கை சேருமோ 2

KP JAY

Well-Known Member
வருண் அன்று இரவே தந்தைக்கு பேசினான். அம்ருதாவை தனக்கு பேசி முடிக்க முடியுமா என்று கேட்டான். அந்த வீட்டு பெண்கள் அனைவரும் நல்ல மாதிரி தான். அந்த ஆள் தான் ரொம்ப பொறாமை பிடித்தவர். நான் நம்ம மதிய விட்டு பேசி பார்க்கிறேன் என்று கூறி வைத்தார். மதியும் அருகில் வசிப்பவர் தான். ஆனால் இரண்டு வீட்டினரிடமும் பேசுவார்கள். அதனால் அவரை அணுக முடிவு செய்தார் வருணின் தந்தை.

அந்த மதியும் அவர்களிடம் பேச அம்ருதாவின் தந்தைக்கு மயக்கம் வராத குறை தான். இவ்வளவு பெரிய இடத்தில் இருந்து தன் பெண்ணை கேட்கிறார்களா என்று. அவர்களின் உயரம் தானே இவரின் வைற்றுஎரிச்சல். அவர்களின் வீட்டிற்க்கே தன் பெண் வாழ சென்றால் இவருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை தான். ஆனால் பிரச்சனை வேறு ரூபத்தில் வந்தது. ஒரு மரியாதைக்கு என் மூத்த மாப்பிள்ளையிடமும் பேசிட்டு சொல்றேன் என்று கூறி இருந்தார் அந்த மதியிடம்.

ஆனால் அடுத்த நாள் இந்த சம்மந்தம் ஒத்து வரதுங்க. என் பொண்ணுக்கு நான் வேறு இடம் பார்த்துட்டேன் என்று கூறி அத்தத்துடன் அந்த பேச்சு வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை.

அதனையே வருணிடமு கூறினார். மூத்த மாப்பிள்ளைக்கு தன்னுடைய சகலையாக வருபவன் தன்னைவிட பெரிய ஆளாக இருப்பதில் விருப்பம் இல்லை. அவன் கூட வேலை பார்க்கும் ஜூனியர் பையனை கொண்டுபோய் நிறுத்திவிட்டான். மூத்த பெண்ணின் வாழ்க்கையில் பிரச்சனை ஆகுமோ என்று ஐவரும் ஒத்து கொண்டுவிட்டார்.

வருண் இப்பொழுது கிளப்பிவிட்டது அம்ருதாவிற்கு முடிந்த அளவு சீக்கிரமாக கல்யாணம் முடிக்க வேண்டும் என்று அந்த மூத்த மாப்பிள்ளையாகப்பட்டவன் அவசரப்படுத்தினான்.

அம்ருதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. திடீர் என்று ஒருவனை காட்டி இவன் தான் மாப்பிள்ளை. டுற்ற முகூர்த்தத்தில் திருமணம். உடனடியாக கிளம்பிவா என்று அவசரப்படுத்தினர்.

அப்பா என்னோட சம்மதம் வேண்டாமா? எனக்கு பிடிச்சிருக்கான்னு உங்களுக்கு தெரிய வேண்டாமா என்று பாவமாக கேட்டாள்.

அது எப்படி பெரியவங்க நாங்க என்ன தப்பாவா முடிவு எடுத்திருப்போம். பெத்தவங்களுக்கு அடங்கின பிள்ளைங்கன்னா கண்ணா மூடிட்டு ஒத்துக்குவாங்க. உன் அக்கா அப்படி தான் நான் பார்த்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டினாள். அவள் இப்பொழுது நன்றாக இல்லையா. ஒழுங்கா ஊருக்கு கிளம்பி வர வழிய பாரு என்று கத்திவிட்டு வைத்து விட்டார்.

அடுத்த நாள் மதியத்திற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. நேற்று மதியத்திலிருந்து அவள் இன்னும் சாப்பிட வில்லை. அவளுக்கு இப்பொழுது எதை நினைத்து கவலைப்படுவது என்றுகூட தெரியவில்லை.

