கை சேருமோ…

Advertisement

KP JAY

Well-Known Member
அத்தியாயம் 1

மதியம் ஒரு மணி. பயங்கர பசி. அதிக கூட்டம் வேறு. அதுவும் மிகவும் மெதுவாக ஊர்ந்துகொண்டுருக்கிறது. வேறு வழி இல்லை. இங்கு தான் இந்திய உணவுகள் மிகவும் சுவையாக கிடைக்கும். இல்லையென்றால் பர்கர் தான் ஒரே வழி. இது நியூயார்க். ஹோட்டலில் தங்கி இருக்கிறாள். அவளே சமைத்துக்கொள்ளவும் வழி இல்லை. அது ஒரு சனிக்கிழமை. கொஞ்சம் சுவையாக சாப்பிடலாம் என்று வந்திருக்கிறாள். கூட்டத்தை பார்த்து மலைத்துப் போய் நின்றாள். அவள் அம்ருதா. சாப்ட்வேர் இன்ஜினீயர். சென்னையில் பிறந்து வளர்ந்து படித்து இப்பொழுது காலிஃபோர்னியாவில் வேலை பார்க்கிறாள். ஒரு வேலையாக கம்பெனி அவளை நயூயார்க் அனுப்பி இருக்கிறது.

அப்படியே அந்த ரெஸ்டாரன்டின் உள்ளே பார்வையை ஓட்டினாள். ஒரு இடத்தில் பார்வை நிலை குதி நின்றது. அது யார்? அவனா? அவனே தானா? இங்கு எப்படி?

ஏதோ ஒரு குருட்டு தைரியம். இத்தனை வருடங்களில் வராத தைரியம். ஏழு வருடங்களாக மனதில் பொத்திவைத்தவன் இன்று கண் முன்னே. அதுவும் கடல் தாண்டி இவ்வளவு தூரத்தில். அவன் எதிரில் போய் நின்றாள்.

அவன் வருண் ஷக்தி. இம்போர்ட் எஸ்போர்ட், டிரான்ஸ்போர்ட் என்று பல தொழில்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருபவன். இப்பொழுது தொழில் நிமித்தமாக அவனும் நியூயார்க் வந்திருக்கிறான்.

தன் முன் நிழல் ஆட நிமிர்ந்து பார்த்தான். அவனுக்கும் ஆச்சர்யம் சென்னையில் எதிர் வீட்டு பெண்ணை இங்கு வந்து சந்திப்போம் என்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் அவளிடம் பேச்சு வளர்க்கவும் அவனுக்கு விருப்பம் இல்லை.

அம்ருதா: ஹாய்..

வருண்: ஹாய்…

அம்ருதா: எக்ஸ்பெக்ட் பண்ணவேயில்லை. உங்கள இங்க பார்ப்பேன்னு. ஏதாச்சும் வேலையா வந்துருக்கீங்களா?

வருண்: ஆமாம். ஒரு பிசினஸ் மீட்டிங்க்கு வந்துருக்கேன்.

அப்பொழுது அனிதா வந்து அருகில் நின்றாள். பின்னாடியே முரளியும் வந்து நின்றான். ஆனால் அம்ருதா அனிதாவை மட்டும் பார்த்தாள்.

வருண்: இவங்க என் ஃபியான்சே. இன்னும் இரண்டு வாரத்தில் கல்யாணம் பண்ணிக்கபோறோம் என்றான்.

அம்ருதா சிலநொடிகள் பேச்சற்று நின்றாள். அவள் உள்ளுக்குள் பிரளயம் வெடித்துக்கொண்டிருந்தது. உயிருக்கு உயிராய் ஒருவனை நினைத்து சிறிது சிறிதாக அவள் சேர்த்துவைத்த காதல் இப்படி முடிவுக்கு வரும் என்று சற்றுமுன் கூட அவள் நினைத்துப்பார்க்கவில்லை. கண்கள் கலங்கும் போல் ஆனது. அதை மிகவும் கஷ்டப்பட்டு உள்ளிழுத்தாள்.

அம்ருதா: ஹாய். கங்கிராட்ஸ்… நீங்க சாப்பிடுங்க. நான் இனிமேல் தான் வாங்க போகணும். சீ யு லேட்டர்.

விடைபெற்று விரைவாக அந்த இடத்தை விட்டுச்சென்றாள்.

முரளி: டேய் என்னடா என்னோட பொண்டாட்டிய உன்னோட ஃபியான்சேன்னு சொல்ற. இவளும் பாத்துட்டு சும்மா நிக்கிறா. அந்த பொண்ணு நிக்காம ஓடுது. என்னடா நடக்குது?

வருண்: அவள் நிற்காமல் ஓடனும்னு தான் அப்படி சொன்னேன். இவ சென்னை தான். எங்க வீட்டுக்கு எதிர் வீடு. இவ அப்பா வருஷம் பூரா எங்க வீட்டுல சண்டை போடுவாரு. இவ மட்டும் என்னைய சைட் அடிப்பா. அதான் அப்படி சொன்னேன்.

