கைதி - அத்தியாயம் 10

Advertisement

Nuha Maryam

Active Member
ஆர்யானும் சிதாராவும் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

லாவன்யாவின் தாய், தந்தை, பாட்டி என‌ அனைவரும் சிதாராவுக்கு பல அறிவுரைகள் வழங்கினர்.

பாட்டி, "இங்க பாரு சீதா கண்ணு... நீ இன்னும் அம்மா அப்பாவ பாக்கலன்னு தான் உன்ன போக விடுறேன்... இல்லன்னா என் கூடவே வெச்சிப்பேன்... திரும்ப வெளிநாட்டுக்கு போக முன்னாடி இந்த கிழவிய வந்து பாத்துட்டு தான் போகனும்..." என்க,

"சரி லட்சு..." என அவரை அணைத்துக் கொண்டாள் சிதாரா.

சிதாராவை பாட்டியிடமிருந்து விலக்கிய ஆர்யான் அவர் தோளில் கை போட்டு,

"என்ன டார்லிங் நீ.... உன்ன போய் கிழவின்னு சொல்ற... நீ இன்னுமே ஸ்வீட் சிக்ஸ்டீன் டார்லிங்... உன்ன கல்யாணம் பண்ணிக்க ஐடியால இங்க நான் இருக்கேன்... நீ என்னன்னா..." என்றவன் பட்டென அவர் கன்னத்தில் முத்தமிட்டான்.

அனைவரும் சிரிக்க, "போடா பொடிப் பயலே..." எனக் கூறி வெட்கப்பட்டார்.

பின் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பினர்.

கேப்பில் இருவரும் பின் சீட்டில் அமர்ந்திருக்க ஆர்யான் மொபைல் நோண்டிக் கொண்டிருந்தான்.

சிதாராவோ அவனையே பார்த்துக் கொண்டிருக்க ‌ஆர்யான்,

"நான் ரொம்ப ஹேன்ட்சமான பையன்னு எனக்கு தெரியும் மினி... அதுக்காக இப்படி வெச்ச கண் வாங்காம பார்த்துட்டு இருக்காதே..
கண்ணு பட்டுரும்... அப்புறம் யாரு என்ன கல்யாணம் பண்ணிப்பாங்க..." எனக் கூற கையில் இருந்த ஹேன்ட் பேக்கால் அவனை அடித்த சிதாரா,

"ஜிராஃபி... நானும் ரெண்டு நாளா உன்ன பார்த்துட்டு தான் இருக்கேன்... நீ ஏதோ ப்ளான் பண்ணி இருக்க... மவனே ஏதாவது கேடி வேலை பண்ணன்னு தெரிஞ்சது அப்புறம் உனக்கு கடைசி வரை கல்யாணமே நடக்காம பண்ணிருவேன்...." என்றாள்.

ஆர்யான் அவள் கூறியதைக் கேட்டு அதிர்வது போல் நடித்தவன்,

"வேணாம் மினி... வாழ வேண்டிய வயசு... அதுவும் எங்க வீட்டுக்கு நான் ஒரே புள்ள.." என்க அவனை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

ஆர்யான் மனதில், "இந்த தடவ நான் நெனச்சத கண்டிப்பா நடத்தி காட்டுவேன் மினி.." எனக் கூறிக் கொண்டான்.

சற்று நேரத்தில் அவர்கள் ஆர்யானின் வீட்டை அடைந்தனர்.

வீடு என்று அதனைக் கூற முடியாது.

மாளிகை என்று கூட சொல்லலாம்.

ஒவ்வொரு இடமும் அவர்களின் செல்வச் செழிப்பை எடுத்துக் காட்டியது.

ஆர்யானின் தந்தை ரஞ்சித் தான் அந்த மாவட்டத்திலே நம்பர் வன் கம்பனி எனப் பெயரெடுத்த AR GROUP OF COMPANIES இன் ஸ்தாபகர்.

அவரின் கடின உழைப்பின் பலனே அந்த கம்பனி.

கேட்டிலிருந்து வீடு வரையுமே சற்று தூரம் செல்ல வேண்டி இருந்தது.

சிதாராவுக்கு உள்ளே செல்லவே தயக்கமாக இருந்தது.

சிதாராவின் குடும்பமும் வசதியில் குறைந்தவர்கள் இல்லை.

