காதல் படகை கரையேற்ற வா - 9

Advertisement

Padmarahavi

Active Member
கல்லூரி முதல்வரிடம் முன் அனுமதி பெற கல்லூரிக்குச் சென்றனர் உதயனும் தர்னிகாவும். கல்லூரி வாசலில் கால்வைத்த நொடியே உதயனுக்கு பழையதெல்லாம் நினைவு வந்தது.


எவ்வளவு முயன்றும் அவனால் எதையும் ஒதுக்க இயலவில்லை. அவனும் மஹதியும் சந்தித்த முதல் இடம், அவன் ப்ரப்போஸ் செய்த இடம், அவன் வகுப்பறை என அனைத்தையும் பார்த்துக்கொண்டே வந்தவன் மனதில் பழைய நினைவுகள் படம் போல் விரிந்தது. ஓரிடத்தில் நின்றவன் அந்த இடத்தையே வெறித்துப் பார்த்தான்.


அது ஒரு மரத்தடியில் இருக்கும் கல். அது தான் இவர்கள் இருவரின் நிரந்தர இடம். வேறு யாராவது அங்கு அமர்ந்திருந்தாலும் கூட இவர்கள் வருவதைப் பார்த்தால் எழுந்து சென்று விடுவார்கள். அந்த அளவுக்கு உதயன் மஹதிக்கு ரிசர்வ் செய்யப்பட்ட இடம் அது.


இவன் வாசிக்கும் சோக கீதங்களை கேட்டபடி வந்த தர்னிகா, அவன் நின்றதும் அவளும் நின்றாள். அவன் அந்த இடத்தை வெகு நேரமாக பார்த்து கொண்டே இருப்பதைப் பார்த்தவள், அவள் தோளை தட்டி


உதய். முதல்ல ப்ரின்ஸிப்பால் சாரை பாக்கலாம் வா என்று அழைத்துச் சென்றாள்.


முதல்வருக்கு இவர்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. இவர்கள் வந்த நோக்கத்தைக் கூறியதும் உடனே ஒப்புதல் கொடுத்தார்.


உதய் உண்மையாகவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்குப்பா. நீ பண்றதும் நல்ல விசயம் தான். கண்டிப்பா நம்ம மாணர்களுக்கு ஊக்கமா இருக்கும் என்று கூறியவர் அதற்கு ஒரு நாளையும் குறித்துத் தந்தார்.


முதல்வர் அறையை விட்டு வெளியே வந்ததும் பழைய பேராசிரியர்கள், ஜீனியர் மாணவர்கள் அனைவரும் பேசினர். யாரும் மஹதியைப் பற்றி பேசாமல் கவனமாகத் தவிர்த்தனர்.


கல்லூரி முழுவதையும் சுற்றிக் காட்டியவன் முகத்தில் சோகத்தின் சாயல் இருந்தது. அவன் வழக்கமாக அமரும் இடத்திற்கு வந்தவன் அமைதியாக அமர்ந்தான்.


அதுவரை அவனை தொந்தரவு செய்யாமல் இருந்த தர்னிகா அவன் தோளைத் தொட்டாள்.


பெருமூச்சுடன் பேசினான் உதயன். அவ நியாபகம் வருது தான். அது நீ நினைக்கிற மாதிரி இல்ல. அவ எங்கேயோ கண்ணுக்கு எட்டாத தூரத்துல இருக்கான்னு தெரிஞ்சா கூட நிம்மதியா இருப்பேன். ஆனா இந்த வயசுலையே அவ இந்த உலகத்துலையே இல்லைன்னு தான் மனசு முழுக்க வலிக்குது.


