காதல் படகை கரையேற்ற வா - 15

Advertisement

Padmarahavi

Active Member
காலையில் 8 மணிக்கு கல்லூரிக்கு வந்த உதய் வாசலுக்கு நேராக இருக்கும் ஒரு பெஞ்சில் அமர்ந்து இருந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் ஒவ்வொருவராக வந்து அவன் நண்பர்கள், இத்தனை காலையில் அவன் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதில் ஒருவன் கேட்டான், "ஏன்டா பிராக்டிகல் எக்ஸாம்க்கு 8 மணிக்கு வான்னா வரமாட்ட. இப்ப என்னடா பண்ற இவ்வளவு சீக்கிரமா" என்று கேட்டான்.

அதான் மச்சான் இனிமே சீக்கிரமா வரலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் கொஞ்சமாவது படிக்கணும்ல என்று கூறினான் உதய்.அதை நம்பாமல் பார்த்த அவன் நண்பர்கள்,இவன் எல்லாம் பண்ண மாட்டானே!என்றபடி யோசித்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் யோசித்த பின் ஒருவன் சொன்னான்,டேய் எனக்கு தெரிஞ்சு போச்சுடா. நேத்து கெமிஸ்ட்ரி லேபில் இருந்து வரும்போது ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்ததான்ல!அனேகமா சிக்கிட்டான்னு நினைக்கிறேன் மச்சான்! அதனாலதான் இவ்ளோ காலையில் வந்து உட்கார்ந்து இருக்கான். என்று அவன் கூற மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்

அதான பார்த்தேன் என்னடா இவ்வளவு சீக்கிரம் வந்து உட்கார்ந்திருக்கானேனு,என்று அனைவரும் அவனை கலாய்க்க வெட்கத்தில் முகம் சிவந்தது உதைய்க்கு.

அப்படி எல்லாம் இல்லைடா சும்மா அந்த பொண்ணு அழகா இருக்கா, புடிச்சிருக்கு, சரி பார்க்கலாம்னு வந்தேன் என்று அவன் கூற, மற்றவர்கள் அவனை விடுவதாய் இல்லை.

இல்லை,இல்லை!நீ முழு கதையும் சொல்லு நாங்க சொல்றோம் எதுக்கு வந்தன்னு!என்று அனைவரும் ஒன்று சேர்ந்து கூக்குரலிட அவர்களை அமைதிப்படுத்தினான் உதய்.

சரி சரி சொல்றேன் என்றபடி முன்தினம் நடந்த கதையை அவன் கூறினான்.அனைவரும் அதைக் கேட்டு ஆச்சரியத்தில் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

என்னடா! கெமிஸ்ட்ரி லேப் உள்ள போய் அந்த பொண்ண காப்பாற்றன்னு நினைச்சா,அங்கு ஒரு கெமிஸ்ட்ரியை ஓகே பண்ணிட்டு வந்து இருக்க? என்று அனைவரும் கேட்க, சிரித்தான் உதய்.

நானும் எவளோ நாள் தான் மச்சான் நானும் சிங்கிளாவே இருக்கிறது. அதை மிங்கிள் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன் என்று கூறினான்.

நீ மட்டும் முடிவு பண்ணா போதுமா.அந்த பொண்ணு முடிவு பண்ண வேண்டாமா என்று ஒருவன் கேட்க,

அதெல்லாம் சொல்லுவாடா மச்சான் என்று கூறினான் உதய்.

எப்படி? அவ வந்தவுடன் நேராக வந்து உன்கிட்ட சம்மதம் சொல்லுவான்னு நினைச்சியா என்று மற்றொருவன் கேட்க,

இல்ல இல்ல.கண்டிப்பா," எனக்கு இதுல விருப்பமில்லை எனக்கு படிக்கணும்"அப்படித்தான் சொல்லுவா. கொஞ்ச நாள் போக போக அப்படியே கரெக்ட் பண்ணி விடலாம் என்று கூறினான் உதய்.

ஒரு அரை மணி நேரம் அனைவரும் அவனை கேலி செய்து கொண்டிருக்க இள நீல நிற சுடிதாரில் அழகாக வந்தாள் மஹதி.