அப்பொழுது ரூம் போன் அடித்தது. ரிசெப்ஷனில் இருந்து அழைத்து இருந்தனர். உங்களுக்கு கெஸ்ட் என்று கூறி வருண் என்று கூறினார். இவளுக்கு ஆச்சர்யம். அவனா என்று. அனுப்ப கூறினால்.

வருண், முரளி, அனிதா மூவருமே வந்திருந்தனர். கையில் உணவு பார்சல். அதே ரெஸ்டாரண்டில் இருந்து வாங்கி வந்துவிட்டனர்.

வாங்க என்று கூறி வரவேற்றாள். அவள் முகம் குழப்பத்தை காண்பித்தது.

அனிதா எனக்கு முதலில் பசிக்கிது என்றாள். அவர்களுக்கு புரிந்தது அம்ருத இன்னும் சாப்பிட்டு இருக்கவில்லை என்று. அதனால் சாப்பிட்டு முடிச்சிட்டு ஓசாலம என்று கேட்டான் வருண். அவளும் சரி என்று கூறினாள்.

முரளி அனைவருக்கும் எடுத்து வைத்தான். நான்கு பெரும் சாப்பிட்டு முடித்தனர். யாரும் எதுவும் பேசவில்லை.

அம்ருதாவின் அப்பா கதவை அடைத்துவிட்டார். இனி அம்ருதா வழியாகத்தான் ஏதாவது செய்யவேண்டும்.

சாப்பிட்டு முடித்து அனைவரும் சோபாவில் வந்து அமர்ந்தனர்.

என்ன என்பது போல அம்ருதா பார்த்தாள்.
அவளுக்கு இன்னும் ஒரு யூகம் கூட இல்லை. ஏன் என்றாள் அனிதாவும் இதன் வந்திருக்கிறாள். அதனால் அவன் கட்டிக்கொள்ளும் பெண்முன்பு தனக்கு சாதகமாக எதுவும் இருக்கப்போவதில்லை என்று நம்பினாள்.

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று வருண் எடுத்ததும் விசயத்தை போட்டு உடைத்தான்.

அம்ருதாவிற்கு மறுபடியும் அதிர்ச்சி. கடந்த ஒரு நாளுக்குள் எத்தனை அதிர்ச்சியை தான் அவளும் தங்குவாள். அதிலும் இது இவ அதிர்ச்சி. ஒரு யுகமாக அவள் காத்திருந்தது அவள் காய் அருகில் இப்பொழுது.

“நீக்க இவங்கள கல்யாணம் பண்ண போறத சொன்னிங்க” என்று அனிதாவை காட்டினாள்.

“ஐயோ. அவ என் பொண்டாட்டி. நான் அவனுக்கு என்னால் கட்டி குடுக்குறதா இல்ல” என்று முரளி கூறினான்.

அனிதா வருண் இருவரும் சிரித்தனர்.

“ஓ பொய் சொன்னிங்களா. என்ன அவாய்ட் பண்றதுக்கா?” என்று கேட்டாள்.

வருண் ஆமாம் என்றான்.

“அப்போ இப்போ மட்டும் என்ன?”

“எனக்கும் உன்ன பிடிச்சிருக்கு. அதான் கட்டிக்க கேக்குறேன்”

“உங்களுக்கும்னா? வேற யாருக்கு என்னை பிடிச்சிருக்கு” என்று கேட்டாள்.

அனிதாவும் முரளியும் இப்பொழுது சிரித்தனர்.

“ஹே உனக்கு என்ன பிடிச்சிருக்குள்ள. அதே மாதிரி எனக்கும் உன்ன பிடிச்சிருக்குன்னு சொன்னேன்”

“நான் எப்போ எனக்கு உங்கள பிடிச்சிருக்குன்னு சொன்னேன்” அவளின் இதனை வருட காத்திருப்பையும் அவனின் கண்டுகொள்ளாமையும் அவளுக்கு ஒரு கோபத்தை கொடுத்திருந்தது. அதனால் இடைக்காக பேசினாள்.