அவன் வேதனை அவளுக்குப் புரிந்தது. தான் காதலித்த பெண் வேறு திருமணம் செய்தால் கூட ஏற்றுக்கொள்ளும் மனம் அவரின் இறப்பை ஏற்றுக் கொள்ளாது. எனினும் அவனை விட்டால் இன்று முழுவதும் வயலின் வாசிப்பான் போல. எனவே தன் பழைய நிலைக்கு வந்த தர்னிகா,


சரி. என்ன? நானும் பாக்குறேன் ஓவராப் பண்ற. பத்து நிமிஷம் பழச நினைச்சு ஃபீல் பண்ணிக்கோன்னு சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன். இப்ப அரைமணி நேரம் ஆச்சு. மரியாதையா கிளம்பு என்றாள்.


இந்த கேள்விவில் வாய் விட்டு சிரித்த உதயன், என்ன பொண்ணுடி நீ என்று சிரித்தபடியே அவள் கையைப் பற்றி எழுந்தான்.


அந்த நேரம் கல்லூரி முதல்வர் அறையிலிருந்து வெளிவந்த அரவிந்த்தை இருவரும் கவனிக்கவில்லை. ஆனால் இவர்களை கவனித்த அரவிந்த் அவர்கள் சிரிப்பதைப் பார்த்து எரிச்சலடைந்தான்.


ஆனால் இப்போது போய் பேசினால் நீ இங்க என்ன செய்றன்னு கேட்டால் பதில் கூற முடியாது. தேவையில்லாத பிரச்சனை என நினைத்து அவர்கள் பார்க்காவண்ணம் வெளியேறினான்.


மீண்டும் கடையை அடைந்த இருவரும் மதிய உணவு உண்டனர். திடீரென அவர்கள் கடையே புதிதாக தெரிந்தது உதயனுக்கு. எப்போதும் தனியாக சாப்பிட்டுவிட்டு போரடிக்க அமர்ந்திருப்பான். இன்று இவள் இருப்பதால் அவன் அறையே ரம்மியமாக தெரிந்தது அவனுக்கு.


யாரோ தன்னை பார்ப்பதை உணர்ந்த தர்னிகா தன் பார்வையை திருப்ப அங்கு தன்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்த உதயனைக் கண்டாள். அவளுக்குள் மெலிதாக வெட்கம் பரவ எழுந்து சென்று சன்னல் அருகே நின்று கொண்டாள்.


காந்தம் போல் அவளால் ஈர்க்கப்பட்ட உதயனும் அவளை நோக்கி நடந்தான். அவள் காதின் ஓரம் மெலிதாக ஒற்றைக் கூந்தல் ஆடிக் கொண்டிருந்தது.


படர துணை தேடும் கொடி போல துணை தேடி ஆடிக்கொண்டிருந்த அந்த ஒற்றைக் கூந்தலை தன் ஒரு விரல் கொண்டு விலக்கி காதின் பின்புறம் கொண்டு சென்றான். அந்த ஒற்றை விரல் ஸ்பரிசம் அவளுக்கு சிலிர்ப்பை உண்டாக்கியது. அதே விரலால் அவள் தாடையை நிமிர்த்தி அவள் கண்களை நேருக்கு நேர் சந்தித்தான்.


அந்த விழி ஈர்ப்பில் விழுந்த தர்னிகா சில நிமிடங்களில் நாணத்தில் சிவந்து விழியை திருப்பினாள் சன்னலை நோக்கி. சன்னல் வழியே வெளியே பார்த்தவளின் புருவம் சுருங்க, அதைப் பார்த்த உதயன் திரைச்சீலையை விலக்கி வெளியில் பார்த்தான்.


எதிரே இருந்த கடைகளில் ஒவ்வொன்றாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தான் அரவிர்த். ஒரு கடையில் ஏறுவதும், அங்கிருக்கும் உரிமையாளிடம் ஏதோ கேட்டுவிட்டு பின் அடுத்த கடை போவதுமாக இருந்தான்.


உதயனும் தர்னிகாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, அரவிந்த் அடுத்து இவர்கள் கடையை நோக்கி தான் வந்தான். விஜயை கூப்பிட்டு அரவிந்த் வந்தால் தன் அறைக்கு அழைத்து வரும்படிக் கூறினான்.