அனிதா: பெரிய காவிய காதலா இருக்கும்போலயே. அந்த பொண்ணு அடுத்து எதுவும் கேக்காம ஓடி போய்டுச்சு.

இப்பொழுது மூவருமே அவளை கவனித்துக்கொண்டே சாப்பிட்டனர்.

இங்கு அவள் க்யூவில் சென்று நின்றாள். சின்னவயதில் இருந்து வருணை பார்த்தது அவனிடம் மனதை பறிகொடுத்தது, தினமும் ஒரு முறையேனும் அவனை பார்க்க துடித்தது, உயிர் போகும் வலியுடன் சென்னையில் இருந்து கிளம்பி யூ.எஸ் வந்தது என்று ஒவ்வொன்றாக அவள் மனதில் வலம் வந்தது.

“மேம் ப்ளீஸ் மூவ்.” யாரோ ஒருவர் கூறினார்.

சாரி என்று கூறி அவளும் முன்னேறினாள். அவள் தடுமாற்றங்களை இங்கு சாப்பிட்டு கொண்டிருந்த மூவருமே கவனித்தனர்.

கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களுக்கு மேல் க்யூவில் நின்று கௌண்ட்டர் அருகில் சென்றுவிட்டாள். ஆனால் அவளுக்கு இப்பொழுது என்ன செய்வது என்றே தெரியவில்லை. கலங்கும் கண்களையும் மறைக்க முயன்று கொண்டிருந்தாள். இரண்டு முறை கண்ணில் தூசி விழுந்தது போல கண்ணீரை சுண்டிவிட்டாள்.

இங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் அப்படியே சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளை மட்டுமே இப்பொழுது பார்த்துக்கொண்டிருந்தனர்.

அனிதா: டேய் அழுவுறா டா.

முரளி: அந்த பொண்ணு இப்போ இந்த உலகத்துலயே இல்ல.

தனக்கு முன்பு இன்னும் இருவர் மட்டுமே இருக்க இவளுக்கு என்ன வாங்குவது என்றும் தோன்றவில்லை சாப்பிடவும் அவளுக்கு இப்பொழுது மூட் இல்லை. அப்பொழுதே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டாள். இவ்வளவு நேரம் அவ்வளவு பெரிய க்யூவில் நின்றுவிட்டு அருகில் வந்ததும் அவள் வெளியேறியது அங்கு நின்று கொண்டிருந்த அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

அவள் வேகமாக நடந்து வெளியே சென்றுவிட்டாள்.

இங்கு வருணும் “டேய் நீங்க சாப்பிட்டு வாங்க. நான் உங்களுக்கு அப்புறம் கால் பண்றேன்” என்று கூறிவிட்டு அவளை தொடர்ந்து சென்றான்.

அவள் ஒரு பத்து நிமிடம் போல் நடந்து ஒரு சிறிய ஆற்றின் மேல் இருந்த பாலத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தாள். அங்கு ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். இவளை தொடர்ந்து வந்தவன் அவளுக்கு பின்னால் இருந்த சிறிய கல் போன்ற ஒருவர் அமரக்கூடிய இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான். அவள் இந்த உலகத்தையே மறந்து அந்த ஆற்றை மட்டுமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். இவனும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். ஏதோ ஜென் மனநிலைக்கு போய்விட்டது போல் அமர்ந்து இருந்தாள்.

நேரமும் ஓடிக்கொண்டிருந்தது.

அவள் சிறு வயதில் இருந்தே வருணை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள். இவள் அப்பாவும் ஏனோ வருண் வீட்டின் மேல் அப்படி ஒரு பொறாமை. சின்ன காரணம் கிடைத்தால் கூட மிகவும் வன்மையாக சண்டை போடுவார் அவர்கள் வீட்டினருடன். அதனால் இவளின் வீடு என்றால் அவர்களுக்கு துஷ்ட்டனை கண்டதுபோல தூர விலகிவிடுவர்.

ஆனால் அம்ருதா அவள் பத்தாம் வகுப்பில் படிக்கும்பொழுது அவளுக்கு தோழி ஆனாள் பிரியா. வருணின் அத்தை பெண். அவனை பற்றி ஓயாமல் புகழ் பாடி இவளும் அவனை கவனிக்க தொடங்கினாள். நல்ல உயரத்தில் துரு துறுவென தீர்க்கமாக பார்க்கும் வருணை இவளுக்கும் பிடித்துவிட்டது. நேரில் ஒரு முறை கூட பேசியதில்லை. ஆனால் தினமும் ஒரு முறையேனும் பார்த்துவிடுவாள். சில நாட்கள் கழித்தே வருணும் அதை உணர்ந்தான். ஒரு நாள் அவளை நேருக்கு நேர் நின்று என்ன என்பதுபோல் அவளை முறைத்தான். மிகவும் சின்ன பெண். அவனின் அந்த முறைப்புக்கு பயந்துவிட்டாள். அதன் பிறகு அவனை நேரடியாக பார்ப்பதில்லை. அவனுக்கு தெரியாமல் நின்று தான் பார்த்துக்கொள்வாள். நல்ல வேலையாக படிப்பு மொத்தமும் சென்னையிலே முடித்தாலள். அதனால் அவனை ஒரு நாள் விடாமல் பார்த்துக்கொண்டாள். ஆனால் வேலை என்று வந்த பொழுது இவளின் அக்கா கணவர் அவளுக்கு யூ.எஸ்ஸில் வேலை வாங்கி கொடுத்துவிட்டார். இவள் வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் வலுக்கட்டாயமாக அவளை அனுப்பிவைத்துவிட்டனர்.

