கொரோனாவும் அரசு மருத்துவமனையும்

Advertisement

SahiMahi

Well-Known Member
வணக்கம் மக்களே,
எனக்கும் கொரோனா வந்தது.ஆனால் அந்த கதையைப் பற்றி சொல்ல வரலை.நான் உணர்ந்த சில விஷயங்களைக் கூற மட்டுமே வந்துள்ளேன்.
நம் வீட்டிற்கு திடீரென நான்கு விருந்தாளிகள் வந்தால் வீட்டில் இருப்பதை வைத்து சமாளிக்கலாம்,பத்து பேர் வந்தா கூட குறுக்கே நெடுக்குமாக படுக்க வைச்சு சமாளிக்கலாம்,ஆனா நூறு பேர் வந்தால்?அதாங்க இப்போ அரசு மருத்துவமனையின் நிலைமை.
மழைக்கு கூட அரசு மருத்துவ மனை செல்லாதவர்கள் இப்போ அங்கதான்.திருவிழா போல் மக்கள் கூட்டம்,காரணம் குடும்ப மருத்துவர்,கைராசி மருத்துவர் மற்றும் சிறந்த மருத்துவமனைகள் என்று நினைத்தவர்கள் கைவிட்டதே.( சிலர் விதிவிலக்கு).
எங்கள் ஏரியாவில் தெருவிற்கு ஒரு மருத்துவமனை உண்டு.ஆனால் கோவிட் நோயாளிகளை பார்ப்பது இல்லை.சில மருத்துவமனைகளே அனுமதிக்கின்றனர்.பெரிய மருத்துவமனைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.(atm card கொண்டு போனால் கார்டு மட்டுமே மிஞ்சும்).CT scan
அவசியமோ இல்லையோ எடுத்தே ஆகனும்.இன்னும் பல, தனியார் மருத்துவமனையில்.
ஆனால் டெஸ்ட் முதல் சிகிச்சை வரை அனைத்தும் இலவசம் அரசு மருத்துவ மனையில்.
கொரோனா பாஸிடிவ் வந்தவுடன் அவர்களே அழைத்து சென்று test screening செய்கிறார்கள் பின்பு home quarantine எனில் வீட்டில் தனி குளியல் அறை வசதி இல்லையெனில் covid care centre அழைத்து செல்கிறார்கள்.
Double bed room with bath room facility இல்லாதவர்கள்,facility இருந்தும் கவனிக்க ஆள் இல்லாதவர்கள்,அறுபதை கடந்தவர்கள் என அனைவருக்கும் அடைக்கலம் தருவது என்பது சாதாரண விஷயம் அல்ல..
இப்பொழுது பாஸிடிவ் வந்தால் வீட்டிற்கே வந்து விடுகிறார்கள் மருத்துவ மனையில் கூட்டத்தை குறைக்கின்றனர்.Home quarantine ல் இருப்பவர்களை போனில் அழைத்து விசாரிக்கின்றனர்.இதுவே த.மருத்துவமனையில் WhatsApp ல் consultation என்று அதற்கு ஒரு பேமன்ட்.இரண்டையும் பார்த்தாயிற்று.
எங்கள் வீட்டில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தொற்று.அரசு மற்றும் தனியார் இரண்டையும் நாடினோம்.அரசின் செயல்பாடுகள் பாராட்டிற்கு உரியது.


அதனால் மக்களே அங்கங்கு சிறிய,பெரிய தவறுகள் நடந்தாலும்,சிலபல ஊழியர்கள் தவறு செய்தாலும்,இத்தனை பெரிய பாரத்தை சுமக்கும் அரசை பாராட்டலாம்.
 

rev

Well-Known Member
sis nanum ippo than hospital irunthu vanthurukken. Government hospitals badam illa. private hospitals badam illa.
 

rev

Well-Known Member
sis nanum ippo than hospital irunthu vanthurukken. Government hospitals badam illa. private hospitals badam illa.
 

rev

Well-Known Member
sis nanum ippo than hospital irunthu vanthurukken. Government hospitals badam illa. private hospitals badam illa.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top