“டேய் முரளி. அனிதாவ கூட்டிட்டு போ. நான் இவகிட்ட பேசிட்டு வரேன்.” என்று கூறி அவர்கள் இருவரையும் அனுப்பிவைத்தான்.

இப்பொழுது அவளை நேருக்கு நேராக பார்த்து “இப்போ சொல்லுங்க மேடம்” என்றான்.

“என்ன சொல்லனுங்க சார்”

“உனக்கு என்ன பிடிக்காது”

“பிடிக்காதுன்னு நான் எப்போ சொன்னேன்.”

“அப்போ பிடிக்கும்னு எடுத்துக்கலாமா?”

“அப்படியும் நான் சொல்லலையே”

“சரி இப்போ சொல்லு. என்னைய பிடிச்சிருக்கா. கல்யாணம் பண்ணிக்கலாமா?”

“ஏனக்கு எங்க அப்பா வேற மாப்பிள்ளை பாத்துட்டார். அடுத்த முஹூர்த்தத்தில கல்யாணமாம். நான் உடனே ஊருக்கு வரணும்னு இன்னிக்கு தான் சொன்னார். அவர் பேச மீறினா நான் வீட்டுக்கு அடங்காத பிள்ளைன்னு வேற சொல்லிட்டார்” என்று கூறினாள்.

“சோ? மேடம் இப்போ என்ன ஐடியால இருக்கீங்க?”

“நான் வீட்டுக்கு அடங்கின பிள்ளையா இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்”

“அப்போ நீ இத்தனை நாலா எண்ணிய மனசுல நினைச்சது எல்லாம்?”

“அது நான் மட்டும் தானே நினைச்சேன். நானே மனசுக்குள்ளவே போட்டு புதைச்சிக்கிறேன். சரியா?”

“நான் இவ்வளவு நாளா உன்ன கண்டுக்கலைன்னு கோபமா” என்று அருகில் சென்று கேட்டான்.

“ நான் யாரு உங்க மேல கோபப்பட?” முகத்தை திருப்பினாள்.

அவன் உடனே அவள் கன்னத்தை பிடித்து அவனை பார்க்க செய்தான்.

“நீ என்னோட ஒரு நாள் காதலி. இப்போ ஓகே சொன்ன அடுத்து என்னோட மனைவி”

“காதலியா? இது எப்படி?”

“ஆமாம். நேத்து சாயந்திரத்தில இருந்து நான் உன்ன காதலிக்கிறேன். அதனால தான் என் அப்பாகிட்ட சொல்லி உடனே உன்ன பொண்ணு கேட்க சொன்னேன். உன் அப்பா உன் அக்கா வீட்டுக்காரர்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லி கடைசில பொண்ணு குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டார். இப்போ நீ ஏதாச்சும் மனசு வச்சா தான் நம்ம கல்யாணம் நடக்கும். என்ன சொல்ற?”

அந்த நேரம் அவளுக்கு வீடியோ கால் வந்தது. அம்ருதாவின் அக்கா வித்யா தான் கால் செய்கிறாள். அக்கா ஏன் இந்த நேரத்துல கால் செய்கிறாள் என்று ஆச்சர்யம் அடைந்தாள். அம்ருதாவிற்கு இன்னும் இந்த திடீர் மாப்பிள்ளை தன் அக்கா கணவரால் வந்தது என்று தெரியாது. கால் எடுத்தாள். வருண் சத்தம் காட்டாமல் அமர்ந்து இருந்தான்.

“அக்கா என்ன இப்போ கால் பண்ணிருக்க?”

“இந்த மனுசன் பண்ற வேலைக்கு நான் என்ன தான் செய்றது. எங்களுக்கு கல்யாணம் நடந்ததுல இருந்து உன்னோட விசயத்துல மூக்கை நுழைக்கிறதே இவருக்கு வேலை.”