தேவைக்கு அதிகமாகவே அவர்களிடம் பணம் இருக்கும்.

ஆனால் ஏதோ ஒரு தயக்கம் அவளை ஆட்கொள்ள மெதுவாக அடியெடுத்து நடக்க,

ஆர்யான் அவள் கையைப் பற்றி உள்ளே அழைத்துச் செல்லப் பார்க்க உள்ளிருந்து,

"அங்கயே நில்லுங்க..." என கம்பீரமான பெண் குரலொன்று ஒலிக்க சிதாரா அடுத்த அடி எடுத்து வைக்காது நின்றாள்.

அந்த குரலுக்கு சொந்தக்காரரான ஆர்யானின் தாய் அகிலா அமைதியே திருவுருவமாக மாடிப் படியில் இறங்கி வந்தார்.

நேராக இருவரையும் நோக்கி வந்தவர் சிதாராவின் முகத்தையே உற்று நோக்கினார்.

பின் இருவரின் கோர்த்திருந்த கையையும் பார்க்க அவசரமாக ஆர்யானின் கரத்திலிருந்து தன் கையை விலக்கினாள் சிதாரா.

"ராணி... அத எடுத்துட்டு வாங்க.." என அகிலா உள்ளே நோக்கி குரல் கொடுக்க சிதாரா என்னவோ ஏதோவென பயந்தாள்.

ஆர்யானோ அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் வீட்டில் வேலை செய்யும் ராணி ஆரத்தி தட்டுடன்‌ வர அவரிடமிருந்து அதை வாங்கிக் கொண்டவர் இருவருக்கும் ஆரத்தி எடுக்க,

சிதாரா தான் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆரத்தி எடுத்து முடித்தவர் தட்டை ராணியிடம் கொடுத்து, "இத வெளிய கொட்டிடு..." என்று விட்டு சிதாராவின் பக்கம் திரும்பி,

"முதன் முதலா எங்க வீட்டுக்கு வர... அதான் ஆரத்தி எடுத்து வரவேற்றேன்... " என்றவர் ஆர்யானிடம்,

"ஃபோட்டோவ விட நேர்ல மகாலக்ஷ்மி மாதிரி இருக்காடா.." என சொல்லி அவள் முகத்தை புன்னகையுடன் வருட,

அப்போது தான் சிதாராவுக்கு மூச்சே வந்தது.

ஆர்யானோ அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு,

"மாம்... அஞ்சி‌ ரூபாக்கு நடிக்க சொன்னா ஐநூறு ரூபாக்கு நடிக்கிறியே மாம்... பாவம்... புள்ள வேற பயந்துட்டா..." என நக்கலடிக்க சிதாரா அவனை முறைத்தாள்.

அகிலா சிரித்தவர், "அட... இன்னும் வெளியவே நின்னுட்டு இருக்காய்... வாம்மா உள்ள... இது உன் வீடுன்னு நெனச்சிக்கோ..." என்க சிதாரா புன்னகையுடன் உள் நுழைந்தாள்.

சிதாரா முன் செல்ல ஆர்யான் தாயின் காதில், "பெரிய ஆள் தான் மாம் நீ..." என்க,

"அமைதியா இருடா... அவளுக்கு கேட்டுற போகுது..." என அவன் வாயை அடைத்தார் அகிலா.

"சரிம்மா நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க... நான் உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்..." என அகிலா சொல்ல,

சிதாரா, "சரிங்க ஆன்ட்டி..." என்கவும்,

அகிலா, "இன்னும் என்னமா ஆன்ட்டி அது இதுன்னுட்டு... அழகா அத்தன்னு கூப்பிடு..." என்க,

சிதாரா அவரைப் புரியாமல் நோக்கினாள்.

ஆர்யான், "மாம்..." என அழைத்து கண்களால் எச்சரிக்க அகிலா அவசரமாக,

"அது ஒன்னுமில்லமா.. ஆன்ட்டிக்கு தமிழ்ல அத்தன்னு தானே சொல்லுவாங்க... அதான் நம்ம பாஷைலே அப்படி கூப்பிட சொன்னேன்..." என சமாளிக்க,

"ஓஹ்... சரி அத்த..." எனப் புன்னகைத்தாள் சிதாரா.

அவள் அத்தை என்றதும் அகிலாவின் மனம் குளிர,

ஆர்யானோ வானில் பறக்காத குறை.

பின் அகிலா செல்ல இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, "ஹேய்... மை பாய்... ஒரு வழியா வந்து சேர்ந்துட்ட... நான் கூட அப்படியே யூ.எஸ் போய்ருவியோன்னு நெனச்சேன்..." எனக் கூறிக்கொண்டு ஆர்யானின் தந்தை ரஞ்சித் கோட் சூட்டில் இறங் வர,

அவரைக் கண்டு சிதாரா அவசரமாக எழுந்து நின்றாள்.

"டாட்.... சும்மா கலாய்க்க வேணாம்..." எனக் கூறி அவரை அணைத்துக் கொண்டான் ஆர்யான்.

ரஞ்சித் சிதாராவைப் பார்த்து,

"நீ என்னமா நின்னுட்டு இருக்காய்... உக்காரு... நீ பயப்படுற அளவுக்கு நான் ஒன்னும் டெரர் பீஸ் இல்லமா... இவன் அப்படியா என்ன பத்தி சொல்லி வெச்சிருக்கான்..." என்க அமர்ந்தவள்,

"அச்சோ... அப்படி எதுவும் இல்ல அங்கிள்..." என்க சரியாக கையில் ட்ரேயுடன் அங்கு வந்தார் அகிலா.

ஒவ்வொருவருக்கும் காபி, திண் பண்டங்கள் என கொடுத்தவர் சிதாராவிடம்,

"என்ன அத்தன்னும் அவர அங்கிள்னும் சொல்றாய்... கேக்கவே என்னவோ போல இருக்கு... அவரையும் மாமான்னே கூப்புடுமா..." என்கவும்,

மனதுக்குள்ளே அவருக்கு சபாஷ் கூறினான் ஆர்யான்.

சிதாராவோ ஏன் இவர் வித்தியாசமாக நடக்கிறார் எனப் புரியாமலே சரி எனத் தலையசைத்தாள்.

அதன் பின் ரஞ்சித் ஆஃபீஸ் செல்ல அகிலா ஆர்யானிடம், "ட்ராவல் பண்ணி டயர்டா இருப்பா... நீ அவள கெஸ்ட் ரூமுக்கு கூட்டிட்டு போ..." என்கவும் ஆர்யான் சிதாராவை விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றான்.

சிதாரா அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க ஆர்யான்,

"மினி... நான் உன் கூட கொஞ்சம் பேசணும்.." என்க,

"என்னடா ஜிராஃபி... புதுசா பேசுறத்துக்கு பர்மிஷன் எல்லாம் கேக்குறாய்... என்ன விஷயம்..." என சிதாரா கேட்க அவளின் கைப்பிடித்து கட்டிலில் அமர வைத்தவன் அவள் காலின் கீழ் அமர்ந்து கொண்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டவன்,

"நான் ஒன்னு சொன்னா கேப்பியா மினி..." என்றான்.

சிதாரா, "ஹ்ம்ம்" என்க,

"மினி.... எனக்காக உன் மனசுல இருக்குற கஷ்டம் எல்லாம் வெளிய கொட்டிரு... உன் பாஸ்ட்ட திரும்ப சொல்லு... பரவாயில்லை... நான் கேக்குறேன்.. பட் அதை உன் மனசுல இருந்து தூக்கி போடுறேன்னு நெனச்சிட்டு பேசு... நீ சொல்ற விஷயம் நீ சொல்லி முடியும் போது உன் மனச விட்டு மொத்தமா வெளிய போயினும்... என் கைய கெட்டியா பிடிச்சுக்கோ... நீ சொல்லும் போது உன்ன அந்த விஷயம் ரொம்ப பாதிச்சுதுன்னா என் கைய அழுத்தி பிடி... உன் கூட நான் இருக்கேன்னு அப்போ உனக்கு ஒரு நம்பிக்கை வரும்... உனக்கு அழ வேணும்னா தாராளமா எவ்ளோ வேணாலும் அழு... உனக்கு தோள் சாய நான் இருக்கேன்... பட் ஒரே விஷயத்துக்கு திரும்ப அழ மாடேன்னு முடிவு பண்ணிட்டு அழு... உன் மனசுல இருக்குற பாரம் எல்லாம் இத்தோட காணாம போகனும்... செய்வியா..." எனக் கேட்டான் ஆர்யான்.

சிதாரா அமைதியாக அவனையே வெறித்துக் கொண்டிருந்தவள் மெதுவாக ஆர்யானின் கரம் மேல் தன் கரத்தை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

அதன் பின் தன மனதிலுள்ள பாரத்தை மொத்தமாக அவனிடம் இறக்கி வைத்தாள்.

ஃபிளாஷ்பேக்

சிதாரா, அக்ஷரா, லாவண்யா மூவரும் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த சமயம் அது.

மூவரின் குடும்பமும் அந்த நேரம் அங்கு தான் இருந்தனர்.

பூஞ்சோலைக் கிராமத்திலிருந்த பள்ளியிலேயே மூலரும் படித்தனர்.

இவர்கள் மூவரின் நட்பால் இவர்களின் குடும்பமும் ஒற்றுமையாக இருந்தனர்.

லாவண்யாவின் அத்தை மகன் தான் ஆதர்ஷ்.

அவளை விட நான்கு வருடம் மூத்தவன்.

ஆதர்ஷின் தாய் சிவகாமி லாவண்யாவின் தந்தை ராஜேந்திரனின் ஒரே தங்கை.

வேந்தன்யபுறத்திலிருந்த வசதியான குடும்பமொன்றில் அவரை திருமணம் செய்து கொடுத்தார் ராஜேந்திரன்.

சிவகாமிக்கு தன் அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வேண்டும் என ஆசை.

அவரின் கணவன் ஜெயராமும் அதற்கு மறுப்பு கூறவில்லை.

அவர்கள் ஆசையை ராஜேந்திரனிடம் தெரிவிக்க அவருக்கும் அவர் பத்தினி ஆண்டாளுக்குமே அதில் உடன்பாடு.

ஆனால் தம் ஆசையை பிள்ளைகள் மீது அவர்கள் திணிக்கவில்லை.

ஆதர்ஷுக்கு சிறு வயதிலிருந்தே லாவண்யாவைப் பிடிக்கும்.

எப்போதும் அவளுடன் வம்பு வளர்த்துக் கொண்டே இருப்பான்.

லாவண்யாவின் நட்பால் சிதாரா அக்ஷரா இருவருக்கும் ஆதர்ஷ் நல்ல பழக்கம்.

லாவண்யாவுடன் வம்பு பண்ணினாலும் அவளுக்கு ஒன்றென்றால் முதல் ஆளாக வந்து நிற்பான்.

சிதாரா மற்றும் அக்ஷராவுக்கு நல்ல சகோதரனாக இருந்தான்.

அதிலும் எப்போதும் துறுதுறுவென இருக்கும் சிதாரா என்றால் அவனுக்கு தனிப் பிரியம்.

தனக்கு தங்கை இல்லாத குறையை அவள் மூலம் தீர்த்துக் கொண்டாள்‌.

ஆதர்ஷ், அபினவ் இருவரும் சகோதரர்கள்.

ஆனால் சகோதரத்துவத்தைத் தாண்டி ஒரே வயதினர் என்பதால் இருவருக்கிடையிலும் நல்ல நட்பு இருந்தது.

ஆதர்ஷின் தந்தை ஜெயராமின் சகோதரர் ஜெயக்குமார்.

ஜெயக்குமார் மற்றும் பத்மா தம்பதியின் மகனே அபினவ்.

ஆதர்ஷ் பெற்றோரையும் லாவண்யாவையும் விட்டு பிரிய மனமில்லாமல் ஊரிலேயே படித்தான்.

அபினவ் மாத்திரம் சென்னையில் தங்கி படித்தான்.

சென்னையில் அபினவ்வுக்கு பிரணவ்வின் நட்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படித்த அபினவ் பின் பிரணவ்வின் வற்புறுத்தலால் அவர்கள் வீட்டில் தங்கினான்.

அபினவ்வை காணச் செல்வதால் ஆதர்ஷுக்குக்கும் பிரணவ்விற்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு பின் நட்பாக மாறியது.

பூஞ்சோலை கிராமமும் வேந்தன்யபுறமும் இணைந்தே எப்போதும் ஊர்த் திருவிழா நடத்துவர்.

இம்முறை ஊர்த் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அதனைக் காண ஆசைப்பட்டு அபினவ்வுடன் பிரணவ்வும் கிளம்பி வந்திருந்தான்.

வருடா வருடம் வைகாசியில் இந்தத் திருவிழா நடக்கும்.

வைகாசி மாதம் பள்ளி, கல்லூரிகளில் பரீட்சை விடுமுறை என்பதால் சிறுவர், சிறுமியர் கூட்டத்திற்குப் பஞ்சமே இருக்காது.

பெரியவர்கள், வயதானவர்களும் வெளியூரில் இருந்தாலும் திருவிழாவை முன்னிட்டு எப்பாடுபட்டாவது ஊருக்கு வந்து விடுவர்.

திருவிழாவிற்கே உரித்தான விளையாட்டுப் பொருட்கள், பலூன், காத்தாடி, கண்ணாடி, ஊதுவான் என கடைகள் கட்டி விற்பார்கள்.

இரவில் பாட்டுக் கச்சேரி, நாடகம் என்று ஊரே களை கட்டும்.

சிதாரா, லாவண்யா, அக்ஷரா மூவரும் கிராமத்திலே வளர்ந்து வந்ததால் பாவாடை தாவணி தான் அணிவர்.

மூவரும் ஒன்றாக திருவிழா பார்க்க செல்ல அபினவ்வுடன் வந்த பிரணவ்வின் பார்வையில் பட்டாள் சிதாரா.

IMG_20210914_135102.jpg

பிரணவ்வின் உதடுகள் தானாக, "இன்ட்ரஸ்ட்டிங்..." என அசைந்தது.

IMG_20210914_134949.jpg

சிறுவர்களுக்கு போட்டியாக மூவரும் அங்கிருந்த கடைகளில் பலூன், காத்தாடி என வாங்கி விளையாடிக் கொண்டிருக்க,

பிரணவ்வின் கண்கள் சிதாராவையே மொய்த்தன.

அவன் பார்வையின் அர்த்தம் அவன் மட்டுமே அறிவான்.

இரவில் மேடை நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க தோழிகள் மூவரும் நாடகம் பார்க்க நாடகம் நடக்கும் மேடைக்கு கீழே அமர்ந்தனர்.

நாடகம் ஆரம்பித்து சற்று நேரத்தில் லாவண்யாவின் தோளில் சிறு கல் ஒன்று படவும் வீசியது யார் என திரும்பிப் பார்க்க அந்த மங்கிய ஒளியில் யாரும் தென்படவில்லை.

தொடர்ந்து இவ்வாறே நடக்கவும் லாவண்யா கல் வந்த திசையைப் பார்க்க அங்கு ஆதர்ஷ் நாடகமே கதியெனப் பார்த்துக் கொண்டிருந்தான்.

லாவண்யா மனதில், "கல்ல வீசி அடிச்சிட்டு நாடகம் பாக்குறது போல நடிக்கிறியா... நாடகம் முடியட்டும் மவனே இருக்கு‌ உனக்கு..." என ஆதர்ஷை வசை பாடியவள் மீண்டும் திரும்பி நாடகத்தில் கண் பதித்தாள்.

அதன் பின் எந்த கல்லும் வரவில்லை.

சில மணி நேரத்தில் நாடகம்‌ முடிய அனைவரும் எழுந்து செல்ல வேகமாக சென்று ஆதர்ஷைப் பிடித்துக் கொண்டாள் லாவண்யா.

ஆதர்ஷுக்கு பின்னால் வந்த அபினவ்வும் பிரணவ்வும் அங்கு என்ன நடக்கிறது எனப் பார்க்க,

லாவண்யா திடீரென ஓட அவளுடன் பின்னே ஓடி வந்த அக்ஷராவும் சிதாராவும் லாவண்யாவின் செயலைப் புரியாமல் பார்த்தனர்.

லாவண்யா தன்னைத் தடுத்து நிறுத்தவும் அவளைப் பார்த்த ஆதர்ஷ்,

"என்ன செல்லம்... மாமன் மேல இருக்குற காதல்ல இப்படி பொது இடத்துல எல்லாம் ரொமான்ஸ் பண்ணுவியா‌.." என கேலியாகக் கேட்க அவனை முறைத்த லாவண்யா,

"சாருக்கு ரொமான்ஸ் கேக்குதா ரொமான்ஸ்... சின்ன பசங்க போல கல் எறிஞ்சி விளையாடுறியா..." எனக் கேட்கவும் அவளைப் புரியாமல் பார்த்தான்.

