கொலுசொலி மயக்குதடி - 15

Advertisement

வீட்டிலிருந்து வெளியே கிளம்பி போன வாசு தன் மனம் போன போக்கில் பைக்கில் சுற்றிக் கொண்டிருந்தான்.... எங்கே போவது என்றும் புரியாமல் வீட்டிற்கும் போகவும் தோன்றாமல் ரோட்டில் போய் கொண்டிருந்தான்...

இரவின் மீதி நேரத்தை அவனுடைய அலுவலகத்தில் போக்கி விட்டு விடிந்த பின்பு மீண்டும் வீட்டிற்கு வந்தான்....

அவன் கிளம்பி போனபோது எப்படி வீடு இருந்ததோ அதே போல இருந்தது... இரவு சமைத்தற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை...

ரூமிற்கு போய் குளித்து உடைமாற்றி வந்தவன் வெளியே வந்து ஹாலில் அமர்ந்து கொண்டான்... அவ்வவ்போது நிலா இருந்த ரூமின் கதவை ஏக்கமாய் திரும்பி பார்ப்பதும் மீண்டும் திரும்புவதுமாய் இருந்தான்....

வெகுநேரம் கழித்து வெளியே வந்த நிலாவைக் கண்டு வாசு துடித்துப் போனான்... மும்பை வந்தபோது அவள் அணிந்த உடையை அணிந்து கொண்டு ஹேண்ட் பேக்கை மட்டும் மாட்டியவாறு வெளியே வந்தாள்...

அவளின் கையில் இருந்த பேப்பரை அவனிடம் கொடுத்து விட்டு... நான் கிளம்பறேன் என சொல்லிவிட்டு அவனைப் பார்க்காமல் வீட்டை விட்டு கிளம்பி விட்டாள்....

உலகம் ஒரு நிமிடம் அதன் இயக்கத்தையே நிறுத்தியது போல இருந்தது அவனிற்கு... அவசரமாக அந்த பேப்பரை ஷர்ட் பாக்கெட்டில் வைத்தவாறு வெளியே ஓடினான்....

அப்பொழுது தான் லிப்டில் ஏறி இருந்த நிலா க்ளோஸ் பட்டனை அழுத்தியிருந்தாள்.. அதற்குள் அவனும் உள்ளே நுழைந்து விட்டான்.... அவனை எதிர்பார்க்காததால் நிலா திகைத்து நின்றவாறு இருக்க... லிப்ட் கீழே வந்து நின்றிருந்தது...

மீண்டும் அவனது ப்ளாட் இருக்கும் தளத்திற்கு லிப்ட் பட்டனை வாசு அழுத்த... என்ன பண்றீங்க நான் கிளம்பனும்.... சொல்ல வேண்டிய எல்லாத்தையும் லெட்டர்ல சொல்லிட்டேன்... என்னை விடுங்க அந்த சக்தி கூட எல்லாம் என்னால போக முடியாது....

நிலா பாட்டிற்கு பேசிக்கொண்டே போக... மீண்டும் லிப்ட் அவர்கள் தளத்திற்கு வந்தது.. அவளின் கையை பிடித்துக் கொண்டு லிப்டை விட்டு வெளியே வந்தான்....

வாசு என்ன இது ஏன் இப்படி பண்றீங்க... அதைத்தான் கேட்டாலே தவிர கையை பிடித்ததற்கு எதுவும் சொல்லவில்லை...

வாசு அதை உணர்ந்தே இருந்ததால் சிறு புன்னகையுடன் அவளை உள்ளே அழைத்துக் கொண்டு வீட்டின் கதவின் முன்னே நிற்க வைத்தவன்... ஒரு நிமிஷம் இரு வரேன் என சொல்லி விட்டு உள்ளே போனான்...

இப்போ என்ன பண்ண போறாங்க... யோசித்தபடியே நிலா நின்றிருக்க... சில நிமிடங்களில் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தான்....

