கொஞ்சம் சிரிக்கலாம்

Advertisement

I R Caroline

Well-Known Member
"தங்கச்சி இதை ஜெராக்ஸ் எடுத்துக் கொடும்மா. எதுவும் மாறக் கூடாது. பேப்பரில் உள்ள மாதிரியே வரனும். "

அந்த பேப்பரை பார்த்ததும், "சார், இதில் மார்ஜின் இல்லாமா எட்ஜ் வரை எழுதியிருக்கீங்க. அதனால், ரெடியூஸ் பண்ணிதான் எடுக்கனும். இல்லைன்னா எட்ஜில் இருக்கிறது கட் ஆகிடும்."

"அதெல்லாம் எதுவும் பண்ணக் கூடாது. எனக்கு அப்படியேதான் எடுக்கனும். கட் ஆகவும் கூடாது."

"சார், அப்படி எடுக்க முடியாது. கண்டிப்பா கட் ஆகும்."

"என்னாம்மா நீ. உன் அப்பா எங்க? அவர் கரெட்க்டா எடுப்பார். அன்னைக்கு எடுத்துக் கொடுத்தாரே. அவரைக் கூப்பிடு."

'அப்பாவா...:eek::unsure: இறந்து போன அப்பா எப்போ எடுத்துக் கொடுத்தாங்க.:unsure: கூப்பிட வேற சொல்றார்.:cautious: தூக்கத்தில் கனவு கண்டுட்டு பாதியில் வந்துட்டாரோ' என்று யோசிக்க.

"என்னம்மா? யோசிக்கிற. பதில் சொல்லாம." என் கணவர் உள்ளே வர. "இதோ வந்துட்டாரே. இந்தாப்பா இதை ஜெராக்ஸ் எடுத்துக் கொடு. உன் பொண்ணு முடியாதுன்னு சொல்றா."

'ஓ! இவர்தான் அப்பாவா...:D:D:D', பொண்ணா என்று அவர் என்னை லுக் விட, "ஆமா பொண்ணு நீங்க ஜெராக்ஸ் எடுத்துக் கொடுங்க. ரெடியூஸ் பண்ணாம எப்படி எடுத்தீங்கப்பா?" என்று சிரிக்க.

அவரும் சிரித்துக் கொண்டே ஒன்றும் சொல்லாமல் ஜெராக்ஸ் 5% ரெடியூஸ் பண்ணி எடுத்தார். நான் அவர் முகத்தைப் பார்க்க, அவர் அமைதியா இரு என்று கண்ணை அசைத்தார். ஜெராக்ஸ் எடுத்ததைக் கொடுத்தார்.

"பார்த்தியா உன் அப்பா எடுத்துக் கொடுத்துட்டார். நீ முடியாதுன்னு சொன்ன. அது எப்படின்னு அப்பாகிட்ட கேட்டுக்கோ." என்று சொல்லிட்டு போனார்.

"உண்மையை சொன்னா கேட்காம. எதுவும் சொல்லாம எடுத்துக் கொடுக்கீங்க. அதை சரின்னு வாங்கிட்டு போறார். அப்ப நான் லூஸா? அவர் லூஸா?"

"நீ உண்மையைச் சொன்னதை கேட்கலை விட்டுடு. வாதம் பண்ணாம அமைதியா உன் வேலையை பார்." என்றார்.

"அது சரிதான் உண்மைக்கு ஏது காலம்." என்னைப் பார்த்துச் சிரித்தவர் வெளியில் கிளம்ப "என்னப்பா? இப்பதான வந்தீங்க அதுக்குள்ள கிளம்பறீங்க."

"ம்ம்... என்னை தாத்தாவா மாத்துறதுக்குள்ள முடிக்கு டை அடிச்சிட்டு வரேன்.":D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top