கொலுசொலி - அறிமுகம்

Advertisement

achuma

Well-Known Member
வணக்கம் நட்புக்களே,
எல்லாரும் எப்படி இருக்கீங்க ,
ரொம்ப நாள் கழித்து மீண்டும் உங்களை புது கதையில் சந்திப்பதில் மகிழ்ச்சி .
மல்லி மேடம்க்கு எனது முதல் நன்றி.
அவங்க இந்த தளத்துல எனக்கு எழுத, உதவியதற்கு, எனது நன்றிகள் .
அப்பறம் பிரெண்ட்ஸ், உங்களின் ஆதரவுக்கு மிகவும் நன்றி.
நீங்க கொடுக்கும் கருத்துக்களும், விமர்சனுகளும் தான், என்னை எழுத ஊக்குவிக்கும்.
உங்களின் ஆதரவு இல்லை என்றால் இது சாத்தியமில்லை.
இப்பொழுதும், உங்களின் ஆதரவை எதிர்பார்த்து கொலுசொலி கதை, ஆரம்பித்துள்ளேன்.
என்னுடன் நீங்களும் பயம் செய்யுங்கள், நட்புக்களே .
All take care frends

கொலுசொலி

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேல முகத்தோனே,
என்று வீட்டினில் விநாயகர் சதுர்த்தி அன்று பக்தி பாடல் ஒளித்து கொண்டிருக்க

"பிள்ளையார் அப்பா, நீயே எங்களுக்கு துணை, எல்லாரையும் நல்லா வாழ வை பா," என்று இறைவனுக்கு கற்பூரம் ஏற்றி கொண்டு பக்தியுடன் வேண்டிக் கொண்டிருந்தார் அவ்வீட்டின் குடும்ப தலைவர், ரங்கநாதன்.
பிறகு, இறைவனுக்கு படைக்க பட்டிருந்த நெய்வைத்தித்திற்க்கும் கற்பூரம் காட்டி விட்டு , அவரின் மனைவி ரமா, மற்றும் மூத்த மகன் விக்ரம் அவன் மனைவி பிரியா, அவர்களும், தீபாராதனை கண்களில் ஒற்றி
கொண்டனர்.

இளைய மகனும் அருண் (நம் கதையின் நாயகன் ), மற்றும் மூத்த மகனின் இரு பிள்ளைகளும் பூஜை அறையில் இல்லாது, தீபாராதனையுடன் கூடம் நோக்கி சென்றால், அங்கு பூஜை அறையின் வெளியே மூவரும் நின்று கொண்டு, பக்தி பரவசமாக, காதுகளில் சாமந்தி பூ சூடி கொண்டு, நெற்றியில் பட்டை தீட்டி கொண்டு, கை கட்டி பவ்வியமாக நின்று கொண்டதை பார்த்ததும், ரங்கநாதன் முதல் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இதழில் புன்னகை வந்து ஒட்டி கொண்டது.

ரங்கநாதன், அவனிடம் தீபாராதனை தட்டை ஏந்தி கொண்டு வரும் போது, அருண் பாட ஆரம்பித்தான் .
அருண் பாடுவதற்கு ஏற்ப, அவனை பின் பற்றி அக்குழந்தைகளும் இனைந்து கொண்டனர் .

கணபதி பாப்பா மோரியா (அருண் )
கணபதி பாப்பா மோரியா (இரு பிள்ளைகள் )
எங்க வீட்டுக்கு வாரியா
எங்க வீட்டுக்கு வாரியா
லட்டு கொழுக்கட்டை தாரியா
லட்டு கொழுக்கட்டை தாரியா

ரங்கநாதன், அருணின் தலையில் தட்டி, அவனுக்கு திருநீர் பூசி விட்டார், புன்னகையுடன் .

"டேய், நீ தான், குறும்புனா, பசங்களையும் உன்னை போலவே, மாத்திட்டு வர," என்றார் சிரிப்புடன், பேரப்பிள்ளைகள் இருவருக்கும், நெற்றியில் மீண்டும் திருநீர் பூசி விட்டார் .

"தாத்தா, நீங்க, போட்ட பாட்டு விட, சித்தா சொல்லி கொடுத்த பாட்டே எங்களுக்கு நல்லா இருக்கு, தாத்தா."

"பாருங்க, எங்களுக்கு, கணபதியே, லட்டு கொழுக்கட்ட தர போறாரு, அம்மா சாமிக்கு வெச்சிட்டு தான் சாப்பிடணும்ன்னு சொல்லிட்டாங்க, அதான் நாங்க சாமி கிட்டயே வந்து கேட்டுட்டோம்," என்றனர் அந்த வாண்டுகள் .

அதில் ரமாவும் ப்ரியாவும் சிரித்து விட்டு, "இப்போ பூஜை முடிஞ்சுது, வாங்க உங்களுக்கு ஸ்வீட் தரேன்," என்று பிரியா அழைத்து கொண்டு உணவருந்தும் அறைக்கு அழைத்து சென்றாள் .

அன்று விநாயக சதுர்த்தி, மும்பை நகரமே எங்கும் மகிழ்ச்சியும் விழாக்கோலமாக காட்சியளித்தது .
மும்பை நகரத்தில், அதிக தமிழர்கள் வசிக்க கூடிய அந்தேரி பகுதியில் இந்த அன்பான குடும்பம் உள்ளது.
இக்குடும்பத்தினருடன் நாமும் பயணிப்போம் .
In a week three episodes will be given

bye friends.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top