கடைசி நாள் அங்கு இருந்து கிளம்பும்போது இதயமே கழண்டுவிடும் போன்ற வலியை தாங்கி தான் இங்கு வந்து சேர்ந்தாள்.

இவளுக்குள் பொத்திவைத்த காதலுக்கு என்றேனும் ஒரு அர்த்தம் கிடைக்குமா என்று இவ்வளவு நாளும் காத்திருந்தாள். ஆனால் அதற்கு எதிர்காலமே இல்லை என்று இப்பொழுது வருண் கூறிவிட்டான். இனி அடுத்து என்ன என்று தெரியாமல் நடுவழியில் நிற்கிறாள்.

ஒரு இரண்டு மணி நேரம் சென்று அனிதாவும் முரளியும் கொஞ்சம் பர்ச்சேஸ் முடித்துவிட்டு வருணை தேடி இந்த பாலத்திற்கு வந்துவிட்டனர். வந்தவர்களுக்கு கண்ணால் அம்ருதாவை காட்டினான்.

இருவரும் திகைத்து போயினர்.

அப்போ இருந்தே இங்க தான் இருக்காளா என்று முரளி கேட்டான். வருண் ஆமாம் என்று தலை அசைத்தான். இவர்களும் இப்பொழுது அவனுடன் அமர்ந்துகொண்டனர்.

மதியம் மாலை ஆகி இருளும் சூழ தொடங்கியது. எந்த ஒரு உணர்ச்சியும் இன்றி அம்ருதா அமர்ந்து இருந்தாள். பசி தூக்கம் குளிர் எதுவும் அவளுக்கு தெரியவில்லை. இங்கு அனிதா குளிரில் நடுங்க தொடங்கினாள்.

கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் கழித்து அம்ருதா அசைந்தாள். அவளுக்கு இப்பொழுது தான் குளிர் உறைத்தது. மெதுவாக எழுந்துகொண்டாள். ஜெர்கினை அணிந்துகொண்டாள். தன்னுடைய ரூம்க்கு செல்ல தொடங்கினாள்.

இங்கு மூவருமே உடனே எழுந்து அவள் செல்ல தொடங்கிய திசையில் செல்ல தொடங்கினர். இப்பொழுது வருணிற்கு அவளை அப்படியே அனுப்ப மனம் இல்லை. ஏதாவது பேசலாம் என்று அவளுக்கு முன்பாக ஓடி சென்று அவள் தன்னை கவனிக்குமாறு ஓரமாக நின்றான். அந்த கூட்டத்தில் அவன் தனக்கு முன் சென்றதை அவள் கவனிக்கவில்லை. ஆனால் அவன் ஓரமாக நின்றபோது அவனை ஒட்டியே நடந்தாள். அவனை ஒரு முறை பார்க்கவும் செய்தாள். ஆனால் அவன் அங்கு நிற்கிறான் என்பது அவள் புத்திக்குள் உறைக்கவில்லை. வெறித்த பார்வையோடு அவனை கடந்து சென்றாள்.

வருண் இன்னும் ஷாக் ஆகினான் என்ன இப்படி செல்கிறாள் என்று.

திகைத்து போய் நிற்க அனிதாவின் முரளியும் அவன் அருகில் வந்தனர்.

முரளி “என்னடா?” என்று கேட்டான்.

“டேய் நான் அவகிட்ட பேசியே ஆகனும்டா” என்றான்.

“சரி வா. அவளை போய் பிடிச்சு நிறுத்தி பேசலாம்”. என்றான்.

“அதுக்கும் முன்னாடி வீட்டுக்கு பேசணும் டா” என்றான்.

“வீட்டுக்கு என்னடா பேச போற” முரளி கேட்டான்.

“இவளை கல்யாணம் பண்ணிக்க பர்மிஷன் கேக்கணும் டா”.

“ஹா ஹா ஹா… முடிவே பண்ணிட்டியே மச்சான். சூப்பர் டா. பார்த்தா அந்த பொண்ணு உன்ன ரொம்ப விரும்பியிருக்கும் போல தான் தெரியுது. உனக்கு பிடிச்சிருந்தா கண்டிப்பா பண்ணிக்கோடா. விட்டுடாத. இந்த அளவுக்கு லவ் பண்ற பொண்ணு கிடைக்கிறதெல்லாம் கஷ்டம்” என்று ஓர கண்ணால் அனிதாவை பார்த்துக்கொண்டே கூறினான். அவளிடம் இருந்து ஒரு கொட்டும் வாங்கி கொண்டான்.

இவர்கள் மூவரும் அவளை தொடர்ந்து சென்று எங்கு தங்கி இருக்கிறாள் என்று பார்த்து வைத்துக்கொண்டனர். பிறகு அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top