சில நிமிடங்களில் அறைக் கதவை தட்டிவிட்டு நுழைந்த அரவிந்த் உதயனையும் தர்னிகாவையும் பார்த்து வியந்தான். (எல்லாம் நடிப்பு தான்).


நீங்க எங்க இங்க? என அனைவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.


இது எங்க ஷாப் தான் என்றான் உதயன்.


ஓ! நீங்க இவ்வளோ பெரிய பிஸினஸ் மேன் னு தெரியலை சார் என்றான் அரவிந்த்


ஹேய். கால் மீ உதய். சார் எல்லாம் வேணாம். என்ன பண்றீங்க இங்க?


அது வந்து... வேலை தேடி அலைஞ்சிட்டு இருக்கேன்.


வேலை இல்லாமலா வெனிஸ் வந்தீங்க? அதிர்ச்சியாய் கேட்டாள் தர்னிகா.


அது அப்ப இருந்த சூழ்நிலை வேற. இப்ப இருக்கிற சூழ்நிலை வேற.


அதற்கு மேல் கட்டாயப்படுத்தாமல் அவன் கடையிலேயே மேனேஜராக வேலை கொடுத்தான் உதய்.


கையைப் பிடித்து நன்றி கூறினான் அரவிந்த்.


தர்னிகாவிற்கு சம்மதம் என்றாலும் ஏதோ முழு மகிழ்ச்சி இல்லை அவளிடம்.


ஹப்ப்பா. முதல் கட்டம் நகர்த்தியாச்சு என மகிழ்ந்த அரவிந்த் போனை எடுத்து ஒரு நம்பரை அழைத்தான்.


ஹலோ மதி! இங்க வேலை கிடைச்சிருச்சு.


உங்கப்பா இருக்குற நிலைமைக்கு நீங்க வேலைக்கே போக வேணாம். என்னால தான் இதெல்லாம் அவள் கண் கலங்கியது.


ஹேய் எதுக்கு அழற. இது உனக்காக மட்டும் இல்லை. எனக்காகவும் தான். இதான் எனக்கு பிடிச்சிருக்கு. சீக்கிரமே வீடு பாத்துட்டு உன்னை கூப்பிட்டுக்கிறேன். அது வரை கேர்ஃபுல்லா இரு. எங்கப்பா ஆளுங்ககண்ணுல மாட்டிராத.


நீங்க இங்க இல்லையே. அவங்க ஏன் இங்க வரப் போறாங்க. ஆனா சென்னைக்கு வந்தா உங்கப்பா கண்டுபிடிக்காம இருக்க மாட்டாங்க.


அப்ப நம்ம கூட ஆளுங்க இருப்பாங்க. கவலைப்படாத. சாப்பிடு நேரா நேரத்துக்கு. பை என்றபடி போனை வைத்தான். மனது நிறைவாக இருந்தது.


உதவி கூட யோசிக்காமல் செய்தால் பிரச்சனையாகலாம். உதயன் செய்த இந்த உதவி அவனுக்கு என்ன பிரச்சனையை கொண்டு வரும்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பத்மாராஹவி டியர்

அடப்பாவி அரவிந்த்
இவன் எதுக்கு உதய்யோட காலேஜ்ஜுக்கு வந்தான்?
இப்போ உதய்யின் கடைக்கும் வந்து மேனேஜராகிட்டான்
இவனோட திட்டம்தான் என்ன?
இவனுக்கு இருக்கிற வசதிக்கு அரவிந்தன் எதுக்கு உதய்யிடம் வேலை பார்க்கணும்?
யாரு அந்த மதி?
ஒருவேளை மஹதிதான் மதியா?
ஒரு பெண்ணோடு வாழ்ந்துக்கிட்டே தர்னிகாவின் வாழ்க்கையை அரவிந்தன் அழிக்கப் பார்க்கிறானா?
அரவிந்த் நல்லவனா கெட்டவனா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top