“என்னக்கா சொல்ற?”

“எனக்கு மேரேஜ் ஆகி அவர் நம்ம வீட்டுக்கு வந்திருந்தப்போவே அவர் உனக்கு வருண பிடிச்சிருக்குன்னு கண்டுபிடிச்சிருக்கார். அதனால தான் உன்ன போர்ஸ் பண்ணி யூ.எஸ் அனுப்பிருக்கார். அதெல்லாம் இப்போ தான் அவர் என்கிட்டே சொல்றார். இப்போ அவங்க வீட்டுலயே இருந்து வந்து பொண்ணு கேட்ருக்காங்க. இப்போவும் இவரு தான் கட்டைய போடுறாரு. அப்பாக்கு அந்த வீட்டுக்கு உன்ன குடுக்க விருப்பம் தான். இவர் தான் திடிர்னு அவரோட ஜூனியர் பையன கொண்டுவந்து நிறுத்தி அவனுக்கு உன்ன குடுக்க சொல்லிருக்காரு. அப்பாவும் என் லைப் பத்தி யோசிச்சு அந்த பையனுக்கு ஓகே சொல்லிட்டார்”

இவ்ளோ நடந்துருக்கா என்று ஆச்சர்யம் அடைந்தாள். நீ மாமாகிட்ட போன் குடுக்கா நான் பேசுறேன் என்று கூறினாள்.

அவள் அக்கா கணவன் ரகுவும் வந்து அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

“சொல்லுங்க மாமா”

“என்னம்மா? உனக்கு ஒரு மாப்பிள்ளை தானே பார்த்தேன். உன் அக்கா என்னமோ உன்ன பாலும் கிணத்துல பிடிச்சு தள்ள போற மாதிரி துள்ளுறா.”

“மாப்பிள்ளையை எனக்கு பிடிக்க வேணாமா மாமா?”

“நான் பார்த்திருக்க பையனும் நல்ல பையன் தான் மா”

“எனக்கு வேற ஒரு பையன பிடிச்சிருந்தா கூட நீங்க பார்க்குற பையன தான் கட்டிக்கணுமா மாமா?”

“உனக்கு பிடிச்ச பையன் நம்மள விட பெரிய இடமா இருக்காங்களே மா. நாளைக்கு நாம ஈஸியா போக வர இருக்க முடியுமா”

“அவங்க யாரும் உங்கள வந்து போக கூடாதுன்னு சொன்னார்களா மாமா. அவங்களே வந்து கேட்டுருக்காங்க. அப்போ எப்படி நம்மள அவங்க வேற மாதிரி நடத்துவாங்கன்னு நினைக்கிறீங்க ”

“அதெல்லாம் நான் விளக்கம் சொல்ல விரும்பல. நானும் ஒரு பையன ரெகமெண்ட் பண்ணேன். உங்க அப்பா ஒத்துக்கிட்டாங்க. நீ இந்த பையன தான் கட்டிக்கப்போற. உன் மனச மாத்திக்கிட்டு ஊருக்கு வந்து சேறு” என்றான்.

வருண் அம்ருதா இருவரும் கொதித்து போயினர் அவன் பேசியதை கேட்டு. அம்ருதா அவள் மாமாவுடன் நேருக்கு நேர் மோத முடிவு செய்தாள். அப்பொழுது அந்த பக்கம் இருந்து வித்யா கத்தினாள்.

“அம்மு நீ ஒத்துக்கதாடி. உன்னோட கல்யாணம் உனக்கு பிடிச்ச பையனோட மட்டும் தான் நடக்கணும். இவர் என்ன வச்சு அப்பாவை என்னமோ மிரட்டி ஒத்துக்க வச்சிருக்கார். நீ ஸ்ட்ரோங்கா நில்லுடி” என்று தங்கைக்கு தைரியம் குடுத்தாள்.

