமே அவள்தான் என வாழ்ந்தார்கள்...

ரைஸ்மில், பருத்தி ஆலை, சர்க்கரை ஆலை, தியேட்டர், வணிக வளாகங்கள் என அவரிற்கு அனைத்து தொழில்களும் கோவை முழுதும் விரிந்து கிடந்தது... அத்தனை சொத்துகளுக்கும் ஒரே வாரிசு சிவானி தான்...

அருகில் வைத்து வளர்த்தால் அவளிற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வளராது என நினைத்த இராஜசேகர் அவளை ஊட்டியில் விடுதியில் சேர்த்து படிக்க வைத்தார்... அவளும் தனது படிப்பை முடித்துக் கொண்டு ஊரிற்கு வந்து கொண்டிருக்கிறாள்....

அண்ணா ரொம்ப நாளாச்சு வீட்டிற்கு வந்து... ப்ராஜெக்ட் வைவா எக்ஸாம் அது இதுனு ஆறுமாசமாக வீட்டுப்பக்கமே வர முடியல.. அம்மா அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க.... டிரைவர் ஆறுமுகத்திடம் கேட்டவாறு வெளியே பார்வையை ஓட்டினாள் சிவானி....

எல்லாரும் நல்லா இருக்காங்க பாப்பா... அம்மா தான் உங்களைப் பார்க்கனும்னு தவிச்சாங்க... ஐயா வெளியில் சொல்லாமல் போனாலும் உங்களைப் பத்திதான் நெனப்போட இருக்காங்க...

விசுவாசியான ஆறுமுகம் தன் முதலாளியைப் பற்றி அவளிடம் சொல்லவும்... பாசம் இருக்குனு எனக்கே தெரியுமே அண்ணா.. அதனால்தானே அவங்க சொன்னதுக்காக ஊட்டியில் தங்கி படிச்சேன்.. இனிமேல் எல்லாம் நோ ஹாஸ்டல் நான் கோவையில் தான் இருக்கப் போறேன்...

சந்தோசத்துடன் பேசும் சின்னம்மாவைப் பார்த்து அவரும் மகிழ்ச்சியுடன் காரை கவனமாக ஓட்டினார்....

கார் அவர்களது வீட்டின் போர்டிகோவில் வந்து நிற்கவும்... கையில் ஆரத்தியுடன் அன்னபூரணி நின்று கொண்டிருந்தார்...

வீடு என்று சொல்வதை விட அதை மாளிகை என்று சொன்னால்தான் பொருந்தும்... வெள்ளை நிறத்தில் பல ஏக்கர் பரப்பில் விரிந்து இருந்தது....

தாயைக் கண்டதும் காரை விட்டு இறங்கி ஒரே பாய்ச்சலில் அவரை அணைத்துக் கொண்டாள் சிவானி...

சிவாக்கண்ணு பார்த்து பார்த்து டா.. ஆலம் கொட்டிட போகுது... அருகில் இருந்த சரசுவிடம் தட்டை கொடுத்துவிட்டு தானும் அணைத்துக் கொண்டார்...

எப்படி இருக்கீங்க மா... உங்களை அப்பாவை எல்லாம் எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா.. சிவானி சொல்லவும் சிறு சிரிப்புடன் அதைக் கேட்டாவாறு வெளியே வந்தார் இராஜசேகர்....

ஏனுங்க கண்ணு சவுக்கியமா இருக்கீகளா. இளைச்சு போயி தெரியிறீகளே... ஒழுங்காக சாப்பிடாம படிப்பு படிப்புனு இருந்துட்டீகளா அம்மணி.

தந்தையின் அக்கறையில் தாயிடம் இருந்து பிரிந்த சிவானி... அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க.. நீங்க நல்லா இருக்கீங்களா... தந்தை நலனை விசாரித்தாள்...

நாங்க எல்லா நல்லா இருக்கோம் தாயி... என்ன புள்ள பார்த்துட்டே இருக்க.. எம்புட்டு கண்ணு நம்ம புள்ள மேல பட்டுச்சோ... வெரசா ஆரத்தியை சுத்தாம பராக்கு பார்த்துட்டு இருக்கியா...

கணவனின் சொல்லில் மெலிதாக சிரித்த அன்னபூரணி... இதே எடுக்கறேனுங்க... பணிவாய் சரசுவின் கையில் இருந்த தட்டை வாங்கிக் கொண்டார்...

இராஜசேகர் அவளை நிற்க வைத்து தானே சூடத்தை கொளுத்தவும் மகிழ்ச்சியுடன் ஆரத்தியை சுற்றிவிட்டு சிவானியின் நெற்றியில் திலகத்தை வைத்தார்....

சரசுவோ அவரின் கையில் இருந்த தட்டை வாங்கி வெளியில் கொட்டப் போனார்... சிவானி தந்தையுடன் சேர்ந்து உள்ளே நடக்க அன்னபூரணி பின் தொடர்ந்தார்...

அந்த வீட்டின் விசாலமான ஹாலில் போடப் பட்டிருந்த வெள்ளையும் நீலமும் கலந்த சோபாவில் அமர்ந்தவாறு மகளையும் அருகில் அமர்த்திக் கொண்டார்...

அன்னபூரணி அவளின் அருகில் வந்து நின்றவாறு தலையை அன்புடன் தடவிக் கொடுத்தார்.. அதற்குள் சரசு அவர்களுக்கான மோரை ஒரு ட்ரேயில் வைத்து கொண்டு வந்தாள்..

தானே வாங்கி அதை இருவரிடமும் அன்னபூரணி கொடுக்க... குடி தாயி... என்று அவளிடம் கூறியவாறு அவரும் அருந்தத் தொடங்கினார்...

அதற்குள் ஆறுமுகம் அவளின் பெட்டிகளை கொண்டு வந்து அவளின் அறையில் வைத்து விட்டு போனார்....

இராஜசேகரின் போன் அடிக்க அதை எடுத்துப் பேசியவர் உடனே வருவதாக சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்..

அன்னம் எனக்கு கொஞ்சம் மில்லுல சோலி கிடக்கு... போய்ட்டு மத்தியானம் சாப்பாட்டுக்கு தாமதமாத்தான் வருவேன்.. நீங்க சாப்பிடுங்க.. புள்ளைக்கு என்ன வேணுமோ சமைச்சு கொடு.. போய்ட்டு வரேன் கண்ணு... சாப்பிட்டு ஓய்வெடுங்க.. அவளிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டார்...

பூரணியும் மகளிற்கு பிடித்ததை எல்லாம் தன்கையால் சமைக்க வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்கள் அவர் கேட்டதை செய்து கொடுத்தனர்... அதற்குள் அவளது ரூமிற்கு போன சிவானி குளித்து முடித்து நீண்ட கூந்தலை உளர்த்திவிட்டு ஒரு க்ளிப் இட்டாள்...

பச்சை வண்ண தாவணியும், சிவப்பு கலர் இரவிக்கை பாவடையுடன் படிகளில் இறங்கி வரும் மகளைக் கண்ட அன்னபூரணியின் மனதில் மகிழ்ச்சி ஊற்றாய் பெருகியது....

வா சாமி சாப்பிடலாம்... என அவளை கைப்பிடித்து அழைத்தவாறு டைனிங் டேபிளை நோக்கி நடந்தார்....

அவளை அமரவைக்கவும்... நீங்களும் சாப்பிடுங்க அம்மா என தாயை அழைத்தாள்...

இல்லடா நீ சாப்பிடு... உன்ற அப்பா சாப்பிட்டதும் நான் சாப்பிடறேன்.. அவர் அவ்வாறு சொன்னதும்...ப்பா முடியல மா... தாயை கலாய்க்க சிறு வெட்கத்துடன்... அட போ கண்ணு என்றவாறு அவளின் பேச்சை இடைமறித்தார்... சிவானியும் அவரை சிறு சிரிப்புடன் பார்த்திருந்தாள்...

தலைவாழை இலையில் கோழி இரசம்... மட்டன் கோலா உருண்டை, சாதம் சிக்கன் க்ரேவி, மட்டன் வருவல், நண்டு தொக்கு, மீன் குழம்பு என அவளிற்கு பிடித்ததை மட்டும் அளவாய் பரிமாற தாயின் கவனிப்பில் வயிறும் மனதும் நிறையும் வரை சாப்பிட்டு விட்டு தனது ரூமிற்கு போனாள் சிவானி...

அவளிற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த நவீன அறையில் கண்ணாடி ஜன்னல்கள் திறந்திருக்க அந்த மதிய வேளையிலும் காற்று சில்லென அவளது முகத்தில் பட்டது... எல்லாம் அவளது தாயின் ஏற்பாடுதான். ஜன்னலின் அருகே நின்றவாறு வெளியே பார்வையை பதித்தாள்....

கண்களை எட்டும் வரைக்கும் விதவிதமான பூச்செடிகளும் பழமரங்களும் அழகுற பராமரிக்கப்பட்டு இருந்தது...

அம்மாவோட டேஸ்ட்டே தனிதான்.. எப்படித்தான் எல்லாத்துலயும் இப்படி ஈடுபாட்டோட இருக்காங்க... தாயை மெச்சியவாறு முகத்தில் மோதும் முடிக்கற்றைகளை காதின் பின்புறமாய் ஒதுக்கி விட்டாள்...

அதற்குள் போன் அடிக்கவும் உள்ளே போனவள் அவளது கைப்பையில் இருந்த போனை வெளியே எடுத்தாள்...

சிவா அத்தை என திரையில் ஔிர.. வேகமாக அதை ஆன் செய்தவள் காதில் வைத்தாள்....

எப்படிடா இருக்க... அத்தையின் விசாரிப்பில் சிரித்தவாறு... நான் நல்லா இருக்கேன் அத்தை... ஊருக்கு எப்போ என்னைப் பார்க்க வரீங்க.. நான் படிப்பு முடிச்சு வீட்டுக்கு வந்துட்டேன்..

மருமகளின் அழைப்பில் மனம் மகிழ்ந்த சிவகாமி.. வரேன் டா.. மாமாக்கு கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கு தோட்டத்தில் நடவு வேலை போய்ட்டு இருக்கு.. இந்த வாரக் கடைசியில் இரண்டு பேரும் வரோம்..

போங்க அத்தை நான் உங்க கூட பேச மாட்டேன்...செல்லமாக கோபித்துக் கொள்ள.. அடடா என் இராஜாத்தி கோச்சுக்கலாமா...? வரேன் டா சீக்கிரமாக.. அப்பா அம்மாவை கேட்டதாக சொல்லு சரியா... மாமா சாப்பிட வர டைம் ஆச்சு நான் பொழுதாற பேசறேன்...

சரிங்க அத்தை மாமாவை கேட்டதாக சொல்லுங்க.. சீக்கிரமாக வாங்க.. உங்களை எதிர்பார்த்து காத்திருக்கேன்..

சிவானியின் சொல்லுக்கு தலையாட்டி சம்மதம் தெரிவித்தவர் அழைப்பைத் துண்டித்தார்....

இராஜசேகரின் உடன்பிறந்த அக்கா தான் சிவகாமி... சேலத்தில் தான் இருக்கிறார்... எந்த சிவகாமி என்று தெரிஞ்சுருக்குமே... கரெக்ட் தான் சக்தியோட அம்மா தான் சிவகாமி... அத்தை பையனையே தெரியாம தான் இந்த சிவா புள்ளை இருந்திருக்கு.... ஏன் என்னனு அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்....

மயக்குவாள்...

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top