அவள் வருவதை பார்த்த உதய்,அருகில் இருக்கும் மரத்திற்கு பின் சென்று ஒளிந்து கொண்டான். அவனுடன் வந்த நண்பர்கள், என்னடா? இங்கே வந்து ஒளிஞ்சிகிட்ட,என்று கேட்டார்கள்.

இல்லடா அவ கண்ணுல பட்டா நேரா வந்து எனக்கு இதெல்லாம் விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டு போயிடுவா. காலையிலேயே எதுக்கு இதெல்லாம் கேட்கணும்!அவள் பின்னால் மறைந்திருந்து வாட்ச் பண்ணலாம். அவ கண்ணுல சிக்காமல் இருக்கலாம் கொஞ்ச நாளு என்று கூறினான் உதய்


நேராக நடந்து வந்து கொண்டிருந்த மஹதி,அவன் ஒளிந்திருக்கும் மரத்திற்கு அருகில் வந்ததும் கால்கள் பின்னிக் கொண்டன போல் நின்றாள். சற்று நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள். உடனே உதய் கூறினான்,பாத்தியாடா நான் இருக்கிறது அவளுக்கு வேவ்லென்த் மூலமா தெரிஞ்சிருக்கு. அதனால்தான் இந்த இடத்துல திடீர்னு நின்னுட்டா!என்று கூற,மற்ற நண்பர்களும் இருக்கலாம் என்பது போல் பார்த்தனர்.

அனைவரும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவள் கீழே குனிந்து தன் செருப்பின் வயர்களை சரி செய்தாள். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டாள்.அனைவருக்கும் பயன்கர சிரிப்பாய் வந்தது.

அவளுக்கு செருப்பு பின்னிருக்குடா. அத்தான் நின்னிருக்கா. அதுக்கு என்ன கதை விடுறான் பாரு! என்று அனைவரும் கைகொட்டி சிரிக்க உதவிக்கு சற்று அவமானம் ஆகிப்போனது.

சரி விடு நமக்கென்ன புதுசா இதெல்லாம் என்று கூறியபடி அவனும் வகுப்பிற்கு சென்றான். காலை இடைவேளையின் போது அனைவரும் கேண்டீனில் இருந்தனர். மஹதிக்கு தெரியாதபடி ஒரு டேபிளில் அனைவரும் அமர்ந்திருந்தனர்.அவள் வடை தின்று கொண்டிருந்தாலள்.
அதன் பின், அவள் காபியை எடுத்து ஒரு சிப் பருகியவள், திடீரென்று நிறுத்திவிட்டு சுற்று முற்றும் பார்த்தாள்.

இப்போதும் உதய் கூறினான், பாத்தியாடா காலையிலதான் செருப்பு அது இதுன்னு சொன்னீங்க. இப்ப பாருங்க சாப்டுட்டு இருந்தவ,எதுக்கு திடீர்னு நிறுத்தி திரும்பி பார்க்கணும்.
என்று அவன் கூற, இருடா பாப்போம் என்று அவன் நண்பர்கள் கூறினர்.

சுற்றும் முற்றும் பார்த்த மஹதி அங்கு வேலை செய்யும் பேரரை அழைத்து, " அண்ணா சக்கரை சுத்தமா இல்ல. கொஞ்சம் போட்டுக்கொண்டு வரீங்களா ப்ளீஸ்? " என்றபடி காபியை அவனிடம் கொடுத்தாள்.

இந்த முறையும் மிகவும் சொட்டை ஆகிப்போனது உதைய்க்கு. நீ போய் நின்றால் கூட,"உதய் கொஞ்சம் சர்க்கரை போட்டுக் கொண்டு வரீங்களா" என்று தான் கேட்டிருப்பாள். இதுக்கு ஏன்டா இவ்வளவு சீன் என்று அவன் நண்பர்கள் கலாத்தனர்.

சரி விடுங்கடா விடுங்கடா என்றபடி சென்றான் உதய்.

மாலை மிகவும் சோகமாக அமர்ந்து இருந்தான் உதய். அப்போது அந்த வழியே மஹதி வந்தாள். அவன் நண்பர்கள் கூறினர் அவன உன்னை பார்க்கத்தான் வரான்னு நினைக்கிறேன் மச்சான் என்று கூறினர்.

