காதல் படகை கரையேற்ற வா - 14

Advertisement

Padmarahavi

Active Member
.அந்நிய ஆடவன் மேல் மோதிய உணர்வின் காரணமாக அவள் சற்று விலகி திரும்பி நடக்க கால் எடுத்து வைத்தாள்.

அப்போது தான் பார்த்தாள் கீழே கண்ணாடி சிதறல்கள் கொட்டி கிடந்தன. எடுத்த காலை மீண்டும் பின் வைக்க முடியாமல் தடுமாறி அவள் மீண்டும் சாய தன் இரு கைகளால் அவளை தாங்கி பிடித்தான் உதய்.

இருவரின் கண்களும் ஒரு நிமிடம் பார்வைப் பரிமாற்றம் செய்ய, அவள் கண்ணின் மை வேர்வையில் கரைந்து கொண்டிருந்ததைப் போல அவன் மனமும் கரைந்து கொண்டிருந்தது.

அந்த நேரம் லேப் சன்னலில் ஒரு கல் விழ இருவரும் சற்று திகைத்து மெதுவா ஒரு மேஜையின் அடியில் அமர்ந்தனர்.

அதன் பின்னே அவன் தன்னை இழுத்ததின் காரணம் அறிந்தவள்,

ரொம்ப நன்றி என்றாள்.

பேசும் போது கூட ஒருவரின் குரல் இனிமையாக இருக்குமா என்று தோன்றியது உதய்க்கு.

பரவாயில்ல. பயப்படாதீங்க என்றான் உதய்.

அவள் மீண்டும் மௌனமானாள்.

சிறிது நேரம் அமைதி காத்தவன்,

நீங்க இங்கேயே படிக்கிறீங்க என்றான்.

ஆமா.

என்ன படிக்கிறாள் என்று கூறுவாள் என்று எதிர் பார்த்தான். அவள் எதுவும் கூறததால் அவனே கேட்டான்.

எந்த இயர்?

முதல் வருஷம்.

என்னடா இந்த பொண்ணு. ஒரு கேள்வி கேட்ட எல்லாத்தையும் சொல்ல வேணாமா. ஒவ்வொண்ணாவா கேப்பாங்க என்று நினைத்தான்.

டக்கென அவன் எழ, என்னாச்சு என்று கேட்டாள்.

இல்லங்க. ஒரு பேப்பர் எடுக்க போறேன். என்ன பேரு, என்ன படிக்கிறீங்க, எந்த ஊரு எல்லாம் ஒரு ஒரு கேள்வியா கேட்டா வாய் வலிக்கும். நான் பேப்பர்ல எழுதி தரேன். படிச்சு பொறுமையா பதில் சொல்லுங்க.

அவன் சீரியசாக கூற அவள் சிரித்து விட்டாள்.

சாரி. நான் கொஞ்சம் பயந்துட்டேன் என்றாள்.


பரவாயில்ல. ரிலாக்ஸ் ஆகுங்க.

என் பேரு மஹதி.

வாவ். என்ன ஒரு அழகான பேரு. மஹதி மஹதி என பல முறை மனதில் உச்சரித்து பார்த்தான்.

நான் முதல் வருஷம் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கிறேன்.

இத்தன நாளா பாக்காம என்ன பன்னிட்டு இருந்தேன் என அவனையே திட்டிக் கொண்டான்.

அப்புறம் நான் இப்ப என் தோழி வீட்ல தங்கிருக்கேன். ஹாஸ்டல் பார்த்துட்டு இருக்கேன்.

ஓ அப்பா அம்மா எல்லாம் ஊர்ல இருக்காங்களா.

சற்று அமைதியாக இருந்தவள், ஹ்ம்ம் இருக்காங்க ஊர்ல இல்லை சொர்க்கத்துல என்றாள்.

ஓ சாரி என்றான் உண்மையான வருத்தத்துடன்.

இட்ஸ் ஓகே. ஆஸ்ரமத்துல தான் வளர்ந்தேன். அவங்க தான் படிக்க வச்சது. மெரிட்ல தான் சஇங்க கிடைச்சது. இப்போதைக்கு அவ வீட்ல இருக்கேன். ஹாஸ்டல் கிடைச்சதும் போயிருவேன்.

அவன் மௌனமாக இருந்தான்.

இப்ப நான் போய் பேப்பர் கொண்டு வரவா என்றாள் மஹதி.