“நான் இந்த மாப்பிள்ளைக்கு ஒத்துக்க மாட்டேன் மாமா.” என்று அம்ருதா கூறினாள்.

“அப்போ உங்க அக்கா உன் வீட்டுலயே இருக்க வேண்டியது தான்” அவனின் அசிங்கமான பக்கத்தை காட்டிக்கொண்டிருந்தான்.

“நீங்க ஏதோ அக்கா உங்கள நம்பி வாழற மாதிரியும் நீங்க இல்லன்னா அவளுக்கு வாழ்க்கையே இல்லங்கற மாதிரி பேசுறீங்க. நீங்க அக்கா வேலைல இருக்காளான்னு கேட்டு வேலைக்கு கண்டிப்பா போகணும்னு சொல்லி கல்யாணம் பண்ணுணிங்க. கொஞ்ச நாள்ல அவளோட சம்பளம் உங்களைவிட கொஞ்சம் அதிகமா போனதும் அடுத்த மாசமே அவளை வேலைய விட வச்சீங்க. அவ இப்போ வேலை தேடினாலும் திரும்ப உங்களைவிட ஒரு பெரிய பொசிசன்ல அவளுக்கு வேலை கிடைக்கும். அது உங்களுக்கும் தெரியும். அதனால உங்களுக்கு பொண்டாட்டி வேணும்னா வச்சு வாழுங்க. இல்லன்னா எங்க வீட்டுல கொண்டுவந்து விடுங்க. நாங்க உங்களைவிட நல்லாவே பாத்துக்குவோம்”

“உன் அக்காவை வாழாவெட்டின்னு சொல்லுவங்களல்ல. அது எல்லாம் ஒன்னும் இல்லையா உங்களுக்கு?”

அம்ருதா கோபத்தின் உச்சிக்கு சென்றாள்.

“மாமா. நான் யாரையோ கல்யாணம் பண்றேன் இல்ல பண்ணாம இங்கவே இருக்கேன். ஆனால் இனிமேல் நீங்க என் அக்கா கூட வாழ வேண்டாம். கொண்டுபோய் எங்க வீட்டுல விடுங்க. அக்கா, சீக்கிரம் யூ.எஸ் விசா ரெடி பண்ணிக்கலாம். நீ இங்க வந்துடறியா?”

“அங்க எனக்கு வேலை கிடைக்குமா டி”

“என் கம்பனிலேயே ஓப்பனிங் இருக்கு. நீ வந்துடுக்கா. எடுத்ததும் லட்ச கணக்குல சம்பளம் கிடைக்கும்”

“பையனுக்கு ஸ்கூல் டி?”

அங்கு ஒருத்தனை கண்டுகொள்ளாமல் சகோதரிகள் இருவரும் பிளான் போட்டுகொண்டு இருந்தனர்.

“இங்க பக்கத்துல ஸ்கூல் எல்லாம் இருக்குக்கா. ஸ்கூல் ஆபீஸ் எல்லாம் பக்கம் தான்க்கா. ஒன்னும் பிரச்சனை இல்ல.”

“சரிடி. இந்த வருசம் அவன் இங்கவே படிக்கட்டும். அம்மா இவன பார்த்துக்குவாங்க. நான் உடனே அங்க வர பாக்குறேன். இவர் என்ன எப்போ அம்மா வீட்டுக்கு அனுப்ப போறாருன்னு கேட்டுட்டு உனக்கு கால் பண்றேன். சரியா?” என்று கூறி கால் கட் செய்தாள்.

இது அனைத்தையும் ஒரு சிரிப்புடன் வருண் பார்த்துக்கொண்டிருந்தான்.

அங்கு வித்யா தன் கணவனை நக்கலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் இப்போ என்ன செய்ய போறீங்க என்பது போல.

ரகு ஒன்றும் சொல்லாமல் கடுப்புடன் சென்று படுத்துவிட்டான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement