குடும்ப விளக்கு

Advertisement

gurusukirthan

New Member
உழைப்பால் ஒளிரும் குடும்ப விளக்கு


வயல் வரப்பில் சுற்றி திரிந்து விதை விதைத்து
களை எடுத்து கதிர் அறுத்து
நெல்லை கொல்லையில் சேர்ப்பாள் விவசாயப் பெண்!

ஆடு கறவை மாடு கோழி
போன்ற கால்நடை வளர்த்து சிறுவாடு சேர்த்து வைத்து ஊரிலுள்ள பேரப்பிள்ளைக்கு அனுப்புவாள் ஒரு கிராமத்துக்காரி!

நரை தட்டினாலும்
நடை தளர்ந்தாலும்
யாரையும் நம்பி இருக்காமல் கம்பு ஊன்றி கத்திக் கத்தி விற்கிறாள் கீரைக்காரி!

அம்மா போகாதே! உனக்கும் நோய் வந்திடும் என மகன் கூறியும் தெருக்குப்பையை
அள்ளிக் கொட்டுவாள்
துப்புரவு தொழிலாளி!

கொளுத்தும் வெயிலில்
துணியை வெளுத்து
தருவாள் ஒரு
சலவைத் தொழிலாளி!

இன்றாவது வயிறார
பிள்ளைக்கு சோறு போடனும் என்று மனதிலும் தலையிலும்
பாரம் சுமப்பாள்
கூலித் தொழிலாளி!

அடுப்பில் பாலோடும
இடுப்பில் பாலகனோடும்
போராடிக் கிட்டு
சமைப்பாள் நம்ம
வீட்டுக்காரி!

பேறுகாலத்துக்கு வீடு வந்த மகளை விட்டு விட்டு ஊரிலுள்ள புள்ளத்தாச்சிக்கு எல்லாம் பிரசவம் பார்ப்பாள் ஒரு மருத்துவச்சி!

ஆசிரியர் வழக்கறிஞர்
முன்னவள் அறிவுக்கண்
திறக்க போராடுவாள்!
பின்னவள் நீதியின்கண் வாதாடுவாள்!

ஊரை காக்கும்
உடைமையைக் காக்கும்
உயிரையும் காக்கும் உன்னத பணியில்
ஒரு காவல்காரி!

அமைதியாய் போராடி
போராடியப்பின் அமைதியாகி சமூக அநீதியை வேரருக்க போராடும் போராளியாய்
ஒருத்தி!

அரசியல் அரங்கில் ஓநாய் களுக்கு மத்தியில்
சிங்க கர்ஞனை செய்யும் சிங்கப்பெண்ணாய் நாட்டை ஆளும் ஒருத்தி!

அவர்களின் கண்ணில் உள்ள
நரம்புகளில் கூட
நிறைந்திருந்தது
தான் 'உழைக்கும் வர்க்கம்'
என்பதன் கர்வம்.


எண்ணம்
சிவசங்கரி பாலசுப்பிரமணியன்
குன்றக்குடி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top