ஏன்?

இல்லை. நீங்க உங்களை பத்தி சொல்ற மாதிரி தெரியலையே. நான் கேள்வி எல்லாம் எழுதி வைக்கிறேன்.

சத்தமாக சிரித்து விட்டான்.

என் பேரு உதய். அப்பா அம்மா தங்கச்சி கோயம்பத்தூருல இருக்காங்க. அப்பா உதய் டெக்ஸ்டைல்ஸ் ஓனர். தங்கச்சி ஸ்கூல் படிக்கிறா.

அவன் பணக்காரன் என்பதை காட்டாமல் அமைதியாக சொன்னதே அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அதே நேரம் மீண்டும் ஒரு கல் லேப் கண்ணாடியின் மீது விழ, அங்கு கண்ணாடி ஏற்கெனவே உடைந்து இருந்ததால் கல் நேரடியாக லேப் உள்ளே இருந்த மேஜையின் மீது பட்டு மேஜை மேல் இருந்த இரு அமிலங்கள் இணைந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

அதை முதலில் பார்த்த உதய், அவள் கையை பிடித்து மஹதி வா என்று கூறியபடி அவளை இழுத்துக் கொண்டு ஓடினான்.

அதற்குள் புகை முழுவதும் பரவ, கலவரம் புரிந்தவர்கள் பயந்து ஓடினர். உள்ளே கண் பார்வையை புகை மறைந்ததால் கதவு இருக்கும் இடம் தெரியாமல் சத்தம் போட்டனர்.

அதற்குள் மற்ற மாணவர்கள் வந்து கதவை திறக்க முயல, அது உட்பக்கம் தாழிடப் பட்டிருந்ததால் திறக்க முடியவில்லை.


கதவை உடைக்க அவர்கள் முயற்சி செய்ய, இங்கு மஹதி கொஞ்சம் கொஞ்சமா மூச்சு விட சிரமப்பட்டாள்.

அதை உணர்ந்த உதய், அவளின் கையை இருக்கி பிடித்து, உனக்கு ஒன்னும் ஆகாது. நான் இருக்கேன். இப்ப மட்டும் இல்ல எப்பவும் என்றான்,

அந்த நிலையிலும் அவள் முகம் அதிர்வதை அவன் உணர்ந்தான்.

அதற்குள் கதவு திறக்கப்பட அவளை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

நலம் விசாரிப்பிற்கு பிறகு அனைவரும் கலைந்து செல்ல, மஹதி மட்டும் உதய் வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் அவனையே பார்த்தாள்.

என்ன என்று பார்வையலே வினவினான்.

இல்ல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னவோ சொன்னீங்க.

என்னவோ சொல்லலையே! உன் கூடவே இருப்பேன் கடைசி வரை. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. ரொம்பவே பிடிச்சிருக்குன்னு தானே சொன்னேன்.

அவள் கண்கள் அகன்று விரிந்தது. வெண்ணிற உடையில், கரும்புகை சிறிது படிந்து புகை படிந்த ஓவியம் போல் இருந்தாள்

அதெப்படி உடனே சொல்ரீங்க?

வேற எப்ப சொல்லணும்? நான் சொல்லாம விட்டு, நாளைக்கு எவனாவது ப்ரொபோஸ் பண்ணி, சரி அவன் தான் ஒன்னும் சொல்லல. நம்மள புடிக்கல போலன்னு நீ நினைச்சு, அவனுக்கு ஓகே சொல்லி, எனக்கு கல்யாண பத்திரிக்கை குடுக்க வீட்டுக்கு வந்து, அப்ப என் ரூம் முழுக்க உன் புகைப்படம் இருக்கிறதை பார்த்து, அட பாவி என்ன காதலிச்சியா? ஏன்டா முன்னாடியே சொல்லலைனு நீ அழுது நானும் அழுது ஸஸஸப்பா. தேவையா சொல்லு. என்றான் உதய்.

அவள் விழிகள் அவனே உள்ளே விழும் அளவிற்கு விரிந்து அதிர்ச்சியை காட்டியது.

ஒன்னும் அவசரம் இல்லை செல்லம். நீ பொறுமையா யோசி என்று அவளின் கையை அழுத்தி ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு சென்றான்.

அவனின் காதலை மஹதி ஏற்றுக்கொள்ளவாளா??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top