குங்குமத்தின் சிறப்பு*

Advertisement

SahiMahi

Well-Known Member
*குங்குமத்தின் சிறப்பு*

குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது.

அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது.
இதோடு தாழம்பூ சேர்த்து தயாரிக்கும் குங்குமம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சிறப்பு.

மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் ’டி’ சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் அணிகிறார்கள்.

குங்குமத்தை வலது கை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயன் படுத்தக்கூடாது.
கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பதும் கூடாது.

வலது உள்ளங்கையில் சிறிதளவே போடச் சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.

குங்குமம் வைக்கும் முறைகள்
நெற்றியில் குங்குமத்தை வைக்கும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.நெற்றியில் குங்குமம் வைக்கும் முறை பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.

குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.

கோவிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் இடுவதால், குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம். நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

* வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

* பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
* அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

* தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

* திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் இடுவது சிறப்பு.
* ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் இடுவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
 
me N ammu

New Member
தகவலுக்கு நன்றி@shaimahi ,சில ஐயம் ஏற்படுகிறது ,விளக்கம் கிடைக்குமா?
 
SahiMahi

Well-Known Member
தகவலுக்கு நன்றி@shaimahi ,சில ஐயம் ஏற்படுகிறது ,விளக்கம் கிடைக்குமா?
தகவலுக்கு நன்றி@shaimahi ,சில ஐயம் ஏற்படுகிறது ,விளக்கம் கிடைக்குமா?
எனக்கு தெரிந்தவரை முயற்சிக்கிறேன்...என்ன ஐயம்?
 
me N ammu

New Member
எனக்கு தெரிந்தவரை முயற்சிக்கிறேன்...என்ன ஐயம்?

இயற்கையாகவே நறுமண பொருட்கள் மன அமைதியையும்,ஒரு நேர்மறை தன்மையையும், உள்ளத்திற்கு உற்சாகத்தையும் கொடுப்பவை என்பது திண்ணம்.
ஆனால்,
மூளைக்குச் செல்லும் நரம்புகளுக்கு வெப்பம் தடுக்கப்படுவது, விட்டமின் டி கிடைக்கும் என்பதும் சரியான தகவலா.!!!????
அனைவருக்கும் தேவையான ஒன்று
அந்த நன்மையும் சில( உச்சி வகிட்டில் வைக்கும்போது)பெண்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இது சரியா?

நன்மை பயக்கும் எதுவும் குழந்தை, பெரியவர் ,ஆண் ,பெண் என்ற பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் பொதுவானது இருக்க வேண்டும் அல்லவா!!!!

இதுபோன்று நிறைய செய்திகள் தற்போது வருகின்றது இங்கு என்னைப் போன்று நிறைய பெண்களும் படிப்பதால் சரியான தகவலாக இருந்தால் நன்று என்று எண்ணியே தான் ,(இங்கு உரையாடல் சாத்தியம் என்பதால் ) இந்த சந்தேகம் கூட நான் கேட்க நேர்ந்தது.
படித்து கடக்க இயலவில்லை
நன்றி@shaimahi
 
Last edited:

SahiMahi

Well-Known Member
நீங்கள் நினைப்பது சரியே...சரியான தகவல் மட்டுமே பகிரப்பட வேண்டும்.

உங்களின் சந்தேகத்திற்கு வருவாம்...

1.மூளைக்கு செல்லும் நரம்புகளின் முலம் உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.

2. வைட்டமின் டி கிடைக்கும் என்று குறிப்பிட படவில்லை...வைட்டமின் டி யுடன் சேர்ந்து ஆற்றல் கிடைக்கப்பெ
றுகிறது.

3.பெண்களை தவிர பிறர் அணியக்கூடாது என்று குறிப்பிடவில்லை...குங்குமம் எதிர்மறை ஆற்றலை தடுக்கிறது.அதனால் தான் பெண்களின் பாதுகாப்பிற்கு அதை அணிகிறார்கள்.
இன்று ஸ்டிக்கர் பொட்டின் உபயத்தால் மறக்கப்பட்ட ஒன்றுதான் குங்குமம்.

4.பல ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைவரும் ( ஆண்,பெண்,குழந்தைகள்)நெற்றியில் திருநீரோ,குங்குமம் தரிக்காமல் இருந்தது இல்லை..

குங்குமம் ,சந்தனம் மற்றும் திருநீறு எல்லாமே தனிச்சிறப்புடையவை...

இதுபோன்ற அணிகலன்களுமே, அந்தந்த பாகத்தின் நரம்புகளை கட்டுப்படுத்தவே அணிகிறாம்.

இவை அனைத்துமே பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நம் பாரம்பரியத்தில் கடைப்பிடிப்பது...இதற்கு சான்றுகள் அனுபவமே...

நம் இந்து மதம் அர்த்தமுள்ளதே....
 
சரி ...நன்றி @shaimahi அவர்களே..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top