கொரானா புண்ணியம்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கொரோனா புண்ணியம் ஆள் குறைப்பு எனச் சொல்லி இனி வேலைக்கு வரவேண்டாம் என ஆபீசில் சொல்லி விட்டார்கள்.
போன மாசமே சம்பளம் 50% குறைவாகவே தந்தார்கள்.

தனியார் கம்பெனி அதுவும் சின்ன கம்பெனிதான்.
முதலாளி நல்லவர்தான்.
பாவம் அவரும் என்னதான் பண்ணுவார் என பாலுவுக்கு அவர் மேல் பரிதாபம்தான் வந்தது..

மனைவி, இரண்டு குழந்தைகள், அம்மா என இத்தனை பேரின் தேவைகளை எப்படி சமாளிப்பது என்ற கவலை உடனே தொத்திக்கொண்டது...

அவன் முகத்தை பார்த்ததுமே சீதாவிற்கு பிரச்சனை என்னவென்று புரிந்து விட்டது.
இது எதிர்பார்த்ததுதான் என்றாலும் அடுத்தது என்ன? என்ற நியாயமான கவலை அவளுக்கும் ....

ஏற்கனவே மாமியார் மருமகள் பிரச்சனை.. இது இப்போ என்ன ஆகப் போகிறதோ? என அடுத்த பிரச்சனை... ஒரே பையன் அம்மாவை வேறு எங்கும் அனுப்பவும் முடியாது....

வீட்டில் நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவன் தாயார், ஏன் ரெண்டு பேரும் இப்படி குடி முழுகினா மாதிரி இருக்கேள்? நடக்க வேண்டியதை பார்க்கலாம்..

அப்பாவோட பென்ஷன் தொகை மாசா மாசம் கொஞ்சம் வருது. அது எதுக்கு எனக்கு?
நீங்கதான் இருக்கேளே எனக்கு
அது இல்லாம பாங்க்-ல ஒரு லட்சம் இருக்கு.
அத எடுத்து தந்துடறேன்...

இந்த கொரோனா வந்ததுக்கப்புறம் ஒரு கடையும் இல்ல.
வீட்டு சாப்பாடு தவிர நிறைய பேர் ஆத்துல பெரியவாளும் குழந்தைகளும் சலிச்சுக்கறா...
தீபாவளி, ஜன்மாஷ்டமின்னு நம்மாத்து பக்ஷணம் எல்லாம் இங்க ரொம்ப பேமஸ்..

என் உடம்புல இன்னும் தெம்பு நன்னா இருக்கு.
நான் என்ன பண்றேன் நாளைல இருந்து ஒவ்வொண்ணா பண்ண ஆரமிக்கறேன்.
ஏற்கனவே அக்கம்பக்கத்தில சொல்லி வெச்சுட்டேன்...
எல்லாரும் வாங்கிக்க ரெடியா இருக்கா ....

ஏதோ பக்கத்துல கம்ப்யூட்டர் கம்பெனிக்கு மத்யானம் இருபது பேருக்கு லஞ்ச் பண்ணித் தருவேளா அப்படின்னு கேட்டிருக்கா..
ஒரு தக்காளி சாதம் இல்லாட்டி எலுமிச்சை சாதம்
கூட ஒரு தயிர் சாதம் ... பண்ணினா போச்சு...
என டக் டக்கென்று சொல்லிக் கொண்டே போக பாலுவுக்கும் சீதாவிற்கும் நம்பிக்கை துளிர் விட்டது..
இந்த வயதிலும் தீர்க்க யோசித்து இந்த நிலைமையிலும் நம்பிக்கையோடு பேசிய அம்மாவை பார்த்ததும் வாழ்க்கையில் மனமிருந்தால் மார்கமுண்டு என புரிய ஆரம்பித்தது.....

Dr R Balasubramaniyam..

இன்று காலை ஒரு தாயும் மகனும் பை நிறைய முருக்கையும் தட்டையையும் தெருவில் சில வீடுகளில் வினியோகம் செய்ததை பார்க்க நேர்ந்தது ..... அதுவே இக்கதையின் காரணம்..

படித்ததில் பிடித்தது.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top