நிலாவிற்கு கண்களில் நீர் நிறைய.. அவனையே வைத்த கண் எடுக்காமல் பாரத்திருந்தாள்... சிரிப்புடன் அவளிற்கு ஆலம் சுற்றி திலகம் இட்டவன்... வலது காலை எடுத்து வைத்து வா.. இனிமேல் இது உன்னோட வீடு.. என்னையும் நம்ம வீட்டையும் விட்டுப் போகனும்னு எண்ணமே இனிமேல் உனக்கு வரக்கூடாது...

வாசு பேசப்பேச வேகமாக உள்ளே வந்தவள் வாசுவை இறுக்கி அணைத்துக் கொண்டாள்... வாசுவும் சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டான்....

வாசு... வாசு.... நிலா ஹஸ்கி வாய்சில் அழைக்க... ம்ம்... அவனும் அதே வாய்சில் கேட்டான்...

ஐ லவ் யூ வாசு.... அதைக் கேட்டதும் அவளைப் பிரித்து அவளின் முகம் பார்த்தவன்.... நேருக்கு நேர் கண்களைப் பார்த்து நானும் தான் ஐ லவ் யூ.. வாசு அழகாக கண் சிமிட்ட... நிலாவோ சந்தோசத்துடன் அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்....

என்ன லெட்டர் இது... சிறிது நேரம் கழித்து வாசு கேட்டான்.. அப்போ அதைப் படிக்கலயா... அவனிடம் இருந்து விலகியவாறு கேட்டாள்....

இப்போ தள்ளிப் போய் தான் கேட்கனுமா... அவளின் விலகலில் சிறு பிள்ளை கோபம் கொள்ள... ஐயே ரொம்ப வழியது தொடச்சுக்கோங்க என நிலா அவனை கலாய்த்தாள்...

மேடம் நாங்க எல்லாம் ரொம்ப சமத்து... அவளிடம் ஒழுங்கு காட்டியவாறு போய் சோபாவில் அமர்ந்து கொண்டான்....

நிலாவும் அவனைப் பின் தொடர்ந்து வந்தவள் அவனின் அருகில் அமர்ந்து கொண்டாள்...

நேத்து ஏன் நான் சொல்ல வர்றது கூட கேட்காம அப்படி பண்ணுனீங்க... எனக்கு எப்படி இருந்தது தெரியுமா.. பழைய நினைவில் அவள் முகம் வேதனையில் கசங்கியது....

வாசுவால் அதைப் பார்க்க முடியாமல் அவளின் கையை பிடித்துக் கொண்டவன்... நேத்து சக்தி என்கிட்ட ஆபிஸ்ல உன்னைப் பத்தி சொன்னதும் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை...

அதோட உன்னோட பேரு சிவானி னு வேற சொன்னான்.. அப்போ அந்த நிமிஷம் என்னைவிட அவனிற்கு தான் உன்மேல உரிமை இருக்குனு தோனுச்சு.. நான் உடைஞ்சு போயிட்டேன்..

ஆபிஸ்லயே சொன்னான் வீட்டுக்கு வந்து உன்னை கூட்டிட்டு போறதாக... அவனால் அதற்கு மேலே பேச முடியாமல் தழுதழுக்க.. தன்னைவிட அவன் எந்த அளவிற்கு வருத்தப்பட்டிருக்கிறான் என உணர்ந்த நொடி சக்தியை கொல்லும் அளவிற்கு ஆத்திரம் வந்தது...

வாசு என்னைப் பாருங்க... அவன் பார்க்காமல் அவன் தரையை பார்த்தவாறே இருக்க... இங்க பாருங்கனு சொல்றேன்ல... அவனது முகத்தை பற்றி தன்னை பார்க்க வைத்தாள்...

இனிமேல் என்னோட அடையாளம் நிலா மட்டும்தான்... வருங்காலத்துல நிலா வாசுதேவன் தான்... என் மேல என்னைக்கும் உங்களுக்கு தான் முழு உரிமையும் இருக்கு...என்னோட முதல் காதலும் கடைசி காதலும் உயிருக்கு உயிரான காதலும் உங்க மேல மட்டும் தான்.. யார் வந்தாலும் அதை தைரியமாக நீீங்க எதிர் கொள்ளுங்க....

நிலா பேசப்பேச வாசுவின் கண்களில் கண்ணீர் வழிய... அவசரமாய் அதை துடைத்தவள் நீங்க ஆண் பிள்ளை வாசு... நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக நிற்கனும்.. எதற்காகவும் நீங்க கலங்கவே கூடாது...

நீ என் கூட இருந்தால் தான் என்னோட வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கு நிலா... நீயில்லாம நான் முழுமை அடைய மாட்டேன்..

வாசுவிடம் தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டவள்... வெங்காயம் உரிக்கறதுக்கு கூட இனிமேல் உங்க கண்ணுல கண்ணீர் வரக்கூடாது...

நிலா சட்டென அவனை கலாய்க்க தொடங்க... ஓய் ஓய்... ஸ்டாப்.. ஸ்டாப்... பேக் டூ த பார்ம் ஆ.... நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்...

இன்னைக்கு நீ லவ் ப்ரப்போஸ் பண்ணியிருக்க....நானும் அதை அக்சப்ட் பண்ணிட்டு பதிலுக்கு லவ் சொல்லிட்டேன்.. சோ ரொமான்ஸ் மட்டும் தான்...

வாசு அவளின் அருகில் நெருங்கி வர... வாசு நோ... வேண்டாம்... கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பு... அவள் வாய்தான் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்க.. இம்மியும் அவனை விட்டு விலகாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்...

கேடி உன் வாய் தான் அப்படி சொல்லுது... உன் மூஞ்சியே உன்னைக் காட்டிக் கொடுக்குது.... வாசுவின் மூச்சுக்காற்று சூடாக நிலாவின் மேல் படிய... அவள் இறுக்கமாக கண்களை மூடிக் கொண்டாள்..

கைகள் அவனது சட்டைக் காலரை அழுத்தமாக பிடித்துக் கொள்ள... அதை பார்த்தவாறே அவளை நெருங்கி வந்தவன்... நெற்றியோடு நெற்றியை முற்றி விட்டு தள்ளி அமர்ந்தான்....

நிலா வியப்பாய் அவனை கண் திறந்து பார்க்க... வாசுவோ இடைவெளி விட்டு அமர்ந்து இருந்தான்....

நான் எல்லாம் நல்ல பையன்.. கல்யாணத்துக்கு முன்னாடி எதுவும் பண்ண மாட்டேன்.... அதுவும் இல்லாம நாம ஒரே வீட்டில் தானே இருந்தோம்னு யாரும் பின்னாடி உன்னை தப்பாக பேசிட கூடாதுமா... உன்னை ஒரு பூ மாதிரி பார்த்துக்கனும்...

அவனின் பதிலில் அகமகிழ்ந்த நிலா அவனின் அருகில் நெருங்கி அமர்ந்து உரிமையாக தோள் சாய்ந்தாள்.....

அழைப்பு மணி ஒலிப்பில் கனவில் இருந்து இருவரும் நிஜத்திற்கு வந்தார்கள்.... நிலா வெட்கத்துடன் எழுந்து உள்ளே ஓடி விட்டாள்..

வாசு அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்... அழைப்பு மணி விடாமல் ஒலிக்க அவனது மொத்த கவனமும் கதவின் மேல் திரும்பியது... யாருடா இந்த கரடி... ச்சே.... புலம்பியவாறே கதவை நோக்கிப் போனான்....

மயக்குவாள்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

வாசுவிடம் சக்தி எல்லாவற்றையும் சொல்லி அந்த லெட்டர்லே இருந்ததை அவன் படிக்கவில்லை
அது என்னன்னு நாங்கள் எப்போ தெரிந்து கொள்வது?
நிலாவின் நிஜப் பெயர் சிவானியா?
வாசுவிடம் சிவானி லவ்வு சொல்லி விட்டாள்
அடுத்து இனி கல்யாணம்தானே
இப்போ கதவைத் தட்டிய கரடி யாரோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top