பிரணவ் சிதாராவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வை சிதாராவை ஏதோ செய்ய அவள் அவசரமாக தலை குனிந்து கொண்டாள்.

ஆனால் அவளுடன் நின்ற அக்ஷராவோ ஆதர்ஷுக்கு பின்னே நின்றே அபினவ்வைப் பார்த்து வாயை மூடி சிரித்தாள்.

அபிணவ் அவளைப் பார்த்து இளித்து வைக்க அதற்குள் லாவண்யாவின் சத்தம் அவர்கள் கவனத்தை அவள் பக்கம் எடுத்தது.

லாவண்யா ஆதர்ஷைப் பார்த்து,

"திரும்ப ஏதாவது பண்ணன்னு வை... மவனே நீ செத்தடா..." என்றவள் சிதாராவையும் அக்ஷராவையும் இழுத்துக்கொண்டு சென்றாள்.

ஆதர்ஷ் அவள் கூறி விட்டு சென்றது புரியாமல் விளித்தவன் அபினவ்விடம்,

"என்னடா இவ... ஏதேதோ ஒளரிட்டு போறா... பேய் பிசாசு ஏதாவது பிடிச்சிடுச்சோ..." என்க,

அபினவ், "உன் கூட பேசனும்னு சும்மா ஏதாவது பண்ணிருப்பாடா... வா நாமளும் கிளம்பலாம்..." என்றான்.

பின் அவர்களும் அங்கிருந்து சென்றனர்.

ஆனால் உண்மையில் நடந்ததே வேறு.

ஆதர்ஷுக்கு பின்னே நேராக அபினவ்வும் பிரணவ்வும் அமர்ந்திருந்தனர்.

அபினவ் தான் அக்ஷராவை நோக்கி கல் எறிந்தான்.

ஆனால் ஒவ்வொரு முறையும் அவனின் குறி தவறி கல் லாவண்யாவின் மீது பட அப்பாவி ஆதர்ஷ் மாட்டிக் கொண்டான்.

இறுதியாக அடித்த கல் குறி தவறாது அக்ஷராவின் தோளில் பட திரும்பி அவனைப் பார்த்தவள் புன்னகைத்தாள்.

அக்ஷரா தன்னைப் பார்த்து புன்னகைக்கவும் அபினவ்வோ றெக்கை கட்டிப் பறந்தான்.

டென்த் வரை அபினவ்வும் இதே ஊரில் தான் படித்தான்.

அதன் பின் மேற்படிப்புக்காக சென்னை சென்றான்.

பள்ளிக் காலத்திலிருந்தே அவனுக்கு அக்ஷரா மீது காதல்.

அவள் செல்லுமிடமெல்லாம் இவன் இருப்பான்.

ஆனால் அவன் அறியாதது தான் அவன் மீது அக்ஷராவுக்கு ஏற்கனவே இருந்த க்ரஷ்.

யாரிடமும் அவள் அதைப் பற்றி வெளிப்படுத்தியதில்லை.

அடுத்து வந்த நாட்களும் திருவிழா களை கட்ட பிரணவ்வோ சிதாராவையே எப்போதும் பின் தொடர்ந்தான்.

இதனை அபினவ் அவதானித்து பிரணவ்விடம் கேட்க அவனோ,

"எனக்கு அவள பிடிச்சிருக்குடா மச்சி..." என்கவும் பிரணவ் சிதாராவை காதலிக்கிறான் என நினைத்துக் கொண்டான் அபினவ்.

அபினவ் பிரணவ் கூறியதை ஆதர்ஷிடம் கூற,

"இங்க பாருடா... அவன் எனக்கு ஃப்ரென்ட் ஆக முன்னாடியே சித்து என்னோட தங்கச்சி... இவனோட காதலால அவளுக்கு எந்த பிரச்சினையும் வராம பார்த்துக்கோ..." என்றான்.

லாவண்யாவும் அக்ஷராவும் ஒரு ஐஸ் க்ரீமிற்காக சண்டை பிடித்துக் கொண்டிருக்க சிதாரா அவர்களை விட்டு சற்று தள்ளி வர அவளிடம் வந்த பிரணவ்,

"தாரா.. நான் உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்..." என்று கூற,

அவனது தனிப்பட்ட தாரா என்ற அழைப்பில் அவனையே விழி விரித்து நோக்கினாள் சிதாரா.

❤️❤️❤️❤️❤️

- Nuha Maryam -
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top