ஏண்டா நீங்க வேற! இங்க வந்து நிப்பா நானும் என்னைத்தான் பார்க்க வரான்னு நினைப்பேன். பின்னாடி, என் செருப்பு தைத்து தரீங்களா உதய் பிஞ்சு போயிருச்சுன்னு சொல்லுவா. இது எனக்கு தேவையா டா என்று கூறினான் அவன்.

ஆனால் அவன் கூறியபடி மஹதி அவனிடம் தான் வந்தாள் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று கூறினாள். இவரும் சற்று தள்ளி ஒரு மரத்தடிக்குச் சென்று அமர்ந்தனர்.

முதல்ல சாரி! காலையிலிருந்து உங்களை அலைக்கழித்ததுக்கு என்றாள் மஹதி.

ஹே அப்போ நான் உன் பின்னாடி வந்தது எல்லாமே உனக்கு தெரியுமா என்று கேட்டான் உதய்.

நல்லா தெரியும் என்றாள்.

அப்புறம் ஏன் இப்படி பண்ணின? என்று கேட்டான் உதய்.ஆமா உடனே எல்லாம் சொல்லிட்டா அப்புறம் அதுக்கு ஒரு மரியாதை இருக்காது என்றாள் மஹதி.

என்ன சொல்லிட்டா? என்று கேட்டான் உதய்.

அப்போது அவன் விழிகளை பார்த்த மஹதி,அப்போ ஒன்னும் சொல்ல வேண்டாமா? என்று கேட்டாள். அவள் கண்கள் ஆயிரம் மொழி பேசியது.

அதன் பின்தான் சற்று பொறி தட்டியது உதய்க்கு. நீ என்ன சொல்ற என்று அவனும் கேட்டான்.

அவன் குரலில் படபடப்பு தெரிந்தது.

நான் உங்க கூட வாழ விரும்புறேன் என்றாள் அழகாக.

மூச்சைடைத்தது அவனுக்கு. சற்றும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி அவனை தாக்கியது.

பேச்சே வராமல் தவித்தான். உண்மையாவா சொல்ற? இவ்ளோ சீக்கிரமா சொல்லிட்ட? என்று கேட்டான்


பின்ன எப்போ சொல்லுறது? நான் கொஞ்ச நாள் கழிச்சு சொல்லிக்கலாம் என்று நினைப்பேன்.நீங்க அதுக்குள்ள கல்லூரி முடித்து போயிடுவீங்க. போய் உங்க அப்பாவுடைய தொழில் பார்த்துக்குவீங்க!அங்க உங்க அப்பா அவருடைய பிசினஸ் பார்ட்னர் பொண்ணை கல்யாணம் பண்ணலாம்னு நினைப்பாரு. சரி மஹதி தான் ஒண்ணுமே சொல்லையே. ஒரு தகவலும் இல்லை, அவ்வளவுதான் போல நம்ம காதல் அப்படின்னு கொஞ்ச நாள் பீல் பண்ணிட்டு, அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பீங்க. கல்யாண பத்திரிக்கை கொடுக்க கல்லூரிக்கு வரும் போது என்னை பார்த்து குடுப்பீங்க. அப்ப நான் அழுவேன். என்னோட மொபைல் ல உங்க போட்டோவை பாத்துட்டு நீ என்னை காதலிச்சியா? ஏன் சொல்லல அப்படின்னு நீங்க கேப்பீங்க. நான் அழுவேன். இதெல்லாம் தேவையா அதனாலதான் இப்பவே சொல்லிட்டேன் என்று கூறினாள்.

பின்னர் சிரித்துவிட்டு எனக்கு ஹாஸ்டலுக்கு நேரமாயிடுச்சு.லேட்டா போனா உள்ள விடமாட்டாங்க அப்புறம் உங்க கிட்ட பேசுறேன், என்று கூறிவிட்டு அவள் சென்றுவிட்டாள்

என்ன வந்தா! ஏதோ சொன்னா! போயிட்டா! என்ன சொன்னா என்றபடி மண்டைக்குள் புலம்பிக் கொண்டிருந்தான் உதய்.

ஆனால் இறுதியில் மஹதி சொன்னது தான் நடந்தது. யாருக்கு தெரியும் முன்பே அவள் கணித்து சொன்னாளோ என்னவோ!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top